தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Wednesday, 1 February 2012

கண்

கண்கள்


    
கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு. நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா?



உங்களுடைய இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங்களால் பால் பாக்கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம்.
கண்களை மூடினால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்திருப்போமா? கண்ணில் வரும் நோய்களை அலட்சியப் படுத்துகிறோம் . முறையாக மருத்துவம் செய்து கொள்வதில்லை. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது தானே நமது வழக்கம்!
அதனால் தானே உலகில் இன்று 4.5 கோடிப் பேர் பார்வையில்லாமலும், 13.5 கோடிப் பேர் பார்வைக் குறைவாலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கண் புரை 
பார்வையிழப்புக்கு Cataract என்று சொல்லப் படும் கண் புரை தான் முக்கிய காரணம். நாற்பது வயதுக்கு மேல் பார்வைக் குறைவு ஏற்பட்டால் அது பெரும்பாலும் கண் புரையினால் இருக்கலாம். பொதுவாக நம் கண்ணில் உள்ள விழி ஆடி, ஒளி ஊடுருவுந் தன்மையை விழி ஆடி இழந்து விடலாம். கண்ணின் பிற பகுதிகள் நல்ல நிலையில் இருந்து விழி ஆடி மட்டும் கெட்டுப் போய் விடுவதால் கண்ணுக்குள் ஒளிக் கதிர்கள் செல்ல முடியாது. இதனால் தாற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. இது தான் கண்புரை.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் உலக சுகாதார நிறுவனம், பார்வையிழப்பைக் கட்டுப் படுத்துவதற்கான உலகளாவிய அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து 2020 - ம் ஆண்டுக்குள் பார்வையிழப்பைக் கட்டுப்படுத்த வேண்டி 'பார்வைக்கு உரிமை' என்ற திட்டத்தைச் செயல் படுத்தி வருகிறது.
பார்வையிழப்புக்கான முக்கிய காரணங்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பார்வையை எப்படிப் பாதுகாக்கலாம் என்று அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக (அக்.10) உலகம் முழுவதும் உலக பார்வை நாள் (World Sight Day) கடைப் பிடிக்கப்படுகிறது.
கண்புரையைச் சொட்டு மருந்தால் கரைக்க இயலாது. இன்றளவில் அறுவை மருத்துவம் ஒன்றே வழி. மருத்துவர் கூறும் உரிய நேரத்தில் அறுவை மருத்துவம் செய்து கண்ணில் விழி உள் ஆடி (Intra Ocular Lens) பொருத்திக் கொண்டு நன்றாகப் பார்க்கலாம். முன்பெல்லாம் கண்புரைக்கு மருத்துவ மனையில் ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும். அதன் பின் 45 நாள்கள் வரை ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காலை 8 மணிக்கு மருத்துவ மனைக்குச் சென்று 8-30 க்கு அறுவை மருத்துவம் செய்து கொண்டு 9 மணிக்கு இல்லம் திரும்பி விடலாம். அந்த அளவுக்கு கண்புரை அறுவை மருத்துவம் நவீனமாகிவிட்டது. Glaucoma) இருக்கலாம். இதை உரிய நேரத்தில் மருத்துவம் செய்து கட்டுப் படுத்த வேண்டும். இல்லையேல் பார்வை நரம்புகள் நசிந்து போய் விடும்.நீரிழிவு நோயினால் கண்ணில் ஏற்படும் பாதிப்பான டயாபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே அவ்வளவாக இல்லை.
கண்ணாடி
கண்ணில் பார்வைக் குறைவோடு பலர் கஷ்டப்படுவதை காணலாம். சாதாரணமாக கண்ணாடி போட்டு சரி செய்யக் கூடியதாக இருக்கலாம்.
பார்வைக் குறைவுக்கு கண்ணாடி நல்ல தீர்வு எனும் போது கண்ணாடி அணிவதற்கு வெட்கப் படக் கூடாது. உரிய நேரத்தில் கண்ணாடி போடாமல் விட்டு விட்டால், 'பவர்' அதிகமாகி ஒரு நிலையில், கண்ணாடி போட்டாலும் பார்வை இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே கண் ஆய்வு செய்து கொள்வது நல்லது.
குழந்தைக்கு அடிக்கடி கண்ணில் இமைக் கட்டி ஏற்பட்டாலோ, படிக்கும் போதும் எழுதும் போதும் கண்ணில் நீர் வடிந்தாலோ ஒரு வேளை பார்வைக் குறைவாக இருக்கலாம். கண் மருத்துவரிடம் சென்று ஆய்வு செய்து கண்ணாடி போட வேண்டும். அடிக்கடி தலைவலி, மின்சார பல்பைச் சுற்றி ஒளி வட்டம், பக்கப் பார்வையில் குறைபாடு இருந்தால் ஒரு வேளை கண் நீர் அழுத்த உயர்வாக நீரிழிவு நோயினால் கண்ணின் விழித் திரை பாதிக்கப் பட்டு, அதன் ரத்தக் குழய்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இந்நிலையில் லேசர் மருத்துவத்தால் மேற் கொண்டு பாதிப்பு ஏற்படாமல் கட்டுப் படுத்த முடியுமே ஒழிய, ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய முடியாது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வதோடு , 6 மாதத்திற்கொரு முறை கட்டாயமாகக் கண்களை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
கண் கோளாறா? - உடனே கவனியுங்கள்

கிளாகோமா

கிளாகோமா என்பது ஒருவித கண் நோய். இதன் சிறப்பு என்ன? பலருக்கு இந்நோய் இருப்பது தெரியாது. அதன் காரணம், கண்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித வலியோ மற்ற அறிகுறிகளோ அதிகமாக இருக்காது. ஆனால் பார்வை, முக்கியமாக பக்கப்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்து கொண்டே இருக்கும்.
இறுதியில் சிறு குழாய் வழியாக பார்ப்பது போல் ஆகி, மேலும் குறைந்து முற்றிலுமாக போய் விடும் என்கிறார் டாக்டர் ஏ.செந்தூர் பாண்டியன். அவர் மேலும் கூறியதாவது:-
சாதாரணமாக நம் கண்கள் காற்றடைத்த பந்து போன்றவை. கண்களுக்கு உருவம் கொடுக்க, காற்றுக்குப்பதிலாக கண்களுக்குள் ஒரு வித திரவம் உள்ளது. அதனால் கண் தன் உருவத்தைப் பெறுகிறது. அதற்கு கண்ணுள் அழுத்தம் தேவைப்படுகிறது. இந்த அழுத்ததின் அளவு சாதாரணமாக 15-21 எம்எம்எச்ஜி இருக்கும்.
ஆனால், எந்த காரணத்தாலும் இந்த அழுத்தம் 22 எம்எம்எச்ஜிக்கு மேல் அதிகரித்தால் கண்ணின் நரம்பு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. நரம்பிற்கு இரத்தம் கொடுக்கும் நுண்ணிய இரத்த குழாய்கள் சரியாக செயல்பட முடியாமல் அதனால் நரம்பு கெட்டுவிடும். இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கப்பார்வை இழப்பு ஏற்படும். பார்வை போனது திரும்பக் கிடைக்காது.
இந்த "கிளாகோமா" நோயில் 40 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. சில வகைகளில் வலி இருக்கும். வலியிருந்தால் அதற்காக மக்கள் கண் மருத்துவரை நாடி வருவார்கள். ஆனால் வலி இல்லாத அறிகுறிகள் அற்ற ''குரோனிக் கிளாக்கோமா'' என்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு, இந்நோய் கண்பார்வையை மிகவும் கெடுத்து விடும்.
இந்த வகை ''கிளாகோமா''தான் மக்களை அதிக அளவில் பாதிக்கிறது. எந்தவித வலியோ, உறுத்துதலோ, நேர் பார்வை பாதிப்போ இருக்காது.
பின் எவ்வாறு கண்டுபிடிப்பது?
கண் மருத்துவர் சோதனை செய்தால் ஆரம்பத்திலேயே இந்நோயினை கண்டுபிடித்து, தேவையான சிகிச்சைசெய்து பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
இவர்கள் கண்களில் அழுத்தம் அதிகமாக இருக்கும். சோதனைகள் மூலம் பக்கப்பார்வை பாதிப்பு, மற்றும் கண் நரம்பு மாற்றங்களை கண்டறிந்து, கண் மருந்துவர் இந்நோய் இருப்பதை கண்டுபிடிப்பார். சிலருக்கு அடிக்கடி லேசான தலைவலி, கண்வலி, இருக்கலாம்.
அடிக்கடி கண்ணாடி மாற்றுவது மட்டும் சிலருக்குத் தேவைப்படலாம். ஆனால் நிறைய பேருக்கு எந்தவித அறிகுறியும் இருக்காது. சோதனைகள் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள், கிட்டப்பார்வை பாதிப்பு உள்ளவர்களுக்கு மற்றும் குடும்பத்தில் யாருக்காவது "கிளாகோமா" பாதிப்பு இருந்தால், இந்நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
நோயை கண்டு பிடித்ததும் அதற்கு மருத்துவம் செய்தாக வேண்டும். கண் அழுத்தத்தைக் குறைப்பதுதான் பார்வையைக் காப்பாற்ற உள்ள ஒரே வழி.
இதற்கு கண் சொட்டு மருந்துகள் உள்ளன. அதை தவறாமல் உபயோகித்துக் கொண்டேயிருந்தால் கண் அழுத்தத்தைச் žராக வைத்திருக்கலாம். இது வாழ்நாள் முழுவதும் தேவைப்படும்.
மேலும் சிலருக்கு, சொட்டு மருந்துகள் மட்டும் தேவையான அளவு அழுத்தத்தைக் குறைக்காது. அவர்கள் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அதன் வழியாக அழுத்தத்தைக் குறைக்கலாம்.
"லேசர்" சிகிச்சையும் அழுத்ததைக் குறைக்க சிலருக்கு தேவைப்படுகிறது.
மற்றும் பலருக்கு அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உபயோகிப்பது கடினம். செலவும் அதிகம். இவ்வாறு பல வழிகளில் அழுத்தத்தைக் குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வந்தால் மேற்கொண்டு பார்வை கெடாமல் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கண்களை சோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த கிளாகோமாவில் நான் முன்பு கூறியதைப் போல் பல வகைகள் உள்ளன. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை பாதிப்பு பல வகையான "கிளாகோமா"வினால் ஏற்படுகிறது. அதனால்தான் கண் சோதனை அனைவருக்கும் அடிக்கடி அவசியம் என்று கண் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
நன்றி: டாக்டர் ஏ. செந்தூர்பாண்டியன்
மெட்ராஸ் - ஐ'
கண்ணில் ஏற்படும் எல்லா சிவப்புகளுமே 'மெட்ராஸ் - ஐ' - யினால் ஏற்படுவதல்ல. பல வித கண் நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். எனவே நீங்களாகக் கடைக்குப் போய் சொட்டு மருந்து வாங்கி போட்டு கண்களைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கண்ணில் ஏற்பட்ட சிவப்பு எதனால் ஏற்பட்டது என்பதை ஒரு கண் மருத்துவரால் மட்டுமே கண்டறிந்து மருத்துவம் செய்ய இயலும். சுய மருத்துவம் செய்து கொண்டால், ஆரம்ப நிலையில் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் வாய்ப்பினை இழந்து போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். தாமதமான நிலையில் மருத்துவரிடம் செல்லும் போது ஒரு வேளை பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.


’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’ ‘பிங்க் ஐ’ என செல்லமாக அழைக்கப்படுகிறது.

மெட்ராஸ் ஐ என எப்படி பெயர் வந்தது? இந்த நோய்கான காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது. 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக இருப்பது ‘அடிநோ’ வைரஸ் எனும் கிருமி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.

மெட்ராஸ் ஐ வகைகள்:

பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ,

 வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ என பல வகைகள் இருக்கிறது.

அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ

: பெருகி வரும் மாசினால் வெகு சுலபமாக நம்மை வந்தடைவது அலர்ஜி. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழியவும் செய்யும்.

வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ: இந்த வகை சளிப் பிடித்தல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவது. இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும்.

பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ: இதில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐயில் காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்ததுப் போன்ற ஒரு உறுத்தல் இருக்கும்.

ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ : இந்த வகையில் கண் உறுத்தலும் வலியும் அதிகமிருக்கும். அரிப்போ நீர்/சீழ் வடிதல் இருக்காது.

சிகிச்சை: மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தைப் பொறுத்து செயற்கை கண்ணீர் (Artificial tears) ஏதேனும் பரிந்துரைப்பார்கள். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும்.

மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம்.

கண்ணைத் துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி/கம்ப்யூட்டர் பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களை கூச செய்யாத வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க: மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவக் கூடியது என்பதால் இதுப்போல நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் புழங்கும் இடத்திற்கு செல்வதைத் தடுக்கலாம். மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கையால் தொட்ட ஏதேனும் ஒன்றை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது. அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. மேலும் மெட்ராஸ் ஐ வராவிட்டாலும் நம் கை நேரடியாக கண்ணைத் தொடுவற்கு வழிவிடாமல் கண்ணாடி அணிந்துக் கொள்ளலாம். கையால் கண்ணைத் துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.
(மு. வீராசாமி - கட்டுரையாளர், கண்மருத்துவ உதவியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர்)

சுருக்கங்கள் மற்றும் கோடுகள்

கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம்.
கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் உபயோகிக்கலாம். மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.

தேயிலையைக் கொதிக்க வைத்த தண் ரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்யவும்.

கருவளையம்:
சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்களுக்கான காரணங்கள் பல. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.
எட்டு மணி நேரத் தூக்கம் முதல் சிகிச்சை. பகல் நேரத்தில் உள்ளங்கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியப்படி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.
கண்களை இறுக மூடவும். பிறகு அகலமாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.
வீங்கின கண்கள்
சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி, மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள்
கண்களுக்கு உபயோகிக்கிற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண் ர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண்களின்மேல் வைக்கிற பழக்கம் வேண்டாம். எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண்களுக்குள் போகும். கண்களைக் கழுவிவிட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
கண்களுக்கான மேக்கப்பை நீக்க வேண்டியதன் அவசியம்:
இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி, கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.
சில டிப்ஸ்:
சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களைக் கழுவவும்.
சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம்.
கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.
கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
எட்டு மணி நேரத் தூக்கம். 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது இந்த இரண்டும் மிக முக்கியம்.