முழங்கால் மூட்டுவலி
எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?
ஏன் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்கள் இந்த பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்?
எலும்பு தேய்மானம் என்பது தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் ஏன் ஆரம்பத்திலேயே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?
இந்த எலும்பு தேய்மானம் வயதான பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
எலும்பு தேய்மானத்திற்கு என்ன சிகிச்சை முறை உள்ளது?
கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு மூட்டு தேய்மானம் உடன் வருமா?
மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானம் இதனை காட்டும் அறிகுறிகள் என்ன?
மூட்டு தேய்மானத்திற்கு என்ன நவீன சிகிச்சை உள்ளது?
உண்ணும் உணவின் மூலமாக மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானத்தை முன் எச்சரிக்கையாக தடுத்துக்கொள்ள முடியுமா?
முன்பெல்லாம் வயதான பெண்களை மட்டுமே பாதித்து வந்த முழங்கால் மூட்டுவலி, இப்போது இளம் பெண்களையும் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது போன்றவைதான் மூட்டுவலி உண்டாக பிரதான காரணங்கள். மூட்டுவலி ஏற்பட்டால் இயல்பாக நடக்க முடியாது. உட்கார்ந்து எழுவதில் சிரமம் ஏற்படும். தவிர, நாள்பட்ட மூட்டுவலியால் வேறு பல உபாதைகளும் உண்டாகும் ஆபத்து உண்டு. இவற்றை எளிதில் தவிர்க்க முடியும். அதற்கென நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன!
முழங்கால் மூட்டுவலி இணைப்புகளில் திடீரென்று வீக்கம் அல்லது அழற்சி உண்டாகும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று இரண்டு வகை உண்டு. இவை இரண்டும் பெண்களை எளிதில் தாக்கும் நோய்கள் என்பது அதிரவைக்கும் உண்மை.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis):
முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போதுதான் வலி உண்டாகிறது.
எங்காவது விழுந்து அடிபட்டு நீண்ட நாட்கள் படுக்கை வாசம் செய்பவர்களால் எழுந்து நடக்க முடியாது. இதனால் மூட்டுகளில் அசைவு குறைந்து போகும். அப்போதும் மூட்டுவலி வரும். உடல் எடை கூடுவதாலும், முறையற்ற உணவுப் பழக்கத்தாலும் கூட முழங்கால் மூட்டுகளில் வலி வருவது தவிர்க்க முடியாது.
பெண்கள் பேறு காலத்திற்குப் பின்னர் உடலை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களது உடல் எடை கூடும். அதனால் முழங்கால் மூட்டுகளில் வலி வரும். வலி விடாது! படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும், வலி மெல்ல மெல்ல இடுப்புக்கும் பரவும். சில நேரங்களில் தசைப்பிடிப்பும் ஏற்படும்.
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்ஸ் (Rheumatoid Arthritis):
ஒவ்வொருவருக்கும் உடலில் குறிப்பிட்ட அளவு நோயெதிர்ப்புச் சக்தி செல்கள் இருக்கும். இந்தச் செல்களில் பாதிப்பு ஏற்படும்போது முழங்கால் மற்றும் கால்களின் இணைப்புகளில் வீக்கமும் அழற்சியும் உண்டாகும். இதுவே ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்(Rheumatoid Arthritis).குடும்பத்தில் முன்னோர்கள் யாரேனும் இருந்தால், பரம்பரையில் மற்றவர்களுக்கு வரும். இந்தப் பாதிப்பு காரணமாக கைவிரல்களில் பிரச்னை உண்டாகும்.
குறிப்பாக, காலை நேரங்களில் கைவிரல்கள் மற்றும் முழங்கால் மூட்டுகளில் இறுக்கிப் பிடித்த மாதிரி உணர்வு வரும், வீக்கம் உண்டாகும், இதனால் வலி ஏற்படும். குளிர்காலங்கள், மழை பெய்யும் காலங்களில் வலி அதிகரிக்கும். கைவிரல்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. உடலில் உள்ள மற்ற இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்படும். நுரையீரல், இருதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் சூழலும் உண்டு.
பரிசோதனைகள்:
ஆஸ்டியோ, ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் இரண்டிலுமே வலிதான் பிரதானம் என்பதால், வலியை நீண்ட நாட்கள் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
குறிப்பாக, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ’ல் இரவு நேரங்களில் வலி உண்டாகும். எலும்புகளில் தேய்மானம் இருக்கிறதா என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து சிகிச்சை எடுக்கவும். முழங்கால் மூட்டுகளில் வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிப்பதும் அவசியம்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் இப்படி என்றால் ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்(Rheumatoid Arthritis)சற்று வித்தியாசமானது. வலியும் வேதனையும் அதிகரிக்கும் போது சோதனை செய்து கொண்டால், பாதிப்பின் தீவிரத்தை துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இளம்பெண்களிடம் இந்த பாதிப்பு ஏற்பட்டால், அவர்களால் இயல்பாக நடக்க முடியாது. எப்போதும் தாங்கிப் பிடித்தபடிதான் நடக்க முடியும்.சிறுவர்களிடமும் ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்(Rheumatoid Arthritis) என்னும் பிரச்னை தான். இதைதான் ஜ"வனைல் ரூமட்டாய்டு(Juvenile Rheumatoid Arthritis) என்று சொல்வார்கள்.
சிகிச்சைகள்:
மூட்டுவலியைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். நிரந்தரமாகக் குணமாக்க முடியும் என்று சொல்வதற்கில்லை. ஆதலால் வலி தீவிரமடையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸில் வலிதான் பிரச்னையே. ஆதலால் வலி நிவாரண மருந்துகள் சிபாரிசு செய்யப்படும். அதனால் வலிதானே என்று அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிக் கண்டுகொள்ளாமல் விட்டால், போகப் போக கை, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படலாம். ஒரு கட்டத்தில் அவற்றின் வடிவம் மாறிப் போய்விடும் ஆபத்து உண்டு.
மூட்டுவலி, வயதானவர்களுக்கு மட்டும் தான் என்றில்லை. எந்த வயதினருக்கும் வரலாம். வயது ஏறஏற வலி அதிகரிக்குமே தவிர குறையாது. ஆதலால் ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.
முழங்கால் மூட்டுவலி மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்ற கருத்து உண்டு. ஆனால், இது தவறு. மாறாக இருபது, முப்பது வயதுடைய பெண்களை பாதிப்பதோடு, மெனோபாஸ் நெருங்கும்போது வலி அதிகரிக்கிறது என்பதே உண்மை.
முழங்கால் மூட்டுவலியின்போது, இணைப்பில் ஊசியின் மூலம் மருந்து கொடுக்கப்படுவதும் உண்டு. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஊசி போடப்படும்.
மருந்துகளில் குணமாகாதபட்சத்தில் அறுவை சிகிச்சையே நல்லது. முதலில் ஆஸ்ரயோட்டமி செய்து கொள்ளலாம். பின்னர் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரலாம்.
ஆனால், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்ஸதிக்கு மருந்துகள் மட்டுமே போதுமானது. தேவையேற்பட்டால், பிசியோதெரபி செய்து பிரச்னையைக் குறைக்கவும்.
தவிர்ப்பது எப்படி?
உடல் எடையைக் குறைப்பது, உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வது.
நடப்பது, நீச்சலடிப்பது, சிறுசிறு வேலைகள் செய்வது.
வாரம் ஐந்து நாட்கள் மிதமான நடைப்பயிற்சி நல்லது.
சமச்žர் உணவு, பால், தயிர் அவசியம்.
கொழுப்புச் சத்துள்ள உணவு வேண்டாம்.
நார்ச்சத்து உணவுகள் நல்லது.
எலும்பு தேயுமா..?
Dr. எஸ். ஆறுமுகம்
எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது? ஏன் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்கள் இந்த பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்?
பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் நாங்கள் ஆஸ்டியோ பெரோஸ’ஸ் என்போம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாற்பது,ஐம்பது வயதிற்கு மேல் சிலருக்கு வரும் பாதிப்புதான் இது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் எலும்பு தேய்மானம் அதிகமாக வரும். ஏனெனில் எலும்பு தேய்மானம் கால்சியம் சத்து குறைவதினால் ஏற்படும் பாதிப்பாகும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி நின்ற பின்னர், உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்துவிடுவதால் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். இதனால்தான் பெண்களுக்கு அதிகம் எலும்பு தேய்மானம் வருகிறது. கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு தோன்றி அந்த பெண்களுக்கும் எலும்பு தேய்மானம் வரலாம்.
எலும்பு தேய்மானம் என்பது தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் ஏன் ஆரம்பத்திலேயே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?
எலும்பு தேய்மானம் பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதில் எலும்பு முறிவு ஏற்படலாம். சின்ன இடறல் கூட எலும்பு முறிவு போன்றவற்றை உருவாக்கிவிடும். சும்மா இப்படி கையை ஊன்றியது போலத்தான் விழுந்தேன். எலும்பு முறிஞ்சிட்டுங்க என்பார்கள் சிலர். இதனை - Trivial Trumaஎன்போம். எனவேதான் இக்குறைபாட்டை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும் என்கிறோம்.எலும்பு தேய்மானம் எந்தளவு உள்ளது என்பதை முன் கூட்டியே அறிய Bone Dencito metreஎன்ற கருவி வந்துள்ளது. அக்கருவி மூலம் எலும்பு தேய்மானத்தையும், எலும்பில் கால்சியம் பற்றாக்குறை இருப்பதையும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். Dencito metre என்பது ஒரு நவீன சாதனமாகும். நமது இந்தியாவிற்கு அறிமுகமாகி இரண்டு வருடம்தான் ஆகிறது.
இந்த எலும்பு தேய்மானம் வயதான பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
வயதான பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லை. சமீப காலமாக நமது வாழ்க்கை முறையே Life Style ஆனதும் பெரிதும் மாறி விட்டது. நம்மில் பலருக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, கடின உழைப்பு என்பது மறந்துபோய்விட்டது. பல ஆண்டுகள் இளம் வயதிலேயே புகை,மதுப்பழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். இதனால் இன்றைய நாட்களில் இளம் வயது ஆண்களும் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகிறார்கள். வேறு சில உடல் நல குறைபாடுகளுக்கு குறிப்பாக ஆஸ்துமா, போன்ற நோய்களுக்கு என்று வீரியமிக்க (Sleroid) மருந்து எடுப்பவர்களுக்கும் எலும்பு தேய்மானம் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
எலும்பு தேய்மானத்திற்கு என்ன சிகிச்சை முறை உள்ளது?
வரும் முன் காப்பது என்பதுதான் எலும்பு தேய்மானத்திற்குரிய முதல் எச்சரிக்கையாகும். வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முன் கூட்டியே எலும்பு டாக்டரிடம் சென்று எலும்பு பற்றி அறிந்து கொள்வது நல்லது. எலும்பு தேய்மானம் இருப்பது தெரிந்தால் கால்சியம் ரி-பிளேஸ் மெண்ட் தெரபி மூலம் குணம் பெறலாம். பெண்களாக இருந்தால் அவர்கள் கால்சியம் ரி-பிளேஸ் மெண்ட் தெரபியுடன், ஹார்மோன் ரி-பிளேஸ் மெண்ட் தெரபியும் தேவைப்படும்.
முன்பு கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வது மட்டுமே எலும்பு தேய்மானத்திற்குரிய சிகிச்சையாக இருந்தது. கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதனால் விளைவு அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை. எனவே பின்னர் இன்ஸெக்ஷன் மூலம் கால்சியம் தரப்பட்டது. அண்மைக் காலமாக ஸ்ப்ரே மூலம் மூக்கு வழியே கால்சியத்தை உட்செலுத்தும் நவீன முறை வந்துள்ளது. இந்த நவீன கால்சியம் ரி-பிளேஸ்மெண்ட் தெரபி மிகுந்த பயன் தரக்கூடியதாகும். இந்த Nasal Spray அதிக அளவில் தீவிர கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு தேவைப்படும்.
கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு மூட்டு தேய்மானம் உடன் வருமா?
முதலில் மூட்டு தேய்மானம் என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டால் - எலும்பு தேய்மானம் என்பது மூட்டு தேய்மானத்திலிருந்து வேறுபட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள். மூட்டு தேய்மானம்- உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், தரையில் அமர்ந்து பணிபுரிவது. Indian toiletகளை பயன்படுத்துவது, போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் வர வாய்ப்புள்ளது. மூட்டு தேய்மானம் ஒரு Degernerative நோயாகும். அதாவது வயது ஆக ஆக உடம்பின் உறுதிப்பாடும்,உடற்கட்டும் மெல்ல உருமாறுவதனால் ஏற்படுகின்ற பாதிப்பாகும்.
நமது மூட்டு பகுதிக்குள்-கார்டிலேஜ் என்கின்ற அமைப்பு இருக்கும். கார்டிலேஜ்க்குள் திரவம் இருக்கும். வயதான சிலருக்கு இந்த திரவம் குறைய ஆரம்பிக்கும். இதனால் ஏற்படுவதுதான் மூட்டு தேய்மானம் ஆகும். ஆனால் கால்சியம் பற்றாக்குறை இருப்பவர் அத்தனை பேர்களுக்கும் மூட்டு தேய்மானம் வரும் என்று சொல்வதற்கில்லை. எலும்பு தேய்மானம் என்பது வேறு, மூட்டு தேய்மானம் என்பது வேறு.
மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானம் இதனை காட்டும் அறிகுறிகள் என்ன?
எலும்பு தேய்மானத்திற்கு என்று பிரத்தியேகமான அறிகுறிகள் இல்லை. முன்பு கூறியது போல் Risk Factor உள்ளவர்கள் அதாவது - உடற்பயிற்சி செய்யாதவர்கள், கடின உழைப்பில்லாதவர்கள்,மாதவிலக்கு சுழற்சி நின்ற பெண்கள், கருப்பை எடுத்த பெண்கள் டாக்டரை பார்த்து முன்கூட்டி பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம்.
மூட்டு தேய்மானத்தில் அறிகுறி...?
மூட்டு வலிதான் முதல் அறிகுறியாகும். கெண்டைக்கால் வலி, தொடையில் வலி போன்றவையாகும்.படிக்கட்டில் ஏறும்போது, தரையில் உட்கார்ந்து எழும்போது, சிறிது தூரம் நடந்தால் வலிப்பது போன்றவை மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் - தொடர்ந்து ஓய்வு எடுக்கும்போதுகூட வலிக்கலாம். இப்படி ஓய்வு எடுக்கும்போது வலிப்பது தீவிர மூட்டு தேய்மானத்திற்குரிய அறிகுறியாகும்.
மூட்டு தேய்மானத்திற்கு என்ன நவீன சிகிச்சை உள்ளது?
ஆரம்ப நிலையில் டாக்டரிடம் வந்தால் வலி நிவாரண மருந்துகளும் மூட்டுப்பகுதியை சுற்றியுள்ள சதைகளை வலுப்படுத்தும் பிஸ’யோதெரபி பயிற்சிகள் தரப்படும். கூடவே வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளச் சொல்வோம். அதாவது படிகள் அதிகம் ஏறாமல், Western toiletபயன்படுத்துவது, சமதரையில் சிறிது தூரம் நடப்பது, நாற்காலியில் அமர்வது போன்றவற்றை கடைபிடிக்க அறிவுரைத்தரப்படும்.
இதன் அடுத்த நிலை மூட்டு தேய்மானம் என்றால் Knee caps (மூட்டு மேல் போட்டுக் கொள்ளும் உறை) மற்றும் Knee - brace போட்டுக் கொள்ள சொல்வோம். வலி அதிகமாக இருந்தால் மூட்டுக்குள் Steroid ஊசி போடப்படும். இந்த ஊசி மருந்து தகுதி பெற்ற எலும்பு மருத்துவரால் மட்டுமே போடப்பட வேண்டும். இந்த ஊசி மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த அல்ல-மூட்டு வலியை போக்க மட்டுமே போடப்படுவதாகும். முற்றிய (தீவிர) நிலையில் மூட்டு தேய்மானம் என்றால் - அவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் சிறந்ததாகும்.
உண்ணும் உணவின் மூலமாக மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானத்தை முன் எச்சரிக்கையாக தடுத்துக்கொள்ள முடியுமா?
எலும்பு தேய்மானத்தினை தடுக்க-கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் உதாரணமாக பால்,முட்டை, žஸ், பச்சை காய்கறிகளை உண்ண வேண்டும். மூட்டு தேய்மானத்திற்கு உடல் பருமன் அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது தவிர வாழ்க்கை முறை மாற்றத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
மூட்டுவலிக்கு ஆயுர்வேதம்
டாக்டர் எம்.எஸ். பாபி கிளாட்ஸ்டோன்
ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை பற்றிய விஞ்ஞானம். மனிதன் நோயின்றி முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வழி வகுப்பது ஆயுர்வேதம்.
முனிவர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மருத்துவ நூல்கள்தான், இன்றைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையாக மனிதர்களுக்குப் பலன் அளித்துக் கொண்டிருக்கின்றன.
திட்டமிடல்: காலை எழுந்தவுடன் கடவுள் ஸ்லோகங்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என ஒன்றே முக்கால் மணி நேரம் கடந்தவுடன், அன்றைய வேலைகள் குறித்து மனதுக்குள் திட்டமிடல் வேண்டும். இவ்வாறு அன்றைய வேலைகளை மனம் திட்டமிடுவதே தியானம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு காலை 4.30 மணிக்கு எழுந்து தினமும் முறையாக அனைத்தையும் செய்வதை எமம், நியமம் (சுய கட்டுப்பாடு, ஒழுக்கம்) என்கிறது ஆயுர்வேதம். நோய் வராமல் தடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை அஸ்திவாரங்கள்.
முதல் கட்ட அறிகுறி: இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக 40 வயதைக் கடந்தவர்களில் 60 சதவீத பேர் மூட்டுவலி காரணமாக அவதிப்படுகின்றனர். முதல் கட்ட அறிகுறியாக தசைப் பிடிப்பு அல்லது இடுப்புப் பகுதியில் வலி அல்லது கால் மூட்டுகளில் வலி ஏற்படும். மூட்டும் எலும்பும் சந்திக்கும் இடத்தில் உராய்வுத் திரவம் ("சைனோவில்'') குறைந்து மூட்டு தேய்வதே பிரச்சினைக்குக் காரணம். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, நச்சுப் பாதிப்பு ஏற்படுவதே இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாகும்.
அதிக எடை, உடற்பயிற்சி இல்லாமை: மூட்டு வலிக்கான சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பு அடிப்படைக் காரணங்களான உடல் எடை, உடற்பயிற்சி இல்லாமையைக் கருத்தில் கொள்வது அவசியம். உடல் எடையைச் žராக வைத்துக்கொள்ள உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அசைவ உணவைத் தவிர்த்தல், உருளை - பட்டாணி - வாழைக்காயைச் சாப்பிடாமல் இருத்தல். ஐஸ் தண்ணிர் உள்பட குளிர் பானங்களைத் தவிர்த்தல், பகல் நேர தூக்கத்தைத் தவிர்த்தல் ஆகியவை மிகவும் முக்கியமானதாகும். மஞ்சள் கரு இல்லாமல் முட்டை சாப்பிடலாம்.
மருதுவர் அல்லது பிஸியோதெரப்பி நிபுணரின் ஆலோசனைப்படி தினமும் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். 15 நாள் சிகிச்சை முறை: ஆயுர்வேத மருத்துவத்தின்படி மூட்டு வலியைப் போக்க 15 நாள் "பஞ்சகர்ம'' சிகிச்சை முறை உள்ளது. முதல் 7 நாள்கள், 8வது நாள், அடுத்து 7 நாள்கள் என மூன்று கட்டமாக மொத்தம் 15 நாள்கள் சிகிச்சை அளித்து மூட்டு வலியை முற்றிலும் போக்கி நோயாளிக்கு நிவாரணம் அளிக்க முடியும்.
உள்ளுக்கு மருந்தும் வலி உள்ள இட்டத்தில் எண்ணெய் சிகிச்சையும் 7 நாள்கள் அளிக்கப்படும். முதல் கட்ட 7 நாள் சிகிச்சையின் முடிவில் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வயிற்றுக்குக் கொண்டுவரப்பட்டு, 8-வது நாள் உடலில் இருந்து மலம் மூலம் நச்சுக்கள் வெளியேற்றப்படும். இறுதிக் கட்டமாக, கடைசி 7 நாள்கள் எண்ணெய் மற்றும் உள்ளுக்கு மருந்து கொடுத்து உடலில் உள்ள ஆற்றல் மையங்கள் தூண்டப்பட்டு மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படும்.
சிற்றாமுட்டி, அஸ்வகந்தா, சிற்றாத்தை, நொச்சி உள்ளிட்ட மூலிகைகள் அடங்கிய மருந்துகள் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சையைத் தொடங்கும் முன்பு தேவைப்படும் நிலையில் எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். எனவே ஆயுர்வேத மருத்துவ முறையைக் கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாமே.!
No comments:
Post a Comment