தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Tuesday 22 March 2016

வாக்காளர் அடையாள அட்டை election id card

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி.??


voter id க்கான பட முடிவு
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பதை பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல், எந்த அதிகாரியையும் பார்க்காமல் உட்கார்ந்த இடத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பெறும் எளிய வழி ஆன்லைன் மட்டுமே

இணையதளம்

முதலில் தமிழ் நாடு தேர்தல் ஆணைய இணையதளம் செல்ல வேண்டும்.
இதற்கு கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்தால் போதுமானது.
http://www.elections.tn.gov.in/

ஆன்லைன்

தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் பதிவு செய்யும் வசதி ( Online Registration Facility ) என்பதை குறிப்பிடும் மஞ்சள் நிற லின்க் இனை க்ளிக் செய்ய வேண்டும்

பதிவு

முன்பு க்ளிக் செய்த மஞ்சள் நிற லின்க் தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் வசதி கொண்ட புதிய பக்கத்தினை திறக்கும்

ஃபார்ம் 6 (படிவம் 6)

தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் புதிய பக்கத்தில் ஃபார்ம் 6 என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது மற்றும் ஒரு புதிய பக்கத்தினை திறக்கும்

1  இணையதளம்

முதலில் தமிழ் நாடு தேர்தல் ஆணைய இணையதளம் செல்ல வேண்டும். இதற்கு இங்கு க்ளிக் செய்தால் போதுமானது.

2  ஆன்லைன்

தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் பதிவு செய்யும் வசதி ( Online Registration Facility ) என்பதை குறிப்பிடும் மஞ்சள் நிற லின்க் இனை க்ளிக் செய்ய வேண்டும்.

3  பதிவு

முன்பு க்ளிக் செய்த மஞ்சள் நிற லின்க் தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் வசதி கொண்ட புதிய பக்கத்தினை திறக்கும்
.
4  ஃபார்ம் 6

தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் புதிய பக்கத்தில் ஃபார்ம் 6 என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது மற்றும் ஒரு புதிய பக்கத்தினை திறக்கும்.

5  தகவல்கள்

புதிய பக்கத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இங்கு விண்ணப்ப தாரரின் தகவல்கள், பிறந்த இடம் சார்ந்த தகவல்கள், இருப்பிடம் சார்ந்த தகவல்கள், குடும்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போரின் தகவல்கள் பதிவு செய்து, சான்றிதழ் பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்

6  உறுதி

முன்பு பதிவு செய்த தகவல்களை உறுதி செய்து கீழ் பகுதியில் இருக்கும் சமிர்பிக்க ( Submit ) கோரும் பட்டனை அழுத்த வேண்டும்
7  சரிபார்ப்பு

சமர்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்த 2 அல்லது 3 நாட்களுக்குள் அரசு அலுவலர்கள், ( பொதுவாக நீங்கள் ஓட்டு  போடும் பள்ளியின் ஆசிரியர் அதாவது வாக்குசாவடி நிலைய அலுவலர் அல்லது உங்கள் கிராம நிர்வாக அலுவலர் , மாநகர் பகுதியாக இருந்தால் வரி அலுவலர் அல்லது சுகாதார ஆய்வாளர் இப்படி யாராவது .) நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு நேரடியாக வந்து நீங்கள் அளித்த தகவல்களை சரிபார்பார்கள் , சரிபார்த்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் உங்களது வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு அதுவும் ,..!! உங்கள் இல்லம் தேடி வந்து விடும்....!!!?

நம்புங்கள் தமிழா ...மக்களுக்காக தான் ஜனநாயகம் ...!!!???

 voter id க்கான பட முடிவு

Thursday 17 March 2016

திருமணத்தை பதிவு செய்வது எப்படி


திருமணத்தை பதிவு செய்வது எப்படி 

marriage க்கான பட முடிவு


திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வர வேண் டும் என்று கருத்து தெரிவி த்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டா ய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.
மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ்நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009  சட்டத் தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
எங்கே பதிவு செய்வது?
உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்தஅலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்.
திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய். 9 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்வதற்கு தனியே படிவங்கள் இருக்கின்றன. இந்தப் படிவம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கும். இணையத்தில் கூட கிடைக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்து, கூடவே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து, சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். படிவத்தில் கணவன், மனைவி இருவரது புகைப் படங்களையும் ஒட்டவேண்டும். கூடவே தம்பதியின் மற்றொரு புகைப் படத்தையும் இணைக்க வேண்டும்.
மேலும், தம்பதியின் வீட்டு விலாசத்துக் கான அத்தாட்சி, அடையாள அத்தாட்சி (Identity Proof) ஆகியவற்றின் நகல்களையும் வைக்க வேண்டும். திருமண அழைப்பிதழையும் உடன் இணைக்க வேண்டும். திருமணத்தை நடத்தி வைத்த மத குருமாரும்/ஐயரும் மனுவில் கையொப்பம் இட வேண்டும்.
மதகுருமாரைத் தவிர, வேறு இரு நபர்களும் மனுவில் சாட்சி கையெழுத்து போடவேண்டும். மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. பயந்து விடாதீர்கள். தண்டனை 1000 ரூபாய் அபராதம்.
திருமணங்கள் நடைபெறும் குறிப்பிட்ட சில கோயில்களிலேயே கூட, திரு மணங்களைப் பதிவு செய்வதற்கு வழி வகை செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு.
மேற்குறிப்பிட்ட விவரங்களைக் கொண்டு சம்மந்தப்பட்ட சார்பதிவாளரைச் சந்தித்து, உங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்!

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி

வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன... ? 

ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக தாங்கள் தான் அவரின் ரத்தா சம்பந்தமான அல்லது /ஆவணக்களின்  படியான வாரிசுகள் என்று சட்டரீதியாக பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ். 
 ஒருவர் இறந்த பின் அவரின் சொத்துக்களைப் பிரச்சனை இல்லாமல் வாரிசுகள்  பகிர்ந்துகொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் மிகவும் அவசியம்.

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது..?

 நிதி நிறுவங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்பு தொகையைப் பெற கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்பு பெற எனப் பலவிதங்களில் பயன்படுகிறது.

 இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ,அவரின் வாரிசுகள் தங்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ளவோ, அடமானம், வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசு பணியில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியின் பலன்கள் பெறுவதற்கும் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெறுவதற்கும் , பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது. 
மேலும், இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

எப்படித்தான் வாங்குவதோ ?..! சான்றிதழை ?....

சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ அதுபோலத்தான் சிறிய மாற்றத்துடன்   வாரிசு சான்றிதழ் வாங்குவதற்குமான நடைமுறை . 

வாரிசுச்சான்றிதலுக்கான விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்ககளில் கிடைக்கும்.என்றாலும் தற்போது  அலுவலத்திற்கு எதிரில் பல்வேறு ஜெராக்ஸ் கடைகள் மற்றும் பத்திர எழுத்தர்களிடம் 5 ரூ அல்லது 10 ரூ கொடுத்து எளிதாக வாங்கிவிடலாம் .
 வாரிசு சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி (இதுவும் ஜெராக்ஸ் கடைகள் மற்றும் பத்திர எழுத்தர்களிடம் கிடைக்கும் ) 

1)  இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்,
2)அவரின் குடும்ப அட்டை நகல் ,/வாக்காளர் அடையாளாஅட்டை நகல் /ஆதார் அட்டை நகல் 
 குடும்ப அட்டை க்கான பட முடிவு
3) வாரிசுகளின் குடும்ப அட்டை நகல் ,/வாக்காளர் அடையாளாஅட்டை நகல் /ஆதார் அட்டை நகல்.

4)தற்போது நோட்டரி வக்கீலின் பற்றுறுதி சான்று (அபிடவிட் ) இனைக்கசொல்கிறார்கள் .

 வாரிசுகள் யார் யார் அவர்களின் இருப்பிட சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து. வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணபிக்கவேண்டும் .
 office endorsement க்கான பட முடிவு
 வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் மேற்படி விண்ணப்பப் படிவம் அங்குள்ள துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்  ஒருவரால் எண்டார்ஸ்மெண்ட் முத்திரை இடப்பட்டு சம்பத்தப்பட்ட வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பபடும்.

 சம்பத்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் அதனை பெற்றுக்கொண்டு ஆட்சேபனை ஏதும் உள்ளதா என கேட்டு 7 நாட்களுக்ட்பட்ட அறிவிப்பு ஒன்றை கையொப்பம் இட்டு  சம்பத்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி வசம் மேற்படி விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பார் .
 
கிராம நிர்வாக அதிகாரி விசாரணை நடத்தியபிறகு அறிக்கையுடன்  மீண்டும் வருவாய் ஆய்வாளர் வசம் அப்படிவம் வரும்

விண்ணப்பப் படிவம் மீது வருவாய் ஆய்வாளர் நேரடியாக தல விசாரணையை மேற்கொண்டு விண்ணப்பதாரர் , பொதுமக்கள் ,வாரிசுதாரர்கள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்று தனது அறிக்கையுடன் மீண்டும் வட்டாட்சிர  அலுவலகத்திற்கு அனுப்புவார் .

அங்கு சம்பந்ததப்பட்ட எழுத்தர் மூலம் கோப்பு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு துணை வட்டாட்சியர் மூலம் வட்டாட்சியருக்கு அனுப்பபடும் .

வட்டாட்சியர் அவர்கள் , மேற்படி கோப்பினை பரிசீலனை செய்து , விசாரணை நடத்திய பிறகு வட்டாசியரால் சான்று கையொப்பம் இடப்பட்டு,  " டபேதாரால்" (பியூன் தான், வேறு யாரும் இல்லை ) அரசாங்க கோபுர முத்திரை இடப்பட்டு சம்பந்ததப்பட்ட எழுத்தர் மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.

 என்ன... தலை சுற்றி மயக்கம் வருகிறதா..?   அன்பர்களே ..என்ன செய்வது தற்போது .....இதுதான் அலுவலக நடைமுறை ....
 office endorsement க்கான பட முடிவு
ஆயினும் நாம் தமிழர்கள்   அல்லவா ? ..நமக்கு இதெல்லாம் ஒரு சிரமமே இல்லை   எளிமையாக பெறமுடியும் ...

தமிழன் என்று சொல்லடா..!... தலை நிமிர்ந்து நில்லடா ...!