தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Saturday, 18 February 2012

பெர்முடாமுக்கோணம் - பகுதி -3


பெர்முடாமுக்கோணம் - பகுதி -3 







குறிப்பிடத்தக்க சம்பவங்கள்

பிளைட் 19
பிளைட் 19 என்பது குண்டு வீசும் விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும்.
இது டிசம்பர் 5, 1945 அன்று அட்லாண்டிக் மீது பறக்கையில் மறைந்து போனது.
போர்க்கப்பலில் இருந்தான விமான பாதை, கிழக்கே 120 மைல், வடக்கே 73 மைல்கள் பின்
மீண்டும் இறுதியாக 120 மைல் பயணத்தில் கடற்படை தளத்திற்கு திரும்புவது என்று
திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவை திரும்பவில்லை. விமானம் அசாதாரண நிகழ்வை
சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக்
காட்டியதாகவும், விமானம்
பறந்தது ஒரு அமைதியான நாளில் அனுபவப்பட்ட விமானியான லெப்டினென்ட். சார்லஸ்
கரோல் டெய்லரின் மேற்பார்வையில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. "புரியாத
காரணங்கள் அல்லது விளைவுகளால்" நிகழ்ந்ததாக கடற்படை அறிக்கை இந்த விபத்து
குறித்து கூறுவது குழப்பத்தை அதிகப்படுத்துவதாக இருக்கிறது. டெய்லரின் தாய்
தனது மகனின் மரியாதையைக் காப்பாற்றுவதற்காகவே, அவர்களை "புரியாத காரணங்கள்"
என்று எழுதச் செய்ததாக நம்பப்படுகிறது. உண்மையில் டெய்லர் அவர் இருந்ததாக
நினைத்த இடத்தில் இருந்து வடமேற்கில் 50 கிமீ தூரத்தில் இருந்தார்.
இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன கப்பலுக்கு உதவ
13பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கான கப்பல்படை விமானம்
அனுப்பப்பட்டது.
ஆனால் அதற்குப் பின் அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை.
பின்னர், புளோரிடா
கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்தவர்கள் இந்த விமானம்
ரோந்தில் இருந்திருக்கக் கூடிய அந்த தருணத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததை
கண்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் இந்த கதையில் அடிப்படை உண்மைகள் துல்லியமானவையாக இருக்கின்றன,
ஆனால் முக்கியமான சில விவரங்கள் இல்லாமலிருக்கின்றன. சம்பவம் நடந்து முடிந்த
சமயம் காலநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது. அத்துடன் டெய்லருக்கும் பிளைட்
19 விமானக் கூட்டத்தின் பிற விமானிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் குறித்த
கடற்படை அறிக்கைகள் மற்றும் எழுதப்பட்ட பதிவுகள் காந்தப் பிரச்சினைகள்
இருந்ததாய் சுட்டிக் காட்டவில்லை.

 

மேரி செலஸ்டி

1872 ஆம் ஆண்டில் 282 டன்கள் எடை கொண்ட இருதூண்கப்பல் மேரி செலஸ்டி மர்மமான
முறையில் தொலைந்து போனது . பல சமயங்களில் இச்சம்பவம் தவறாக முக்கோணத்துடன்
இணைத்துக் கூறப்படுகிறது. கப்பல் போர்ச்சுகல் கடலோரத்தில் தொலைந்திருந்தது.
இந்த சம்பவம் அநேகமாக மேரி செலஸ்டி என்னும் அதே பெயரிலான 207 டன் துடுப்புக்
கப்பல் 1864 ஆம் ஆண்டில் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று பெர்முடா கடலோரத்தில்
தரை தட்டி பின் விரைவாக நீருக்குள் மூழ்கிய சம்பவத்துடன்
குழப்பப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் குறித்த பல "உண்மைகள்" உண்மையில் மேரி
செலஸ்டி என்னும் ஆர்தர் கோனான் டாயிலின் "ஜே. ஹபகுக் ஜெப்சனின் வாக்குமூலம்"
(உண்மையான மேரி செலஸ்டி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கற்பனை
சேர்க்கப்பட்டது) என்னும் சிறுகதையில் வரும் கற்பனைக் கப்பலில் இருந்து
உதித்தவை என்று குசெ குறிப்பிடுகிறார்.
எலன் ஆஸ்டின்
1881 ஆம் ஆண்டில் எலன் ஆஸ்டின் ஒரு அநாதையாக வந்த கப்பலைக் கண்டார் . அதில்
மீட்பு ஊழியர்களை நிறுத்தி, அதனுடன் சேர்ந்து நியூயார்க் வர முயற்சி செய்தார்.
இந்த அநாதைக் கப்பல் திரும்பவும் மீட்பு ஊழியர்கள் இன்றி தோன்றியதாகவும்,
திரும்பவும்
இரண்டாவது முறையாக மீட்பு ஊழியர்களுடன் காணாமல் போனதாகவும் சிலர்
விவரிக்கின்றனர்.


யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்

அமெரிக்க கடற்படை வரலாற்றில் போர் சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமான
உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. 1918, மார்ச் 4 ஆம் தேதிக்கு
பிந்தையதொரு காலத்தில் பார்படோஸ் தீவுகளில் இருந்து கிளம்பிய யுஎஸ்எஸ்
"சைக்ளோப்ஸ்" என்னும் கப்பல் ஒரு சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன்
காணாமல் போனது. எந்த ஒரு ஒற்றை கருத்திற்கும் வலுவான ஆதாரமில்லை எனினும், பல்வேறு
சுதந்திரமான கருத்துகள் உலவுகின்றன. சிலர் புயல் காரணம் என்கிறார்கள், சிலர்
எடையால் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்த இழப்புக்கு
போர்க்கால எதிரி நடவடிக்கை தான் காரணம் என்கிறார்கள்.

தியோடோசியா பர் அல்ஸ்டான்

தியோடோசியா பர் அல்ஸ்டான் என்பது முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியான ஆரான்
பர்ரின் மகளாவார். அவர் காணாமல் போனதுடன் முக்கோணத்திற்கு தொடர்பு இருப்பதாய்
சில சமயங்களில் கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவில் இருந்து நியூயார்க்
நகரத்திற்கு டிசம்பர் 30, 1812 அன்று சென்ற பேட்ரியாட் கப்பலில் அவர் ஒரு
பயணியாக இருந்தார். அதற்குப் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
கடற்கொள்ளை மற்றும் 1812 ஆம் ஆண்டுப் போர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று
காரணமாய் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே போல் முக்கோணத்திற்கு நன்கு
வெளியே டெக்சாஸ் பகுதியில் அவர் இருந்ததாகக் கூறப்படும் ஒரு கருத்தும்
நிலவுகிறது.


ஸ்ப்ரே

எஸ்.வி. ''ஸ்ப்ரே என்னும் ஒரு அநாதையாய் நின்ற மீன்பிடி படகினை கடல் பயணக்
கப்பலாக மாற்றிய ஜோஸ்வா ஸ்லோகம் என்பவர், அதனை 1895 மற்றும் 1898 ஆம்
ஆண்டுகளுக்கு இடையில் முதல்முறையாய் உலகெங்கும் தனியாளாக சுற்றிவரும் தனது
சாதனை முயற்சியை நிறைவு செய்யப் பயன்படுத்தினார்.
1909 ஆம் ஆண்டில், ஸ்லோகம் வினியார்டு ஹேவனில் இருந்து வெனிசூலாவுக்கு பயணத்தை
துவக்கினார்  . அவரையும் சரி ஸ்ப்ரே யையும் சரி அதற்குப் பின் காணவில்லை.
அவர்கள் காணாமல் போன போது பெர்முடா முக்கோண பகுதியில் இருந்தார்கள்
என்பதற்கோ, அல்லது
அமானுட நடவடிக்கை இருந்ததற்கோ சான்று எதுவும் இல்லை.


கரோல் ஏ. டீரிங்

1919 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஐந்து கலக்கூம்புகள் கொண்ட பாய்மரக் கப்பலான கரோல்
ஏ. டீரிங் வடக்கு கரோலினாவின் கேப் ஹட்டராஸ் அருகே ஜனவரி 31, 1921 வாக்கில்
அநாதையாய் முழுக்க தரை தட்டிக் கிடந்தது. அந்த சமயத்தின் வதந்திகளும் இன்ன
பிறவும் டீரிங் கடற்கொள்ளைக்கு பலியாகி இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டின.
மருந்துக் கடத்தல் தடை சமயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்பட்டதுடன்
இச்சம்பவத்திற்கு தொடர்புபட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அத்துடன் ஏறக்குறைய
அதே சமயத்தில் காணாமல் போன எஸ்.எஸ்.ஹெவிட் என்னும் இன்னொரு கப்பலுக்கு
இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன.


டக்ளஸ் டிசி-3

டிசம்பர் 28, 1948 அன்று, டக்ளஸ் டிசி-3 விமானம் ஒன்று பூர்டோ ரிகோவின் சான்
ஜூவானில் இருந்து மியாமி நோக்கி பறந்து செல்கையில் மறைந்து போனது. விமானம்
அல்லது அதில் பயணித்த 32 பேர் குறித்த எந்த சுவடும் அதற்குப் பின்
கிடைக்கவில்லை. பயணிகள் விமானத்துறை வாரிய விசாரணையில் இருந்து தொகுக்கப்பட்ட
ஆவணத்தில், விமானம் காணாமல் போனதற்கான ஒரு சாத்தியமுள்ள குறிப்பு கிடைத்தது.
ஆனால் இது முக்கோண எழுத்தாளர்களால் அதிகம் தொடப்படவில்லை. சான் ஜூவானில்
இருக்கும் போது விமானத்தின் மின்கலங்கள் சோதிக்கப்பட்டபோது அவை மின்னூட்டம்
குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் மறுமின்னூட்டம் செய்யாமலேயே மீண்டும்
விமானத்தில் கொண்டு வைக்க விமான ஓட்டி உத்தரவிட்டார். இது ஒருவேளை முழுமையான
மின்சார துண்டிப்புக்கு இட்டுச் சென்றதா இல்லையா என்பது ஒருபோதும்
அறியப்படாதது.


ஸ்டார் டைகர் மற்றும் ஸ்டார் ஏரியல்

அசோர்ஸில் இருந்து பெர்முடா செல்கையில் ஜனவரி 30, 1948 அன்று ஒரு பயணிகள்
விமானம் காணாமல் போனது. பெர்முடாவில் இருந்து ஜமைக்காவின் கிங்ஸ்டனுக்கு பறந்து
செல்கையில் ஜனவரி 17, 1949 அன்று இன்னொரு பயணிகள் விமானம் காணாமல் போனது.
இரண்டுமே தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் இயக்கிய ஒரே ரக பயணிகள் விமானங்கள்
ஆகும்.


எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன்

எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன் என்னும் முன்பு கந்தகம் சுமந்து இப்போது எண்ணெய்
சுமந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று புளோரிடா பாதைகள் அருகே 39 ஊழியர்களுடன்
தொலைந்து போனது. 1963, பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு அதில் இருந்து எந்த
தகவலும் இல்லை.மரைன் சல்பர் குவீன் தான் வின்சென்ட் கேடிஸ் 1964 ஆம் ஆண்டில்
எழுதிய அர்கோசி இதழ் கட்டுரை யில் குறிப்பிடப்பட்ட முதல் வாகனம் ஆகும். ஆனால்
அவர் அதில் "காணமுடியாத இடத்திற்கு சென்று விட்டது" என்று விட்டு விட்டார்.
ஆனால் கடலோரக் காவல் படையின் அறிக்கை கப்பல் மோசமாகப் பராமரிக்கப்பட்ட வரலாறை
ஆவணப்படுத்தியிருக்கிறது என்பதோடு, அது கடலுக்குள் செல்ல உகந்த கப்பல் அல்ல
என்பதால் கடலுக்குள்ளேயே சென்றிருக்கக் கூடாது என்று அறிவித்தது.


  ரய்ஃபுகு மரு

முக்கோணப் பகுதியில் 1921 ஆம் ஆண்டில் மிகப் பிரபல சம்பவம் ஒன்று நிகழ்ந்தது
(சிலர் அதற்கு சில வருடங்கள் கழித்து என்கிறார்கள்). ஜப்பானிய கப்பலான ரய்ஃபுகு
மரு (சிலர் இதனை ரய்குகே மரு என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள்) அப்படியே
அனைத்து பாகங்களும் மொத்தமாக மூழ்கி விட உள்ளே சென்று விட்டது. முன்னதாக அது
"கத்திக்கூம்பு போல் இப்போது அபாயம் தெரிகிறது, விரைவாய் உதவிக்கு வாருங்கள்!"
என்பது போன்ற அபாய சமிக்ஞை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. "கத்திக்கூம்பு"
என்பது அநேகமாக நீரலைக் கூம்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. உண்மையில், கப்பல்
முக்கோணப் பகுதிக்கு அருகிலேயே இல்லை. அத்துடன் "கத்திக்கூம்பு" என்கிற
வார்த்தையும் கப்பலின் அபாய சமிக்ஞையில் இல்லை.


கன்னிமரா IV

1955, செப்டம்பர் 26 அன்று பெர்முடாவின் தெற்கே அட்லாண்டிக் பகுதியில் ஒரு
சொகுசுப் படகு கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது .
கடலில் இருந்த சமயத்தில் மூன்று சூறாவளிகள் தாக்கியும் படகு தப்பித்துக்
கொண்டது, ஆனால் அதில் இருந்த ஊழியர்கள் மாயமாகி விட்டார்கள் என்று இந்த சம்பவக்
கதைகளில் பொதுவாகக் கூறப்படுகிறது  . 1955 ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளி பருவ
பட்டியல்களோ ஆகஸ்டு இறுதிவாக்கில் பெர்முடா அருகில் "எடித்" என்னும் ஒரே ஒரு
புயல் மட்டுமே வந்ததாகக் குறிப்பிடுகிறது. மற்ற புயல்களில் "புளோரா" கிழக்கே
வெகு தொலைவில் வந்தது, "கேதி" படகு மீட்கப்பட்ட பின் தான் வந்தது."எடித்" இந்த
படகை கட்டுப்பாடிழந்து கடலுக்குள் போகச் செய்ய நேர்ந்த சமயத்தில்
கன்னிமரா IV காலியாகத்

தான் இருந்தது. துறைமுகத்தில் தான் நின்று கொண்டிருந்தது என்பது உறுதி
செய்யப்பட்டது.

  முக்கோண எழுத்தாளர்கள்

அதிகாரப்பூர்வமாய் ஆவணப்படுத்தப்பட்டவை தவிர, மேலே குறிப்பிடப்பட்ட பிரபல
முக்கோண நிகழ்வுகள் பின்வரும் படைப்புகளில் இருந்து வருகின்றன. முக்கோணப்
பகுதிக்குள் நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிடப்படும் சில நிகழ்வுகள் இந்த
மூலங்களில் மட்டும் தான் காணப்படுகின்றன: 

பெர்முடாமுக்கோணம் -பகுதி -2


பெர்முடாமுக்கோணம்-பகுதி -2 



தி பெர்முடா டிரையாங்கிள்" என்னும் ஜான் சிம்மன்ஸ் தயாரித்த தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் பெர்முடா முக்கோண பகுதியில் அசாதாரணமான பெரும் எண்ணிக்கையில்
கப்பல்கள் மூழ்கினவா என்று கடல் காப்பீடு நிறுவனமான லாயிட்'ஸ் ஆஃப் லண்டன்
நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. லாயிட்'ஸ் ஆப் லண்டன், அங்கு பெரும்
எண்ணிக்கையிலான கப்பல்கள் மூழ்கியிருக்கவில்லை என்று கண்டறிந்தது. 
அமெரிக்க கடலோரக் காவல்படையின் பதிவுகள் அவர்களது முடிவை உறுதிப்படுத்துகின்றன.
உண்மையில், இந்த பகுதியில் வழக்கமாகச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களின்
எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் காணாமல் போனதாகக் கூறப்படும்
எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதாகும். 



கடலோரக் காவல்படையும் அதிகாரப்பூர்வமாக இந்த முக்கோணம் குறித்து பல சந்தேகங்கள்
கொண்டுள்ளது. முக்கோணம் குறித்து எழுதும் ஆசிரியர்களால் எழுதப்பட்ட பல
சம்பவங்களுக்கு முரண்படுகிற பல ஆவணத் தொகுப்புகளை தங்களின் விசாரணைகள் மூலம்
சேகரித்து, வெளியிடுவதாகவும் அது தெரிவிக்கிறது. 1972 ஆம் ஆண்டில் மெக்சிகோ
வளைகுடாவில் வி.ஏ.ஃபாக் என்னும் கப்பல் வெடித்து மூழ்கிய இத்தகையதொரு
சம்பவத்தில், கடலோரக் காவல்படை இந்த சிதறல்களை படம் பிடித்ததோடு பல உடல்களையும்
மீட்டது. ஒரு முக்கோணக் கதை ஆசிரியரோ, தனது அறையில் ஒரு காபி கோப்பையுடன்
அமர்ந்திருந்த கேப்டன் தவிர மற்றவர்கள் மாயமானதாகக் கூறியிருந்தார். 
பிபிசி தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தி கேஸ் ஆஃப் பெர்முடா டிரையாங்கிள்
என்னும் அத்தியாயத்தில் இது குறித்து மிகவும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது.
"நாங்கள் உண்மையான மூலங்களுக்கு அல்லது சம்பந்தப்பட்ட மக்களிடம் போனால், மர்மம்
கரைந்து போய் விடுகிறது. விஞ்ஞானம் முக்கோணம் குறித்த கேள்விகளுக்கு பதில்
சொல்ல வேண்டியதில்லை ஏனென்றால் முதலில் இந்த கேள்விகளே உண்மையானதல்ல. ...உலகின்
மற்ற எங்கும் போலத் தான் இங்கும் கப்பல்களும் விமானங்களும் செயல்படுகின்றன." 
எர்னஸ்ட் டேவ்ஸ் மற்றும் பேரி சிங்கர் ஆகிய ஆய்வாளர்கள், மர்மங்களும்
அமானுடங்களும் எவ்வளவு பிரபலமானவையாகவும் ஆதாயமளிப்பவையாகவும் இருக்கின்றன
என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். 

பெர்முடா முக்கோணம் போன்ற தலைப்புகளில் ஏராளமான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. 

அமானுடத்திற்கு ஆதரவான சில விஷயங்கள் பல சமயங்களில் தவறாக வழிநடத்துகின்றன
அல்லது துல்லியமற்றவையாக இருக்கின்றன, இருப்பினும் அதன் உற்பத்தியாளர்கள் அதனை
தொடர்ந்து சந்தைப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களால் நிரூபிக்க முடிந்தது.
அதற்கேற்றாற்போல, சந்தையும் முக்கோண மர்மத்தை ஆதரிக்கும் புத்தகங்கள்,
தொலைக்காட்சி
சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு சாதகமாக இருக்கிறது, சந்தேகம் எழுப்பும்
நல்ல ஆய்வு விடயங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று அவர்கள் 
தெரிவித்துள்ளனர். 


இறுதியாக, இப்பிராந்தியத்தின் எந்த நிலப்பரப்பில் செல்லும் வாகனங்களும் அல்லது
நபர்களும் காணாமல் போனதற்கு எந்த சான்றும் இல்லை. முக்கோணத்திற்குள்
அமைந்திருக்கும் ஃப்ரீபோர்ட் நகரம் ஒரு பெரும் கப்பல்துறைமுகத்தையும்
வருடத்திற்கு 50,000 விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையத்தையும்
கையாள்கிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து
செல்கிறார்கள். 

அமானுட விளக்கங்கள் 

இந்த நிகழ்வுகளை விளக்குவதற்காக முக்கோணம் குறித்த எழுத்தாளர்கள் ஏராளமான
அமானுட கருத்துகளை பயன்படுத்தியுள்ளனர். புராணவகை தொலைந்த கண்டமான
அட்லாண்டிஸில் இருந்து எஞ்சியிருக்கும் நுட்பம் தான் இது என்று ஒரு விளக்கம்
கூறுகிறது. சிலசமயம், பஹாமாஸில் பிமினி தீவில் உள்ள பிமினி பாதை என்று
அழைக்கப்படும் கடலுக்கடியிலான பாறை உருவாக்கம் அட்லாண்டிஸ் கதையுடன்
தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இந்த பகுதி சில வரையறைகளின் படி
முக்கோணத்திற்குள் அமைகிறது. ஆவியூடாடும் எட்கர் கெய்ஸின் கருத்துகள் மீது
நம்பிக்கை கொண்டவர்கள் அட்லாண்டிஸ் ஆதாரம் 1968 ஆம் ஆண்டு கண்டறியப்படும் என்று
அவர் கணித்துக் கூறியது, பிமினி பாதையின் கண்டுபிடிப்பைத் தான் குறித்ததாகக்
கொண்டனர். நம்புபவர்கள் இதனை ஒரு பாதை, சுவர் அல்லது வேறு கட்டமைப்பின்
உருவாக்கம் என்று சொல்கிறார்கள், ஆயினும் மண்ணியல் ஆய்வாளர்கள் இதனை இயற்கையாக
அமைந்தது என்கிறார்கள். 


பிற எழுத்தாளர்கள் இந்த நிகழ்வுகளுக்கு வெளிக்கிரகவாசிகளை காரணம்
காட்டுகிறார்கள். இந்த கருத்தினை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது அறிவியல் புனைவுத்
திரைப்படமான க்ளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃப் தி தேர்டு கைன்ட் என்னும்
திரைப்படத்தில் பயன்படுத்தினார். 
புகழ்பெற்ற மொழியியலாளரும் அமானுட நிகழ்வுகள் குறித்த பல்வேறு புத்தகங்களின்
ஆசிரியருமான சார்லஸ் பெர்லிட்ஸ், இந்த அசாதாரண விளக்கத்துடன் உடன்பட்டார்.
முக்கோணப் பகுதியில் நிகழும் தொலைதல்களுக்கு அமானுட அல்லது விளக்கமுடியாத
சக்திகள் தான் காரணம் என்று அவர் கூறினார். 

திசைகாட்டி மாறுதல்கள் 
பல முக்கோண நிகழ்வுகளில் கூறப்படும் பதப் பிரயோகங்களில் ஒன்று திசைகாட்டி
பிரச்சினைகள். அசாதாரணமான காந்த அலைகள் இப்பகுதியில் இருக்கலாம் என்று சிலர்
சித்தாந்தப்படுத்தினாலும், அத்தகைய அலைகள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை.
காந்த துருவங்களுடன் தொடர்புபட்ட இயல்பான காந்த மாறுபாடுகளை மட்டும்
திசைகாட்டிகள் கொண்டுள்ளன. உதாரணமாக, அமெரிக்காவில் காந்த (திசைகாட்டி)
வடக்கும் புவியியல்ரீதியான (உண்மையான) வடக்கும் எங்கு ஒன்றாக அமைந்திருக்கிறது
என்றால் விஸ்கோன்சின் தொடங்கி மெக்சிகோ வளைகுடா வரையிலான ஒரு கோட்டிலுள்ள
இடங்களில் தான். கடல்பயணதாரர்களுக்கு இது பல நூற்றாண்டுகளாகத் தெரியும். ஆனால்
பொதுமக்களுக்கு அந்த அளவு பொதுஅறிவு இருக்காது என்பதால், அவர்கள் முக்கோணம்
போன்ற ஒரு பெரும் பகுதியில் திசைகாட்டி "மாறுவதில்" ஏதோ மர்மம் இருப்பதாக
நினைக்கிறார்கள். 
திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள் 
திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள் இரண்டு வகையாக இருக்கலாம்: போர்
நடவடிக்கைகள், கடற்கொள்ளை
நடவடிக்கைகள். எதிரிகளின் பதிவுக் குறிப்புகள் பல சம்பவங்களின் போது
சோதிக்கப்பட்டிருக்கின்றன; பல கப்பல்கள் மூழ்கியதற்கு உலகப் போர்களின் போதான
நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்கள் காரணமாகக் கூறப்பட்டு பல்வேறு உத்தரவு
பதிவுப் புத்தகங்களில் ஆவணப்பட்டிருக்கின்றன. இந்த வகையினதாகக் கூறப்படும்
இன்னும் பல சம்பவங்களுக்கான காரணங்கள் நிரூபிக்கப்படாதவை. 
ஒரு கப்பல் அல்லது சிறு படகை நடுக்கடலில் முற்றுகையிட்டு கொள்ளையிடுவது தான்
கடற்கொள்ளை என்று வரையறுக்கப்படுகிறது. இது இன்று வரை நடந்து வரும் ஒரு
நடவடிக்கையாகும். சரக்கு திருடும் கடற்கொள்ளை மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப்
பெருங்கடல் பகுதிகளில் ரொம்பவும் சாதாரணமானமாக நிகழ்கிறது. அதே சமயத்தில்
மருந்து கடத்தல்காரர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு சொகுசுப் படகுகளை
கடத்துகிறார்கள். கரீபியனில் ஊழியர்கள் மற்றும் படகுகள் கடத்தலிலும் இவர்கள்
சம்பந்தப்பட்டிருக்கலாம். கரீபியன் பகுதியில் கடற்கொள்ளை என்பது சுமார் 1560கள்
தொடங்கி 1760கள் வரை சாதாரண நிகழ்வுகளாக இருந்தது. எட்வர்டு டீச் பிளாக்பேர்டு
மற்றும் ஜீன் லபிதே ஆகியோர் பிரபல கடற்கொள்ளையர்களில் அடங்குவர். 
வளைகுடா நீரோடை 
வளைகுடா நீரோடை என்பது மெக்சிகோ வளைகுடாவில் தோன்றி, பின் புளோரிடா நீரிணைப்பு
வழியாக, வட அட்லாண்டிக் கடல் வரை செல்லும் கடல் ஓடையாகும். இது கடலுக்குள்
இருக்கும் ஒரு ஆறு போன்றது. ஒரு ஆறு போலவே, இது மிதக்கும் பொருட்களை சுமந்து
செல்கிறது. சிறு விமானம் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் படகு
எந்திரக் கோளாறினால் நின்று விட்டாலோ அது தெரிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து
நீரோடை வழியே சுமந்து செல்லப்படும். இது தான் விட்ச்கிராஃப்டு படகுக்கு
டிசம்பர் 22, 1967 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. கடற்கரையில் இருந்து ஒரு மைல்
(1.6கிமீ) தூரத்தில் மியாமி மிதவை குறியீடு அருகே இப்படகு பழுதடைந்ததாக
கூறப்பட்டது. ஆனால் கடலோரக் காவல்படை கப்பல் அங்கு சென்றபோது அது அந்த இடத்தில்
இல்லை. 

மனிதத் தவறு 
விமானம் அல்லது கப்பல் காணாமல் போவதற்கு அதிகாரப்பூர்வ விசாரணைகளின் போது
கூறப்படும் காரணங்களில் மிக அதிகமானது மனிதத் தவறாகும். வேண்டுமென்றோ அல்லது
தற்சமயமாகவோ, மனிதர்கள் தவறு செய்வார்கள் என்பது அறிந்ததே. இது பெரும் துயரச்
சம்பவத்தில் சென்று முடிகிறது. இதற்கு பெர்முடா முக்கோணப் பகுதி இழப்புகள்
விதிவிலக்கல்ல. உதாரணமாக வி.ஏ.ஃபாக் 1972 ஆம் ஆண்டில் தொலைந்து போனதற்கு
ஆவியாகும் பென்சீன் கழிவை சுத்தப்படுத்துவதற்கு முறையான பயிற்சி இல்லாதிருந்ததை
கடலோரக் காவல் படை ஒரு காரணமாக சுட்டிக் காட்டியது [மேற்கோள் தேவை]. வர்த்தக
அதிபரான ஹார்வே கனோவர் தனது பயணப் படகான ரெவோனோகை இழந்ததற்கு மனிதப்
பிடிவாதமும் காரணமாய் இருந்திருக்கலாம், ஏனென்றால் அவர் தெற்கு புளோரிடாவில்
ஜனவரி 1, 1958 அன்று புயலின் விளிம்பில் படகைச் செலுத்திக் கொண்டிருந்தார். ஆய்வு
செய்வதற்கு உடைந்த வாகனம் கிடைக்காது போய்விடுவதால் பல இழப்புகள் இன்னும்
தீர்மானத்திற்கு வர முடியாததாகவே தொடர்கின்றன. இது பல அதிகாரப்பூர்வ
அறிக்கைகளில் காட்டப்படும் ஒரு உண்மையாகும். 
சூறாவளிகள் 
சூறாவளிகள் வெப்பமண்டல கடல் பகுதியில் பரவலாய்க் காணப்படும் சக்திவாய்ந்த
புயல்களாகும். இது ஆயிரக்கணக்கான உயிர்களின் இழப்பிற்கும் பில்லியன்கணக்கான
டாலர்கள் சேதாரத்திற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. 1502 ஆம் ஆண்டில்
பிரான்சிஸ்கோ டி போபடில்லாவின் ஸ்பெயின் குழுக் கப்பல்கள் மூழ்கியது தான்
சூறாவளிப் பேரழிவின் முதல் பதிவு செய்யப்பட்ட சம்பவம். இந்த புயல்கள் கடந்த
காலத்தில் முக்கோணம் தொடர்பான ஏராளமான சம்பவங்களுக்கும் காரணமாய்
அமைந்திருக்கின்றன. 

மீத்தேன் ஹைட்ரேட்டுகள் 
சில தொலைதல்களுக்கான விளக்கம் கரையோரப் பகுதி அடுக்குகளில் பரந்த மீத்தேன்
ஹைட்ரேட் (இயற்கை எரிவாயுவின் ஒரு வடிவம்) மீது மையம் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், நீரின் அடர்த்தியை குறைப்பதினால் குமிழிகள் ஒரு
குறிப்பிட்ட வடிவமைப்பு கொண்ட கப்பலை மூழ்கச் செய்ய முடியும் என்பதை
நிரூபித்திருக்கின்றன.  இதனைத் தொடர்ந்து எழும் எந்த உடைந்த பாகங்களும்
துரிதமாக வளைகுடா நீரோடையால் சிதறச் செய்யப்படுகின்றன. திடீர் மீத்தேன்
வெடிப்புகள் (சில சமயங்களில் "சேறு எரிமலைகள்" என அழைக்கப்படுகின்றன) கப்பல்கள்
மிதப்பதற்கு தேவையான மிதவைத் தன்மையை வழங்க முடியாத சகதி நீர் பிராந்தியங்களை
உருவாக்கலாம் என்கிற ஒரு அனுமானம் வைக்கப்படுகிறது. இது உண்மையாய் இருந்தால், ஒரு
கப்பலை சுற்றி உருவாகும் இத்தகையதொரு பகுதி கப்பல் வெகு துரிதமாக
எச்சரிக்கையின்றி மூழ்கக் காரணமாகி விடும். 
அமெரிக்க நிலவியல் துறை ஆய்வு வெளியீடுகள், கடலுக்கடியான ஹைட்ரேட்டுகள்
உலகெங்கிலும் பெரும் சேகரங்களாக இருப்பதாக கூறுகிறது. தென்கிழக்கு அமெரிக்க
கடற்கரையை ஒட்டிய ப்ளேக் ரிட்ஜ் பகுதியிலும் இச்சேகரங்கள் மிகுதியாய்
காணப்படுகின்றன. ஆயினும், பெர்முடா முக்கோணப் பகுதியில் கடந்த
15,000வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுகளின் பெரும் வெளியீடுகள் எதுவும்
இருந்ததாக 

விபரமில்லை என்று அவர்களது ஆய்வறிக்கைகளில் இன்னொன்று தெரிவிக்கிறது. 
கடலுக்கடியில் மீத்தேன் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ள மற்ற பகுதிகளில் பெர்முடா
முக்கோணம் போன்ற சம்பவங்கள் நிகழவில்லை என்பதும், நீருக்கடியிலான எரிவாயு
குமிழிகள் விமானங்கள் மறைந்து போனதற்குக் காரணமாக முடியாது என்பதும் கருத்தில்
கொள்ளத்தக்கது. 

மேலும் தொடரும் ..... மர்மம் ...???!!!.....

பெர்முடாமுக்கோணம்-பகுதி -1




பெர்முடாமுக்கோணம் - பகுதி -1





பெர்முடாமுக்கோணம்


 (சைத்தானின்முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு பகுதி.அங்கு நிறைய வானூர்திகளும்கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்



நிரைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த
ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக்
குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன
நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே
இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும்
பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிரைய அதிகாரப்பூர்வ
முகவாண்மைகளும் பதிவு செய்துள்ளன. 

முக்கோணப் பகுதி 


முக்கோணத்தின் பகுதி ஆசிரியருக்கேற்ற வகையில் மாறுகிறது 
இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த
கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை
அடங்கும்; இன்னும் சிலர் அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கின்றனர்.
புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒர் இடம்; சான் ஜுவான், பூர்டோ
ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு ஆகியவை தான் பல பிரபலமான
எழுத்துப் படைப்புகளில் முக்கோண எல்லைகளாக குறிப்பிடப்படுகின்றன. விபத்துகளில்
அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு
எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது. 
இந்த பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது.
இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள
துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள்
ஏராளமாய் உள்ளன. பொழுதுபொக்கு விமானங்கள் எப்போதும் புளோரிடாவுக்கும்
தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில்
இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஏராளமான
வர்த்தக மற்றும் தனியார் விமானங்கள் செல்கின்றன. 

முக்கோணக் கதையின் வரலாறு 

மூலங்கள் 


முக்கோண சிந்தனையை எழுத்தில் வெளிப்படுத்திய பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை
என்றால் ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட செய்தியைத்
தான் குறிப்பிட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பின், ஃபேட் இதழ் 'நமது
கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய
ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது. பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் தொலைந்து
போனதை இது எழுதியிருந்தது. பிளைட் 19 என்னும் அமெரிக்க கடற்படையின்
குண்டுவீசும் ஐந்து விமானங்கள் கொண்ட ஒரு கூட்டம் ஒரு பயிற்சி நடவடிக்கையின்
போது தொலைந்து போனதும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மறைவுகள்
நிகழும் பிரபலமான முக்கோண பகுதிக்கு வரைபடமிட்டது சாண்டின் கட்டுரை
தான்.அமெரிக்கன் லெஜன் இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட் 19 பற்றிய
செய்தியை மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது. 

"நாங்கள் இப்போது எங்கிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை" என்று விமான
ஓட்டி கூறியதாக அச்செய்தி தெரிவித்தது. கப்பற்படை விசாரணைக் குழுவின்
அதிகாரிகள் விமானங்கள் "செவ்வாய்க்கு பறந்து போனதாய்" கூறியதாகவும்
தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டுரை தான் பிளைட் 19 காணாமல் போன சம்பவத்துடன்
அமானுட விஷயங்களை இணைத்து எழுதப்பட்ட முதல் கட்டுரை. ஆனால் வின்சென்ட் காடிஸ்
என்கிற மற்றுமொரு ஆசிரியர் 1964 பிப்ரவரியில் அர்கோசி இதழில் எழுதும்போது தான்,
பிளைட் 19 காணாமல் போனதை பிற மர்மமான தொலைதல்களுடன் இணைத்து அவற்றை "மரண
பெர்முடா முக்கோணம்" (ஆரம்பத்தில் தலைப்பு நம்பிக்கையிழக்கச் செய்யும்
நீர்ப்பரப்பு என்கிற வகையில் இருந்தது) என்னும் ஈர்க்கும் தலைப்பின் கீழ்
எழுதினார். அடுத்த ஆண்டில் அந்த கட்டுரையை விரிவுபடுத்தி, கண்ணுக்குத் தெரியாத
வெளிகள் , என்னும் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் ஒன்று எழுதினார். ஜான் வாலஸ்
ஸ்பென்சர் (லிம்போ ஆஃப் தி லாஸ்ட் , 1969); சார்லஸ் பெர்லிட்ஸ் (தி பெர்முடா
டிரையாங்கிள் , 1974); ரிச்சார்டு ஒயினர் (தி டெவில்'ஸ் டிரையாங்கிள்,
1974), ஆகியோரின்
மற்ற பல படைப்புகளும் வெளியாயின. எல்லாமே எக்கெர்டினால் கோடிட்டுக் காட்டப்பட்ட
அதே அமானுட விஷயங்களில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டன. 

லாரி குசெ 
அரிசோனா மாநி
ல பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு நூலகரும் தி பெர்முடா டிரையாங்கிள்
மிஸ்டரி: சால்வ்டு (1975) புத்தக ஆசிரியருமான லாரன்ஸ் டேவிட் குசெ தான் இந்த
போக்கினை மறுதலித்தார். குசெவின் ஆய்வு பெர்லிட்ஸ் பதிவுகளுக்கும் ஆரம்ப
சம்பவங்களில் பார்த்தவர்கள், இருந்தவர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட
மற்றவர்களிடம் இருந்தான கூற்றுகளுக்கும் இடையில் இருந்த எண்ணற்ற
துல்லியமின்மைகளையும், குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது. பல சம்பவங்களில்
தொடர்புபட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்படாமல் போனதை குசெ சுட்டிக் காட்டினார். 

 
உலகம் சுற்றும் படகுப்பயணியான டொனால்டு குரோஹர்ஸ்ட் தொலைந்து போன சம்பவத்தை
இதற்கொரு உதாரணமாய் காட்டினார். இச்சம்பவத்தை பெர்லிட்ஸ் ஒரு மர்மம் என
கூறியிருக்க, இதற்கு மாறான உண்மைக்கு தெளிவான சான்று இருந்தது. மற்றுமொரு
உதாரணம், அட்லாண்டிக் துறைமுகத்தில் இருந்து தாது-கப்பல் ஒன்று மூன்று நாட்கள்
அடையாளமின்றி தொலைந்து போனதாக பெர்லிட்ஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால்
உண்மையில் பசிபிக் கடலில் இருந்து அதே பெயரிலான கப்பல் ஒரு துறைமுகத்தில்
இருந்து மூன்று நாட்கள் சுவடில்லாமல் தொலைந்திருந்தது. முக்கோணத்தின்
மர்மத்திற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவங்களில் பெரும் சதவீதம் அதற்கு வெகு
வெளியே நிகழ்ந்தவை என்றும் குசெ வாதிட்டார். பல சமயங்களில் அவரது ஆராய்ச்சி
எளிமையானது. சம்பவம் நடந்த தேதிகளில் வெளியான பொதுவான செய்தித்தாள்களை
பார்ப்பார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை போன்ற பொருத்தமான
நிகழ்வுகளை, வாகனங்கள் தொலைந்த கதைகளில் குறிப்பிடாதவற்றை கண்டறிவார்.

குசெ இவ்வாறு முடிவுக்கு வந்தார்: 

    ஒப்பீட்டளவில் பார்த்தால், கடலின் வேறு எந்த பகுதியினையும் விட இந்த
பகுதியில் தொலைந்து போகும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை
குறிப்பிடத்தக்க அளவு பெரியது அல்ல. 

    வெப்பமண்டல புயல்கள் அதிகமாக நிகழும் ஒரு பகுதியில், நிகழ்ந்திருக்கக்
கூடிய தொலைதல்களின் எண்ணிக்கை வரம்புகடந்ததாகவும் இல்லை, மர்மமானதாகவும் இல்லை;
தவிர, பெர்லிட்ஸ் மற்றும் பிற ஆசிரியர்கள் இத்தகைய புயல்கள் குறித்து
குறிப்பிடக் கூட பலசமயங்களில் தவறுகின்றனர். 

    எண்ணிக்கையே துல்லியமற்ற ஆய்வு மூலம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.
ஒரு படகு காணாமல் போனதாக தகவல் வந்தால் பதிவாகும், ஆனால் அது கடைசியில்
(தாமதமாக) துறைமுகத்திற்கு திரும்பியிருந்தால் அது பதிவு செய்யப்படாமல்
போயிருக்கும். 

    சில சம்பவங்கள் உண்மையில் நிகழவேயில்லை. புளோரிடாவின் டேடோனா கடற்கரையில்
1937 ஆம் ஆண்டு ஒரு விமான விபத்து நூற்றுக்கணக்கானோர் பார்க்க நிகழ்ந்ததாக
கூறப்பட்டது; ஆனால் உள்ளூர் செய்தித்தாள்களைப் பார்த்தால் அப்படி
எதுவுமேயில்லை. 

    பெர்முடா முக்கோணத்தின் புராணம் என்பது ஒரு கட்டுக்கதையான மர்மம்....இது
வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ தவறான கருத்துகள், பிழையான காரணங்கள், மற்றும்
பரபரப்பு ஏற்படுத்தும் எழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்திய கட்டுரை ஆசிரியர்களால்
உருவாக்கப்பட்டதாகும்.