சதுரகிரி-பகுதி -3
மாவூத்து
நமதுபயணம் தொடர்கிறது ...
உதயகிரிநாதர் சந்நிதி
சதுரகிரி பயணம் மேற்கொள்பவர்கள் முதலில் மாவூத்து என்னும் இடத்தில இருந்து தன தொடங்கவேண்டும் என்பது சதுரகிரி தா புராணத்தில் இருந்து அறிகிறோம் எனவே நாமும் இந்த மாவூத்து என்ற இடத்தில இருந்து பயணிப்போம் .இங்கு கோயில் கொண்டுளவர் உதயகிரிநாதர் ஆவார் . (சதுரகிரி தல புராணம் தனியே வேறு பதிப்பில் தருகிறேன் )
சரி ..மாவூத்து எங்கே உள்ளது ...?
இந்த இடத்திற்கு வத்திராயிருப்பிற்கு வந்து,அங்கிருந்து மஹாராஜபுரம் வழியாக தம்பிபட்டி செல்லும் பாதையில் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,ஏதேனும் ஆட்டோவிலோ,நடந்தோ இரண்டு கிலோ மீட்டர் வரை சென்றால் மாவூற்று என்ற இத்தலத்தை தரிசிக்கலாம்.
ஆட்டோவில் வத்திராயிருப்பில் இருந்தும் தனியாக வாடகை பேசி செல்லலாம் நாங்கள் அப்படித்தான் சென்று வந்தோம் . எண்ண இன்னும் ஒரு பத்து ருபாய் அதிகம் கேட்கிறார்கள் அவலவுதான் இருந்தாலும் இயன்றவரை சதுரகிரியை முழுமையாக பார்த்துவிடுவது என்பதால் கொஞ்சம் இதர செலவை குறைத்துகொண்டு பயணத்தை தொடர்ந்தோம் ..
இறைவன் சித்தர்களோடு சித்தர்களாய் கலந்திருந்த இடம் இது.இந்த இடத்துக்குத்தான் முதலில் சதுரகிரி செல்பவர்கள் செல்ல வேண்டும்.இந்த மாவூற்று என்ற தீர்த்தத்தில் குளித்துவிட்டு அங்குள்ள உதயகிரி நாதனை தரிசித்துவிட்டுத்தான் சுந்தர மஹாலிங்கத்தையும் , சந்தன மஹாலிங்கத்தையும் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.பதிவு பெரிதாககி விடும் என்பதால் இங்கு படங்களை மட்டும் வெளியிடுகிறேன்.
மாவூத்துக்கு போகும் பாதை....
உதயகிரிநாதர் சந்நிதி
உதயகிரிநாதர் சந்நிதி
மாவூற்று தீர்த்தம
மாவூற்று தீர்த்தம
மாவூற்று தீர்த்தம
மாவூற்று தீர்த்தம
மாவூற்று தீர்த்தம
அடுத்த பதிவில் ...
தாணிப்பாறையில் இருந்து .நமது பயணம் தொடர்கிறது ...
1 comment:
எனக்கு காடுகளில் பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்
Post a Comment