தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Wednesday, 1 February 2012

விட்டமின் மாத்திரைகள்



விட்டமின் மாத்திரைகள்
டாக்டர். அ. ஷேக் அலாவுதீன்

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள்என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனைநேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாகஇருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவதுசத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான?கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.
இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின்மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளைசத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒருஉலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன?
நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில்படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாகஜீரணிக்கப்படுவதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப்பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவுஉயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.
நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும்உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்டஉறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும்ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து(உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.
உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன்மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன்கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.
கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல்ஆகியவைகளாகும்.
எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம்மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.
இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் - உவர்ப்பு சுவை சிறுநீரகம்,சிறுநீர்ப்பைக்கும் - புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் - கார சுவை நுரையீரல்,பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்றஉறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்குசக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோ, சரியான அணுகுமுறையல்ல.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான்இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில்லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்தபிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப்பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவைஅதிகமாக இருக்கும்.
உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும் நாம்உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டுமூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டுஅவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின்உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை.இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை.சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும்நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில்ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்துநிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும்உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும்அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.
விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?
வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல்உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல், கல்;லீரல்என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல்கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால்உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.
இறை நியதியுடன் சிந்திப்போமானால், படைத்த இறைவனை மடையனாக்கும் முயற்சிதான் விட்டமின்மாத்திரைகள். அந்த அளவற்ற அருளாளன் மனிதனுக்கு தேவையானதை அழகாகபடைத்திருக்கின்றான். உதாரணமாக ஆரஞ்சுப் பழம்.
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ளஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோளை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டுசுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சிமாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும்(நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள்செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன்செய்கிறான். (30:41)
ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்துஅவரையும் தனியறையில் வைப்போம். யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவதுநாள் பாருங்கள்.
இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியைவிட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம்.நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும்,சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின்சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள்.
விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்றுகூறும் பொழுது, மருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும், பாலும், வெண்ணையையும் தருகின்றார்கள்என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?
விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களதுமுதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்துமூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்துமாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?
இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதிக சத்துள்ளவை என்றுகூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளைஉட்கொள்ள முடியுமா?
விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப்பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!
பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும், கஞ்சித் தொட்டியையும்காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!
இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம்உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல்உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத்தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.
உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறது. இதேபோல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின்தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளைபுறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்குஇருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமதுஉடல் நிராகரித்து விடுகின்றது.
நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில்தீங்கையே பெற்றுக் கொள்கின்றன, அதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.
விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்கபானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும்அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.
எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம்.கற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்.

குழந்தைகளுக்கு வரும் கண் குறைபாடுகள்


குழந்தைகளின் கண் பாதுகாப்பு 

டாக்டர் மீனா ரமேஷ்

( very useful to read )
குழந்தைகளுக்கு வரும் கண் குறைபாடுகள் சிலவற்றை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி டாக்டர் மீனா ரமேஷ் இங்கே விளக்குகிறார்.
பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றோர் எப்படி கண்டுபிடிப்பது?
தன் குழந்தை பார்வை குறைபாட்டுடன் இருக்கிறது என்று தெரிந்தால், அவர்கள் மனதுபடும் வேதனைக்கு அளவே இருக்காது. ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து தக்க சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்துவிடவேண்டும்.
முதல் கட்டமாக, குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும். டி.வி. பார்க்கும்போது அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தையும், தூரத்தையும் கண்காணிக்க வேண்டும். படிக்கும்போது புத்தகத்தைப் பிடித்திருக்கும் தூரத்தைப் பார்க்க வேண்டும். தூரத்தில் இருக்கும் பொருளைப் பார்க்கும்போது கண்ணைச் சுருக்கிச் சுருக்கிப் பார்க்கிறார்களா? இயல்பாகப் பார்க்கிறார்களா என்பதை முக்கியமாகக் கண்டறிய வேண்டும்.
சிலருக்கு மனது தூரத்தில் இருக்கும் பொருளைப் பார்க்கச் சொன்னாலும், தூங்கும் இமைபோல் கண் அதற்கு இசைவு கொடுக்காது. கண்ணைச் சுருக்கிச் சுருக்கி சிரமப்பட்டே அந்தப் பொருளைப் பார்க்க முடியும்.
பெற்றோரோ, பள்ளி ஆசிரியரோ இவற்றைக் கவனிக்காமல் போனால் அந்த பிள்ளைகளின் படிப்பும், எதிர்காலமும் வீணாகிவிடும். பார்வையில், நடவடிக்கைகளில் இயல்பாக குழந்தைகள் இல்லாததைக் கண்டவுடன் உடனே மருத்துவரிடம் கண் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும்.
சோம்பேறி கண்கள் என்றால் என்ன?
இந்தக் குறைபாடு, ஒன்று முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளையே பாதிக்கும். இதில் மூளைக்கும் பங்கு உண்டு.
கண்களில் இருந்து மூளைக்கு சில நரம்புகள் செல்கின்றன. இந்த நரம்புகள் இயல்பாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. மூளைதான் கண் பார்வையின் வீரியத்தைத் தீர்மானிக்கிறது. சிலசமயம் ஒரு கண்ணில் மட்டும் பார்வைத்திறன் அதிகமாக இருக்கும். மற்றொரு கண்ணில் அது குறைவாக இருக்கும். இந்த வீரியம் போகப் போக குறையும். குழந்தையும் அந்தக் கண்ணை அதிகம் பயன்படுத்தாது. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட கண்ணில் பார்வை தெரியாமலேயே போய்விடும். மூளையும் இதைக் கண்டுகொள்ளாமலே விட்டுவிடும். காரணம்?
குறிப்பிட்ட அந்தக் கண்ணில் இருந்து சமிஞ்கைகள் போகாததுதான். இப்படித் தொடர்ந்து சமிஞ்கைகள் போகாமலிருப்பதால் பார்வை மீதான தனது வேலையை மூளை நிறுத்திவிடும்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு கண்ணிலும் பார்வை இருப்பது போலவே தெரியும். ஆனால் குழந்தைக்கு ஒரு கண்ணில் இருந்து மட்டுமே பார்வை தெரியும். இந்த பாதிப்பு குழந்தைகளுக்குத் தெரியாது. பார்வைதான் தெரிகிறதே என்று குழந்தையும் சொல்லாது. பெற்றோராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்தப் பாதிப்புகள் சிலருக்கு பிறவியிலேயே கூட இருந்திருக்கும்.
சோம்பேறி கண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
பெற்றோர்தான் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடும்போதே, குழந்தையை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
குழந்தையின் ஒரு கண்ணை மறைத்து மற்றொரு கண்ணில் பார்வை தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த பாதிப்பு சிலருக்கு இரண்டு கண்ணில்கூட வரலாம். மாறுகண் உள்ள குழந்தைகளுக்கும்கூட இந்த பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு.
பொம்மை ஒன்றை குறிப்பிட்ட தூரத்தில் வைத்து, ஒரு கண்ணை மூடி, மறு கண்ணில் பொம்மை தெரிகிறதா என்று கேட்கலாம். இதைபோல் மற்றொரு கண்ணிலும் சோதனை செய்யலாம்.
இந்தியாவில் 24 சதவிகிதம் குழந்தைகளுக்கு இந்த சோம்பேறி கண் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதற்கு சிகிச்சைகள் என்ன?
நன்றாகப் பார்வை தெரியும் கண்ணை மூடிவிட்டு சோம்பல் கண்ணை மட்டும் பயன்படுத்துவது ஒன்றுதான் இதற்கு வழி. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்ய பேட்ச்கள் உள்ளன. அதாவது பார்வை தெரியும் நல்ல கண்ணின் மேல் இந்த பேட்சை வைத்து ஒட்டி கண்ணை மூடி விடவேண்டும்.
தொடர்ந்து பல மாதங்கள் வரை இந்தப் பயிற்சி தேவை. இந்தப் பயிற்சியின் மூலம் சோம்பேறி கண்ணை மட்டுமே மீண்டும் மீண்டும் கட்டாயமாகப் பயன்படுத்துவதன் மூலமாக இழந்த பார்வை மீண்டும் கிடைக்கும்.
எந்த மாதிரி குழந்தைகளுக்கு சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சமச்சீ
ரற்ற பார்வை ஆகியவற்றை உணராமல் சிறு குழந்தைகளிலேயே இந்த குறைபாடுகளைக் கண்டுபிடிக்காமல் கால தாமதமாக கண் பரிசோதனை செய்து கண்ணாடி போட்டால் இந்த சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு.
சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே கண்புரை நோய் இருந்தால் இதற்கு வாய்ப்பு உண்டு.
விழி நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்கிற குழந்தைகளுக்கு சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கு ஏற்படும் தூரப்பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சத்தான உணவைக் கொடுத்துச் சரிப்படுத்த முடியுமா டாக்டர்?
தூரப்பார்வை கோளாறு என்பது கண்ணின் உருவ வளர்ச்சி அதிகமாக இருக்கும்போது ஏற்படக்கூடிய ஒரு கோளாறு. ஒரு குழந்தையின் வளர்ச்சியை எப்படி நம்மால் தடுக்க முடியாதோ அதேபோல்தான் கண்ணினுடைய வளர்ச்சி என்பது தாயின் கருவில் இருக்கும்போது ஜ"னுக்குள் அணுக்கள் உருவாவதாகும்.
கண்ணுக்குத் தேவையான சத்தான உணவுகளைச் சாப்பிடாமல், குப்புறப்படுத்துக்கொண்டு படிப்பதும், இருட்டறையில் உட்கார்ந்து படிப்பதும், கண்ணினுடைய உருவ வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. அதனால், ஓடுகிற வண்டியில் உட்கார்ந்து படிக்கக்கூடாது. நாம் படிக்கும்போது நம் கண்ணுக்கும் புத்தகத்திற்கும் 35 செ.மீ. இடைவெளி வேண்டும். நல்ல சத்தான உணவான காய், கீரை, பால், முட்டை, பப்பாளி, பேரீச்சம்பழம் போன்றவற்றை உண்ண வேண்டும். இதனால் இந்தக் குறைபாடு மேலும் அதிகரிக்காமல் இருக்க உதவ முடியும்.
குழந்தைகள் அணிகிற கண்ணாடிகளில் ஏதாவது நவீன முறைகள் வந்திருக்கிறதா?
சில குழந்தைகள் கண்ணாடி அணிய விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களின் தோற்றம் மாறிவிடும் அல்லது மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்பதற்காகவே அவர்கள் தயங்குகிறார்கள். இப்பொழுது சிறு பிள்ளைகள் விரும்பும் வண்ணம் அழகான வடிவில் பிளாஸ்டிக் பிரேம் பொருத்திய உடையாத, எடை இல்லாத கண்ணாடி வந்திருக்கிறது. அதை அவர்கள் விரும்பிய வண்ணங்களில் வாங்கி அணிந்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்கு கண்ணாடிக்குப் பதிலாக காண்டாக்ட் லென்ஸ் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை முறைகள் உண்டா?
பெரும்பாலான பெற்றோருக்கு தங்களுடைய குழந்தை சிறிய வயதிலேயே கண்ணாடி அணிவது வருத்தத்தை கொடுக்கிறது. அதை மாற்றியமைக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். ஆனால், 17-18 வயது முடிந்தவர்களுக்கு மட்டுமே கண்ணாடி இல்லாமல் காண்டாக்ட் லென்ஸ் வைக்கலாம். அதனால், வருத்தப்படாமல் குழந்தைகளை கண்ணாடி அணிய ஊக்கப்படுத்தி பார்வைத்திறன் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கண் மறு பரிசோதனை பற்றிய விவரங்களையும் சொல்லுங்கள் டாக்டர்?
கண்ணாடி போட்டபின் ஒரு 3-4 மாதம் கழித்து முழுமையான கண் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தக் குழந்தை கண்ணாடி அணிந்தபிறகு அதன் ஆளுமையில் மாற்றம் உண்டா? படிப்பில் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கிறதா, அந்தக் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
வருடம் ஒரு முறை 18-21 வயது முடியும் மட்டும் கண் பரிசோதனை அவசியம். ஏனென்றால் குழந்தையின் வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் கண்ணோடு உருவ வளர்ச்சியும் மாற வாய்ப்புகள் உண்டு. அதனால், குழந்தை படிப்பு அதன் மனநிலை, குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டு பெற்றோர் குழந்தையை கண் பரிசோதனைக்கு அழைத்து வரவேண்டும்.
கிட்டப்பார்வைக்கு பவர் நார்மலான பிறகு கண்ணாடி கழற்ற வாய்ப்புண்டா?
இது ரொம்ப தவறான கருத்து. கண்ணாடி தொடர்ந்து போடுவதால் பார்வை நரம்புகள் நல்ல வளர்ச்சியடைய வாய்ப்பு உண்டு. கண் உருவ வளர்ச்சி அதிக அளவில் இருக்கும். அதை நாம் சுருக்கி திரும்ப நார்மல் அளவில் சுருக்க முடியாது. ஆனால், உரிய காலத்தில் பார்வைத் திறன் வளர்ச்சி, நல்ல பார்வை, நரம்பு வளர்ச்சி ஆகியவை இருக்கும்.
இயற்கையான பார்வை பெற நாம் எடுக்கும் முயற்சிகள் வெகு நாளாகும். அதற்கு இருக்கும் பார்வையைத் தக்க வைத்துக்கொள்ள நாம் டாக்டரின் ஆலோசனையை நாடுவோம்.
தூரப்பார்வை கோளாறு குறித்து கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்?
தூரத்தில் இருக்கும் பொருள் ஓரளவு தெளிவாகத் தெரியும். ஆனால், கிட்டத்தில் இருப்பது தெளிவாகத் தெரியாது. குறிப்பாக குழந்தைகள் புத்தகம் வாசிக்கும் போதும், எழுதும்போதும் ரொம்பக் கஷ்டப்படும்.
இந்தக் குழந்தைகளுக்கு கண் வலி, தலைவலி, கண்ணில் தண்ணிர் வருதல், குறிப்பாக குழந்தைகள் ஏதாவது பார்க்கத் தொடங்கும் போது மாறுகண் போல ஆகும்.
தூரப்பார்வைக்கு தகுந்த சிகிச்சை என்ன?
இந்த தூரப்பார்வை கோளாறுக்கு குழந்தைகளுக்கு கண்ணாடிதான் போட வேண்டிவரும். தூரப்பார்வைக்கு போடக்கூடிய கண்ணாடி கிட்டப்பார்வைக்கு போடுவதைவிட தடிப்பாக இருக்கும். இதனால், படிக்கும்போதும், எழுதும்போதும் சிரமம் கணிசமாக குறைந்துவிடும்.
இதைத்தவிர குழந்தைகளுக்கு கண்ணில் ஏற்படும் கோளாறுகள் என்ன?
கோணல் பார்வை. இதை சமச்žரற்ற பார்வை என்றும் சொல்லலாம். பார்வை கோளாறைவிட இவர்களின் பிரச்னை ''Only Glare'' அதாவது டி.வி. பார்த்தால் நிழல் விழும். போர்டு பார்த்தால் கிளார் அடிக்கும். இதை கண்டுபிடிக்க உதவும் முக்கிய அறிகுறி அடிக்கடி குழந்தைகளுக்கு தலைவலி இருக்கும். இந்த குறைபாடு தெரிந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மூட்டுவலி


முழங்கால் மூட்டுவலி
எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?
ஏன் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்கள் இந்த பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்?
எலும்பு தேய்மானம் என்பது தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் ஏன் ஆரம்பத்திலேயே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?
இந்த எலும்பு தேய்மானம் வயதான பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
எலும்பு தேய்மானத்திற்கு என்ன சிகிச்சை முறை உள்ளது?
கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு மூட்டு தேய்மானம் உடன் வருமா?
மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானம் இதனை காட்டும் அறிகுறிகள் என்ன?
மூட்டு தேய்மானத்திற்கு என்ன நவீன சிகிச்சை உள்ளது?
உண்ணும் உணவின் மூலமாக மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானத்தை முன் எச்சரிக்கையாக தடுத்துக்கொள்ள முடியுமா?
டாக்டர் விஜய் போஸ்
முன்பெல்லாம் வயதான பெண்களை மட்டுமே பாதித்து வந்த முழங்கால் மூட்டுவலி, இப்போது இளம் பெண்களையும் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது போன்றவைதான் மூட்டுவலி உண்டாக பிரதான காரணங்கள். மூட்டுவலி ஏற்பட்டால் இயல்பாக நடக்க முடியாது. உட்கார்ந்து எழுவதில் சிரமம் ஏற்படும். தவிர, நாள்பட்ட மூட்டுவலியால் வேறு பல உபாதைகளும் உண்டாகும் ஆபத்து உண்டு. இவற்றை எளிதில் தவிர்க்க முடியும். அதற்கென நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன!
முழங்கால் மூட்டுவலி இணைப்புகளில் திடீரென்று வீக்கம் அல்லது அழற்சி உண்டாகும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று இரண்டு வகை உண்டு. இவை இரண்டும் பெண்களை எளிதில் தாக்கும் நோய்கள் என்பது அதிரவைக்கும் உண்மை.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis):
முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போதுதான் வலி உண்டாகிறது.
எங்காவது விழுந்து அடிபட்டு நீண்ட நாட்கள் படுக்கை வாசம் செய்பவர்களால் எழுந்து நடக்க முடியாது. இதனால் மூட்டுகளில் அசைவு குறைந்து போகும். அப்போதும் மூட்டுவலி வரும். உடல் எடை கூடுவதாலும், முறையற்ற உணவுப் பழக்கத்தாலும் கூட முழங்கால் மூட்டுகளில் வலி வருவது தவிர்க்க முடியாது.
பெண்கள் பேறு காலத்திற்குப் பின்னர் உடலை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களது உடல் எடை கூடும். அதனால் முழங்கால் மூட்டுகளில் வலி வரும். வலி விடாது! படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும், வலி மெல்ல மெல்ல இடுப்புக்கும் பரவும். சில நேரங்களில் தசைப்பிடிப்பும் ஏற்படும்.
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்ஸ் (Rheumatoid Arthritis):
ஒவ்வொருவருக்கும் உடலில் குறிப்பிட்ட அளவு நோயெதிர்ப்புச் சக்தி செல்கள் இருக்கும். இந்தச் செல்களில் பாதிப்பு ஏற்படும்போது முழங்கால் மற்றும் கால்களின் இணைப்புகளில் வீக்கமும் அழற்சியும் உண்டாகும். இதுவே ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்(Rheumatoid Arthritis).குடும்பத்தில் முன்னோர்கள் யாரேனும் இருந்தால், பரம்பரையில் மற்றவர்களுக்கு வரும். இந்தப் பாதிப்பு காரணமாக கைவிரல்களில் பிரச்னை உண்டாகும்.
குறிப்பாக, காலை நேரங்களில் கைவிரல்கள் மற்றும் முழங்கால் மூட்டுகளில் இறுக்கிப் பிடித்த மாதிரி உணர்வு வரும், வீக்கம் உண்டாகும், இதனால் வலி ஏற்படும். குளிர்காலங்கள், மழை பெய்யும் காலங்களில் வலி அதிகரிக்கும். கைவிரல்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. உடலில் உள்ள மற்ற இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்படும். நுரையீரல், இருதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் சூழலும் உண்டு.
பரிசோதனைகள்:
ஆஸ்டியோ, ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் இரண்டிலுமே வலிதான் பிரதானம் என்பதால், வலியை நீண்ட நாட்கள் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
குறிப்பாக, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ’ல் இரவு நேரங்களில் வலி உண்டாகும். எலும்புகளில் தேய்மானம் இருக்கிறதா என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து சிகிச்சை எடுக்கவும். முழங்கால் மூட்டுகளில் வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிப்பதும் அவசியம்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் இப்படி என்றால் ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்(
Rheumatoid Arthritis)சற்று வித்தியாசமானது. வலியும் வேதனையும் அதிகரிக்கும் போது சோதனை செய்து கொண்டால், பாதிப்பின் தீவிரத்தை துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இளம்பெண்களிடம் இந்த பாதிப்பு ஏற்பட்டால், அவர்களால் இயல்பாக நடக்க முடியாது. எப்போதும் தாங்கிப் பிடித்தபடிதான் நடக்க முடியும்.சிறுவர்களிடமும் ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்(Rheumatoid Arthritis) என்னும் பிரச்னை தான். இதைதான் ஜ"வனைல் ரூமட்டாய்டு(Juvenile Rheumatoid Arthritis) என்று சொல்வார்கள்.
சிகிச்சைகள்:
மூட்டுவலியைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். நிரந்தரமாகக் குணமாக்க முடியும் என்று சொல்வதற்கில்லை. ஆதலால் வலி தீவிரமடையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸில் வலிதான் பிரச்னையே. ஆதலால் வலி நிவாரண மருந்துகள் சிபாரிசு செய்யப்படும். அதனால் வலிதானே என்று அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிக் கண்டுகொள்ளாமல் விட்டால், போகப் போக கை, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படலாம். ஒரு கட்டத்தில் அவற்றின் வடிவம் மாறிப் போய்விடும் ஆபத்து உண்டு.
மூட்டுவலி, வயதானவர்களுக்கு மட்டும் தான் என்றில்லை. எந்த வயதினருக்கும் வரலாம். வயது ஏறஏற வலி அதிகரிக்குமே தவிர குறையாது. ஆதலால் ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.
முழங்கால் மூட்டுவலி மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்ற கருத்து உண்டு. ஆனால், இது தவறு. மாறாக இருபது, முப்பது வயதுடைய பெண்களை பாதிப்பதோடு, மெனோபாஸ் நெருங்கும்போது வலி அதிகரிக்கிறது என்பதே உண்மை.
முழங்கால் மூட்டுவலியின்போது, இணைப்பில் ஊசியின் மூலம் மருந்து கொடுக்கப்படுவதும் உண்டு. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஊசி போடப்படும்.
மருந்துகளில் குணமாகாதபட்சத்தில் அறுவை சிகிச்சையே நல்லது. முதலில் ஆஸ்ரயோட்டமி செய்து கொள்ளலாம். பின்னர் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரலாம்.
ஆனால், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்ஸதிக்கு மருந்துகள் மட்டுமே போதுமானது. தேவையேற்பட்டால், பிசியோதெரபி செய்து பிரச்னையைக் குறைக்கவும்.
தவிர்ப்பது எப்படி?
உடல் எடையைக் குறைப்பது, உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வது.
நடப்பது, நீச்சலடிப்பது, சிறுசிறு வேலைகள் செய்வது.
வாரம் ஐந்து நாட்கள் மிதமான நடைப்பயிற்சி நல்லது.
சமச்
žர் உணவு, பால், தயிர் அவசியம்.
கொழுப்புச் சத்துள்ள உணவு வேண்டாம்.
நார்ச்சத்து உணவுகள் நல்லது.

எலும்பு தேயுமா..?
Dr. எஸ். ஆறுமுகம்
எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது? ஏன் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்கள் இந்த பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்?
பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் நாங்கள் ஆஸ்டியோ பெரோஸ’ஸ் என்போம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாற்பது,ஐம்பது வயதிற்கு மேல் சிலருக்கு வரும் பாதிப்புதான் இது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் எலும்பு தேய்மானம் அதிகமாக வரும். ஏனெனில் எலும்பு தேய்மானம் கால்சியம் சத்து குறைவதினால் ஏற்படும் பாதிப்பாகும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி நின்ற பின்னர், உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்துவிடுவதால் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். இதனால்தான் பெண்களுக்கு அதிகம் எலும்பு தேய்மானம் வருகிறது. கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு தோன்றி அந்த பெண்களுக்கும் எலும்பு தேய்மானம் வரலாம்.
எலும்பு தேய்மானம் என்பது தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் ஏன் ஆரம்பத்திலேயே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?
எலும்பு தேய்மானம் பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதில் எலும்பு முறிவு ஏற்படலாம். சின்ன இடறல் கூட எலும்பு முறிவு போன்றவற்றை உருவாக்கிவிடும். சும்மா இப்படி கையை ஊன்றியது போலத்தான் விழுந்தேன். எலும்பு முறிஞ்சிட்டுங்க என்பார்கள் சிலர். இதனை - Trivial Trumaஎன்போம். எனவேதான் இக்குறைபாட்டை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும் என்கிறோம்.எலும்பு தேய்மானம் எந்தளவு உள்ளது என்பதை முன் கூட்டியே அறிய Bone Dencito metreஎன்ற கருவி வந்துள்ளது. அக்கருவி மூலம் எலும்பு தேய்மானத்தையும், எலும்பில் கால்சியம் பற்றாக்குறை இருப்பதையும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். Dencito metre என்பது ஒரு நவீன சாதனமாகும். நமது இந்தியாவிற்கு அறிமுகமாகி இரண்டு வருடம்தான் ஆகிறது.
இந்த எலும்பு தேய்மானம் வயதான பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
வயதான பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லை. சமீப காலமாக நமது வாழ்க்கை முறையே Life Style ஆனதும் பெரிதும் மாறி விட்டது. நம்மில் பலருக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, கடின உழைப்பு என்பது மறந்துபோய்விட்டது. பல ஆண்டுகள் இளம் வயதிலேயே புகை,மதுப்பழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். இதனால் இன்றைய நாட்களில் இளம் வயது ஆண்களும் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகிறார்கள். வேறு சில உடல் நல குறைபாடுகளுக்கு குறிப்பாக ஆஸ்துமா, போன்ற நோய்களுக்கு என்று வீரியமிக்க (Sleroid) மருந்து எடுப்பவர்களுக்கும் எலும்பு தேய்மானம் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
எலும்பு தேய்மானத்திற்கு என்ன சிகிச்சை முறை உள்ளது?
வரும் முன் காப்பது என்பதுதான் எலும்பு தேய்மானத்திற்குரிய முதல் எச்சரிக்கையாகும். வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முன் கூட்டியே எலும்பு டாக்டரிடம் சென்று எலும்பு பற்றி அறிந்து கொள்வது நல்லது. எலும்பு தேய்மானம் இருப்பது தெரிந்தால் கால்சியம் ரி-பிளேஸ் மெண்ட் தெரபி மூலம் குணம் பெறலாம். பெண்களாக இருந்தால் அவர்கள் கால்சியம் ரி-பிளேஸ் மெண்ட் தெரபியுடன், ஹார்மோன் ரி-பிளேஸ் மெண்ட் தெரபியும் தேவைப்படும்.
முன்பு கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வது மட்டுமே எலும்பு தேய்மானத்திற்குரிய சிகிச்சையாக இருந்தது. கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதனால் விளைவு அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை. எனவே பின்னர் இன்ஸெக்ஷன் மூலம் கால்சியம் தரப்பட்டது. அண்மைக் காலமாக ஸ்ப்ரே மூலம் மூக்கு வழியே கால்சியத்தை உட்செலுத்தும் நவீன முறை வந்துள்ளது. இந்த நவீன கால்சியம் ரி-பிளேஸ்மெண்ட் தெரபி மிகுந்த பயன் தரக்கூடியதாகும். இந்த Nasal Spray அதிக அளவில் தீவிர கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு தேவைப்படும்.
கால்சியம் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு மூட்டு தேய்மானம் உடன் வருமா?
முதலில் மூட்டு தேய்மானம் என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டால் - எலும்பு தேய்மானம் என்பது மூட்டு தேய்மானத்திலிருந்து வேறுபட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள். மூட்டு தேய்மானம்- உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், தரையில் அமர்ந்து பணிபுரிவது. Indian toiletகளை பயன்படுத்துவது, போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் வர வாய்ப்புள்ளது. மூட்டு தேய்மானம் ஒரு Degernerative நோயாகும். அதாவது வயது ஆக ஆக உடம்பின் உறுதிப்பாடும்,உடற்கட்டும் மெல்ல உருமாறுவதனால் ஏற்படுகின்ற பாதிப்பாகும்.
நமது மூட்டு பகுதிக்குள்-கார்டிலேஜ் என்கின்ற அமைப்பு இருக்கும். கார்டிலேஜ்க்குள் திரவம் இருக்கும். வயதான சிலருக்கு இந்த திரவம் குறைய ஆரம்பிக்கும். இதனால் ஏற்படுவதுதான் மூட்டு தேய்மானம் ஆகும். ஆனால் கால்சியம் பற்றாக்குறை இருப்பவர் அத்தனை பேர்களுக்கும் மூட்டு தேய்மானம் வரும் என்று சொல்வதற்கில்லை. எலும்பு தேய்மானம் என்பது வேறு, மூட்டு தேய்மானம் என்பது வேறு.
மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானம் இதனை காட்டும் அறிகுறிகள் என்ன?
எலும்பு தேய்மானத்திற்கு என்று பிரத்தியேகமான அறிகுறிகள் இல்லை. முன்பு கூறியது போல் Risk Factor உள்ளவர்கள் அதாவது - உடற்பயிற்சி செய்யாதவர்கள், கடின உழைப்பில்லாதவர்கள்,மாதவிலக்கு சுழற்சி நின்ற பெண்கள், கருப்பை எடுத்த பெண்கள் டாக்டரை பார்த்து முன்கூட்டி பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம்.
மூட்டு தேய்மானத்தில் அறிகுறி...?
மூட்டு வலிதான் முதல் அறிகுறியாகும். கெண்டைக்கால் வலி, தொடையில் வலி போன்றவையாகும்.படிக்கட்டில் ஏறும்போது, தரையில் உட்கார்ந்து எழும்போது, சிறிது தூரம் நடந்தால் வலிப்பது போன்றவை மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் - தொடர்ந்து ஓய்வு எடுக்கும்போதுகூட வலிக்கலாம். இப்படி ஓய்வு எடுக்கும்போது வலிப்பது தீவிர மூட்டு தேய்மானத்திற்குரிய அறிகுறியாகும்.
மூட்டு தேய்மானத்திற்கு என்ன நவீன சிகிச்சை உள்ளது?
ஆரம்ப நிலையில் டாக்டரிடம் வந்தால் வலி நிவாரண மருந்துகளும் மூட்டுப்பகுதியை சுற்றியுள்ள சதைகளை வலுப்படுத்தும் பிஸ’யோதெரபி பயிற்சிகள் தரப்படும். கூடவே வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளச் சொல்வோம். அதாவது படிகள் அதிகம் ஏறாமல், Western toiletபயன்படுத்துவது, சமதரையில் சிறிது தூரம் நடப்பது, நாற்காலியில் அமர்வது போன்றவற்றை கடைபிடிக்க அறிவுரைத்தரப்படும்.
இதன் அடுத்த நிலை மூட்டு தேய்மானம் என்றால் Knee caps (மூட்டு மேல் போட்டுக் கொள்ளும் உறை) மற்றும் Knee - brace போட்டுக் கொள்ள சொல்வோம். வலி அதிகமாக இருந்தால் மூட்டுக்குள் Steroid ஊசி போடப்படும். இந்த ஊசி மருந்து தகுதி பெற்ற எலும்பு மருத்துவரால் மட்டுமே போடப்பட வேண்டும். இந்த ஊசி மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த அல்ல-மூட்டு வலியை போக்க மட்டுமே போடப்படுவதாகும். முற்றிய (தீவிர) நிலையில் மூட்டு தேய்மானம் என்றால் - அவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் சிறந்ததாகும்.
உண்ணும் உணவின் மூலமாக மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானத்தை முன் எச்சரிக்கையாக தடுத்துக்கொள்ள முடியுமா?
எலும்பு தேய்மானத்தினை தடுக்க-கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் உதாரணமாக பால்,முட்டை, žஸ், பச்சை காய்கறிகளை உண்ண வேண்டும். மூட்டு தேய்மானத்திற்கு உடல் பருமன் அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது தவிர வாழ்க்கை முறை மாற்றத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
மூட்டுவலிக்கு ஆயுர்வேதம்
டாக்டர் எம்.எஸ். பாபி கிளாட்ஸ்டோன்
ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை பற்றிய விஞ்ஞானம். மனிதன் நோயின்றி முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வழி வகுப்பது ஆயுர்வேதம்.
முனிவர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மருத்துவ நூல்கள்தான், இன்றைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையாக மனிதர்களுக்குப் பலன் அளித்துக் கொண்டிருக்கின்றன.
திட்டமிடல்: காலை எழுந்தவுடன் கடவுள் ஸ்லோகங்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என ஒன்றே முக்கால் மணி நேரம் கடந்தவுடன், அன்றைய வேலைகள் குறித்து மனதுக்குள் திட்டமிடல் வேண்டும். இவ்வாறு அன்றைய வேலைகளை மனம் திட்டமிடுவதே தியானம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு காலை 4.30 மணிக்கு எழுந்து தினமும் முறையாக அனைத்தையும் செய்வதை எமம், நியமம் (சுய கட்டுப்பாடு, ஒழுக்கம்) என்கிறது ஆயுர்வேதம். நோய் வராமல் தடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை அஸ்திவாரங்கள்.
முதல் கட்ட அறிகுறி: இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக 40 வயதைக் கடந்தவர்களில் 60 சதவீத பேர் மூட்டுவலி காரணமாக அவதிப்படுகின்றனர். முதல் கட்ட அறிகுறியாக தசைப் பிடிப்பு அல்லது இடுப்புப் பகுதியில் வலி அல்லது கால் மூட்டுகளில் வலி ஏற்படும். மூட்டும் எலும்பும் சந்திக்கும் இடத்தில் உராய்வுத் திரவம் ("சைனோவில்'') குறைந்து மூட்டு தேய்வதே பிரச்சினைக்குக் காரணம். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, நச்சுப் பாதிப்பு ஏற்படுவதே இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாகும்.
அதிக எடை, உடற்பயிற்சி இல்லாமை: மூட்டு வலிக்கான சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பு அடிப்படைக் காரணங்களான உடல் எடை, உடற்பயிற்சி இல்லாமையைக் கருத்தில் கொள்வது அவசியம். உடல் எடையைச் 
žராக வைத்துக்கொள்ள உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அசைவ உணவைத் தவிர்த்தல், உருளை - பட்டாணி - வாழைக்காயைச் சாப்பிடாமல் இருத்தல். ஐஸ் தண்ணிர் உள்பட குளிர் பானங்களைத் தவிர்த்தல், பகல் நேர தூக்கத்தைத் தவிர்த்தல் ஆகியவை மிகவும் முக்கியமானதாகும். மஞ்சள் கரு இல்லாமல் முட்டை சாப்பிடலாம்.
மருதுவர் அல்லது பிஸியோதெரப்பி நிபுணரின் ஆலோசனைப்படி தினமும் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். 15 நாள் சிகிச்சை முறை: ஆயுர்வேத மருத்துவத்தின்படி மூட்டு வலியைப் போக்க 15 நாள் "பஞ்சகர்ம'' சிகிச்சை முறை உள்ளது. முதல் 7 நாள்கள், 8வது நாள், அடுத்து 7 நாள்கள் என மூன்று கட்டமாக மொத்தம் 15 நாள்கள் சிகிச்சை அளித்து மூட்டு வலியை முற்றிலும் போக்கி நோயாளிக்கு நிவாரணம் அளிக்க முடியும்.
உள்ளுக்கு மருந்தும் வலி உள்ள இட்டத்தில் எண்ணெய் சிகிச்சையும் 7 நாள்கள் அளிக்கப்படும். முதல் கட்ட 7 நாள் சிகிச்சையின் முடிவில் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வயிற்றுக்குக் கொண்டுவரப்பட்டு, 8-வது நாள் உடலில் இருந்து மலம் மூலம் நச்சுக்கள் வெளியேற்றப்படும். இறுதிக் கட்டமாக, கடைசி 7 நாள்கள் எண்ணெய் மற்றும் உள்ளுக்கு மருந்து கொடுத்து உடலில் உள்ள ஆற்றல் மையங்கள் தூண்டப்பட்டு மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படும்.
சிற்றாமுட்டி, அஸ்வகந்தா, சிற்றாத்தை, நொச்சி உள்ளிட்ட மூலிகைகள் அடங்கிய மருந்துகள் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சையைத் தொடங்கும் முன்பு தேவைப்படும் நிலையில் எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். எனவே ஆயுர்வேத மருத்துவ முறையைக் கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாமே.!

காது


வெளியிலிருந்து ஓசை எப்படி காதுக்குள் போய் சேருகிறது?
மனிதக் காது வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று 3 பிரிவாக உள்ளது. இந்த 3 பாகங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிந்தால்தான் காது கேட்கும். இல்லையெனில் 'காது லேது' ஆகிவிடும். வெளிக்காது சப்தத்தை திரட்டி நடுக்காதிற்கு அனுப்பும்.
நடுக்காது உள்காதுக்கு அனுப்பும் வேலையை செய்யும். அதாவது - நடுக்காதைத் தாண்டி இருக்கும் எலும்புகள் சப்தத்தை பெருக்கி உள்காதுக்கு அனுப்பி வைக்கும். உள்காதில் வெளியிலிருந்து சென்ற ஓசை மின்சக்தியாக மாற்றம் பெற்று, Auditory Nerve எனப்படுகின்ற ஓசை நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். இவ்வளவு செயல்பாடுகளையும் நமது நுண்ணிய உறுப்பான காது நொடிப் - பொழுதில் செயல்படுத்துகிறது.
வெளியில் உள்ள ஓசையை கேட்கின்ற பணியினை மட்டுமே காதானது செய்கிறது என்றும், அது ஒரு வேலை தான் என்றும் நினைத்துவிடாதீர்கள். ஒருவரின் உடலில் 'பாலன்ஸ்' தன்மையை பராமரிகின்ற காவல்காரனாகவும் காதுகள் செயல்படுகின்றன. உதார ணமாக ராட்டினம் போன்றவற்றில் ஏறி சுற்றுகின்றபோது நீங்கள் தலை சுற்றி கீழே தூக்கி எறியப்படாமல் பாதுகாப்பதே உங்கள் காதுகள்தான்.
காதுகளில் அழுக்கு சேருவது ஏன்?
காதில் பொதுவாக பலர் பேர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினை காதில் அழுக்கு சேருவதுதான். அழுக்கு சேருவது இயல்பானதுதான். இத்தகைய அழுக்குத்தான் வெளிக்காதின் தோல், பாக்டீரியா தாக்குதல் உள்ளிட்ட நோய்த் தொற்றினால் காது பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. அதே சமயம் அழுக்கு அதிக அளவில் காதுப்பகுதியில் சேர்ந்து விட்டாலும் அதனை அலட்சியப்படுத்தினாலும் ஆபத்துதான். அலட்சியத்தின் காரணமாக - அழுக்கானது கட்டி போல உருண்டு திரண்டு காதை அடைத்துக் கொள்வதுடன் கடுமையான காது வலியையும் ஏற்படுத்தி விடலாம். அழுக்கு அதிகமாகி கட்டியாக திரண்டு நிற்கிற காரணத்தால் சிலருக்கு காது அடைத்துக் கொண்டு கேட்காமல் இருந்தாலும் இருக்கலாம்.
காதில் சேருகிற அழுக்கை எடுக்கத்தான் வேண்டுமா?
சாலைகளில் வாகனங்களின் அணி வகுப்பு, தொழிற்சாலைகளின் ஆதிக்கம், மாசு படர்ந்த சூழல்கள், போன்றவற்றிற்கு மத்தியில்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எனவே இன்றைய நாளில் காதில் மிதமிஞ்சிய அழுக்கு சேருவது இயல்பாகிவிட்டது. சாதாரணமாக காதில் அழுக்கு சேருவது வேறு, அதனால் ஆபத்தில்லை. ஆனால் அதிகப்படியான அழுக்கு சேருவதுதான் ஆபத்தானது. ஆகவே காதில் சேரும் கட்டிப் போன்ற அழுக்கை அடிக்கடி காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் சென்று சுத்தப்படுத்திக் கொள்வது நல்லது.
அழுக்கு சேர்ந்து கட்டியாக உள்ள நிலையில் டாக்டரிடம் சென்றால், அவர் சொட்டு மருந்து போடுவார். மூன்று அல்லது நான்கு தினங்கள் சொட்டு மருந்தைப் பயன்படுத்திய பிறகு மருத்துவரிடம் மீண்டும் சென்றால், கருவிகள் மூலம் அழுக்கை வெளியே எடுத்து விடுவார் அல்லது சிரிஞ்ச் மூலம் தண்ணிரைப் பீய்ச்சி அழுக்கை வெளியே எடுத்து விடுவார்.
காதில் அழுக்கு சேர்ந்தால் மருத்துவரிடம் செல்கிற போது - காதுகளில் உள்ள அழுக்கை டாக்டருடன் சேர்ந்து நோயாளியும் பார்க்கும் நவீன வசதி தற்போது உள்ளது. 'இயர் எண்டோஸ் கோபி'' என்கின்ற சாதனம்தான் அது. அக்கருவி மூலம் டாக்டருடன் சேர்ந்து நோயாளியும் நடுக்காது வரை உள்ள காதின் நிலைமையை நேரடியாகப் பார்க்கலாம். இந்த நவீன வசதி காரணமாக அழுக்கு உள்பட காதின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய முடியும். செவிப்பறையில் ஓட்டை இருந்தால்கூட அழுக்கை வெளியேற்ற சிரிஞ்ச் மூலம் நீரைப் பீய்ச்சுவது ஆபத்தாகும். இதுபோன்ற வேளையில் எண்டாஸ் கோப்தான் பெரிய உதவியாக இருக்கும்.
பொதுவாக காதில் என்ன மாதிரியான பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புள்ளது?
பிறவி காது கேளாமை,காதில் சீழ் வருவது, காதில் வலி, கேட்டுக்கொண்டிருந்த காது தனது பணிக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பாதிப்பு காதில் வரலாம். காதை ஒரு அற்புதமாக நுணுக்கமான வகையில் இயற்கை படைத்துள்ளது. காதினை வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று 3 பிரிவாக பிரிக்கலாம். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். உடம்பிற்கு கண் அவசியமானது தான். ஆனால் மனிதர்கள் கண்ணிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவேணும் கூட காதிற்கு கொடுப்பதில்லை.
சிலருக்கு காதில் சீழ் வடிகிறதே அதற்கு என்ன காரணம்? அதற்கு என்ன சிகிச்சை?
நமது காதானது - வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று 3 பகுதியாக அமைந்துள்ளது. காது மடல் வெளிக்காது எனப்படும். நடுக்காதில் மெல்லிய செவிப்பறைச் சவ்வும், மூன்று சிறிய எலும்புகளும் உள்ளன. உடம்பிலேயே மிகச் சிறிய எலும்பான இவைதான், ஓசையை உள் காதுக்கு எடுத்துச் செல்கின்றன. உள்காதுப் பகுதியில் பல நரம்புகள் உள்ளன. இவை ஓசையை மூளைக்கு எடுத்துச் செல்வதுடன் காதில் சமச்சீர் நிலையை ஏற்படுத்துகின்றன.
வெளிக்காது மற்றும் நடுக்காதில் வருகிற பாதிப்பு காரணமாகவே காதில் சீழ் வடிதல் ஏற்படுகிறது.பாக்டீரியா (அ) காளான் போன்ற நோய்த்தொற்று காரணமாக வெளிக்காது பகுதியில் உள்ள துவாரத்தில் சீழ் வடியலாம். இதற்கு ஓடிடிஸ் எக்ஸ்டர்னா என்பது மருத்துவ பெயராகும். காதைச் சுத்தப்படுத்த பட்ஸ் போன்றவற்றை காதில் பயன்படுத்துவது மிக மென்மையான காது துவாரப் பகுதிகளில் உள்ள தோலுக்கு காயத்தை ஏற்படுத்தக்கூடும். அதுவும் காதில் சீழ் வடியக் காரணமாகலாம். இதே போல் நடுக்காது பகுதியில் ஓடிடிஸ் மெடியா எனப்படுகிற நோய்த்தொற்று அடிக்கடி ஏற்படலாம்.
சிறுவயதில் ஏற்பட்ட கிருமி தொற்றினை கண்டு கொள்ளாமல் இருப்பது நாளடைவில் முற்றிப் போய் காதில் சீழாக மாறலாம். காதுப்பகுதியில் அடிபட்டாலும் காதில் சீழ் வைக்கலாம். இளம் பிராயத்தில் வருகின்ற காது வலியை அலட்சியப் படுத்துவதனாலும் காதில் சீழ் வைக்கலாம். மூக்கில் கிருமி தொற்றி அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டால் அது பின்னாளில் காதில் சீழாக மாறலாம். காதிற்கும் மூக்கிற்கும் இடையே ஈஸ்டீஸுன் குழாய் ஒன்று உள்ளது. அதன் மூலம் மூக்கடைப்பு மற்றும் கிருமி தொற்று காதிற்கு பரவி காதில் சீழ் தோன்றி விடலாம்.
இதற்கு எடுத்தவுடனே சிகிச்சை செய்யக்கூடாது. முதலில் காதில் எந்த பகுதியில் சீழ் வைத்துள்ளது? காதின் கேட்கும் திறன் எப்படி உள்ளது? போன்றவற்றை சோதனை மூலம் கண்டறிய வேண்டும்.காதில் சிலருக்கு எலும்பு அரிப்பு நோய் (Chole steatoma) வரலாம். இதனாலும் காதில் சீழ் ஏற்படலாம். எலும்பு அரிப்பு மூளைக்கும்கூட பரவிட வாய்ப்புள்ளது. இப்படி பரவியவர்கள் தலைவலி, காதுவலி, காதில் சீழ் என்று வருவார்கள். எனவேதான் நேரடியான சிகிச்சை செய்யாமல் சோதனைகளை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.
சாதாரணமாக காதில் சென்ரல் பர்ப்பிரேசன் காரணமாக காதில் சீழ் என்றால் அதற்கு மருந்து மாத்திரை தந்து சிகிச்சை அளிப்போம். எலும்பு அரிப்பு ஏற்பட்டிருந்தால் அரிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு புதிய எலும்பு மற்றும் புதிய ஜவ்வு பொருத்தும் அறுவை சிகிச்சை செய்வோம். அந்த சிகிச்சைக்கு (Tympano mas toidectomy) என்றுபெயர். இந்த சிகிச்சை மூலம் சீழானது மூளைக்கு பரவாமல் செய்யவும், காது கேட்கும் திறனை அதிகப்படுத்தவும் முடியும்.
ஓடிடிஸ் மெடியா என்றால் என்ன?
நடுக்காது பகுதியில் கிருமி தொற்று ஏற்படுவதுதான் ஓடிடிஸ் மெடியா எனப்படும். இதில் இரண்டு வகை உள்ளது. கடுமையான வலி தரக்கூடியது ஒரு வகை. அடுத்தது காது சீழை ஏற்படுத்துவது.காதில் கடும் வலியைத் தரக்கூடிய ஓடிடிஸ் மெடியா குழந்தைகளுக்கே ஏற்படும். குழந்தைகளுக்கு மூக்கடிச் சதை, அடிநாக்குச் சதை பகுதியில் பல நோய்த்தொற்று ஏற்படுவதால் வரும் பாதிப்பு இது.இப்பாதிப்பு அடிக்கடி வந்தால் மூக்கின் பின் பகுதியையும் காதையும் இணைக்கிற பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். முன்தொண்டையிலிருந்து நடுக்காதுக் குழி வரையில் செல்லும்...யுஸ்டேஷ’யன் குழாய் என்றழைக்கப்படும் பாதையில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்பட்டாலும் நடுக்காதுப் பகுதியில் நோய்த் தொற்றும் நீர்ப்பெருக்கமும் ஏற்படலாம். இப்படி நீர் சுரக்கிற பிரச்சினையை செக்ரட்டோரி ஓடிடிஸ் மெடியா என்று அழைக்கிறார்கள். இப்படி வடிகிற நீர் நோய்த் தொற்றுடன் இருந்தால் அது சீழாக மாறும்.
காதில் சீழ் வருவதற்கு முன்னால் என்ன அறிகுறிகள் தோன்றும்?
பொதுவாகக் குழந்தைக்கு ஜல தோஷம், மூக்கு ஒழுகல், தொண்டை வறட்சி, இருமல் ஏற்படும்போது காதிலும் வலி ஏற்படலாம். கூடவே காய்ச்சலும் ஏற்படக்கூடும். இதுதான் கடுமையான ஒடிடிஸ் மெடியா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சிகிச்சை தராவிட்டால் காதிலிருந்து சீழ் வடியும். வலியும் குறைந்து செவிப்பறையில் ஓட்டை விழுந்து விடும். ஒவ்வொரு தடவையும் ஜலதோஷம் பிடிக்கும் போதும்- காதில் நீர் செல்லும் போதும் காதிலிருந்து சீழ் வடியத் தொடங்கிவிடும். அச்சமயத்தில் வலி இருக்கலாம் இல்லாமலும் போகலாம். அதேபோல் காது கேட்கும் திறன் குறையலாம். குறையா மலும் இருக்கலாம். இது போன்ற பிரச்சினை மூன்று மாத காலத்திற்கு நீடித்தால் செவிப்பறையில் உள்ள ஓட்டை நிரந்தரமாகி விடும். இந்த முற்றிய நிலை க்ரானிக் ஒடிடிஸ் மெடியா என்றழைக்கப்படும்.
சீழ்வடிதல் பிரச்சினையால் வரும் சிக்கல்கள் என்ன?
காதில் சீழ் வடிதல் பிரச்சினைக்கு, உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது பின் வரும் சிக்கல்களை ஏற்படுத்தும். - நோய்த் தொற்று முகத்தின் நரம்புகளில் பரவுவதால் முகநரம்பு வாதம் ஏற்படும்.
உள் காதில் நோய்த் தொற்று காரணமாக கேட்கும் திறனுள்ள நரம்பு செயல் இழக்கும். தலை சுற்றலும் ஏற்படும்.
காதின் பின்பகுதியில் நோய்த் தொற்று பரவும்போது சீழ்க்கட்டி ஏற்படுகிறது.
கபாலத்தின் மூலம் மூளைக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் நோய்த் தொற்று பரவும்போது மூளைக் கட்டி, மூளை வீக்கம், மூளையில் அழற்சி போன்றவையும் ஏற்படலாம்.
சீழ்வடிதல் பிரச்சினையை குணமாக்க என்ன சிகிச்சை செய்ய வேண்டும்?
தீவிரமான சீழ் வடிகிற பிரச்சினைக்கு ஆன்ட்டிபயாட்டிக், ஆன்ட்டி ஹ’ஸ்டமைன்ஸ் எனப்படும் செயலாற்றலைத் தடுக்கும் மருந்துகள், வலி மருந்துகள் கொடுத்து சிகிச்சை தரப்படும். சில சமயங்களில் செவிப்பறை ஓட்டை தானாக மூடிக்கொள்ளும். சுவாசப் பாதையின் மேற்புறப் பகுதியில் நோய்த் தொற்று தொடர்ந்து நீடிப்பதால் காதுக்கும் அது பரவினால் ஓட்டை தானாக மூடிக் கொள்ளாது. இந்தப் பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு அடிநாக்குச் சதை மற்றும் மூக்கடிச் சதை அறுவை சிகிச்சை தொடக்கத்தில் செய்யப்படும். இதன் மூலம் நோய் தொடராமல் தடுக்கப்படும்.ஆபத்தான žழ்வடிதல் பிரச்சினையில் நோய் காதிலிருந்து மட்டுமின்றி காதின் பின்புற முள்ள மேஸ்டாய்ட் எலும்புப் பகுதியிலிருந்தும் விரட்டப்பட வேண்டும்.
இதனை மருந்து மூலம் குணப்படுத்த முடியாது. இதற்கு மாஸ்டாய் டெக்டமி மற்றும் டிம்பனோ பிளாஸ்டி எனப்படும் அறுவை சிகிச்சைகளே சரியான தீர்வு. சாதாரணமாக ஆபத்தில்லாத சீழ் வடிதல் பிரச்சினையில் செவிப்பறையில் ஓட்டை தொடர்ந்து நீடிக்கும். ஓட்டை தானாக மூடிக் கொள்ளாது.இப்பிரச்சினையைத் தீர்க்க மிருங்கோ பிளாஸ்டி எனப்படும் எளிமையான மைக்ரோ அறுவை சிகிச்சை தேவைப்படும். செவிப்பறை ஓட்டையை மூட கன்னப் பொட்டெலும்புச் சதையின் இழைமம் பயன்படுத்தப்படும்.
பிறவியிலேயே காது கேட்காமல் போவதற்கு என்ன காரணம்? இதனை சரி செய்து மீண்டும் காதை கேட்க வைக்க இயலுமா?
பல காரணங்கள் இதற்கு உண்டு. அவற்றில் மிக முக்கியமானது- சொந்தத்தில் திருமணம் முடிப்பதாகும். மரபணுக் குறைபாடு காரணமாக பிறவி காதுகேளாமை ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் வேண்டாத மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதன் காரணமாகக்கூட இப்படி குழந்தை பிறக்கலாம். சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருக்கும். அந்த மாதிரியான குழந்தைகளுக்கு உடனடியாக சிறப்பு சிகிச்சை, பராமரிப்பு தேவைப்படும். இதை செய்யத் தவறினாலும் பிறவி காது கேளாமை நிகழலாம்.
பலர் காதிற்கும் பேச்சிற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறார்கள். உண்மையில் காது நன்றாக செயல்பாட்டில் இருந்தால்தான் சரியாக பேசவே முடியும். ஆக ஒரு குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லை எனில் காதினை கவனிக்க வேண்டும். பேச்சிற்கு என்று மூளையில் ஒரு இடம் உள்ளது. அந்த இடம் 4(அ)5 ஆண்டுகள் வரைக்கும் காலியாகாமலே இருக்கும். சில குழந்தைகளுக்கு மற்ற பகுதிகளால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். எனவே குழந்தை பிறந்த உடன் அழாமல் இருந்தால் அல்லது காது கேளாமல் இருந்தால் உடன் கவனிக்க வேண்டும்.
பிறவியில் காது கேளாமை இருக்கும் குழந்தைகளை ஒன்றரை வயதிலிருந்து மூன்று வயதிற்குள் கொண்டு வந்தால் அவர்களுக்கு இன்றைய நாளில் காது மருத்துவத்தில் புரட்சியாகவே வந்துள்ள காக்ளியர் இம்பிளாண்ட் என்கின்ற அதிநவீன சிகிச்சை மூலம் காதின் கேட்கும் திறனை முன்னேற்றமடையச் செய்யலாம். ஆனால் இந்த சரியான காலத்தை தவறவிட்டு குழந்தைகளை அழைத்து வந்தால் காக்ளியர் பொருத்தினாலும் கூட காதுதான் சரியாக கேட்கும் ஆனால் பேச்சு சரியாக வராமல் போய்விடலாம்.
இந்த காக்ளியர் இம்பிளாண்ட் ஆஸ்திரேலியாவிலிருந்து இன்றைய நாளில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால்தான் இந்த சிகிச்சை முறை அதிக செலவாகும் சிகிச்சை போல தோன்றுகிறது. ஏகப்பட்ட இறக்குமதி வரியினை செலுத்தித்தான் இதனை வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் கண்ணிற்காக வரவழைக்கப்படுகிற எந்த சாதனத்திற்கும் எந்த வரியும் கிடையாது. கண்ணிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல அரசாங்கம் காதிற்கும் மானியம் மற்றும் சலுகைகள் கொடுத்தால் அனைவரும் பயன் பெறலாம்.
இந்த காக்ளியர் இம்பிளாண்டை எல்லா மருத்துவமனைகளிலும் பொருத்திக் கொள்ள முடியாது. காரணம் அந்த மருத்துவமனைகளில் ஆடியோ விஷுவல் ரிஹாபிளிடேஷன் வசதிகள் இருக்க வேண்டும். சென்னையில் ஒரு சில மருத்துவமனைகளில்தான் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நன்றாக கேட்டுக் கொண்டிருந்த காது திடீர் என்று கேட்காமல் போவது எதனால்?
காதை சாவி, பேனா, பட்ஸ் போன்றவற்றை போட்டு குடைவது, காது குறும்பையை எடுக்கிறேன் என்று காதை புண்ணாக்கிக் கொள்வது, மேலும் வெளிக்காதில் மெழுகினாலும் அடைப்பும், கிருமி தொற்றும் காது கேளாமல் செய்யலாம். நடுக்காதில் குழந்தைகளுக்கு தண்ணிர் புகுந்து கொண்டாலும் காது கேட்காமல் இருக்கும். இன்னும் சிலருக்கு நடுக்காது பகுதியில் இருக்கிற Otosolerosisஎன்கின்ற குட்டி எலும்பு அதிராமல் இருக்கும். இதனாலும் காது கேட்காமலிருக்கும். உள் காதில் உள்ள நரம்பு தளர்ச்சியுற்று வயதானவர்களுக்கு காது கேட்காமல் போகலாம். வெளிக்காதில் மெழுகு இருந்தால் அதனை சுத்தம் செய்தால் போதும். அதுபோல நடுக்காதில் தண்ணிர் புகுந்திருந்தால் அதனை சுத்தம் செய்தாலும் காது கேட்கும்.
குட்டி எலும்பு அதிராமல் இருந்தால் அந்த எலும்பை எடுத்துவிட்டு செயற்கை எலும்பு பொருத்தி காதினை கேட்க வைக்கலாம். வயதானவர்களுக்கு உள்காது நரம்பு குறைபாடு காரணமாக காது கேட்காமைக்கு ஒரே தீர்வு காது மெஷ’ன் பொருத்திக் கொள்வதுதான். முன்பு பழைய முறையில் இருந்த ஹ’யரிங் எய்டி சாதனத்தில் வெளியிலிருந்து வருகின்ற எல்லா சத்தங்களும் அதிக அளவில் காதுக்குள் கேட்டு கொண்டிருக்கும். இது பல வயதானவர்களுக்கு பிடிக்காது ஆனால் இன்றைய நாளில் அதி நவீன வடிவமைப்பாக டிஜிட்டல் ஹ’யரிங் எய்டு வந்துள்ளது. கம்ப்யூட்டரின் துணையோடு எவ்வளவு கேட்கும் திறன் இவருக்கு தேவை என்பதறிந்து இந்த டிஜிட்டல் ஹ’யரிங் எய்டை பொருத்துவதால் மற்ற சாதாரணமானவர்கள் போலவே இவர்களும் செவி இன்பத்தை பெறலாம்.
காதில் உள்ள எலும்பு சிலருக்கு அதிகமாக இருக்குமா?
உடலில் ஸ்டேப்ஸ் எனப்படும் மிகச் சிறிய எலும்புகள் காதுகளில்தான் உள்ளன. இந்த எலும்பு மூலம்தான் வெளியிலிருந்து வரும் சப்தம் காதின் உட்பகுதிக்குச் செல்கிறது. அந்த எலும்புகள் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் சிக்கல் ஏற்படலாம். இப்பாதிப்பிற்கு ஓட்டோ செலரோஸ’ஸ் என்று பெயர். இந்த பிரச்சினை இளமைப்பருவத்தில் 20 வயதுக்குள் ஏற்படும். காதுகளை பாதிக்கும் இப்பிரச்சினை பரம்பரையாக குடும்பத்தினருக்கு தொடர்ந்து வரலாம். காது கேட்பது படிப்படியாகக் குறைவதை இவர்களால் உணர முடியும்.
இத்துடன் சிலருக்கு டின்னிட்டஸ் எனப்படும் தொடர்பற்ற இரைச்சல் சப்தங்களும் கேட்கும். இந்த நோயாளிகளுக்கு ஸ்டேபிடோடமி எனும் சிறு அறுவை சிகிச்சை தேவை. ஆடியோமெட்ரி மற்றும் இம்பெடான்ஸ் ஆடியோ மெட்ரி மூலம் ஸ்டேப்ஸ் எலும்பில் சிறிய ஓட்டை ஏற்படுத்தப்பட்டு, இதன் மூலம் அதிகப்படியாக வளர்ந்த எலும்பு நீக்கப்படும். இந்த ஓட்டையில் டெப்லான் பிஸ்டன் எனப்படும் மூடி வைத்து மூடப்படும். இதன் மூலம் சப்தம் உள் காதுகளுக்குச் செல்லும். இச்சிகிச்சை கேட்கும் திறனை உடனடியாக உயர்த்தும். அறுவை சிகிச்சை நடக்கும் மேஜையில் இருக்கும்போதே காது கேட்கும் திறன் உயர்வதை நோயாளி உணர முடியும். இந்த நோயாளிகளுக்கு காது கேட்க உதவும் கருவி பொருத்தினால் இக்கருவி ஓசையை பெருக்குமே தவிர, நோயைக் குணப்படுத்தாது.
காதில் ஏதாவது பாதிப்பு வந்தால் மக்கள் பலவிதமான உபாயங்களை செய்து கொள்கிறார்களே - இது சரிதானா?
சுயமருத்துவம் என்கின்ற பெயரில் காய்ச்சிய எண்ணெய் ஊற்றுவது, தண்ணிரை பீய்ச்சி அடிப்பது, சில பச்சிலைகளின் சாறினை பிழிவது, வெங்காயச் சாறினை ஊற்றுவது போன்ற வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்.
பட்ஸ் வேண்டாமே !! ப்ளீஸ் !!
அடுத்து இன்றைய நாளில் பலரிடம் 
'பட்ஸ்' உபயோகிக்கும் பழக்கம் 

உள்ளது. 'பட்ஸை' தடை செய்தால் கூட நல்லது.

அதிக சத்தத்தை வைத்துக் கொண்டு வாக்மேன் கேட்பது, அதிக ரேடியேஷன் உள்ள செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஜலதோஷம், தொண்டை பாதிப்பு வந்தால் உடனடியாக எச்சரிக்கையுடன் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் காதிற்கு வரும் கஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம்.
இன்னொரு முக்கிய ஆலோசனை: காதில் சேரும் அழுக்கினை (குறும்பை) வெளியே எடுக்கிறேன் என்று பலர் பலவிதமான குச்சி, சாவி, பேனா, பின் போன்றவற்றை வைத்து குடைகிறார்கள். உண்மையில் நமது காதினை இயற்கை அதி அற்புதமாக படைத்திருக்கிறது. காதில் சேரும் அழுக்கினை நாம் எடுக்கத்தான் வேண்டும் என்பதில்லை. அது தானாகவே வெளியேறும் விதத்தில் காதினை இயற்கை வடிவமைத்திருக்கிறது. எனவே காதினை யாரும் குடைய தேவையில்லை.
அடுத்து ஒரு செய்தி: போலி மருத்துவர்களிடம் காட்டி அரை குறையாக கேட்டுக் கொண்டிருந்த காதினையும் செவிடாக்கி கொள்ளாதீர்கள்.
Dr. சுந்தர்கிருஷ்ணன், MS, DLO.,, N. ஜவஹர் Ms.,FRCS. Dr. கே.கே. ராமலிங்கம். FRCS.DLO -