தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Wednesday, 1 February 2012

காது


வெளியிலிருந்து ஓசை எப்படி காதுக்குள் போய் சேருகிறது?
மனிதக் காது வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று 3 பிரிவாக உள்ளது. இந்த 3 பாகங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிந்தால்தான் காது கேட்கும். இல்லையெனில் 'காது லேது' ஆகிவிடும். வெளிக்காது சப்தத்தை திரட்டி நடுக்காதிற்கு அனுப்பும்.
நடுக்காது உள்காதுக்கு அனுப்பும் வேலையை செய்யும். அதாவது - நடுக்காதைத் தாண்டி இருக்கும் எலும்புகள் சப்தத்தை பெருக்கி உள்காதுக்கு அனுப்பி வைக்கும். உள்காதில் வெளியிலிருந்து சென்ற ஓசை மின்சக்தியாக மாற்றம் பெற்று, Auditory Nerve எனப்படுகின்ற ஓசை நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். இவ்வளவு செயல்பாடுகளையும் நமது நுண்ணிய உறுப்பான காது நொடிப் - பொழுதில் செயல்படுத்துகிறது.
வெளியில் உள்ள ஓசையை கேட்கின்ற பணியினை மட்டுமே காதானது செய்கிறது என்றும், அது ஒரு வேலை தான் என்றும் நினைத்துவிடாதீர்கள். ஒருவரின் உடலில் 'பாலன்ஸ்' தன்மையை பராமரிகின்ற காவல்காரனாகவும் காதுகள் செயல்படுகின்றன. உதார ணமாக ராட்டினம் போன்றவற்றில் ஏறி சுற்றுகின்றபோது நீங்கள் தலை சுற்றி கீழே தூக்கி எறியப்படாமல் பாதுகாப்பதே உங்கள் காதுகள்தான்.
காதுகளில் அழுக்கு சேருவது ஏன்?
காதில் பொதுவாக பலர் பேர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினை காதில் அழுக்கு சேருவதுதான். அழுக்கு சேருவது இயல்பானதுதான். இத்தகைய அழுக்குத்தான் வெளிக்காதின் தோல், பாக்டீரியா தாக்குதல் உள்ளிட்ட நோய்த் தொற்றினால் காது பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. அதே சமயம் அழுக்கு அதிக அளவில் காதுப்பகுதியில் சேர்ந்து விட்டாலும் அதனை அலட்சியப்படுத்தினாலும் ஆபத்துதான். அலட்சியத்தின் காரணமாக - அழுக்கானது கட்டி போல உருண்டு திரண்டு காதை அடைத்துக் கொள்வதுடன் கடுமையான காது வலியையும் ஏற்படுத்தி விடலாம். அழுக்கு அதிகமாகி கட்டியாக திரண்டு நிற்கிற காரணத்தால் சிலருக்கு காது அடைத்துக் கொண்டு கேட்காமல் இருந்தாலும் இருக்கலாம்.
காதில் சேருகிற அழுக்கை எடுக்கத்தான் வேண்டுமா?
சாலைகளில் வாகனங்களின் அணி வகுப்பு, தொழிற்சாலைகளின் ஆதிக்கம், மாசு படர்ந்த சூழல்கள், போன்றவற்றிற்கு மத்தியில்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எனவே இன்றைய நாளில் காதில் மிதமிஞ்சிய அழுக்கு சேருவது இயல்பாகிவிட்டது. சாதாரணமாக காதில் அழுக்கு சேருவது வேறு, அதனால் ஆபத்தில்லை. ஆனால் அதிகப்படியான அழுக்கு சேருவதுதான் ஆபத்தானது. ஆகவே காதில் சேரும் கட்டிப் போன்ற அழுக்கை அடிக்கடி காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் சென்று சுத்தப்படுத்திக் கொள்வது நல்லது.
அழுக்கு சேர்ந்து கட்டியாக உள்ள நிலையில் டாக்டரிடம் சென்றால், அவர் சொட்டு மருந்து போடுவார். மூன்று அல்லது நான்கு தினங்கள் சொட்டு மருந்தைப் பயன்படுத்திய பிறகு மருத்துவரிடம் மீண்டும் சென்றால், கருவிகள் மூலம் அழுக்கை வெளியே எடுத்து விடுவார் அல்லது சிரிஞ்ச் மூலம் தண்ணிரைப் பீய்ச்சி அழுக்கை வெளியே எடுத்து விடுவார்.
காதில் அழுக்கு சேர்ந்தால் மருத்துவரிடம் செல்கிற போது - காதுகளில் உள்ள அழுக்கை டாக்டருடன் சேர்ந்து நோயாளியும் பார்க்கும் நவீன வசதி தற்போது உள்ளது. 'இயர் எண்டோஸ் கோபி'' என்கின்ற சாதனம்தான் அது. அக்கருவி மூலம் டாக்டருடன் சேர்ந்து நோயாளியும் நடுக்காது வரை உள்ள காதின் நிலைமையை நேரடியாகப் பார்க்கலாம். இந்த நவீன வசதி காரணமாக அழுக்கு உள்பட காதின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய முடியும். செவிப்பறையில் ஓட்டை இருந்தால்கூட அழுக்கை வெளியேற்ற சிரிஞ்ச் மூலம் நீரைப் பீய்ச்சுவது ஆபத்தாகும். இதுபோன்ற வேளையில் எண்டாஸ் கோப்தான் பெரிய உதவியாக இருக்கும்.
பொதுவாக காதில் என்ன மாதிரியான பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புள்ளது?
பிறவி காது கேளாமை,காதில் சீழ் வருவது, காதில் வலி, கேட்டுக்கொண்டிருந்த காது தனது பணிக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பாதிப்பு காதில் வரலாம். காதை ஒரு அற்புதமாக நுணுக்கமான வகையில் இயற்கை படைத்துள்ளது. காதினை வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று 3 பிரிவாக பிரிக்கலாம். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். உடம்பிற்கு கண் அவசியமானது தான். ஆனால் மனிதர்கள் கண்ணிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவேணும் கூட காதிற்கு கொடுப்பதில்லை.
சிலருக்கு காதில் சீழ் வடிகிறதே அதற்கு என்ன காரணம்அதற்கு என்ன சிகிச்சை?
நமது காதானது வெளிக்காதுநடுக்காதுஉள்காது என்று பகுதியாக அமைந்துள்ளதுகாது மடல் வெளிக்காது எனப்படும்நடுக்காதில் மெல்லிய செவிப்பறைச் சவ்வும்மூன்று சிறிய எலும்புகளும் உள்ளனஉடம்பிலேயே மிகச் சிறிய எலும்பான இவைதான்ஓசையை உள் காதுக்கு எடுத்துச் செல்கின்றனஉள்காதுப் பகுதியில் பல நரம்புகள் உள்ளனஇவை ஓசையை மூளைக்கு எடுத்துச் செல்வதுடன் காதில் சமச்சீர் நிலையை ஏற்படுத்துகின்றன.
வெளிக்காது மற்றும் நடுக்காதில் வருகிற பாதிப்பு காரணமாகவே காதில் சீழ் வடிதல் ஏற்படுகிறது.பாக்டீரியா (காளான் போன்ற நோய்த்தொற்று காரணமாக வெளிக்காது பகுதியில் உள்ள துவாரத்தில் சீழ் வடியலாம்இதற்கு ஓடிடிஸ் எக்ஸ்டர்னா என்பது மருத்துவ பெயராகும்காதைச் சுத்தப்படுத்த பட்ஸ் போன்றவற்றை காதில் பயன்படுத்துவது மிக மென்மையான காது துவாரப் பகுதிகளில் உள்ள தோலுக்கு காயத்தை ஏற்படுத்தக்கூடும்அதுவும் காதில் சீழ் வடியக் காரணமாகலாம்இதே போல் நடுக்காது பகுதியில் ஓடிடிஸ் மெடியா எனப்படுகிற நோய்த்தொற்று அடிக்கடி ஏற்படலாம்.
சிறுவயதில் ஏற்பட்ட கிருமி தொற்றினை கண்டு கொள்ளாமல் இருப்பது நாளடைவில் முற்றிப் போய் காதில் சீழாக மாறலாம். காதுப்பகுதியில் அடிபட்டாலும் காதில் சீழ் வைக்கலாம். இளம் பிராயத்தில் வருகின்ற காது வலியை அலட்சியப் படுத்துவதனாலும் காதில் சீழ் வைக்கலாம். மூக்கில் கிருமி தொற்றி அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டால் அது பின்னாளில் காதில் சீழாக மாறலாம். காதிற்கும் மூக்கிற்கும் இடையே ஈஸ்டீஸுன் குழாய் ஒன்று உள்ளது. அதன் மூலம் மூக்கடைப்பு மற்றும் கிருமி தொற்று காதிற்கு பரவி காதில் சீழ் தோன்றி விடலாம்.
இதற்கு எடுத்தவுடனே சிகிச்சை செய்யக்கூடாதுமுதலில் காதில் எந்த பகுதியில் சீழ் வைத்துள்ளது? காதின் கேட்கும் திறன் எப்படி உள்ளது? போன்றவற்றை சோதனை மூலம் கண்டறிய வேண்டும்.காதில் சிலருக்கு எலும்பு அரிப்பு நோய் (Chole steatoma) வரலாம். இதனாலும் காதில் சீழ் ஏற்படலாம். எலும்பு அரிப்பு மூளைக்கும்கூட பரவிட வாய்ப்புள்ளது. இப்படி பரவியவர்கள் தலைவலி, காதுவலி, காதில் சீழ் என்று வருவார்கள். எனவேதான் நேரடியான சிகிச்சை செய்யாமல் சோதனைகளை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.
சாதாரணமாக காதில் சென்ரல் பர்ப்பிரேசன் காரணமாக காதில் சீழ் என்றால் அதற்கு மருந்து மாத்திரை தந்து சிகிச்சை அளிப்போம். எலும்பு அரிப்பு ஏற்பட்டிருந்தால் அரிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு புதிய எலும்பு மற்றும் புதிய ஜவ்வு பொருத்தும் அறுவை சிகிச்சை செய்வோம். அந்த சிகிச்சைக்கு (Tympano mas toidectomy) என்றுபெயர். இந்த சிகிச்சை மூலம் சீழானது மூளைக்கு பரவாமல் செய்யவும், காது கேட்கும் திறனை அதிகப்படுத்தவும் முடியும்.
ஓடிடிஸ் மெடியா என்றால் என்ன?
நடுக்காது பகுதியில் கிருமி தொற்று ஏற்படுவதுதான் ஓடிடிஸ் மெடியா எனப்படும்இதில் இரண்டு வகை உள்ளதுகடுமையான வலி தரக்கூடியது ஒரு வகைஅடுத்தது காது சீழை ஏற்படுத்துவது.காதில் கடும் வலியைத் தரக்கூடிய ஓடிடிஸ் மெடியா குழந்தைகளுக்கே ஏற்படும்குழந்தைகளுக்கு மூக்கடிச் சதைஅடிநாக்குச் சதை பகுதியில் பல நோய்த்தொற்று ஏற்படுவதால் வரும் பாதிப்பு இது.இப்பாதிப்பு அடிக்கடி வந்தால் மூக்கின் பின் பகுதியையும் காதையும் இணைக்கிற பாதையில் நோய்த்தொற்று ஏற்படும்முன்தொண்டையிலிருந்து நடுக்காதுக் குழி வரையில் செல்லும்...யுஸ்டேஷயன் குழாய் என்றழைக்கப்படும் பாதையில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்பட்டாலும் நடுக்காதுப் பகுதியில் நோய்த் தொற்றும் நீர்ப்பெருக்கமும் ஏற்படலாம்இப்படி நீர் சுரக்கிற பிரச்சினையை செக்ரட்டோரி ஓடிடிஸ் மெடியா என்று அழைக்கிறார்கள்இப்படி வடிகிற நீர் நோய்த் தொற்றுடன் இருந்தால் அது சீழாக மாறும்.
காதில் சீழ் வருவதற்கு முன்னால் என்ன அறிகுறிகள் தோன்றும்?
பொதுவாகக் குழந்தைக்கு ஜல தோஷம்மூக்கு ஒழுகல்தொண்டை வறட்சிஇருமல் ஏற்படும்போது காதிலும் வலி ஏற்படலாம்கூடவே காய்ச்சலும் ஏற்படக்கூடும்இதுதான் கடுமையான ஒடிடிஸ் மெடியா என்று அழைக்கப்படுகிறதுஇதற்கு சிகிச்சை தராவிட்டால் காதிலிருந்து சீழ் வடியும்வலியும் குறைந்து செவிப்பறையில் ஓட்டை விழுந்து விடும்ஒவ்வொரு தடவையும் ஜலதோஷம் பிடிக்கும் போதும்காதில் நீர் செல்லும் போதும் காதிலிருந்து சீழ் வடியத் தொடங்கிவிடும்அச்சமயத்தில் வலி இருக்கலாம் இல்லாமலும் போகலாம்அதேபோல் காது கேட்கும் திறன் குறையலாம்குறையா மலும் இருக்கலாம்இது போன்ற பிரச்சினை மூன்று மாத காலத்திற்கு நீடித்தால் செவிப்பறையில் உள்ள ஓட்டை நிரந்தரமாகி விடும்இந்த முற்றிய நிலை க்ரானிக் ஒடிடிஸ் மெடியா என்றழைக்கப்படும்.
சீழ்வடிதல் பிரச்சினையால் வரும் சிக்கல்கள் என்ன?
காதில் சீழ் வடிதல் பிரச்சினைக்குஉரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது பின் வரும் சிக்கல்களை ஏற்படுத்தும். - நோய்த் தொற்று முகத்தின் நரம்புகளில் பரவுவதால் முகநரம்பு வாதம் ஏற்படும்.
உள் காதில் நோய்த் தொற்று காரணமாக கேட்கும் திறனுள்ள நரம்பு செயல் இழக்கும்தலை சுற்றலும் ஏற்படும்.
காதின் பின்பகுதியில் நோய்த் தொற்று பரவும்போது சீழ்க்கட்டி ஏற்படுகிறது.
கபாலத்தின் மூலம் மூளைக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் நோய்த் தொற்று பரவும்போது மூளைக் கட்டிமூளை வீக்கம்மூளையில் அழற்சி போன்றவையும் ஏற்படலாம்.
சீழ்வடிதல் பிரச்சினையை குணமாக்க என்ன சிகிச்சை செய்ய வேண்டும்?
தீவிரமான சீழ் வடிகிற பிரச்சினைக்கு ஆன்ட்டிபயாட்டிக்ஆன்ட்டி ஹஸ்டமைன்ஸ் எனப்படும் செயலாற்றலைத் தடுக்கும் மருந்துகள்வலி மருந்துகள் கொடுத்து சிகிச்சை தரப்படும்சில சமயங்களில் செவிப்பறை ஓட்டை தானாக மூடிக்கொள்ளும்சுவாசப் பாதையின் மேற்புறப் பகுதியில் நோய்த் தொற்று தொடர்ந்து நீடிப்பதால் காதுக்கும் அது பரவினால் ஓட்டை தானாக மூடிக் கொள்ளாதுஇந்தப் பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு அடிநாக்குச் சதை மற்றும் மூக்கடிச் சதை அறுவை சிகிச்சை தொடக்கத்தில் செய்யப்படும்இதன் மூலம் நோய் தொடராமல் தடுக்கப்படும்.ஆபத்தான žழ்வடிதல் பிரச்சினையில் நோய் காதிலிருந்து மட்டுமின்றி காதின் பின்புற முள்ள மேஸ்டாய்ட் எலும்புப் பகுதியிலிருந்தும் விரட்டப்பட வேண்டும்.
இதனை மருந்து மூலம் குணப்படுத்த முடியாதுஇதற்கு மாஸ்டாய் டெக்டமி மற்றும் டிம்பனோ பிளாஸ்டி எனப்படும் அறுவை சிகிச்சைகளே சரியான தீர்வுசாதாரணமாக ஆபத்தில்லாத சீழ் வடிதல் பிரச்சினையில் செவிப்பறையில் ஓட்டை தொடர்ந்து நீடிக்கும்ஓட்டை தானாக மூடிக் கொள்ளாது.இப்பிரச்சினையைத் தீர்க்க மிருங்கோ பிளாஸ்டி எனப்படும் எளிமையான மைக்ரோ அறுவை சிகிச்சை தேவைப்படும்செவிப்பறை ஓட்டையை மூட கன்னப் பொட்டெலும்புச் சதையின் இழைமம் பயன்படுத்தப்படும்.
பிறவியிலேயே காது கேட்காமல் போவதற்கு என்ன காரணம்? இதனை சரி செய்து மீண்டும் காதை கேட்க வைக்க இயலுமா?
பல காரணங்கள் இதற்கு உண்டு. அவற்றில் மிக முக்கியமானது- சொந்தத்தில் திருமணம் முடிப்பதாகும். மரபணுக் குறைபாடு காரணமாக பிறவி காதுகேளாமை ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் வேண்டாத மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதன் காரணமாகக்கூட இப்படி குழந்தை பிறக்கலாம். சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருக்கும். அந்த மாதிரியான குழந்தைகளுக்கு உடனடியாக சிறப்பு சிகிச்சை, பராமரிப்பு தேவைப்படும். இதை செய்யத் தவறினாலும் பிறவி காது கேளாமை நிகழலாம்.
பலர் காதிற்கும் பேச்சிற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறார்கள். உண்மையில் காது நன்றாக செயல்பாட்டில் இருந்தால்தான் சரியாக பேசவே முடியும். ஆக ஒரு குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லை எனில் காதினை கவனிக்க வேண்டும். பேச்சிற்கு என்று மூளையில் ஒரு இடம் உள்ளது. அந்த இடம் 4(அ)5 ஆண்டுகள் வரைக்கும் காலியாகாமலே இருக்கும். சில குழந்தைகளுக்கு மற்ற பகுதிகளால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். எனவே குழந்தை பிறந்த உடன் அழாமல் இருந்தால் அல்லது காது கேளாமல் இருந்தால் உடன் கவனிக்க வேண்டும்.
பிறவியில் காது கேளாமை இருக்கும் குழந்தைகளை ஒன்றரை வயதிலிருந்து மூன்று வயதிற்குள் கொண்டு வந்தால் அவர்களுக்கு இன்றைய நாளில் காது மருத்துவத்தில் புரட்சியாகவே வந்துள்ள காக்ளியர் இம்பிளாண்ட் என்கின்ற அதிநவீன சிகிச்சை மூலம் காதின் கேட்கும் திறனை முன்னேற்றமடையச் செய்யலாம். ஆனால் இந்த சரியான காலத்தை தவறவிட்டு குழந்தைகளை அழைத்து வந்தால் காக்ளியர் பொருத்தினாலும் கூட காதுதான் சரியாக கேட்கும் ஆனால் பேச்சு சரியாக வராமல் போய்விடலாம்.
இந்த காக்ளியர் இம்பிளாண்ட் ஆஸ்திரேலியாவிலிருந்து இன்றைய நாளில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால்தான் இந்த சிகிச்சை முறை அதிக செலவாகும் சிகிச்சை போல தோன்றுகிறது. ஏகப்பட்ட இறக்குமதி வரியினை செலுத்தித்தான் இதனை வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் கண்ணிற்காக வரவழைக்கப்படுகிற எந்த சாதனத்திற்கும் எந்த வரியும் கிடையாது. கண்ணிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல அரசாங்கம் காதிற்கும் மானியம் மற்றும் சலுகைகள் கொடுத்தால் அனைவரும் பயன் பெறலாம்.
இந்த காக்ளியர் இம்பிளாண்டை எல்லா மருத்துவமனைகளிலும் பொருத்திக் கொள்ள முடியாது. காரணம் அந்த மருத்துவமனைகளில் ஆடியோ விஷுவல் ரிஹாபிளிடேஷன் வசதிகள் இருக்க வேண்டும். சென்னையில் ஒரு சில மருத்துவமனைகளில்தான் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நன்றாக கேட்டுக் கொண்டிருந்த காது திடீர் என்று கேட்காமல் போவது எதனால்?
காதை சாவி, பேனா, பட்ஸ் போன்றவற்றை போட்டு குடைவது, காது குறும்பையை எடுக்கிறேன் என்று காதை புண்ணாக்கிக் கொள்வது, மேலும் வெளிக்காதில் மெழுகினாலும் அடைப்பும், கிருமி தொற்றும் காது கேளாமல் செய்யலாம். நடுக்காதில் குழந்தைகளுக்கு தண்ணிர் புகுந்து கொண்டாலும் காது கேட்காமல் இருக்கும். இன்னும் சிலருக்கு நடுக்காது பகுதியில் இருக்கிற Otosolerosisஎன்கின்ற குட்டி எலும்பு அதிராமல் இருக்கும். இதனாலும் காது கேட்காமலிருக்கும். உள் காதில் உள்ள நரம்பு தளர்ச்சியுற்று வயதானவர்களுக்கு காது கேட்காமல் போகலாம். வெளிக்காதில் மெழுகு இருந்தால் அதனை சுத்தம் செய்தால் போதும். அதுபோல நடுக்காதில் தண்ணிர் புகுந்திருந்தால் அதனை சுத்தம் செய்தாலும் காது கேட்கும்.
குட்டி எலும்பு அதிராமல் இருந்தால் அந்த எலும்பை எடுத்துவிட்டு செயற்கை எலும்பு பொருத்தி காதினை கேட்க வைக்கலாம். வயதானவர்களுக்கு உள்காது நரம்பு குறைபாடு காரணமாக காது கேட்காமைக்கு ஒரே தீர்வு காது மெஷ’ன் பொருத்திக் கொள்வதுதான். முன்பு பழைய முறையில் இருந்த ஹ’யரிங் எய்டி சாதனத்தில் வெளியிலிருந்து வருகின்ற எல்லா சத்தங்களும் அதிக அளவில் காதுக்குள் கேட்டு கொண்டிருக்கும். இது பல வயதானவர்களுக்கு பிடிக்காது ஆனால் இன்றைய நாளில் அதி நவீன வடிவமைப்பாக டிஜிட்டல் ஹ’யரிங் எய்டு வந்துள்ளது. கம்ப்யூட்டரின் துணையோடு எவ்வளவு கேட்கும் திறன் இவருக்கு தேவை என்பதறிந்து இந்த டிஜிட்டல் ஹ’யரிங் எய்டை பொருத்துவதால் மற்ற சாதாரணமானவர்கள் போலவே இவர்களும் செவி இன்பத்தை பெறலாம்.
காதில் உள்ள எலும்பு சிலருக்கு அதிகமாக இருக்குமா?
உடலில் ஸ்டேப்ஸ் எனப்படும் மிகச் சிறிய எலும்புகள் காதுகளில்தான் உள்ளனஇந்த எலும்பு மூலம்தான் வெளியிலிருந்து வரும் சப்தம் காதின் உட்பகுதிக்குச் செல்கிறதுஅந்த எலும்புகள் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் சிக்கல் ஏற்படலாம்இப்பாதிப்பிற்கு ஓட்டோ செலரோஸஸ் என்று பெயர்இந்த பிரச்சினை இளமைப்பருவத்தில் 20 வயதுக்குள் ஏற்படும்காதுகளை பாதிக்கும் இப்பிரச்சினை பரம்பரையாக குடும்பத்தினருக்கு தொடர்ந்து வரலாம்காது கேட்பது படிப்படியாகக் குறைவதை இவர்களால் உணர முடியும்.
இத்துடன் சிலருக்கு டின்னிட்டஸ் எனப்படும் தொடர்பற்ற இரைச்சல் சப்தங்களும் கேட்கும்இந்த நோயாளிகளுக்கு ஸ்டேபிடோடமி எனும் சிறு அறுவை சிகிச்சை தேவைஆடியோமெட்ரி மற்றும் இம்பெடான்ஸ் ஆடியோ மெட்ரி மூலம் ஸ்டேப்ஸ் எலும்பில் சிறிய ஓட்டை ஏற்படுத்தப்பட்டுஇதன் மூலம் அதிகப்படியாக வளர்ந்த எலும்பு நீக்கப்படும்இந்த ஓட்டையில் டெப்லான் பிஸ்டன் எனப்படும் மூடி வைத்து மூடப்படும்இதன் மூலம் சப்தம் உள் காதுகளுக்குச் செல்லும்இச்சிகிச்சை கேட்கும் திறனை உடனடியாக உயர்த்தும்அறுவை சிகிச்சை நடக்கும் மேஜையில் இருக்கும்போதே காது கேட்கும் திறன் உயர்வதை நோயாளி உணர முடியும்இந்த நோயாளிகளுக்கு காது கேட்க உதவும் கருவி பொருத்தினால் இக்கருவி ஓசையை பெருக்குமே தவிரநோயைக் குணப்படுத்தாது.
காதில் ஏதாவது பாதிப்பு வந்தால் மக்கள் பலவிதமான உபாயங்களை செய்து கொள்கிறார்களே - இது சரிதானா?
சுயமருத்துவம் என்கின்ற பெயரில் காய்ச்சிய எண்ணெய் ஊற்றுவது, தண்ணிரை பீய்ச்சி அடிப்பது, சில பச்சிலைகளின் சாறினை பிழிவது, வெங்காயச் சாறினை ஊற்றுவது போன்ற வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்.
பட்ஸ் வேண்டாமே !! ப்ளீஸ் !!
அடுத்து இன்றைய நாளில் பலரிடம் 
'பட்ஸ்' உபயோகிக்கும் பழக்கம் 

உள்ளது. 'பட்ஸை' தடை செய்தால் கூட நல்லது.

அதிக சத்தத்தை வைத்துக் கொண்டு வாக்மேன் கேட்பது, அதிக ரேடியேஷன் உள்ள செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஜலதோஷம், தொண்டை பாதிப்பு வந்தால் உடனடியாக எச்சரிக்கையுடன் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் காதிற்கு வரும் கஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம்.
இன்னொரு முக்கிய ஆலோசனை: காதில் சேரும் அழுக்கினை (குறும்பை) வெளியே எடுக்கிறேன் என்று பலர் பலவிதமான குச்சி, சாவி, பேனா, பின் போன்றவற்றை வைத்து குடைகிறார்கள். உண்மையில் நமது காதினை இயற்கை அதி அற்புதமாக படைத்திருக்கிறது. காதில் சேரும் அழுக்கினை நாம் எடுக்கத்தான் வேண்டும் என்பதில்லை. அது தானாகவே வெளியேறும் விதத்தில் காதினை இயற்கை வடிவமைத்திருக்கிறது. எனவே காதினை யாரும் குடைய தேவையில்லை.
அடுத்து ஒரு செய்தி: போலி மருத்துவர்களிடம் காட்டி அரை குறையாக கேட்டுக் கொண்டிருந்த காதினையும் செவிடாக்கி கொள்ளாதீர்கள்.
Dr. சுந்தர்கிருஷ்ணன்MS, DLO.,, N. ஜவஹர் Ms.,FRCS. Dr. கே.கேராமலிங்கம். FRCS.DLO -

No comments: