தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Tuesday, 2 October 2012

சு(பர )தேசி மன்னர்கள்



                                               சு(பர )தேசி மன்னர்கள் 

அக்கால இந்தியாவில்  மன்னர் அரசு அல்லது சமஸ்தானம் (Princely state) என்பது ஒரு நிருவாகப் பிரிவு. பெயரளவில் இறையாண்மை பெற்றிருந்த மன்னர் அரசுகள், காலனிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை. இவற்றில் ஒருவித மறைமுக ஆட்சியே நிலவியது. ஒரு இந்திய அரசர் பெயரளவில் இவற்றை ஆட்சி செய்தாலும், உண்மையில் நிருவாக மற்றும் கொள்கைக் கட்டுப்பாடு பிரித்தானிய அரசின் கைகளில் தான் இருந்தது. இவற்றின் இந்திய ஆட்சியாளர்கள் மகாராஜா, ராஜா, நிசாம், வாலி, தாக்குர் போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தனர்.

சுதேசி மன்னர்கள், தங்களது ராஜ்ஜியத்தின் வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு உள்ளாட்சியை மட்டுமே தமதாக்கி இருந்தனர்.

சுதேசி மன்னர்களில் காஷ்மீர், ஹைதராபாத் இரண்டும் பரப்பில் மிகப் பெரியவை. அடுத்தபடியாக மைசூர், பரோடா, குவாலியர், புதுக்கோட்டை ஆகிய நடுத்தர அளவிலான ராஜ்ஜியங்கள். சமஸ்தானம் ஒவ்வொன்றுக்கும் 'திவான்’ என்று சொல்லப்படும் ஒரு பிரதம மந்திரி இருந்தார். அவர் மகாராஜாவால் நியமிக்கப்பட்டாலும், வைஸ்ராயின் ஒப்புதல் பெற்ற பிறகே பொறுப்பு ஏற்க முடியும். அத்துடன், 'ரெஸிடென்ட்’ எனப்படும் பிரிட்டிஷ் பிரதிநிதியும் சமஸ்தானத்திலேயே இருந்து பிரிட்டிஷ்காரர்களின் நலன்களைக் கண்காணித்து வருவார்.

அந்த கால நம் சுதேச மன்னர்களில்  பெரும்பாலானோர்கள் !..?.ஏன் எல்லோருமேதான் அன்றய  சாணக்கிய ஜாம்பவான்களான பிரிட்டிஷ்  எஜமானர்களால் மிகவும்  நெருக்கப்பட்டு ...நசுக்கப்பட்டு ...நாராடிக்கப்பட்டு ..கசக்கப்பட்டு ...கந்தலாக்கப்பட்டு ....கேவலபடுத்த்ப்பட்டு ...கிண்டலடிக்கப்பட்டு ...துரத்தப்பட்டு ...லோல்படுத்தப்பட்டலும் கூட மரியாதை கெட்ட மாண்புமிகு மாமா மன்னர்களின் லொள்ளுக்கு மட்டும் கொஞ்சமும்குறைவிலாதவ்ர்களாகவே இருந்தார்கள் ...

 சுதேசி மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். விசித்திரமான மனநிலைகொண்டவர்கள். ஆடம்பரப் பிரியர்கள்.

இதோ அவ்ர்களின் லொல்லு  மற்றும் ஜொல்லு களில் சில சாம்பிள்கள்

 கபூர்தலா மன்னர் தன்னை 14-ம் லூயி மன்னரின் மறு பிறப்பு என்று நம்பினார். அதற்காக, தனது மாளிகையை வார்செலஸ் அரண்மனையைப் போலவே பிரெஞ்சுக் கட்டடக் கலை நிபுணர்களைக்கொண்டு வடிவமைத்தார்.

விட்டாரா அத்துடன் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு  கூடவே  , 'அனிடா டெல்கோடா’ என்ற ஸ்பானியப் பெண்ணை ஒரு நடன விருந்தில் சந்தித்து, கண்டதும் காதல்கொண்டு, அவளையே தனது மகாராணியாகவும் ஆக்கிக்கொண்டார்.

 மேலும்,தனது சாம்ராஜ்யத்தில் !? (அப்படி ஒன்று இருந்ததா..?) கல்லூரிகளே இல்லாத நிலையிலும் கூட   தனது அரச சபையின் மொழியாக பிரெஞ்சு பேசப்பட வேண்டும் என்று அறிவித்தார்.(நல்லவேளை பிரஞ்சு மக்களுக்கும் நான் தான்  அதிபதி என்று கூறிக்கொண்டு பாரிஸ் சிறைசாலைக்கு கம்பி எண்ண  போகாமல் இருந்தாரே பரவாயில்லை )

காசி ராஜா எங்கே சென்றாலும் பசுவின் முகத்தில்தான்..!!..?? காலையில் கண் விழிப்பது வழக்கம்.( மில்லியன் டாலர் கேள்வி..அக்கால வழக்கப்படி காசி பிராமனர்கள் பசுவின் பின்புறம் சாணம் வரும் பகுதிக்கு பூசை செய்வதுதானே  வழக்கம்...?? )  அதற்காக, அவர் போகுமிடம் எல்லாம் பசுக்களைக் கூடவே அழைத்துச் சென்றனர்.(அப்போதைய இந்திய வைஸ்ராய் இவரை எப்படி நடத்தி இருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா !!....மறுபடியும்  ....கேவலபடுத்த்ப்பட்டு ...கிண்டலடிக்கப்பட்டு ...துரத்தப்பட்டு ...போதுமடா சாமி !!)

 பாட்டியாலா அரசருக்கு சாப்பிடுவதுதான் ஒரு நாளின் முக்கிய வேலை. அவரது ஒரு வேளை உணவு நெய்யில் வறுத்த ஆறு கோழிகள். இரண்டு கிலோ ஆட்டு இறைச்சி. பாலில் செய்யப்பட்ட இனிப்புகள். காடை, கௌதாரி, புறா, மான், மிலா, மீன் என ரகம் ரகமாகப் பொறிக்கப்பட்டு உணவு மேஜையில் அடுக்கப்பட வேண்டும். அவரது எடை 300 பவுண்ட் (136 கிலோ).

இப்படி, ஆண்டு முழுவதும் சாப்பிட்டுவிட்டு உடம்பு இளைப்பதற்காக..?? ஒரு மாதம் வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே அருந்துவார். எடை குறைந்தவுடன் மீண்டும் உணவு வேட்டை தொடங்கிவிடும்.( கம்பேனி வழங்கும் மன்னர் மானியம் முழுவதையும் தின்றே தீர்த்திருப்பார் போல !..?) சரி சரி ..என்ன செய்வது ஆட்சியையும் இல்லை அதிகாரமும் இல்லை கூடவே மானமும் இல்லை மன்னர் பதவியாவது மிஞ்சட்டுமே.

 ராம்பூர் நவாப், கன்னிப் பெண்களாகத் தேடித்தேடி சுகித்து அவர்களின் மூக்குத்திகளை நினைவுச் சின்னமாக சேகரித்துக்கொள்வார்.(லட்சிய நோக்கம் கொண்டவர் ) அவரிடம் ஆயிரக்கணக்கான மூக்குத்திகள் இருந்தன.ஊருக்கு ஒரு மைனர் ..ச்ச ..மன்னிக்கவும் ..நாட்டிற்கு ஒரு மன்னர் இருந்தால் தானே மண்ணிற்கு பெருமை ...!..? வேலை வெட்டி இலாத வெத்துவேட்டு மன்னர் வேறு என்ன செய்வர் ..? பாவம் ...

 டோல்பூர் மன்னருக்கு, சீட்டு விளையாட்டுதான் உலகம்.(ஏதோ... காலம் தள்ள வேண்டுமே..எப்படியும் வாரிசுமுறை மன்னர் பதவி இல்லை என்றாகிவிட்டது ...எதாவது காரணம் காட்டி,..! டல்ஹௌசி  துரை பிடுங்கி விடுவார் ...இறக்கும் வரையாவது சீட்டு கட்டு ராஜாவாக இருந்து விட்டு போகட்டுமே ....)

 ராஜா பூபிந்தர் சிங், ரோல்ஸ் ராய் கார் பிரியர். இவரது ஆடம்பரக் கார்களின் முகப்பைத் தங்கத்தால் இழைத்து வடிவமைத்து இருந்தார். அத்துடன் இருக்கைகள், காரின் முகப்பு போன்றவற்றில் பதிப்பதற்கெனத் தனியான நகைகள், முத்து மாலைகள் செய்தார்.(கார் கலை வளர்த்த "கார்வேந்தன் "...!!? )

 இந்தியாவில் இருந்த சு(பர)தேசி மன்னர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய் கார்களை வைத்திருந்தனர். ஒவ்வொரு காரின் விலையும் பல லட்சங்கள்(அன்றைய மதிப்பில்)

கம்பனி ஆட்சியில் மாக்களாக இருக்கும் போதே இப்படி என்றால் .. அந்த காலத்தில் உண்மையான நம் மன்னர்கள் மக்களை என்னபாடு படுத்தி இருப்பர்கள் ...??(நெஞ்சு பொறுக்குதிலையே இந்த மானம் கெட்ட மன்னர்களை நினைத்து விட்டால்..! .. வாழ்க .!ஜனநாயகம் ...??)

இவை எல்லா வற்றையும்  தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு சு(பர)தேசி மன்னரின் நடவடிக்கை இருந்தது

. இப்படி, விசித்திர குணங்கள்கொண்ட மகாராஜாக்களில் ஒருவர்தான் குஜராத்தின் தென் மேற்குப் பகுதியில் இருந்த ஜுனாகத்தின் நவாப் மகபத் கான் ரசூல் கான்.

இவருக்கு நாய்கள் என்றால் உயிர்....(நாய் சேகர பூபதியோ ...?)

அவரிடம் 800 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தனி இடம், பராமரிப்பதற்குத் தனி ஆள், மன்னர் நினைத்த நேரம் நாயைக் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாயின் இருப்பிடத்துக்கும் ஒரு போன் இணைப்பு, அத்துடன் நாய்களுக்கான விசேஷ உடைகள், அலங்கார மணிகள், முத்து மாலைகள் ஆகியவை வைத்து இருந்தார்.

 ஏதாவது ஒரு நாய் இறந்துவிட்டால், அதன் நினைவாக சலவைக்கற்களால் மண்டபம் கட்டப்படும்.(தாஜ் மகாலுக்கு போட்டியாக நாய் மஹால்..!!?...அதுசரி..! கம்பனி கொடுக்கும் மானியத்தில் அவ்வளவு தான் முடியும். )

 நாய்களை நேசித்த அளவில் ஒரு பங்குகூட அவர் தனது ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை நேசிக்கவில்லை.(என்ன இது கேள்வி ...? மக்களா மானியமும் ,பட்டமும் கொடுக்கிறார்கள் ..?துரைமார்கள் அல்லவா படியளகிறார்கள் ..)

 அவரது படுக்கையில் அவரோடு தூங்குவதற்கு என்றே சில நாய்களை வைத்து இருந்தார். அவற்றைக் கட்டிக்கொண்டுதான் நவாப் தூங்குவார்.(அப்போ மகா ராணி ..?? யாரை ..?..... நமக்கேன் பெரிய இடத்து பொல்லாப்பு )

அவரது செல்ல மகள்..!? என்று அழைக்கப்பட்ட 'ரோஷனா ரா’ என்ற நாய்க்கு விமரிசையாகத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார் நவாப். அதற்காக, மணமகன் தேடும் பணி நடந்தது..

 மங்ரோல் சமஸ்தானத்தைச் சேர்ந்த 'பாபி’ என்ற ஆண் நாய் மணமகனாகத் தேர்வு செய்யப்பட்டது.அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. திருமண விழா மூன்று நாட்கள் நடந்தன. எல்லா சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

திருமணத்தின் தலைமை விருந்தினர் யார் தெரியுமா ? சொன்னால் ஆச்சரிய படுவீர்கள். !!........வங்காளத்தை இரண்டாக பிரித்தவர்..! .. 1898 முதல்  1911(இந்தியாவின் அப்போதைய தலைநகர் கொல்கத்தா )  வரை இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் ஆகஇருந்தவர்!  ..அதுதாங்க....நம்ப துரை. கர்சன் பிரபு  அவர்கள் ...!!

பொதுவாக இந்திய அரண்மனைகளில் நடக்கும் விழாக்களில் பங்கேற்பது என்பது ஐரோப்பியர்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு....

விழாக்களின் ஆடம்பரமும், பகட்டும்,  , பரிமாறப்படும் உணவு வகைகளும் ,ஊதாரித்தனமும், ..கூடவே  இந்திய பொதுமகளிரின் (நாகரீகமாகவே எழுத முயன்றுளோம் ) களி  நடனமும் வெள்ளையர்களுக்கு மிகவும் விருப்பமானது.

சரி விஷயத்திற்கு வருவோம் ...ஜுனாகத் சமஸ்தானத்திலிருந்து திருமண அழைப்பிதழ் வரப்பெற்றதும் மகிழ்வுடன் காணப்பட்ட கர்சன் துரை பின்னர் விசாரித்ததில் அது, இரண்டு நாய்களுக்கு நடக்கும் திருமணம் என்று  கேள்விப்பட்டு நொந்து போய்  தலையில் அடித்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு வரவில்லை...!

அப்படிமட்டும் இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் இந்த புகழ் பெற்ற திருமனத்திற்கு வந்திருப்பார் எனில் லண்டன் பாராளுமன்றம் கர்சனை கிழி கிழி என கிழித்திருக்கும் ...அந்த வரலாற்று சம்பவம் நடைபெறாதது கர்சனின் அதிர்ஷ்டமே...!!

  கோபமுற்ற நவாப்  இந்திய கவர்னர் ஜென்ரலின் திருமண புறக்கணிப்பு  தன்னை அவமதிக்கும் செயல் என்றுபகிரங்கமாக அறிவித்தார்....!?

 விளைவு ...!!??.. ஒரு மாதத்திற்குள்ளாகவே மன்னர் மானியம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.(அப்படி போடு அருவாள ..)

இது ஒருபுறம் இருக்க மேற்படி  திருமண நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.திருமண நாள் அன்று காலையில், மணமகளான 'ரோஷனா ரா’ பன்னீரில் குளிக்கவைக்கப்பட்டாள். பட்டு ஆடை, வைர மாலைகள், முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன.

 மணமகளை, வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். 250 நாய்கள்..மன்னிக்கவும் சுற்றமும் நட்பும் சூழ  அந்தப் பல்லக்குக்கு முன்னால் அணிவகுத்து வந்தன. அதன் முன்னால், ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியம் முழங்கி வந்தனர்.



மணமகன் 'பாபி’ ரயிலில் வந்து சேருவதால் ரயில் நிலைய வாசலில் அந்த நாயை எதிர்கொண்டு அழைக்க, அரண்மனையின் முக்கியப் பிரமுகர்கள் மாலையோடு காத்திருந்தனர். மணமகனுக்குப் பட்டாடை, மாலைகள் சூட்டப்பட்டு தங்கக் காப்பு அணிவிக்கப்பட்டது.

பிறகென்ன இனிதே திருமணம் நடைபெற்றது தம்பதியினர் குடியேற தனி மாளிகை இத்தியாதி இத்தியாதி ....

நாமும் இன்று வரை மன்னர் பெருமை பேசிக்கொண்டு முட்டாள்  தனத்திற்கு மூலம்  தேடிக்கொண்டிருக்கிறோம்....

இதை போலவே புறா திருமணம், குதிரை திருமணம்,மழை வேண்டி கழுதை திருமணம் (இன்றும் கூட)போன்ற அலங்கோலங்கள்  நம் நாகரீக..? நாட்டில் சு(பர)தேசி  மன்னர்களால் நடத்தப்பட்டது...

உண்மை என்னவென்றால் பிரிட்டிஷாரிடம் நாம் மிக அதிகமான விலை கொடுத்துதான் பாடம் கற்றுக்கொண்டோம் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை ..உங்கள் கருத்து வரவேற்கபடுகிறது ....




















No comments: