சதுரகிரி-பகுதி -2
நமதுபயணம் தொடர்கிறது ...
உலக முழுதுந் தொழுதேத்தி உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை யிலிங்க மயமா யிருப்பாவைக்
கலக மயக்கங் கழன்றோடக் கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர் ஆடிப்பு என்றன் முடிக் கணியே
சதுரகிரி க்கு பயணம் போனேன் , சுந்தர மகாலிங்கம் பாதத்தில் சரணடைந்தேன் ,சித்தர்கள்துணையுடன் அவர்களின் வாழிடத்தில் இயற்கையை ரசித்துக்கொண்டும சிவநாமம் ஜெபித்து கொண்டும பயணம் செய்ததில்தான் எத்துனை ஆச்சர்யங்கள் , சாகசங்கள் அந்த முதல் சித்தன் சிவனின் புகழ் சொல்லவே இப்பிறவி எடுத்தேனோ என்று எண்ண தோன்றுகிறது , நான் பெற்ற இன்பம் பெருக வையகம் என்று , சிவனடியார்களுக்கு உதவவே இந்த பதிப்பு , குறை இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன் , நன்றி அன்பர்களே .
என்னற்ற பல நண்பர்களின் துணையுடனும் இனய தள நன்பர்களின் மனமார்ந்த ஆக்கங்களுடணும் ஒத்துழைப்புடனும், இறைதொண்டில், இராமகிருட்டிணன்...
தயவுசெய்து இந்த இணைப்பை பார்க்கவும்
http://siththarkal.blogspot.இன்
தயவுசெய்து இந்த இணைப்பை பார்க்கவும்
http://siththarkal.blogspot.இன்
அன்பு தோழிக்கு என் மனமார்ந்த நன்றிகள் ...
சதுரகிரி பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் என்னை தொடர்புகொள்ளவும் என் மினஞ்சல் முகவரி -- ramkeyindia@gmail .com --
சரி இனி நாம் சதுரகிரி செல்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் .
அதற்கு தானிப்ப்பாறை வழி தான் மிகவும் சிறந்தது
வெளியூர் வடதமிழ் நாட்டு அன்பர்களுக்கு
மதுரையிலிருந்து - திருமங்கலம் - பேரையூர் - வத்றாப் - தாணிப்பாறை (80 கி.மீ)
மதுரை மாநகரிலிருந்து ராஜபாளையம், தென்காசி , குற்றாலம் ,செங்கோட்டை ஆகிய ஊர்கள் போகும் பஸ்களில் ஏறி கிருஷ்ணன் கோவில் என்ற இடத்தில இறங்கவும் .(மதுரை மாட்டுத்தாவணி யில் இருந்து 5 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ் உள்ளது )
(கிருஷ்ணன் கோவில் பஸ் நிறுத்தமானது ஸ்ரீவில்லிபுத்தூர் க்கு 8 கி. மி முன்னர் உள்ளது )
அங்கிருந்து வத்றாப் க்கு செல்லவும் (கிருஷன் கோவிலி இருந்து வத்திராயிருப்பு( வத்றாப் - அப்படித்தான் குறிபிடுகிறர்கள்)பத்து கிலோ மீட்டர் ஆட்டோ வும் கிடைக்கும், கொஞ்சநேரம் காத்திருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர்ரில் இருந்து டவுன் பஸ் வரும். குறைந்த கட்டணமே ஆகும் )
வத்திராயிருப்பு ( வத்றாப்)செண்டறவுடன் அங்கிருந்து தாணிப்பாறை செல்லவும் (தாணிப்பாறை பத்து கிலோ மீட்டர் ) ஆட்டோக்கு 10 ருபாய் , மினிபஸ் வசதியும் உண்டு கட்டணம் 4 -- 6 ருபாய்
வசதி உள்ளவர்கள் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தாணிப்பாறைக்கு ஆட்டோ பிடிக்கலாம் இருபது ரூபாய் கேட்பார்கள்.
தென் தமிழகத்தில் இருந்து வரும் அன்பர்களுக்கு ,....
திருநெல்வேலியிருந்து - இராஜபாளையம் - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (125 கி.மீ)
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (30 கி.மீ)
விருதுநகரிலிருந்து - எரிச்சநத்தம் - அழகாபுரி - வத்றாப் - தாணிப்பாறை (45 கி.மீ)
இது போக சாப்டூர் வழியாக செல்வதற்கு தனிப்பாதை உள்ளது. தேனி, வருஷநாடு, கம்பம் பகுதியிலிருந்து வருபவர்கள் இந்தப் பாதையின் வழியே வருவர். ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதான்.
விசேஷ தினங்களில் சிறப்பு அரசுப் பேருந்துகள் தாணிப்பாறைக்கு இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பஸ் வசதி உண்டு.
விசேஷ தினங்களில் சிறப்பு அரசுப் பேருந்துகள் தாணிப்பாறைக்கு இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பஸ் வசதி உண்டு.
நமது உண்மையான மலை பயணம் தாணிப்பாறையில் இருந்துதான் தொடங்குகிறது.
தாணிப்பாறை தான் சதுரகிரி மலையின் அடிவாரம் ஆகும். அங்கிருந்து மகாலிங்கம் சந்நிதிக்கு சுமார் 10 km மலைப்பாதையில் நடந்து தான் செல்ல வேண்டும்.
சற்று கரடு முரடான பாதைதான். சின்ன குழந்தைகள் முதல் , 70 / 75 வயது மூதாட்டிகள் வரை சர்வ சாதாரணமாக மகாலிங்கத்தை தரிசிக்க வருகிறார்கள். எதற்கு எடுத்தாலும் டூ வீலெர், shoe என்று பழகியவர்களுக்கு அவர்களை பார்த்தால் சற்று பொறாமை தான் வரும்.
அடுத்த பதிவில் ... மாவூத்து வில் இருந்து .நமது பயணம் தொடர்கிறது ...
No comments:
Post a Comment