தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Wednesday, 24 October 2012

பிக்பாக்கெட் திருடிகள் எச்சரிக்கை

பிக்பாக்கெட் திருடிகள் எச்சரிக்கை 



சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் பயணித்த ஒரு வாலிபரின் முன்னும் பின்னும் நின்று கொண்டு அவரை உரசியபடி சில்மிஷம் செய்து அந்த நபரின் கவனத்தை கலைத்து, பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர் அரக்கோணம் சென்றிருந்தார். அங்கிருந்து மூர் மார்க்கெட் போவதற்காக மின்சார ரயிலில் பயணித்தார். பெட்டியில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த பயணியின் பின்னால் ஒரு பெண் நின்றிருந்தார். அதேபோல முன்னால் ஒரு பெண் நின்றிருந்தார். இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது போல நடித்து, கும்பகோணம் பயணியை உரசியபடி வந்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கமாக நெருக்கி உரசியதால் கும்பகோணத்துக்காரர் தடுமாறிப் போனார். இதைப் பயன்படுத்தி அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை ஒரு பெண் திருடிக் கொண்டார். இது தெரியாத கும்பகோணத்துக்காரர் மூர்மார்க்கெட் வந்து சேர்ந்தார். அங்கு இறங்கிய பிறகுதான் தனது பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் கூச்சல் போடவே, அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த பெண் போலீஸார் சந்தேகப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் கும்பகோணத்துக்காரரின் பர்ஸ் அவர்களிடம் இருந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அந்த இரு பெண்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதுபோல கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண் பயணிகளை உரசியபடி பயணம் செய்து அவர்களை திசை திருப்பி விட்டு விட்டு பர்ஸை சுடுவது இவர்களது தொழிலாம்.

நீதி: பஸ்சிலோ அல்லது ரயிலிலோ பெண்கள் உங்களை உரசுவது போல நின்றால், உணர்ச்சிவசப்படாமல்,ஹி ஹி ! சற்று கவனமாக இருப்பது நல்லது.

Saturday, 13 October 2012

வரலாற்று நாவல்கள்



வரலாற்று நாவல்கள் 

வரலாற்று நாவல்களை படிப்பது என்பது தற்போது வழக்கொழிந்ததாகவே போய்விட்டது ,அப்படிப்பட்ட நாவல்கள் தமிழில் தற்போது வருவதே இல்லை .மன்னர் கால திரைப்படங்களும் தற்போது தயாரிக்க படுவது இல்லை அப்படியும் ஏதோ ஓரிரு படங்கள் வந்தால் அது காமடி பீசாகவே அமைந்துவிடுகிறது உதரணத்திற்கு- 23ம் புலிகேசி -ஆயிரத்தில் ஒருவன் (கார்த்திக் நடித்தது )

இந்த நிலையில் கற்பனையும், கருத்தும், கவித்துவமும்,கதையோடு இணைந்த கலைநயமும் கொண்ட நாவல்கள் நம் தமிழகத்திலும் ஈழத்திலும்,சாண்டிலயன் ,கல்கி ,வினோதகன்,மு.வ ,  சி.என்.அண்ணாதுரை , எண்ணற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்டன .. 

அதிலும் கல்கியின் எழுத்து நடை, சாண்டில்யனின் காதல் சாறு என்று தேடித் படிப்பவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம், அவர்களின் புத்தகங்கள் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றது, இலவசமாக பதிவிறக்கம் செய்து நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம், அப்படிப் பட்ட இலவச இணையங்களை உங்களுக்கு அறிமுக படுத்துவதில் மிகவும் ஆனந்தம் அடைகிறேன் ..


படித்து பயன்பெறுக ..

Tuesday, 2 October 2012

மன்னருடன் ஒருநாள்




மன்னருடன் ஒருநாள் 
ராஜாதி ராஜா ராஜமார்த்தாண்ட ராஜகுல திலகராஜகம்பீர ராஜகுலோதுங்க நம் இந்திய மாண்புமிகு மாமன்னருடன் ஒருநாள் அவரின் அன்றாட நிகழ்ச்சியில் பங்குபெற உங்களை போல நானும் ஆவல் கொண்டு spl permision வாங்கி கூத்தடித்த கதை இதோ உங்களுக்காக ......
இதில்தான் நம் மாண்புமிகு மன்னர் ஜாலி மூடில் உக்கார்ந்து இருப்பார்

வரலாற்றில் நாம் படித்த மன்னர்களுக்கும், கதைகளில் வரும் மன்னர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மன்னர்களின் பெயர்கள், அரசாண்ட வருடங்கள், போரில் அடைந்த வெற்றிகள், அரசாட்சி யின் சாதனைகள், தோல்விகள் ஆகியவை மட்டுமே பாடப் புத்தகங்களில் இருக்கின்றன. ஓர் அரசன் எத்தனை மணிக்கு எழுந்துகொள்வார், என்ன சாப்பிட்டார், எந்த விதமான உடைகளை அணிந்தார், எப்படி நீதிபரிபாலனம் செய்தார், எவ்வாறு உத்தரவு பிறப்பித்தார், எந்த இசையை விரும்பிக் கேட்டார், எந்தப் பெண்ணைக் காதலித்தார், யார் அவரது குரு... என்று, மன்னர்களின் ராஜ வாழ்க்கை பற்றி பல நூறு கேள்விகள் சாமான்யர்களின் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. அதை எழுத்தாளனின் கற்பனைதான் பல நேரங்களில் பூர்த்தி செய்கிறது.அப்படி என்றால், மன்னர்களின் அன்றாட நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லையா? இந்த விஷயத்தில் மொகலாய மன்னர் கள் முன்னோடிகள். சக்கரவர்த்தி தூங்கி எழுந்ததில் இருந்து இரவு நடன விருந்து வரை அத்தனை முக்கிய நிகழ்வுகளையும் துல்லியமாக எழுதிவைத்து இருக்கிறார்கள்.

மன்னரானவர் அதிகாலை 3 மணிக்கு எழுந் துகொள்கிறார். அதுவும், அவராக எழுவது இல்லை. துயில் எழுப்புவது மன்னருக்குப் பிடித்த ராணி யின் வேலை. மன்னர் எந்தப் பெண்ணோடு எந்த அறையில் தூங்கினாலும், துயில் எழுப்பும் ராணிதான் தினமும் எழுப்ப வேண்டும். சூரியன் உதயமாவதற்குள், மக்களைச் சந்திக்க மன்னர் தயாராகிவிட வேண்டும் என்பது நடைமுறை.பன்னீரும் ரோஜாப்பூக்களும் பெர்ஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய வாசனைத் திரவியங்கள் கலந்த நீரில் குளித்துவிட்டு தயாராக வேண்டும்.


இந்தக் குளியல் கூடத்தில் 12 பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள், மன்னர் குளிப்பதற்கான தண்ணீரைத் தனியே முத்திரையிட்டுப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இளம் சூடான தண்ணீரில்தான் மன்னர் குளிப்பார். சூடு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்ய தனியாக ஒரு பணியாள் இருந்தார்.அதுபோல, மன்னரின் உடலுக்கு சந்தனம் மற்றும் வாசனைத் தைலங்களைத் தேய்த்துவிடுவதற்கு பணிப்பெண்கள் உண்டு. குளித்து முடிந்தவுடன் அவருக்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களில் எதை அவர் அணிந்துகொள்வது என்று தேர்வு செய்வார்கள். மன்னர் அந்த வஸ்திரத்தை அணிந்துகொண்டதும் சிறு பறை எழுப்பப்படும். அந்த ஓசை மன்னர் துயில் நீங்கி தனது நாளைத் துவக்கிவிட்டார் என்பதற்கான அறிவிப்பு.



அதன் பிறகு, அரண்மனை வைத்தியர் மன்ன ருக்கு நாடி பரிசோதனை செய்து, அவரது வயிற்று உபாதைகள், உஷ்ணம், நாக்கின் தன்மை, மூத்திர நிறம், மலத்தின் தன்மை, தோல் நிற மாற்றம், பாதங் களின் மிருது, சுவாச வேகம் போன்றவற்றை அறிந்து சொல்வார். மருத்துவரின் ஆலோசனைப்படி, என்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த பழரசத்தை விலக்கிவைக்க வேண்டும் என்பதை மன்னர் முடிவு செய்துகொள்வார்.இதற்குப் பிறகு, மன்னர் தனது குருவை, கடவுளை வணங்க வேண்டும். தினமும் அறவுரை வழங்க ஓர் ஞானி அரண்மனையில் இருப்பார். அவர் அன்றைக்கான ஞானவுரையை மன்னருக்கு சொல்வார். அதைப் பணிந்து கேட்டுக்கொள்ள வேண்டும். அது முடிந்தவுடன் மன்னருக்காக விசேஷமாக பூஜை செய்து கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் அர்ச்சகர்கள் காத்திருப்பார்கள். அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இந்தியர்கள் அதிகாலையில் சூரியனை வழிபடு கிறார்கள் என்பதால், சூரியனை வழிபடும் நேரத்தில் அரசன் தரிசனம் தருவது முக்கியமானது என்ற நடைமுறை, அக்பர் காலத்தில் இருந்து இருக்கிறது. அதனால், மன்னர் மக்களைச் சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட தனி மாடத்தில் நிற்பார். அதிகாலையிலேயே கூடி நிற்கும் மக்கள், மன்னரை வணங்கி வாழ்த்தொலி சொல்வார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் மன்னர், சூரியனை வணங்குவார்.


பின், மக்கள் குறை தீர்ப்பதற்கு திறந்தவெளி தர்பார் தொடங்கிவிடும். இது, ஒன்றரை மணி நேரம் நடக்கும். அந்த நேரத்தில், மக்கள் எளிதாக மன்னரை அணுகி தங்களின் பிரச்னைகளை முறையிடலாம். அங்கு கவனத்துக்குக் கொண்டுவரப்படும் பிரச்னைகள் முறையாக விசாரிக்கப்பட்டு நீதித் துறை எழுத்தர்கள் மூலம் குறிப்பு எடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

பெரும்பாலும், மன்னருக்கு காலை உணவு கிடையாது. பழங்களும் பழரசங்களும் மட்டுமே அளிக்கப்படும். மன்னருக்கான பழரசம் தயாரிக்கப்பட்டு தங்கக் குடுவைகளில் நிரப்பி அதை முத்திரையிடுவார்கள். அது என்ன பழச்சாறு என்ற பெயர் குடுவையில் பொறிக்கப்பட்டு இருக்கும். முத்திரையிடுவதற்கு என, சமையல் அறையில் தனிஅதிகாரி இருப்பார். அவரது முத்திரை பெற்ற குடுவையை, அரசனின் உணவுப்பிரிவு அதிகாரி ஒருவர் பார்வையிடுவார்.


சமையல் பணிகள் செய்பவர்களில் புதுஆட்களை வேலைக்குச் சேர்க்கவோ, சமையல் செய்பவர்கள் காரணம் இல்லாமல் விடுப்பு எடுக்கவோ அனுமதி இல்லை. இதற்குக் காரணம், அவர்கள் சதி செய்துவிடுவார்கள் என்பதே!

!மன்னர் அன்றாடம் அரசாங்க விலங்குகளைப் பார்வை​யிட வேண்டும். அதற்காக நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்​​ கை​கொண்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், பசுக்கள், கோவேறுக் கழுதைகள் ஆகியவை, மன்னர் முன்பு கொண்டுவந்து நிறுத்தப்படும்.




விலங்குகள் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பார்வையிட்டு, அதற்கேற்ப உரிய ஆலோசனைகள், சன்மானங்​களை மன்னர் வழங்குவார். மோசமான நிலையில் உள்ள விலங்குகளைப் பராமரிக்கும் காப்பாளருக்குச் சம்பளக் குறைப்பு செய்யப்படுவதும் உண்டு. தாக், தாஷிகா என்ற அடையாளக் குறியீடு செய்த குதிரைகளைப் பார்வையிடுவதும், புதிதாக விலங்குகள் வாங்கப்படுவது குறித்தும், அதன் விலை குறித்தும், மன்னர் ஆலோசனை வழங்குவார்





இதுபோலவே, படைக்கலன்களைப் பார்வையிடுதல், சித்திர வேலைப்பாடுகளைப் பார்வையிடல், உருவப் படம் வரைவது, மொழிபெயர்க்கப்பட்ட ஏடுகளை வாசித்து அறிவது, புதிதாக நெய்து கொண்டுவரப்பட்ட ஆடைகளைக் காண்பது, வைரம் வெட்டுபவர்கள், நுண்கலை விற்பன்னர்கள், கட்டடக் கலைஞர்கள், வரைபடம் தயாரிப்பவர்கள் போன்றவர்களுடன் ஆலோசனை செய்வது என, தினம் ஒன்று வீதம் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும்.



மன்னர் 30 விதமான வாள்களைப் பயன்படுத்துவார். ஒவ்வொரு வாளுக்கும் தனிப்பெயர் உண்டு. 8 குறுங்கத்திகள், 20 ஈட்டிகள், 86 அம்புகள் மன்னர் உபயோகத்துக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்​பட்டு இருந்தன. அதைத் தினமும் பரிசோதனை செய்துபார்ப்பது மன்னரின் வழக்கம். இந்த அலுவல்கள் முற்பகலில் நாலரை மணி நேரம் நடந்து இருக்கின்றன. அது முடிந்தவுடன், அரசர் அந்தப்புரத்துக்குச் சென்றுவிடுவார்

மதிய உணவுதான் அரசனின் பிரதான உணவு என்பதால், அதைத் தயாரிப்பதற்கு என, 30 சிறப்புச் சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை நிர்வகிக்க தலைமைச் சமையல்காரர் ஒருவர் இருந்தார். சமையலறைப் பணியாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் வேலையில் இருந்துள்ளனர்.


மிகச்சிறந்த அரிசி முதல் கடுகு வரை தனியாக ஒரு நிலத்தில் பயிரிடப்பட்டு, அவை சேமிப்புக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். கங்கை நதியில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு அதில்தான் சமையல் செய்து இருக்கிறார்கள். தானியத்தில் செய்யப்படும் உணவு வகைகள், காய்கறிகளைச் சமைப்பது, பல்வேறு விதமான அசைவ உணவு வகைகள், இனிப்புப் பண்டங்கள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு என, மதிய உணவில் 135 வகை உணவுகள் பரிமாறப்படும்.











தலைமைச் சமையல்​காரர் தினமும் உணவுப் பதிவேடு ஒன்றை எழுத வேண்டும். அதில், மன்னருக்கு இன்று என்ன உணவு தயாரிக்கப்பட்டது. அதைச் செய்தவர் யார் என்ற விவரங்கள் பதிவு செய்யப்படும்.தங்கம், வெள்ளி, செம்பு,வெண்கலப் பாத்திரங்கள் உணவுக் கலயங்களாகப் பயன்படுத்தப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக் கலயங்களில் சிவப்பு நிறத் துணி மூடி முத்திரை வைக்கப்பட்டு இருக்கும். வெண்கலம் மற்றும் சீனக் களிமண் கலயங்கள் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டு இருக்கும்.


விரத நாட்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாமிசம் விலக்கப்பட வேண்டும் என்பதால், அந்த நாட்கள் மட்டும் தனித்துக் குறிக்கப்பட்டு, அன்றைய சமையலில் எந்த அசைவ உணவும் இடம்பெறாது. மற்ற நாட்களில் ஆடு, மாடு, கோழி, வான்கோழி, மான், முயல், காடை, மீன்கள், நண்டு உள்ளிட்ட 16 வகை மாமிச உணவுகள் தயாரிக்கப்படும்.உணவு வேளையில், மன்னருக்கு முன் ஒவ்வோர் உணவும் விஷப் பரிசோதனை செய்யப்​பட்டு, பிறகே பரிமாறப்படும். அதுபோல, உணவு பரிமாறுகிறவன் தும்மிவிட்டால், அது அபசகுனமாகக் கருதப்படும்.





ஒன்றரை மணி நேரம் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மன்னர் வெற்றிலை போடுவார். அதற்காக, தங்கக் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கு, வாசனை பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும்.




.உணவு வேளைக்குப் பிறகு, மன்னர் அந்தப்புரம் செல்வார். அங்கே, ஓய்வுக்குப் பிறகு அரச மகளிரின் நிதி மற்றும் அலுவல் பிரச்னைகளை கேட்டு அவர்களுக்கான தீர்வுகளைச் சொல்வார்.




அதற்குப் பிறகு, யானைச் சண்டை, சிங்கம் அல்லது எருதுச் சண்டை, படை வீரர்களின் மற்போர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பார்த்து ரசிப்பார்.






பிற்பகலில் முழு தர்பார் தொடங்கும்.இந்தக் கூட்டத்தில், பணி நியமனம், ஊதிய உயர்வு, வழக்கு விசாரணை, அந்நிய நாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பது, படைப் பணிகளுக்காக வெளியூர் செல்லும் மாநில ஆளுநர்களுக்கு விடைகொடுத்து அனுப்புதல், வெளியூர் பணி முடிந்து வந்த ஆளுநர்களைச் சந்தித்து விவரம் அறிதல், படைப் பிரிவினருக்கான நிதி ஆலோசனை ஆகியவை நடக்கும்.வழக்கமாக இரண்டரை மணி நேரம் நடக்கும் இந்த தர்பார், சில நாட்களில் மாலை வரை நீண்டுவிடுவதும் உண்டு.



தர்பாரில் மன்னர் முன் நின்று பேசும் உரிமை எல்லாருக்கும் வழங்கப்படுவது இல்லை. அது தனிப்பட்ட சிலருக்கு அளிக்கப்படும் கௌரவம். மற்றவர்கள், அந்த உரிமை பெற்றவர்கள் வழியாகவே தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும். இதுபோல கடிதம் வாசிக்க வஸீர் நியமிக்கப்பட்டு இருப்பார். அரசாங்கச் செயலர்கள் மன்னர் அமர்ந்துள்ள மாடத்தின் அருகில் நின்று, தங்களது துறைகள் சார்ந்த குறிப்புகளைப் படிப்பார்கள். இதில், மான்சப்தார், பக்ஷி, ஸதர், மீர்சாமான், திவான் எனப் பல நிலைகளில் அதிகாரிகள் உண்டு.வருவாய், நிதி, நியமனம், ஊதியம் வழங்குதல், மானியம், துறை சார்ந்த மாற்றங்கள் என முந்தைய நாள் மன்னர் இட்ட கட்டளைகளின் சுருக்கத்தை, ஒவ்வொரு நாளும் செயலர்கள் தர்பாரில் வைப்பார்கள். அதில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். மன்னரின் முக்கியக் கவனம் பெற வேண்டிய விண்ணப்பங்களைத் தனியே விசாரித்து உடனடியாக அதற்கான ஆணைகளைப் பிறப்பிப்பது வழக்கம்.



அரசர் இட்ட கட்டளைகளை வாகுயநவிஸ் என்ற குறிப்பு எடுக்கும் அதிகாரி, தனது குறிப்பேட்டில் எழுதிக்கொள்வார். பிறகு, அது தொடர்பான அதிகாரிகளின் ஆய்வுக்கு உள்ளாகும். அதன் பிறகு அதன் திருத்தப்பட்ட வடிவம் அரசர் முன்பு கொண்டுவரப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அதன் பெயர் யாத்தாஷ்ட். அதாவது, குறிப்பாணை பல நிலைகளைக் கடந்து முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்று வரும். 

வெவ்வேறு பணிகளுக்காக மன்னரிடம் ஐந்து விதமான முத்திரைகள் இருந்தன. இதில் உஸீக் என்ற முத்திரை மோதிரம் மிக முக்கியமானது. இந்த வேலைகளை முடித்த பின், மன்னர் மீண்டும் அந்தப்புரத்துக்குச் சென்றுவிடுவார்.



அங்கே மாலைக் குளியல் நடக்கும். அது முடிந்தவுடன், அங்கே உள்ள தனி மண்டபத்தில் நீதிமான்கள் மற்றும் கவிஞர்கள், தத்துவ ஞானிகளுடன் இலக்கியம் மற்றும் ஞானமார்க்கம் குறித்து மன்னர் விவாதிப்பார். இந்த நேரத்தில், புதிதாக எழுதப்பட்ட கவிதைகளை வாசிக்கச் சொல்லி, மன்னர் கேட்பதும் உண்டு. சில சமயம், ஞானமரபில் உள்ள நூலின் பகுதிகள் குறித்து விவாதம் நடக்கும்.


வரலாற்று அறிஞர்களுடன் விவாதமும் நடந்து இருக்கிறது.அதன் பிறகு, பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட குஷால் கானாவுக்கு மன்னர் போய் விடுவார்.
அங்கே, தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட12 விளக்குகள் நறுமண எண்ணெயில் பிரகாசமாக எரியும். விளக்கு ஏற்றப்படும் நேரத்தில் இசைப்பதற்கு என, ஈரடிப் பாடல் ஒன்று உண்டு. இந்த இடத்துக்கு, அவசரமான அரசு வேலைகளை விவாதிக்க திவா​னும் பக்ஷியும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளைச் சொல்லும் முன், மண்டியிட்டு வணங்கியே தகவலைத் தெரிவிக்க வேண்டும்.


இந்தத் தனி அறையில் சில வேளைகளில் பாரசீகத் தூதுவர்கள், மற்றும் வெளிநாட்டவருக்கு நேர்காணல் தருவது நிகழும். பகலில் விசாரிக்க முடியாத முக்கிய அலுவல்கள், ரகசியச் சந்திப்புகள், பணப் பரிமாற்ற ஆணைகள் இங்கே விவாதிக்கப்படும். பொதுவாக இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்த அறையில் அரசர் இருப்பார்.பிறகு, அங்கே இருந்து கிளம்பி ஷாபுர்ஜ் எனப்படும் உட்புற மண்டபத்துக்கு மன்னர் செல்வார். அங்கேமன்னரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இளவரசர்கள் மன்னரைச் சந்தித்துப் பேசுவார்கள். 45 நிமிடங்கள் இந்த அறையில் இருந்துவிட்டு




அந்தப்புரத்துக்குச் சென்று இசை கேட்பதும், நடனத்தைப் பார்வையிடுவதும் வழக்கம். இதற்காக தேசத்தின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள், நடனக்காரிகள் அழைத்து வரப்படுவர். நிகழ்ச்சியின் முடிவில் அவர்களுக்குப் பரிசுகளைத் தந்து அனுப்புவார்.


இசை முடிந்ததும் பால், பழங்கள் மற்றும் இனிப்பு​களை மன்னர் உண்பார். இப்படித் தினமும் இசை நடன நிகழ்ச்சிகளுக்காக ஒன்றரை மணி நேரத்தைச் செலவிட்டு, பின்பு தனக்கு விருப்பமான ஒரு பெண்ணின் அறைக்கு மன்னர் சென்றுவிடுவார். அங்கே, திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு காம ரசம் சொட்டும் கதை சொல்பவர்கள் இருப்பார்கள். சிருங்காரப் பாடல்கள் இசைப்பவர்களும், கலவியின்பம் பற்றிய வேடிக்கைகளைச் சொல்லும் பெண்கள் இருப்பார்கள்.



.ஐந்து மணி முதல் ஆறு மணி நேரம்தான் மன்னரின் உறக்கம். யுத்த நாட்களில் இந்தத் துயில் மூன்று மணி நேரம் மட்டுமே. முறைப்படி தொழுகை செய்வது, நீதிமுறை சார்ந்த வழக்குகளை விசாரிக்க தனி நாள் ஒதுக்கி விசாரணை செய்வது, வெளிப்படையான நிர்வாக முறையைக் கடைப்பிடிப்பது, திருவிழாக்களில் கலந்துகொள்வது, வேட்டைக்குச் செல்வது, வீர விளையாட்டுகளில் ஈடுபடுவது, புலிகளைப் பழக்குவது, நுண்கலைகளைப் பயில்வது, சித்திர எழுத்துகள் எழுதுவது, நூதனப் பொறிகளைப் பரிசோதனை செய்வது என்று மொகலாய மன்னர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதாமல் இருந்தது.வருடத்தில் ஒரு மாதமோ அல்லது இரண்டு வாரங்களோ மன்னர் முழுமையான பட்டினி கிடப்பார். அதை லங்கன மாதம் என்கிறார்கள். அந்த மாதங்​களில் அவர் எலுமிச்சைச் சாற்றை அருந்திக்கொண்டு எளிமையான உடைகளை உடுத்திக்கொண்டு, இசை கேட்பது, கவிதை வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவார். சாமான்ய மனிதனைப் போல, கிடைப்பதைக் கொண்டுவாழும் நிம்மதியான வாழ்க்கையை, மன்னர்கள் ஒரு போதும் அனுபவிக்கவே இல்லை.

 ஒரு மன்னர் இந்தியாவின் சிறந்த ஆட்சியாளர் என்று பெயர் எடுப்பதற்கு மூன்று அம்சங்கள் முக்கியமானவை என்கிறார் வரலாற்று ஆசிரியர் இபின் ஹாசன். அவை... வலிமையான படை பலம், உறுதியான மைய அரசு, மக்களைத் தொல்லை செய்யாமல் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவி செய்வது ஆகியவை. இந்த மூன்றையும்கூட பல மன்னர்களால் சமாளித்துவிட முடிந்திருக்கிறது. ஆனால், அவர்களின் வாரிசுகள், சகோதரர்கள், மனைவிகளின் அதிகார ஆசையை, அதற்கான நயவஞ்சக சதித் திட்டங்களை அவர்களால் உணர முடியவில்லை. யுத்தக் களத்தில் கொல்லப்பட்டதைவிட படுக்கையில் கொல்லப்பட்ட மன்னர்கள் அதிகம் என்கிறது வரலாறு.
ராஜ வாழ்க்கை என்பது மிதமிஞ்சிய சந்தோஷமும், எதிர்பாராத நெருக்கடிகளும், தீர்க்க முடியாத மரண பயமும் கலந்தே இருந்தது. அது, பலிகொடுக்கப்படும் ஆட்டுக்கு விதவிதமான உணவுகளைத் தந்து குளிப்பாட்டி, நடமாட வைப்பது போன்றது. அந்த வகையில், மன்னரைவிடவும் சந்தோஷமான வாழ்க் கையை சாமான்ய மனிதன் அனுபவிக்கிறான் என்பதே என்றும் மாறாத நிஜம்.


ச்ச... ராஜவாழ்க்கை.... ராஜவாழ்க்கை தான் ..அனுபவிராஜா அனுபவி ..நீங்களும்தான்

சு(பர )தேசி மன்னர்கள்



                                               சு(பர )தேசி மன்னர்கள் 

அக்கால இந்தியாவில்  மன்னர் அரசு அல்லது சமஸ்தானம் (Princely state) என்பது ஒரு நிருவாகப் பிரிவு. பெயரளவில் இறையாண்மை பெற்றிருந்த மன்னர் அரசுகள், காலனிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை. இவற்றில் ஒருவித மறைமுக ஆட்சியே நிலவியது. ஒரு இந்திய அரசர் பெயரளவில் இவற்றை ஆட்சி செய்தாலும், உண்மையில் நிருவாக மற்றும் கொள்கைக் கட்டுப்பாடு பிரித்தானிய அரசின் கைகளில் தான் இருந்தது. இவற்றின் இந்திய ஆட்சியாளர்கள் மகாராஜா, ராஜா, நிசாம், வாலி, தாக்குர் போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தனர்.

சுதேசி மன்னர்கள், தங்களது ராஜ்ஜியத்தின் வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு உள்ளாட்சியை மட்டுமே தமதாக்கி இருந்தனர்.

சுதேசி மன்னர்களில் காஷ்மீர், ஹைதராபாத் இரண்டும் பரப்பில் மிகப் பெரியவை. அடுத்தபடியாக மைசூர், பரோடா, குவாலியர், புதுக்கோட்டை ஆகிய நடுத்தர அளவிலான ராஜ்ஜியங்கள். சமஸ்தானம் ஒவ்வொன்றுக்கும் 'திவான்’ என்று சொல்லப்படும் ஒரு பிரதம மந்திரி இருந்தார். அவர் மகாராஜாவால் நியமிக்கப்பட்டாலும், வைஸ்ராயின் ஒப்புதல் பெற்ற பிறகே பொறுப்பு ஏற்க முடியும். அத்துடன், 'ரெஸிடென்ட்’ எனப்படும் பிரிட்டிஷ் பிரதிநிதியும் சமஸ்தானத்திலேயே இருந்து பிரிட்டிஷ்காரர்களின் நலன்களைக் கண்காணித்து வருவார்.

அந்த கால நம் சுதேச மன்னர்களில்  பெரும்பாலானோர்கள் !..?.ஏன் எல்லோருமேதான் அன்றய  சாணக்கிய ஜாம்பவான்களான பிரிட்டிஷ்  எஜமானர்களால் மிகவும்  நெருக்கப்பட்டு ...நசுக்கப்பட்டு ...நாராடிக்கப்பட்டு ..கசக்கப்பட்டு ...கந்தலாக்கப்பட்டு ....கேவலபடுத்த்ப்பட்டு ...கிண்டலடிக்கப்பட்டு ...துரத்தப்பட்டு ...லோல்படுத்தப்பட்டலும் கூட மரியாதை கெட்ட மாண்புமிகு மாமா மன்னர்களின் லொள்ளுக்கு மட்டும் கொஞ்சமும்குறைவிலாதவ்ர்களாகவே இருந்தார்கள் ...

 சுதேசி மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். விசித்திரமான மனநிலைகொண்டவர்கள். ஆடம்பரப் பிரியர்கள்.

இதோ அவ்ர்களின் லொல்லு  மற்றும் ஜொல்லு களில் சில சாம்பிள்கள்

 கபூர்தலா மன்னர் தன்னை 14-ம் லூயி மன்னரின் மறு பிறப்பு என்று நம்பினார். அதற்காக, தனது மாளிகையை வார்செலஸ் அரண்மனையைப் போலவே பிரெஞ்சுக் கட்டடக் கலை நிபுணர்களைக்கொண்டு வடிவமைத்தார்.

விட்டாரா அத்துடன் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு  கூடவே  , 'அனிடா டெல்கோடா’ என்ற ஸ்பானியப் பெண்ணை ஒரு நடன விருந்தில் சந்தித்து, கண்டதும் காதல்கொண்டு, அவளையே தனது மகாராணியாகவும் ஆக்கிக்கொண்டார்.

 மேலும்,தனது சாம்ராஜ்யத்தில் !? (அப்படி ஒன்று இருந்ததா..?) கல்லூரிகளே இல்லாத நிலையிலும் கூட   தனது அரச சபையின் மொழியாக பிரெஞ்சு பேசப்பட வேண்டும் என்று அறிவித்தார்.(நல்லவேளை பிரஞ்சு மக்களுக்கும் நான் தான்  அதிபதி என்று கூறிக்கொண்டு பாரிஸ் சிறைசாலைக்கு கம்பி எண்ண  போகாமல் இருந்தாரே பரவாயில்லை )

காசி ராஜா எங்கே சென்றாலும் பசுவின் முகத்தில்தான்..!!..?? காலையில் கண் விழிப்பது வழக்கம்.( மில்லியன் டாலர் கேள்வி..அக்கால வழக்கப்படி காசி பிராமனர்கள் பசுவின் பின்புறம் சாணம் வரும் பகுதிக்கு பூசை செய்வதுதானே  வழக்கம்...?? )  அதற்காக, அவர் போகுமிடம் எல்லாம் பசுக்களைக் கூடவே அழைத்துச் சென்றனர்.(அப்போதைய இந்திய வைஸ்ராய் இவரை எப்படி நடத்தி இருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா !!....மறுபடியும்  ....கேவலபடுத்த்ப்பட்டு ...கிண்டலடிக்கப்பட்டு ...துரத்தப்பட்டு ...போதுமடா சாமி !!)

 பாட்டியாலா அரசருக்கு சாப்பிடுவதுதான் ஒரு நாளின் முக்கிய வேலை. அவரது ஒரு வேளை உணவு நெய்யில் வறுத்த ஆறு கோழிகள். இரண்டு கிலோ ஆட்டு இறைச்சி. பாலில் செய்யப்பட்ட இனிப்புகள். காடை, கௌதாரி, புறா, மான், மிலா, மீன் என ரகம் ரகமாகப் பொறிக்கப்பட்டு உணவு மேஜையில் அடுக்கப்பட வேண்டும். அவரது எடை 300 பவுண்ட் (136 கிலோ).

இப்படி, ஆண்டு முழுவதும் சாப்பிட்டுவிட்டு உடம்பு இளைப்பதற்காக..?? ஒரு மாதம் வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே அருந்துவார். எடை குறைந்தவுடன் மீண்டும் உணவு வேட்டை தொடங்கிவிடும்.( கம்பேனி வழங்கும் மன்னர் மானியம் முழுவதையும் தின்றே தீர்த்திருப்பார் போல !..?) சரி சரி ..என்ன செய்வது ஆட்சியையும் இல்லை அதிகாரமும் இல்லை கூடவே மானமும் இல்லை மன்னர் பதவியாவது மிஞ்சட்டுமே.

 ராம்பூர் நவாப், கன்னிப் பெண்களாகத் தேடித்தேடி சுகித்து அவர்களின் மூக்குத்திகளை நினைவுச் சின்னமாக சேகரித்துக்கொள்வார்.(லட்சிய நோக்கம் கொண்டவர் ) அவரிடம் ஆயிரக்கணக்கான மூக்குத்திகள் இருந்தன.ஊருக்கு ஒரு மைனர் ..ச்ச ..மன்னிக்கவும் ..நாட்டிற்கு ஒரு மன்னர் இருந்தால் தானே மண்ணிற்கு பெருமை ...!..? வேலை வெட்டி இலாத வெத்துவேட்டு மன்னர் வேறு என்ன செய்வர் ..? பாவம் ...

 டோல்பூர் மன்னருக்கு, சீட்டு விளையாட்டுதான் உலகம்.(ஏதோ... காலம் தள்ள வேண்டுமே..எப்படியும் வாரிசுமுறை மன்னர் பதவி இல்லை என்றாகிவிட்டது ...எதாவது காரணம் காட்டி,..! டல்ஹௌசி  துரை பிடுங்கி விடுவார் ...இறக்கும் வரையாவது சீட்டு கட்டு ராஜாவாக இருந்து விட்டு போகட்டுமே ....)

 ராஜா பூபிந்தர் சிங், ரோல்ஸ் ராய் கார் பிரியர். இவரது ஆடம்பரக் கார்களின் முகப்பைத் தங்கத்தால் இழைத்து வடிவமைத்து இருந்தார். அத்துடன் இருக்கைகள், காரின் முகப்பு போன்றவற்றில் பதிப்பதற்கெனத் தனியான நகைகள், முத்து மாலைகள் செய்தார்.(கார் கலை வளர்த்த "கார்வேந்தன் "...!!? )

 இந்தியாவில் இருந்த சு(பர)தேசி மன்னர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய் கார்களை வைத்திருந்தனர். ஒவ்வொரு காரின் விலையும் பல லட்சங்கள்(அன்றைய மதிப்பில்)

கம்பனி ஆட்சியில் மாக்களாக இருக்கும் போதே இப்படி என்றால் .. அந்த காலத்தில் உண்மையான நம் மன்னர்கள் மக்களை என்னபாடு படுத்தி இருப்பர்கள் ...??(நெஞ்சு பொறுக்குதிலையே இந்த மானம் கெட்ட மன்னர்களை நினைத்து விட்டால்..! .. வாழ்க .!ஜனநாயகம் ...??)

இவை எல்லா வற்றையும்  தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு சு(பர)தேசி மன்னரின் நடவடிக்கை இருந்தது

. இப்படி, விசித்திர குணங்கள்கொண்ட மகாராஜாக்களில் ஒருவர்தான் குஜராத்தின் தென் மேற்குப் பகுதியில் இருந்த ஜுனாகத்தின் நவாப் மகபத் கான் ரசூல் கான்.

இவருக்கு நாய்கள் என்றால் உயிர்....(நாய் சேகர பூபதியோ ...?)

அவரிடம் 800 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தனி இடம், பராமரிப்பதற்குத் தனி ஆள், மன்னர் நினைத்த நேரம் நாயைக் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாயின் இருப்பிடத்துக்கும் ஒரு போன் இணைப்பு, அத்துடன் நாய்களுக்கான விசேஷ உடைகள், அலங்கார மணிகள், முத்து மாலைகள் ஆகியவை வைத்து இருந்தார்.

 ஏதாவது ஒரு நாய் இறந்துவிட்டால், அதன் நினைவாக சலவைக்கற்களால் மண்டபம் கட்டப்படும்.(தாஜ் மகாலுக்கு போட்டியாக நாய் மஹால்..!!?...அதுசரி..! கம்பனி கொடுக்கும் மானியத்தில் அவ்வளவு தான் முடியும். )

 நாய்களை நேசித்த அளவில் ஒரு பங்குகூட அவர் தனது ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை நேசிக்கவில்லை.(என்ன இது கேள்வி ...? மக்களா மானியமும் ,பட்டமும் கொடுக்கிறார்கள் ..?துரைமார்கள் அல்லவா படியளகிறார்கள் ..)

 அவரது படுக்கையில் அவரோடு தூங்குவதற்கு என்றே சில நாய்களை வைத்து இருந்தார். அவற்றைக் கட்டிக்கொண்டுதான் நவாப் தூங்குவார்.(அப்போ மகா ராணி ..?? யாரை ..?..... நமக்கேன் பெரிய இடத்து பொல்லாப்பு )

அவரது செல்ல மகள்..!? என்று அழைக்கப்பட்ட 'ரோஷனா ரா’ என்ற நாய்க்கு விமரிசையாகத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார் நவாப். அதற்காக, மணமகன் தேடும் பணி நடந்தது..

 மங்ரோல் சமஸ்தானத்தைச் சேர்ந்த 'பாபி’ என்ற ஆண் நாய் மணமகனாகத் தேர்வு செய்யப்பட்டது.அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. திருமண விழா மூன்று நாட்கள் நடந்தன. எல்லா சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

திருமணத்தின் தலைமை விருந்தினர் யார் தெரியுமா ? சொன்னால் ஆச்சரிய படுவீர்கள். !!........வங்காளத்தை இரண்டாக பிரித்தவர்..! .. 1898 முதல்  1911(இந்தியாவின் அப்போதைய தலைநகர் கொல்கத்தா )  வரை இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் ஆகஇருந்தவர்!  ..அதுதாங்க....நம்ப துரை. கர்சன் பிரபு  அவர்கள் ...!!

பொதுவாக இந்திய அரண்மனைகளில் நடக்கும் விழாக்களில் பங்கேற்பது என்பது ஐரோப்பியர்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு....

விழாக்களின் ஆடம்பரமும், பகட்டும்,  , பரிமாறப்படும் உணவு வகைகளும் ,ஊதாரித்தனமும், ..கூடவே  இந்திய பொதுமகளிரின் (நாகரீகமாகவே எழுத முயன்றுளோம் ) களி  நடனமும் வெள்ளையர்களுக்கு மிகவும் விருப்பமானது.

சரி விஷயத்திற்கு வருவோம் ...ஜுனாகத் சமஸ்தானத்திலிருந்து திருமண அழைப்பிதழ் வரப்பெற்றதும் மகிழ்வுடன் காணப்பட்ட கர்சன் துரை பின்னர் விசாரித்ததில் அது, இரண்டு நாய்களுக்கு நடக்கும் திருமணம் என்று  கேள்விப்பட்டு நொந்து போய்  தலையில் அடித்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு வரவில்லை...!

அப்படிமட்டும் இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் இந்த புகழ் பெற்ற திருமனத்திற்கு வந்திருப்பார் எனில் லண்டன் பாராளுமன்றம் கர்சனை கிழி கிழி என கிழித்திருக்கும் ...அந்த வரலாற்று சம்பவம் நடைபெறாதது கர்சனின் அதிர்ஷ்டமே...!!

  கோபமுற்ற நவாப்  இந்திய கவர்னர் ஜென்ரலின் திருமண புறக்கணிப்பு  தன்னை அவமதிக்கும் செயல் என்றுபகிரங்கமாக அறிவித்தார்....!?

 விளைவு ...!!??.. ஒரு மாதத்திற்குள்ளாகவே மன்னர் மானியம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.(அப்படி போடு அருவாள ..)

இது ஒருபுறம் இருக்க மேற்படி  திருமண நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.திருமண நாள் அன்று காலையில், மணமகளான 'ரோஷனா ரா’ பன்னீரில் குளிக்கவைக்கப்பட்டாள். பட்டு ஆடை, வைர மாலைகள், முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன.

 மணமகளை, வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். 250 நாய்கள்..மன்னிக்கவும் சுற்றமும் நட்பும் சூழ  அந்தப் பல்லக்குக்கு முன்னால் அணிவகுத்து வந்தன. அதன் முன்னால், ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியம் முழங்கி வந்தனர்.



மணமகன் 'பாபி’ ரயிலில் வந்து சேருவதால் ரயில் நிலைய வாசலில் அந்த நாயை எதிர்கொண்டு அழைக்க, அரண்மனையின் முக்கியப் பிரமுகர்கள் மாலையோடு காத்திருந்தனர். மணமகனுக்குப் பட்டாடை, மாலைகள் சூட்டப்பட்டு தங்கக் காப்பு அணிவிக்கப்பட்டது.

பிறகென்ன இனிதே திருமணம் நடைபெற்றது தம்பதியினர் குடியேற தனி மாளிகை இத்தியாதி இத்தியாதி ....

நாமும் இன்று வரை மன்னர் பெருமை பேசிக்கொண்டு முட்டாள்  தனத்திற்கு மூலம்  தேடிக்கொண்டிருக்கிறோம்....

இதை போலவே புறா திருமணம், குதிரை திருமணம்,மழை வேண்டி கழுதை திருமணம் (இன்றும் கூட)போன்ற அலங்கோலங்கள்  நம் நாகரீக..? நாட்டில் சு(பர)தேசி  மன்னர்களால் நடத்தப்பட்டது...

உண்மை என்னவென்றால் பிரிட்டிஷாரிடம் நாம் மிக அதிகமான விலை கொடுத்துதான் பாடம் கற்றுக்கொண்டோம் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை ..உங்கள் கருத்து வரவேற்கபடுகிறது ....