தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Saturday, 7 January 2012

சேலம் மாவட்டம் பகுதி-3

                                               சேலம் மாவட்டம்
                                                          பகுதி-3


சேலத்தில் கிருஸ்தவ ஆலயங்கள் :


சேலத்தில் குழந்தை இயேசு பேராலயம் 4 ரோடு பகுதியில் அமைந்துள்ளது , சேலத்தில் உள்ள கிருஸ்தவ ஆலயங்களில் இதுவே பெரிய ஆலயம் ஆகும் .இது கதோலிக திருசபையால் நிர்வகிக்க படுகிறது .சேலம் மறைமாவட்டம் (இலத்தீன்: Salemen(sis)) என்பது சேலம் குழந்தை இயேசு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும்கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின்தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வருடாவருடம் ஜனவரி மாதத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படும் .



இது தவிர செவ்வாப்பேட்டையிலுள்ள புனித மரியன்னை ஆலயம்கத்தோலிக்கக் கிறித்தவர்களின் பழமைமிக்க ஆலயமாகும்.
இது கி.பி. 1858இல் தோற்றுவிக்கப்பட்டது. புனித
அந்தோணியார் ஆலயம், புனித பிரான்சிஸ் சவேரியார்
ஆலயம், புனித நெஞ்ச ஆலயம் ஆகியவை சேலம்
நகர்பகுதியிலுள்ள இதர கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயங்களாகும்.
C .S .I கிருஸ்தவ ஆலயங்கள் :
சேலம் நகரின் மத்தியில் கிறிஸ்து ஆலயம் உள்ளது.
இது தென்னிந்தியத் திருச்சபையினருக்குரியதாகும்.
கி.பி. 1875இல் இவ்வாலயம் தோற்றுவிக்கப்பட்டது.
கிறிஸ்து ஆலயத்திலிருந்து சிறிது தொலைவில் லெக்லர்
நினைவு ஆலயம் உள்ளது. இது கி.பி. 1856இல்
தோற்றுவிக்கப்பட்டது. இதுவும் தென்னிந்தியத்
திருச்சபையினருக்குரியதாகும்.
இஸ்லாமிய வ்ழிபாட்டு தளங்கள் :
சேலம் நகரில் பழமையான பள்ளிவாசல் கோட்டைப்
பகுதியில் உள்ளது. மணிமுத்தாற்றின் கரையில் உள்ள ஜீம்மா
மசூதி திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டது என்றும்,
இங்கு திப்பு சுல்தான் தொழுகைக்காக வருகை தந்துள்ளார்
என்றும் கூறப்படுகிறது. முகமதுபுரத்திலுள்ள பள்ளி வாசல்
ஜமால் மொகைதீன் என்ற வணிகரால் கட்டப்பட்டதாகும். மேலும் பள்ளப்பட்டி கோரிக்காடு ஈத்கா,சேலம் ஐந்து ரோடு மஸ்ஜிதே மஹபூபியா, கோட்டை மேலத்தெரு பள்ளிவாசல், லைன்மேடு பள்ளிவாசல் உட்பட சேலம் மாநகரில் நிறைய இஸ்லாமிய வழிபாட்டு தளங்கள் உள்ளன.

No comments: