தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday, 4 March 2012

கொல்லிமலை -பகுதி-2




கொல்லிமலை -பகுதி-2


பேளுக்குறிச்சி: நள்ளிரவில் நடக்கும் பலசரக்குச் சந்தை!




 பேளுக்குறிச்சியில் ஆண்டுதோறும் 3 மாதங்கள் நடைபெறும் பாரம்பரியம் மிக்க பலசரக்கு சந்தை . ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் ......குறைந்த விலையில் பொருட்களை வாங்கதற்போதெல்லாம்  வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர்.
 இயற்கை மூலிகைகளுக்குப் பெயர் பெற்ற கொல்லிமலை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இங்கு, மூலிகைகள் மட்டுமல்லாமல் முக்கனிகள், மசாலா பொருட்களின் விளைச்சலும் அதிகம்.
 கொல்லிமலையில் உள்ள செம்மேடு, சோளக்காடு, நடுக்கோம்பைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சீரகம், சோம்பு, மிளகு, கடுகு, ஏலக்காய், கசகசா, வெந்தயம் போன்ற வாசனை திரவியங்கள் பயிரிடப்படுகின்றன.
 இப்பகுதியில் விளையும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் கொல்லிமலைக்கு வந்து வாசனைத் திரவியங்களை வாங்கிச் செல்வதுண்டு.


 அனைத்து வாசனை திரவியங்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் மலையடிவாரப் பகுதியான பேளுக்குறிச்சியில் சந்தை அமைக்கப்படுகிறது.
 இரவுச் சந்தை: பல நூற்றாண்டுக்கும் மேல் நடைபெறும் இச்சந்தை ஆண்டுதோறும் மாசி மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை 3 மாதங்கள் நடக்கும். வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை 11 மணி வரை என வாரத்தில் 2 நாள்களுக்கு மட்டுமே சந்தை நடைபெறும். 
இதேபோன்று, தொடர்ந்து 10 வாரங்களுக்கு விடிய, விடிய வியாபாரம் நடப்பதால் இது இரவுச் சந்தை என்றே அழைக்கப்படுகிறது.
 விலை குறைவு: வெளி மார்க்கெட்டில் 1,200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் பொருட்கள் இச்சந்தையில் 800 முதல் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படும் துவரம் பருப்பு, இங்கு 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 இதே போல் வீட்டுக்கு தேவையான அனைத்து வகை பொருட்களும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே, தமிழகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து வாசனைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

 குறிப்பாக, தென்மாவட்டங்களான மதுரை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிதம்பரம், கும்பகோணம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பேருந்து, வேன் போன்ற வாகனங்களைப் பிடித்து குழுக்களாக வருவர்.

 ஒரு ஆண்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க வரும் மக்களின் கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

 படி அளவையில் வியாபாரம்: எடையளவு இல்லாமல், படி அளவைக் கொண்டு நடைபெறும் இந்த விற்பனையில் சோம்பு, சீரகம், மிளகு, கடுகு, வெந்தயம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு செட் 800 முதல் 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
 ஒரு ஆண்டுக்குத் தேவையான பொருட்களை குடும்பம், குடும்பமாக வண்டி பேசிக்கொண்டு வந்து வாங்கிச் செல்வதால், பணம் மிச்சமாகிறது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
 பல கோடி வர்த்தகம்: வியாபாரிகள் குறைந்த லாபத்தில், அதிக வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். நகரங்களுக்கு இணையாக பேளுக்குறிச்சி சந்தைக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
 அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா?: பல கோடி வர்த்தகம் நடக்கும் இப்பகுதியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்துதர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

நமது அடுத்த பதிப்பில் மீண்டும் கொல்லிமலைக்கு பயணம் .....

தொடரும் நம் பயணம் ..........

No comments: