தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Friday 2 September 2016

ஆளோலை



இந்தியாவில் அடிமை முறை:-


           பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக மெகஸ்தனிசு (கிமு 350 - கிமு 290) என்னும் கிரேக்கர், சந்திரகுப்த மௌரியனின் காலத்தில் கிரேக்க தூதுவராக இருந்து இந்தியாவைப் பற்றி யாத்திரை ஏடு எழுதியுள்ளார். அதன்படி "(இந்தியாவிலுள்ள) ஆச்சரியமான வழக்குகளில் ஒன்று, அந்நாட்டு சான்றோர்களால் செய்யப்பட்டது - நீதியின்படி யாரும் எந்த சூழ்நிலையிலும் அடிமையாகக் கூடாது ..... எல்லா சொத்துக்களும் சமமாக பாகுபடுத்த வேண்டும் அர்ரியன் என்ற வேறொரு கிரேக்க எழுத்தாளரும் இந்தியாவில் அடிமை என யாரும் இல்லை என்கிறார், ஸ்ட்ராபோ என்ற எழுத்தாளரும் அதையே சொல்கிறார்.
தமிழகத்தில் அடிமை முறை :-

            ஒரு தமிழ் ஆய்வாளரின்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாம். 
         அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். 
       அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன.  
     
                                                  ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. 

            நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கியப் பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன"2013இல் வெளியான உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.

தற்காலத்தில் அடிமைத்தனம் 
அடகு தொழிலாளர் -
 இன்று லட்சோபலட்சம் மக்கள் அடகு முறையில் கட்டுண்டு உள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும், தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து, தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். சில சமயம் அந்த கடன் குழந்தைகளுக்கு மருந்து வாங்குவதற்காகவும் அவ்வளவு சிறிய தொகையாக இருக்கலாம். கடனையும், வட்டியையும் திருப்பிக் கொடுக்க வருடத்தில் எல்லா நாட்களிலும், எல்லா வருடமும், ஒரு மருத்துவ வசதியுமில்லாமல் உழைக்க வேண்டியிருக்கிறது..
இளம் வயதில் கட்டாய மணம் - 
இது மகளிரை பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து கொள்ளப் பட்டு, வன்முறைக்கு ஆளாகிறனர்.
கட்டாய சேவை - 
அரசாங்கம், அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு, கட்டாய வேலைகளை - துன்புறுத்தியோ, வன்முறை பீதியை ஏற்படுத்தியோ - பிழிகிறார்கள்.
அடிமை சந்ததி - 
சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ, கட்டாய வேலை செய்ய ஏற்பட்டவர்கள் எனக் கருதுகிறது.
ஆள் கடத்துதல் -
 மனிதர்கள், பெண்டிர், சிறார் இவர்களை அடிமைத்தனமான கதிகளில் வைக்கவும், வாங்கி விற்க்கவும் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்க்கு எடுத்துச் செல்லுதல்.
பாலக தொழிலாளர்.- 
இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் பாலகர்கள் அவர்கள் உடல்நிலைக்குப் பாதகமான சூழ்நிலையில், குறைந்தபட்ச பாதுகாப்பின்றி வேலை செய்கிறனர்.
பாலியல் தொழிலாளர்கள் :-
உலகம் முழுவதும் உள்ள மிக பழமையான அடிமை முறை ...அதுவும் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் இரக்கமே இல்லாமல் ( ஆனால் இந்தியாவில் இதில் மட்டும் தான் சாதி பாகுபாடு இல்லை ) நடைபெறும் ஒரு முறை ..

நன்றி:- விக்கிபிடியா