தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Thursday, 12 January 2012

அரசு


எனது பயணங்களின் போது காடுகள் மற்றும் சுற்றுபுறங்களில் நான் கண்ட மற்றும் கேள்விப்பட்ட ஒருசில மூலிகைகளை பற்றி உங்களுடன்
 பகிர்ந்து கொள்கிறேன்

அரசு


1. மூலிகையின் பெயர் -: அரசு.

2.    தாவரப் பெயர் -: FICUS RELIGIOSA.

3. தாவரக் குடும்பப் பெயர் -: MORACEAE.

4.    பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பட்டை, வேர், பழம் மற்றும் விதை முதலியன.


5.    வளரியல்பு -: அரசு பெரிய மரவகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா, பங்களாதேஸ், நேபால், பாக்கீஸ்தான், சைனாவின் தென்மேற்குப்பகுதி, வியட்னாவின் கிழக்குப்பகுதி மற்றும் இந்தோசைனா. இது சுமார் 90 அடிக்குமேல் வளரக்கூடியது. இந்த மரத்தின் அடிபாகம் சுற்றளவு சுமார் 9 அடி வரை பெருக்கும். இதன் ஆரம்ப ஆண்டு 288 பி.சி க்கு மேல் இருக்கும். இலைகள் நீழ் வட்டமாகவும் கூர்நுனியாக இருக்கும். ஊர் ஏரிகள், குளக்கரைகள்,  ஆற்றோரங்கள் ஆகிய இடங்களில் காணப்படும். இது ஜைனம், புத்த, இந்து மதங்கள் புனித மரமாகக் கருதிகிறார்கள். புத்தர் ஞானம் அடைந்தது இந்த மரத்தடியில் தான். கணவம், போதிமரம் என்றும் சொல்வர்கள். இந்த மரத்தின் காற்று தூய்மையான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அதனால் கல்பக விருட்ச்சமாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் தெய்வ சிலை வைத்து வழிபடுவதன் நோக்கம் அறியலாம். இதன் பூக்கள் சிறிதாகச் சிவப்பாக இருக்கும். பிப்ரவரிமாதங்களில் பூக்கும்.  மே, ஜூன் மாதங்களில் பழங்கள் விடும். பழங்கள் சிறிதாக இருக்கும் பறவைகளுக்கு நல்ல உணவு. விதைகள் சிறிதாக அதிகமாகத் தென்படும். பறவைகள் இதன் பழத்தைச் சாப்பிட்டு எச்சத்தை இடும் இடங்களில் செடிகள் உற்பத்தியாகும் முக்கியமாக கட்டிடங்களின் இடுக்குகளில் செடிகள் பெருகும். தெய்வ நம்பிகையுள்ளவர்கள் இந்த மரத்துடன் வேப்பமரத்தையும் சேர்த்து வளர்ப்பார்கள். பல கிராமங்களில் இந்த அரச மரத்தைச் சுற்றி மேடையமைத்து ஊரில் உள்ள வயதானவர்கள் அரட்டையடித்துப் பொழுது போக்குவதும் அங்குதான். உதாரணம் கெம்பனூர் போன்று. இந்த மரத்தினடியில் இருந்து காற்றை அனுபவித்தால் இருதயநோய் வராது என்பது எந்த அளவுக்கு உண்மையென்று தெறியவில்லை. விதைகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.


6.    மருத்துவப்பயன்கள் -: அரச மரத்தின் இலைக் காற்று குளிர்ச்சியை உண்டாக்கி வெப்பத்தைப் போக்கி கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது.  ஆண்மை பெண்மையாக் காப்பாற்றும். வேர்பட்டை, மரப்பட்டை கிருமிகைளை அழித்து புண்ணாற்றும், பழவிதை குடல் புண்ணாற்றும், மலச்சிக்கலைப் போக்கும், தாது பெருக்கி விந்தினைக் கட்டும். பழம் ஆஸ்த்துமாவைக் கட்டுப்படுத்தும், வேர் அல்சரைக் குணப்படுத்தும், தோல்வியாதிகளைக் குணப்படுத்தும், இருதயத்தைக் குணமாக்கும்.

அரச மரத்துக் கொழுந்து இலையைக் கைப்பிடி எடுத்து அரைத்து, நெல்லிக்காயளவு எருமைத் தயிருடன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வர, தொண்டை வறட்சி, தாகம் நீங்கும். குரல் வளத்தைத் தரும். சீதபேதியைக் கட்டுப்படுத்தும்.

“அரசம் வேர் மேல் விரணமாற்றும். அவ்வித்து
வெருவரும் சுக்கில நோய் வீரட்டும்-குரல்வளை
தாகம் ஒழிக்கும், கொழுந்து தாது தரும். வெப்பகற்றும்,
வேக முத்தோடம் போக்குமென்” ----கும்பமுனி.

அரச மர வேரின் பொடி தொண்டைப் புண்ணை ஆற்றும். விதை சுக்கில குறைபாட்டை நீக்கி மலட்டை அகற்றி கருத்தரிக்க வைக்கும், கொழுந்து கசாயம் தொண்டைப் புண்ணை ஆற்றும்,  தாகம் தணிக்கும். கொழுந்து அரைத்துச் சாப்பிட நீர்த்துப் போன விந்து கெட்டியாகும், தாது ஊறும், உடல் வெப்பம் தணியும். வாத, பித்த, சிலேத்தும நோய்களைப் போக்கும்.

அரச தளிரை அரைத்துப் பூசினால் கால்வெடிப்பு குணமாகும். இதன் பாலைத் தடவினாலும் குணமாகும்.
அரசு மரப்பட்டையை உலர்த்தி எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர சொறி, சிரங்கு குணமாகும், பிற புண் ஆறும்.  இப்பொடியை சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைத்தால் தீங்கு செய்யும் நுண்ணுயிர்க் கிருமிகள் வீட்டில் தங்கா.

வேர் பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி பால் சர்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, தினவு, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

அரசு பட்டைத் தூள் 2 சிட்டிகை வெந்தீரில் கொதிக்க வைத்து ஆற விட்டு வடித்துக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

அரச மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்து சுத்தப்படுத்தி நன்கு காயவைத்துப் பொடியாகச் செய்து சூரணமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5-10 கிராம் இப்பொடியை நாளும் காலை மாலை பாலில் கலந்து சர்கரையும் சேர்த்து காப்பி போல 48-96 நாள் சாப்பிட வேண்டும். ஆண் விந்து கட்டும், ஊறும். ஆண்மை பெருகும். ஆண் மலடு நீங்கும்.

அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.
உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.

அரசு இலைக் கொழுந்து ஒரு பிடி எடுத்து மண் சட்டியில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காசாயமிட்டுச் சாப்பிடலாம். இலைக் கொழுந்தை அரைத்து நெல்லியளவு பாலில் கலந்து சாப்பிடலாம். 48 நாள் சாப்பிட பெண்மலடு நீங்கி கருத்தரிக்கும். புளி உணவைக் குறைக்க வேண்டும்.

அம்மான்பச்சரசி


எனது பயணங்களின் போது காடுகள் மற்றும் சுற்றுபுறங்களில் நான் கண்ட மற்றும் கேள்விப்பட்ட ஒருசில மூலிகைகளை பற்றி உங்களுடன்
 பகிர்ந்து கொள்கிறேன்

அம்மான்பச்சரசி



1) வேறுபெயர்கள் -: சித்திரப்பாலாடை.


2) தாவரப்பெயர் -: EUPHORBIA HIRTA.


3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.


4) வகைகள் -: பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி,சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி,வயம்மாள் பச்சரிசி.


5) வளரும் தன்மை -: ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். சிறு செடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடியஈட்டி வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.


6) பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை.


7) பயன்கள் -: அம்மான் பச்சரிசிக்கு எரிபுண், மல பந்தம், பிரமேகக்கசிவு, சரீரத்துடிப்பு, நமச்சல் ஆகியவை போகும்.


இந்த மூலிகையை சுமார் நெல்லிக்காய் பிரமாணம் நன்றாய் அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேழை மூன்றுநாட்கள் கொடுக்க அரத்த பிர்ழியம், மலபந்தம், நீர்கடுப்பு,தேகநமச்சல், ஆகியவை நீங்கும். இதன் பாலை நக சுற்றிக்குஅடிக்க குணமாகும்.


சிவப்பு அம்மான் பச்சரிசி

 மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.
இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 - 7 குன்றி எடை வீதம் மோரில் கொடுக்க குழந்தைகளுக்கு மலத்தை போக்கும், வயிற்று உபத்திரவத்தையும், கிருமிக் கூட்டத்தையும் ஒழிக்கும். இந்த இலையை அரைத்து சுமார் 1- 1.5 கழற்சிக்காய்ப் பிரமாணம் பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுக்க வேட்டை, வெள்ளை, மருந்துகளின் உஷ்ணம் ஆகியவைபோகும். அரைத்து ஊறலுடன் பரவுகின்ற படைகளுக்குப்பூச குணமாகும்.


இது வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம்குறைப்பானாகவும், செயற்படும்.
இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும்.


தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத்தாது உடல் பலப்படும்.
கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேழையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.


பூவுடன் 30 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் 
கொடுக்கத் தாய் பால்பெருகும்.

பாலைத் தடவி வர முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமச்சல் ஆகியவை தீரும்.

ஆகாயத்தாமரை


எனது பயணங்களின் போது காடுகள் மற்றும் சுற்றுபுறங்களில் நான் கண்ட மற்றும் கேள்விப்பட்ட ஒருசில மூலிகைகளை பற்றி உங்களுடன்
 பகிர்ந்து கொள்கிறேன்


ஆகாயத்தாமரை


1. மூலிகையின் பெயர் -: அந்தரத்தாமரை.
2. தாவரப் பெயர் -: PISTIA STRATEUTES.

3. தாவரக்குடும்பம் -: ARACEAE.

4. வேறு பெயர்கள் -: ஆகாயத்தாமரை. அந்தரத்தாமரை.

5. பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மட்டும்.
6.வளரியல்பு -: அந்தரத்தாரமரை நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடிகள். சுத்தமான தண்ணீரில் வளரக்கூடியது. இலைகள் நீளம் சுமார் 13 செ.மீ. இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் ஜோடியாக இருக்கும். இதற்கு காம்புகள் (ஸ்டெம்) கிடையாது. கூடை வடிவ இலை இழம்பச்சை நிறமாக இருக்கும். அதில் மொசுப்பான முடிகள் இருக்கும். இது முதன் முதலில் ஆப்பிரிக்காவில் ‘Lake Victoria’ என்ற ஏரியில் தோன்றியதாகச் சொல்வர். இது அமரிக்காவில் 1765 ம் ஆண்டில் ‘புளோரிடா’ என்ற இடத்தில் ஏரிகளில் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்வர். இதை ஆங்கிலத்தில் ‘Water Cabbage’ மற்றும் ‘Water Lettuce’ என்றும் கூறுவார்கள். இதன் வேர்கள் குஞ்சம் போல் இருக்கும். தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. பூக்கள் செடி நடுவில் மிகச் சிறிதாகத் தென்படும். இது இன விருத்திக்கு தாய் செடியுடன் சிறு குட்டிச் செடிகள் நூல் இழை போன்று தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும்.
7.மருத்துவப் பயன்கள் -: இது வெப்பு தணித்து தாகங் குறைக்
கும் மருந்தகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றை துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.
25 மி.லி. இலைச்சாற்றை சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் கொடுக்க மார்பிலும் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

அந்தரத்தாமரையிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல மூளை அகலும்.
இதன் இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி வகைக்கு 10 கிராம் போடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத்தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

அத்தி

மூலிகைகள் 

எனது பயணங்களின் போது காடுகள் மற்றும் சுற்றுபுறங்களில் நான் கண்ட மற்றும் கேள்விப்பட்ட ஒருசில மூலிகைகளை பற்றி உங்களுடன்
 பகிர்ந்து கொள்கிறேன் 

அத்தி 


1. மூலிகையின் பெயர் :- அத்தி.

2. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE.

3. தாவரக்குடும்பம் :- MORACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.

5. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு மரவகை. அத்தி கல்க மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது அதனால் இதை காணாமல் பூப் பூக்கும் கண்டு காய்காய்க்கும். என்ற விடுகதையிலும் சொல்வர். அடிமரத்திலும் மற்றும் கிழைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். துவர்ப்பும் இனிப்பும் உடைய இதன் பழம் குருதி விருத்திக்கு உறுதுணையாகும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள், பட்டையில், செரில்பெஸ்ரஹென்னேட், லுப்பியால், எ-அமிரின் மற்றும் 3 இதர கூட்டுப் பொருடகள், ஸ்டீரால் மற்றும் க்ளானால் பழத்திலும், பீட்டா சிஸ்ஸடீரால் இலைகளிலும் உண்டு. விதை மற்றும் பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.
அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.
அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.


அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.

அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.
அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.

Monday, 9 January 2012

பஸ் கட்டணம்

பஸ் கட்டணம் 
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டண விவரம் 

பின்வருமாறு:

சென்னை டூ திருச்சி :

சாதாரண பேருந்து முந்தைய கட்டணம் ரூ.105 கட்டண உயர்விற்கு பின் ரூ.195

அல்ட்ரா டீலக்ஸ் முந்தைய கட்டணம் ரூ.175 கட்டண உயர்விற்கு பின் ரூ.225

சென்னை டூ மதுரை :

எக்ஸ்பிரஸ் முந்தைய கட்டணம் ரூ.200 கட்டண உயர்விற்கு பின் ரூ.252

அல்ட்ரா டீலக்ஸ் முந்தைய கட்டணம் ரூ.248 கட்டண உயர்விற்கு பின் ரூ.315

சென்னை டூ ஈரோடு :

எக்ஸ்பிரஸ் முந்தைய கட்டணம் ரூ.131 கட்டண உயர்விற்கு பின் ரூ.233

அல்ட்ரா டீலக்ஸ் முந்தைய கட்டணம் ரூ.215 கட்டண உயர்விற்கு பின் ரூ.291

சென்னை டூ சேலம் :

சாதாரண பேருந்து முந்தைய கட்டணம் ரூ.115 கட்டண உயர்விற்கு பின் ரூ.196  

அல்ட்ரா டீலக்ஸ் முந்தைய கட்டணம் ரூ.185 கட்டண உயர்விற்கு பின் ரூ.240

சென்னை டூ நெல்லை :

கட்டண உயர்வு ரூ.440

சென்னை டூ கன்னியாகுமரி :

முந்தைய கட்டணம் ரூ.380 கட்டண உயர்விற்கு பின் ரூ.505

சென்னை டூ நாகப்பட்டினம் :

முந்தைய கட்டணம் ரூ.180 கட்டண உயர்விற்கு பின் ரூ.240

சென்னை டூ தூத்துக்குடி :

முந்தைய கட்டணம் ரூ.315 கட்டண உயர்விற்கு பின் ரூ.425

சென்னை டூ கும்பகோணம் :

முந்தைய கட்டணம் ரூ.180 கட்டண உயர்விற்கு பின் ரூ.225

சென்னை டூ தேனி :

முந்தைய கட்டணம் ரூ.270 கட்டண உயர்விற்கு பின் ரூ.355

சென்னை டூ செங்கோட்டை :

முந்தைய கட்டணம் ரூ.330 கட்டண உயர்விற்கு பின் ரூ.445

பஸ் பாஸ்

சென்னையில் பஸ் பாஸ் வைத்திருகீர்களா,......!!!

 அப்படினா இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உபயோகமா இருக்கும்

சென்னை : எந்தெந்த பாஸ் வைத்திருப்போர் எந்த பஸ்களில் பயணம் செய்யலாம் என்ற பட்டியலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. பஸ்களில் கட்டண உயர்வு காரணமாக, மாதாந்திர பயணச்சீட்டுகளை பயன்படுத்துவதில் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகம், மாதாந்திர பயணச்சீட்டுகள் வைத்திருப்போர் எந்தெந்த பஸ்களில் பயணம் செய்யலாம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படுகின்ற மாதாந்திர சலுகைக் கட்டண பயணச் சீட்டுகள், விருப்பம்போல் பயணம் செய்யும் பயணச்சீட்டுகள், இலவச மற்றும் 50 சதவீத மாணவர் சலுகை கட்டண பயணச்சீட்டுகள் வைத்துள்ளவர்கள் குறிப்பிட்ட சில பஸ்களில் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி, மாதாந்திர சலுகை கட்டண பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் (மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.600ல் இருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.)சாதாரண, விரைவு பஸ்களில் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல், விருப்பம்போல் பயணம் செய்யும் பயணச்சீட்டுகளில்,
(வாராந்திர பஸ் பாஸ் விலை ரூ.100ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.)வைத்திருப்போர் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பஸ்களில் மட்டும் பயணம் செய்யலாம்.

மேலும்  வாராந்திர பயணச் சீட்டு (^300) மற்றும் மாதாந்திர பயணச்சீட்டு (ரூ.1000) ஆகிய பாஸ் வைத்திருப்போர், சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பஸ்கள் மற்றும் இரவு நேர பஸ்களில் பயன்படுத்தலாம்

 ஒரு நாள் பயணச்சீட்டு (ரூ.50)(சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒரேயொரு முறை பாஸ் எடுத்து நாள் முழுவதும் (இரவு 10 மணி வரை) எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்வதற்கான டிக்கெட்டின் விலை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.)

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மட்டும் போய் வருவதற்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.140ல் இருந்து ரூ.240 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்ந்துள்ளது.

 . இலவச மாணவர் பயணச்சீட்டுகள், மாணவர்களுக்கான 50 சதவீத சலுகைக் கட்டண பயணச் சீட்டுகள் வைத்திருப்போர் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பஸ்களில் மட்டும் பயணம் செய்யலாம்.

Saturday, 7 January 2012

சேலம் மாவட்டம் பகுதி-3

                                               சேலம் மாவட்டம்
                                                          பகுதி-3


சேலத்தில் கிருஸ்தவ ஆலயங்கள் :


சேலத்தில் குழந்தை இயேசு பேராலயம் 4 ரோடு பகுதியில் அமைந்துள்ளது , சேலத்தில் உள்ள கிருஸ்தவ ஆலயங்களில் இதுவே பெரிய ஆலயம் ஆகும் .இது கதோலிக திருசபையால் நிர்வகிக்க படுகிறது .சேலம் மறைமாவட்டம் (இலத்தீன்: Salemen(sis)) என்பது சேலம் குழந்தை இயேசு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும்கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின்தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வருடாவருடம் ஜனவரி மாதத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படும் .



இது தவிர செவ்வாப்பேட்டையிலுள்ள புனித மரியன்னை ஆலயம்கத்தோலிக்கக் கிறித்தவர்களின் பழமைமிக்க ஆலயமாகும்.
இது கி.பி. 1858இல் தோற்றுவிக்கப்பட்டது. புனித
அந்தோணியார் ஆலயம், புனித பிரான்சிஸ் சவேரியார்
ஆலயம், புனித நெஞ்ச ஆலயம் ஆகியவை சேலம்
நகர்பகுதியிலுள்ள இதர கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயங்களாகும்.
C .S .I கிருஸ்தவ ஆலயங்கள் :
சேலம் நகரின் மத்தியில் கிறிஸ்து ஆலயம் உள்ளது.
இது தென்னிந்தியத் திருச்சபையினருக்குரியதாகும்.
கி.பி. 1875இல் இவ்வாலயம் தோற்றுவிக்கப்பட்டது.
கிறிஸ்து ஆலயத்திலிருந்து சிறிது தொலைவில் லெக்லர்
நினைவு ஆலயம் உள்ளது. இது கி.பி. 1856இல்
தோற்றுவிக்கப்பட்டது. இதுவும் தென்னிந்தியத்
திருச்சபையினருக்குரியதாகும்.
இஸ்லாமிய வ்ழிபாட்டு தளங்கள் :
சேலம் நகரில் பழமையான பள்ளிவாசல் கோட்டைப்
பகுதியில் உள்ளது. மணிமுத்தாற்றின் கரையில் உள்ள ஜீம்மா
மசூதி திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டது என்றும்,
இங்கு திப்பு சுல்தான் தொழுகைக்காக வருகை தந்துள்ளார்
என்றும் கூறப்படுகிறது. முகமதுபுரத்திலுள்ள பள்ளி வாசல்
ஜமால் மொகைதீன் என்ற வணிகரால் கட்டப்பட்டதாகும். மேலும் பள்ளப்பட்டி கோரிக்காடு ஈத்கா,சேலம் ஐந்து ரோடு மஸ்ஜிதே மஹபூபியா, கோட்டை மேலத்தெரு பள்ளிவாசல், லைன்மேடு பள்ளிவாசல் உட்பட சேலம் மாநகரில் நிறைய இஸ்லாமிய வழிபாட்டு தளங்கள் உள்ளன.