தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Thursday, 26 January 2012

இன்சுலின் செடி


இன்சுலின் செடி




1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்

3) PLANT FAMILY: Costaceae

4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்
5
) பயன் தரும் பாகம் -: இலை.

6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும். ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன. அவரது போன்- 9894066303 0422-2566303.



5) மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.


பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள். பார்க்க
www.sidhaeureka.blogspot.கம

டாக்டர். பிரடரிக் கிரண்ட் பாண்டிங் என்ற கனடா நாட்டு மருத்துவர் தன் சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து இன்சுலின் கண்டுபிடித்தார். அவர் பிறந்த தினமான நவம்பர் 14 ஐ உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடித்து நிறைய கண்காட்சிகளும், விளக்கக் கூட்டங்களும் நடைபெறுகிறது.இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பதாகவும், 2025 ஆண்டு அது 60 மில்லியனை தொடும் என கூறுகிறார்கள்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்.அதிக தாகம் (Excessive thirst)
அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent urination)
அதிக பசி (Increased hunger)
எடை குறைதல் (Weight loss)
உடற்சோர்வு (Tiredness)
ஆர்வம், கவனம் குறைதல் (Lack of interest and concentration)
பார்வை குறைபாடுகள் (Blurred vision) போன்றவை.

நோயை குறைப்பதற்கான வழிகள்.உணவுக் கட்டுப்பாடு.
யோகா, உடற்பயிற்சி.
மருந்து.

இந்த நோய் முற்ற கால்களில் புண்கள் (சமயங்களில் காலை எடுக்கவேண்டிவரும்.), கண்நோய், மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.


நோயைக் குறைக்க உதவும் சில தாவரங்கள்
இன்சுலின் செடி
இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது.. இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் அதிகம் உபயோகிக்கின்றனர்.
கள்ளிமுடையான்.
கள்ளிமுடையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் மெலிவதுடன் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துகிறது. வருங்காலத்தில் இதற்கு நல்ல மதிப்பு உண்டு.
சர்க்கரைக்கொல்லி
கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்பு சுவை தெரிவதில்லை. இலையை காய வைத்து பொடியாக்கி இதனை தினமும் அருந்துகின்றனர். கொடிவகையை சார்ந்தது.
சிறியாநங்கை
கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சிலர் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.

ஸ்டீவியா என்னும் சீனித்துளசி.
தென்அமெரிக்காவை தாயகமாக் கொண்ட இனிப்புச் சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை காய வைத்து பொடியாக்கி டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்கு பதிலாக இதனை உபயோகிக்கலாம். பூஜ்யம் கலோரி (Zero Calorie) மதிப்புடையது. எனவே இனிப்புடன் அருந்த வேண்டுமெனில் தாராளமாக இதனை உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தமிழகத்தில் நன்கு வளர்கிறது.


இதனை தவிர்த்து காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாரு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய சர்க்கரை நோயை குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.


முக்கிய செய்தி மேற்கண்ட அனைத்து தாவரங்களையும் நாம் வீடுகளில் வளர்க்கலாம்.

1 comment:

Unknown said...

காடுகளை பற்றிய ஆர்வம் எனக்கு அதிகம். தயவுசெய்து எனக்கு பல விஷயங்களை சொல்லவும்.
K.BABU
Email:kkb9001@gmail.com
CELL:9791083766 / 8122222111