தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday, 27 May 2012

பரளிக்காடு பகுதி -1



பரளிக்காடு பகுதி -1





ஆஹா.. அருமையான ஒரு சுற்றுலா தளம் நமது கோவையில் உள்ளது உங்களுக்கு தெரியுமா ..? அது தான் கோவை பரளிகாடு ..மிகவும் ரம்மியமான இயற்கையான eco -friendly ஸ்பாட் ... இவளவு பில்டப் தேவையானு நீங்க கேக்கறது எனக்கு புரியுது ..ஆனாலும் சத்தியமா இது உண்மைங்க.. 
வழக்கம் போல நம்ம... இடம்.... பொருள்... ஆவல்...


இடம் 


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பில்லூர் அணைப்பகுதியில் அடர்ந்த காட்டை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.,, அதில் ஒன்று தான் பரளிக்காடு ..

இது பில்லூர் டேமுக்கு கொஞ்சம் முன்னால் ஊட்டிமலைக்கு கொஞ்சம் பின்னால இருக்கிற சின்ன கிராமம். புத்தம்புதிய சுற்றுலா தளம். யாருக்கும் அதிகமாக தெரியாது என்பதே இதன் சிறப்பு. கூட்டம் மிக குறைவாகவே இருக்கிறது.


எப்படி போவது ...?

நாங்கள் கொஞ்சம் இயற்கை விரும்பிகள் ஆகவே ..இயற்கையை நன்றாக ரசிக்கும் பொருட்டு மோட்டார் பைக்கில் கிளம்பினோம் (எப்ப மழை வரும்னு தெரியாது அதுனால மறக்காம ரெயின் கோட் எடுத்துட்டு வந்துருங்க பைக் பயணத்துக்கு மட்டும் ..மற்றபடி காட்டுல மழை பெய்தால் கொஞ்சம் நனையுங்க பரவால  )
ஓகே  கோவையிலிருந்து துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் காரமடையை நோக்கி பயணித்தோம். கோவையிலிருந்து 35 கி.மீட்டர்கள் பயணித்து காரமடையை அடைந்தோம். காரமடையிலிருந்து பரளிக்காடு செல்ல புகழ்பெற்ற காரமடை கோயில் தாண்டி முதல் இடது பக்க சாலையில் பயணிக்க வேண்டும். புஜங்கனூர் என்னும் ஊரைத்தாண்டினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை இரண்டு பக்கமாக பிரிகிறது. ஒருபக்க சாலை தோலம்பாளையம் போகிறது இன்னொரு பக்கம் போனால்தான் பரளிக்காடு போக முடியும். தோலம்பாளையம் செல்லும் வழியில், தாயனுர் என்ற ஊரிலிருந்து வெள்ளியங்காடு செல்லும் ரோடு பிரிகிறது. அவ்வழியே சென்றால் வெள்ளியங்காடு ஊரை அடையலாம்.இதுதான் அடிவாரம்.  

அந்த சாலையில் ஒருகிலோ மீட்டருக்கு ஒரு வீடுதான் இருக்கிறது.

வழிமாறி போய்விட்டால் வழிகேட்க கூட ஈ காக்கா இல்லை. அதனால் கவனம் முக்கியம். போகும் வழியெங்கும் தோப்புகள், தூரத்தில் மலைகள், பசுமைகள்.. ஆஹா.. நம் தோழர்கள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி இயற்கையை ரசித்தபடி பயணித்தால் சாலை குறுக்கும் நெடுக்குமாக வளைந்து வளைந்து திரும்புகிறது. ஆச்சர்யம் சாலைகளில் ஒரு சின்ன குழி கூட கிடையாதென்பதுதான். வெள்ளியங்காடு என்னும் ஊர்தான் மலையடிவாரத்தில் இருக்கும் கடைசி கிராமம். டீ குடிப்பது, கட்டிங் அடிப்பது, திண்பன்டம் வாங்குவது என அனைத்தையும் அங்கேயே முடித்துக்கொள்வது நல்லது.
 


வெள்ளியங்காடு தாண்டி பயணித்தால் இருப்பக்கமும் கொஞ்சமாய் மரங்கள் வரவேற்க குண்டுங்குழியுமான சிறிய சாலை காட்டுக்குள் நுழைகிறது.



வெள்ளியாங்காட்டில் இருந்து ஒரு 8 கிலோமீட்டர் சென்றதும் வலப்பக்கம் பில்லூர் செல்லம் வழி 

 

அதில் நாமும் நுழைந்து வெளியே வந்தால் முதல் செக்போஸ்ட் வரவேற்கிறது. பரளிக்காடு போகிறோம், போட்டிங் புக் பண்ணிருக்கோம் என்பதை மட்டும் சொன்னாலே போதும் , ராஜமரியாதையோடு செக்போஸ்ட்டை திறந்துவிடுவார் அத்துவானக்காட்டில் தனிமையில் அமர்ந்திருக்கும் மீசைக்கார காவலர். உள்ளே நுழைந்தோம். நான்கு பக்கமும் மலைகள். நடுவே பாதை. ஆங்காங்கே வித்தியாசமான பறவைகள்.
 





10 ஹேர்பின் பெண்டுகளெங்கும் வண்டியை நிறுத்தி மலைகளை பார்த்தால் அச்சமும் மகிழ்ச்சியுமாக உணர முடிகிறது. அவ்வளவு ரம்மியமான இடம். காரில் சென்றால் இதையெல்லாம் பொறுமையாக நின்று ரசிக்க முடியுமா தெரியவில்லை. பைக்கில் போவதே சிறந்தது.


சில மலைகளையும், வளைவுகளையும் பொறுமையான வேகத்தில் கடந்து சென்றோம். செல்லும் வழியெங்கும் சின்ன சின்ன மலைகிராமங்கள். வாழைத்தோப்புகள். வாழைத்தோப்புகளுக்கு மத்தியிலே இருக்கிற மெகா சைஸ் மரங்களின் மேல் அழகான சிறிய குடில் அமைத்திருந்தனர். யானை விரட்டுவதற்காக இரவில் அங்கேயே அந்த தோப்பின் ஓனர் தங்குமிடமாம்.

யானைகளிடமிருந்து வாழைத்தோப்பினை காப்பதற்காக மின்வேலிகள் அமைத்துள்ளனர். அதில் மின்சாரம் பாயும்போது அடையாளம் தெரிய கம்பிகளில் ஒரு கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் டியுப்லைட் மாட்டியிருக்கின்றனர். லைட்டெரியும்போது தொட்டால் ஷாக்கு நிச்சயம். சுற்றுலா வரும் பயணிகள் அந்த டியூப் லைட்டை உடைத்துவிடுவதாக வருத்ததோடு கூறினார். மரக்குடிலில் ஏறிப்போய் பார்த்தோம். ரேடியோ லைட்டு இரவு படிக்க ஆனந்தவிகடன் குமுதம் என பல ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார். கரண்ட்டுக்கு சோலார் பேனல்கள் குடிலின் மேலேயே பொறுத்தப்பட்டிருக்கின்றன. இரவு அதிலேயே தங்கிவிட ஆசையாய் இருந்தது.

கொஞ்ச நேரம் குடிலுக்குள் அமர்ந்து சுற்றிப்பார்த்தால்.. நான்கு பக்கமும் பிரமாண்ட மலைகள், தூரத்தில் பறக்கும் பெயர்தெரியாத பறவைகள், வாழைத்தோப்பு என அழகு! மனசேயில்லாமல் குடிலிருந்து இறங்கினோம். காலை நேரமென்பதால் லேசான குளிருக்கு இதமாக ஒரு தம்மைப்போட்டுவிட்டு புறப்பட்டோம்.

இன்னும் கொஞ்சம் தொலைவு செல்ல செல்ல கிராமங்கள் குறைந்து அடர்த்தியான காடுகள் தெரிகின்றன. இங்கே மைனாக்களும்,நீளமான நீலமான தோகை கொண்ட பெரிய சைஸ் மயில்கள், பேன் பார்க்கும் குரங்குகள் என ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே சென்றோம்.

காட்டையும் விலங்கு பறவைகளையும் பார்த்து ரசித்தபடியே சென்றால் அத்திக்கடவு பாலம் வரவேற்கும். மிகவும் பழைய பாலம் போல (பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம்) அத்திக்கடவு ஆறு கோடைகாலத்திலும் சிகப்பு நிறத்தில் செம்மண் கலந்து ரத்த ஆறு போல ஓடிக்கொண்டிருந்தது.
 
 


அத்திக்கடவு பாலத்திலிருந்து சில கி.மீட்டர்கள் தூரத்தில் காத்திருக்கிறது இரண்டாவது செக்போஸ்ட். நாம் ஒருவாரம் முன்பு போனில் அழைத்து பேசிய வனக்காவலர் இங்கேதான் இருப்பார். அவரிடம் நம்மைப்பற்றிய விபரங்களை அளித்தால் ஒரு லெட்ஜரில் கையெழுத்து வாங்கிவிட்டு, பரளிக்காடு செல்லும் வழியை சொல்வார், வேலை வெட்டியில்லாமல் இருந்தால் அவரே நம்மோடு வந்து வழிகாட்டுவார். செக்போஸ்ட் தாண்டியதுமே காட்டாற்று பாலம் ஒன்றை தாண்டி செல்ல வேண்டும். காட்டாற்று பாலத்தில் சில பெரிய மரங்கள் அடித்துக்கொண்டு வந்து அவை பாறைகளுக்கு நடுவே சிக்கியிருந்ததை பார்த்தோம்.
 
அங்கிருந்து இரண்டாவது செக்போஸ்ட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் பரளிக்காடு கிராமத்திற்கு, செல்லும் வழியெல்லாம் லட்சக்கணக்கில் பட்டாம்பூச்சிகள். பைக் டயரில் ஏற்றி கொன்றுவிட அஞ்சி சில மீட்டர்கள் வண்டியை மெதுவாக தள்ளிக்கொண்டே செல்ல நேரிட்டது. சாலைகளை அடைத்துக்கொண்டு அவை பறப்பது அழகு.
 


எட்டாவது கிலோ மீட்டரில் கையில் சுக்கு காபியோடு வரவேற்கிறார் இன்னொரு வனக்காவலர்.
 
மிதமான குளிருக்கும், நீண்ட பயணத்துக்கும் சுக்கு காபியின் சுவை சுகமாக இருந்தது. வெல்கம் ட்ரிங்க் போல! ....
 

இது தான் பரளிகாடு.....வெல்கம் டு ஜங்கிள் ....

முக்கிய செய்தி ..

    சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறார்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றொன்று அத்திக்கடவு ஆற்றுக் குளியல்( பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.



    கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிமீ தொலைவில் இருக்கிறது.
    மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லூர் அணை வழியாக செல்ல வேண்டும்.

    பரிசல் சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.300

    15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.200

    10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.

    பரிசல் கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்து தான்.

    வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறார்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

    தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : வன அதிகாரி திரு. சீனிவாசன் : மற்றும் வன அதிகாரி திரு. திரு.ஆண்டவர் தொலைபேசி எண் : +91 9047051011 

    இவர்களிடம் தான் 10 நாட்களுக்கு முன்பாகவே (முடிந்தவரை சனிக்கிழமை அல்லது சண்டே-பயணம் போகும் படியான திட்டமிட்டு)-முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்

     
    பதிவு - முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி - அடிப்படையில்*
    The District Forest Office,
    Trichy Road
    COIMBATORE
    தொலைபேசி : 0 4 2 2 - 2 3 0 2 9 2

  • தகவல்களுக்கு : http://coimbatoreforests.com/baralikaduEco.htm

நாம் செலுத்தும் கட்டணத்தில் பரிசல் ஓட்டுபவர்களுக்கு 150 ரூபாயும் உணவிற்கு ஒருவருக்கு 100 ரூபாயும் தருகிறார்களாம். மீதம் உள்ள பணம் அந்த பகுதி மக்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்களாம். பரிசல் ஓட்டுபவர்கள் வார இறுதியில் இங்கும் மற்ற நாட்களில் வெளி வேலைக்கும் செல்கிறார்கள். உணவு கொடுத்த சுய உதவிக் குழுவினர் 2 ஆண்டுகளுக்கு முன் 10,000 முதலீட்டில் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் 100 ரூபாயில் ஒருவருக்கான உணவுக்கு 35 ரூபாய் எடுத்துக் கொண்டு மாத சம்பளமும் எடுத்துக் கொண்டு உபரியாக ரூபாய் 80,000 சேமிப்பில் வைத்திருக்கிறார்களாம். சபாஷ்.

இரவில் தங்க புதியதாக 2 குடில்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு குடிலுக்கு ரூ.2000 வாடகை. 5 பேர் வரை தங்கலாம். குளியலறை வசதியும் உண்டு. பெண்கள், குழந்தைகளுடன் தங்குவது பாதுக்காப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு என்கிறார்கள்.

1 comment:

RPS said...

பரளிக்காடு குறித்த விபரம் அருமை.
வெள்ளிங்கிரி (கோவை) குறித்த பதிவு இருந்தால்...தெரியப்படுத்துங்கள்!..
-பன்னீர்செல்வம்...