கொல்லிமலை -பகுதி-1
ஓகே .. அன்பர்களே..நமது அடுத்த பயணம் ரெடி ..
ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல ..இங்குள்ள அரியவகை மூலிகைகளை பாதுகாப்பதற்காக சித்தர்கள் செய்த உபாயம்.தான்.இந்த கொல்லிப்பாவை ......கொல்லிபேய்..மதிமயக்கி...செய்வினை ...செயாவினை...செயப்பாட்டுவினை ..என்பதெல்லாம் ...ஆகவே நோ மோர் பயம் அன்பர்களே .... சித்தர்கள் விரும்பியபடி எதையும் சேதபடுதாமல் இயற்கையை ரசியுங்கள் ...அவை மிக அழகானது
அரபலீஸ்வரர் கோயில்
போய் தான் பாருங்களேன் இந்த அருவியை ரசியுங்கள் அதன் பிரமாண்டத்தை
நீண்ட நாட்களாகவே ,அருகில் உள்ள கொல்லிமலைக்கு நமது வழக்கமான காடுவழி பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பது ஆவல் ..ஆனாலும் நேரமின்மையால் தள்ளிகொன்டே போனது ..மிக சமிபத்தில்தான் அதற்கான வாய்ப்பு கிட்டியது .உடனே மூட்டைகட்டினோம் கொல்லிமலைக்கு
அமைவிடம் ...
இந்தியாவின் தெற்கு பகுதியில் தமிழ்நாட்டின்நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு சிறிய மலைத்தொடராகும். 1100 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
கொல்லிமலை நாமக்கல்லிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சதுரகிரி என்ற மற்றொரு பெயரும் கொண்ட கொல்லிமலை (நாமக்கல் மாவட்டத்தில் ) 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன் தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.
எப்படி போவது ....??!!
கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம்,இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.
சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.
கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று
.இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நல்ல பிரேக் மற்றும் பிக் அப் உள்ள ( 2 ஸ்ட்ரோக் ) வாகனமாக தேர்வு செதுகொள்ளவும் ...நாங்கள் சேலத்தில் இருந்து சென்றதால் இருசக்கர வாகனத்தில் தான் சென்றோம்
வழி ...ராசிபுரம் ...சேந்தமங்கலம் ....பேளுகுருச்சி..... காலப்பநாய்க்கன்பட்டி...
காரவள்ளி....(இது தான் மலை அடிவாரம் ...இங்கு வனத்துறையின் சோதனை சாவடி ஒன்றும் உள்ளது ..
காரவள்ளி....(இது தான் மலை அடிவாரம் ...இங்கு வனத்துறையின் சோதனை சாவடி ஒன்றும் உள்ளது ..
.இங்கு இரண்டு ஹோட்டல்கள் ஒரு சில மளிகை கடைகள் உள்ளன ..பேருந்தில் வந்தாலும் இங்கு சிறிது நேரம் நிற்கும் நீங்கள் சாபிட்டு வரலாம் ஆவ்ளளவு லேட்..ஆகும் )
மலை எறிபோனால் வரோவது செம்மேடு என்றட இடம் இதுதான் கொல்லிமலை பஸ் ஸ்டாண்ட்
இந்த பேளுகுருச்சி யை பற்றி சொல்லாவிட்டால் கொல்லிமலை பயணம் முழுமை பெறாது என்பதால் முதலிலய்யே சொல்லிவிடுகிறேன்
மலை எறிபோனால் வரோவது செம்மேடு என்றட இடம் இதுதான் கொல்லிமலை பஸ் ஸ்டாண்ட்
இந்த பேளுகுருச்சி யை பற்றி சொல்லாவிட்டால் கொல்லிமலை பயணம் முழுமை பெறாது என்பதால் முதலிலய்யே சொல்லிவிடுகிறேன்
அடுத்த பதிவில் பேளுக்குறிச்சி: நள்ளிரவில் நடக்கும் பலசரக்குச் சந்தை!
தொடரும் நம் பயணம் .....
1 comment:
sir, iam intrested ,kindly inform me any future trip 9500911990
Post a Comment