தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday, 12 February 2012

சதுரகிரி பகுதி - 4

சதுரகிரி பகுதி - 4 

சதுரகிரி பகுதி - 4 

நமதுபயணம் தொடர்கிறது ...


சரி இபோது நாம் தாணிப்பாறையில் இருந்து நமது மலை பயனத்தை 
ஆரம்பிப்போம் .. இங்கு நாம் முதலில் காண்பது மூலிகை வனம் தாணிப்பாறை 

என்ற அரசு வனத்துறையின் வரவேற்பு வளைவு , அதன் இருபுறமும் கல்வத்தில் மூலிகை அரைக்கும் சித்தர் களின் சிலைகலை காணலாம் ,





ஆங்கங்கே சில சிறிய தள்ளுவண்டி மற்றும் தற்காலிக 
கடைகள் உண்டு , இங்கு உங்களுக்கு தேவையான பிஸ்கோத்து , தண்ணீர் பாட்டில்கள், செயற்கை குளிர்பானங்கள் .....?? கிடைக்கும் .

கொஞ்சம் முன்னால் நீங்கள் வந்த வாகனங்களை நிருதிக்கொல்ள்ளலாம் 
,[ தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் அல்லது கார்கள் ஆகியவைகள் ] ஆட்டோக்கள் உங்களை இங்குதான் இறக்கி விடுவார்கள் .

சுமைதூகிகள் இங்கு நின்றுகொண்டு இருப்பார்கள் . அவர்களிடம் உங்கள் சுமைகளை கொடுத்துவிட்டு , மலையில் நீங்கள் எங்கு , அதாவது எந்த மடத்தில் தங்கப்போகிறோம் என்று சொல்லிவிட்டால் , பத்திரமாக அங்கு உங்கள் சுமைகளை வைத்துவிடுவார்கள் நீங்கள் மெதுவாக மலைக்கு வந்து சேரலாம் ..

சுமைக்கு கூலியாக 25 கிலோவிற்கு 150 -200 ருபாய் வாங்குகிறார்கள் ,

 நடக்க முடியாதவர்களை இவர்கள்  2000 -2500 ருபாய்க்கு டோலி கட்டி மலையில் கொண்டு விடுகிறார்கள் , நீங்கள் நினைப்பதுபோல அதாவது சபரிமலையில் உள்ள வசதியான சேர் டோலி அல்ல.. ஒரு மூங்கில் கம்பில் போர்வையை கட்டி அதில் உங்களை மல்லாக்க படுக்கவைத்து முன்னும் பின்னும் இருவர் தூக்கிகொண்டு செல்வர்கள்   திவ்யானுபவம்.?.?.?






மற்றபடி மலைக்கு மேலே உள்ள அன்னதான மடங்களுக்கு நீங்கள் அளிக்கும் காய் கறிகள் ,அரிசி , மளிகை உள்ளிட்ட... ஏன் காஸ் சிலிண்டர் உட்பட எல்லாம் இந்த சுமைதூகிகள் மூலமாகதான் .. அதற்க்கு மட்டும் கொஞ்சம் கூலியை குறைத்து கொள்கிறார்கள் ..ஏன்.. சிலர் சிரியசுமைகளை இலவசமாக கூட மடங்களுக்கு கொண்டு சேர்க்கிறார்கள் ..

சரி விஷித்திற்கு வருவோம் ...இங்கு ஒரு  தண்ணீர் தொட்டி உள்ளது குளிக்க விரும்புபவர்கள் குளித்து கொள்ளலாம் பெண்களுக்கு என்று தனியே உடை மாற்றும் சிறிய தடுப்பும் கட்டிஉள்ளனர்.

அரசு அமைத்துள்ள குடி தண்ணீர் தொட்டி  ஒன்றும் உள்ளது பைப் அமைத்துள்ளனர்  தேவையான தண்ணீர் பிடித்து கொள்ளலாம் .

[மலை நெடுகிலும் நிறைய காட்டாறுகள் , ஓடைகள் , சிறிய சுனைகள் உள்ளன ,அவை இயற்கையானவை , அவற்றில் குளிப்பது மிகவும் நல்லது .மூலிகை தண்ணீர் இல்லியா .. ஆனால் கவனம்  எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் .. காட்டாறுகள் மிகவும் ஆபத்தானவை ..நாம் செல்வது விலங்குகள் சரனாலயம் என்பதுஎப்போதும் உங்கள் நினைவில் இருக்கட்டும் ]

இங்கும் கூட சில இட்லி கடைகள் உள்ளன ஆணால் அவை அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மட்டுமே ...அன்னதானமும் கூட செய்கிறார்கள் ஆனால் 11 மணி ஆகிவிடும் நமக்கு நேரம் பத்தாது . வெயிலுக்கு முன்பாக நாம் குறைந்தது பாதி மலையாவது ஏறிவிடவேண்டும் . அப்போதுதான் களைப்பு தெரியாது ..

அதிலும் நாம்  பாதி  வெறும் வயிறுடன் சென்றால்தான் நன்றாக மலையேற முடியும் . இல்லையென்றால் கொஞ்சம் சிரமம்தான் ..

சரி வனத்துறையின் வரவேற்பு வளைவுக்குள்  நுழைந்ததும் சுந்தர மகாலிங்கத்திற்கு அரகரோ என கூவி  இருபுறமும் ஆண்டிகள் நம்மை வரவேற்கிறார்கள் ...?? முடிந்தால்  உதவும்கள் அல்லது அமைதியாக செல்லுங்கள் .

இடதுபுறம் வனத்துறையின் கட்டுப்பாடு அறை, தொடர்ந்து அறிவிப்பு பலகைகள் , கொஞ்சம் நின்று அவற்றை படியுங்கள் ...சுவரிசமாக இருக்கும் ...??















ஆம் இது சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் ,, இங்கு நிறைய மூலிகைகள் , ஒரு புலி , 50 - 60  யானைகள் ,நிறைய கரடிகள் ,மான்கள் , மலைப்பாம்புகள் ,வகை வகையான  பாம்புகள் , குறிப்பாக ராஜபாளையம் வனபகுதியில் ராஜநாகம் அதிகம் ..[அங்கு அவற்றிக்கு சரணாலயம் உண்டு]  அப்புறம் லங்கூர் வகை குரங்குகள் ..மற்றும்  சாதாரண மக்காக் வகை குரங்குகள்  .. செந்நாய்கள் ..உள்ளன ..

இங்கு மலையின் மேல்பகுதியில் உள்ள வனத்தில் ,யானைகள்,கரடிகள் ,மான்கள் , மலைப்பாம்புகள் ,லங்கூர் வகை குரங்குகள் ..மற்றும்  சாதாரண மக்காக் வகை குரங்குகள். ஆகியவற்றை சாதாரணமாக காணலாம் .

பறவைகளை பொறுத்தவரையில் கொஞ்சம் கம்மிதான்.



 சரி சரி மீண்டும் தாணிப்பாறைக்கு வருவோம் ,,.. அறிவிப்பு பலகைகள் தொடர்ந்து சென்றால் முதலில் வருவது ஆசிர்வாத பிள்ளையார் கோவில் தான் 


ஆசிர்வாத பிள்ளையார் கோவில் அதற்கு முன்னால் ஒரு சிறிய  அருவி உள்ளது மழை காலங்களில் இதில் நிறைய தண்ணீர் வரத்து காணப்படும் ..




 இங்கு குளித்து காலைகடன்களை முடித்து செல்லலாம் . இல்லை என்றால் கொஞ்சம் தள்ளி தாணிப்பாறையில் உள்ள தடுப்பணையில் முடிதுகொல்ள்ளலாம் ..



இந்த தாணிப்பாறை பற்றி நிறைய தகவல்கள் உள்ளன 


அவற்றைபற்றி  அடுத்த பதிவில் ......

தாணிப்பாறையில் இருந்து  .நமது பயணம் தொடர்கிறது ...



No comments: