பாலமலை பகுதி-1
வணக்கம் நமது அடுத்த மலை பயணம் மேட்டுரை அடுத்த பாலமலை தான் ...
பா லமலைக்கு இரண்டு வழிகளில் செல்லலாம் ஒன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் வழியாக மற்றொன்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் 30கி.மீட்டர் வரையிலும் குருவரெட்டியூரில் இருந்து ஊமாரெட்டியூர் நெரிஞ்சிப்பேட்டை வழியாக சென்று மேட்டூர் வரை 30கி.மீட்டர் என பாலமலையின் எல்லைப்பகுதியாக அடந்த வனப்பகுதியாகவும், செல்லலாம் ...நெரிஞ்சிப்பேட்டை வழியாக செல்லும் போது கூடுதலாக குட்டி கேரளா என்று அழைக்கப்படும் அதுதாங்க நம்ம பாக்யராஜ் ன் பவுனு பவுனுதான் படம் எடுத்தாங்களே அந்த பகுதி தான் ..பார்த்துவிட்டு ..கொஞ்சம் சூடாக பிரெஷ் ஆத்து மீன் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் போட்டிங் போய்விட்டு ...பின்னர் பாலமலைக்கு தெம்பாக நடக்கலாம் ...
நாம் இரண்டு வழிகளிலும் சென்று விடு தன இந்த பதிவை உங்களுக்கு சமர்பிக்கிறேன் ...
முதலில் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்வழியாக நெரிஞ்சிப்பேட்டை லிருந்து செல்லும் வழியை பற்றி பார்போம் .........மன்னிக்கவும் செல்லுவோம் ..
இம் மலையில் சிதேஸ்வரர் மற்றும் கவ்வியபெருமாள் சன்னதிகள் உள்ளன ..
முதலில் பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில்..இயற்கையின் அழகில் நம்மை மயக்கும் ஓர் அற்புத மலைக்கோவிலாகும் .
மூலவர் :- ஸ்ரீ சித்தேஷ்வரர்
எப்படி போவது ..?
திருக்கோவிலுக்கு செல்லும் வழிகள் :
1. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் நெரிஞ்சிப்பேட்டையில் இறங்கி (15 கி.மீட்டர் ) செல்வது
2. மேட்டூரில் இருந்து அம்மாபேட்டையில் இறங்கி (20கி.மீட்டர்) அங்கிருந்து ஊமாரெட்டியூர் வந்து அங்கிருந்து மலைப்பாதையை அடைந்து செல்வது.
3.பாலமலையின் மறுபக்கமான மேட்டூரில் இருந்நு கொளத்தூர் கண்ணாமூச்சியை அடைந்து அங்கிருந்து மலையேறுவது.
இடம் .....பொருள்...... ஆவல்.....!!!??
இடம்
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூரில் இருந்து தொடங்கும்பாலமலை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்30கி.மீட்டர் வரையிலும் குருவரெட்டியூரில் இருந்து ஊமாரெட்டியூர்நெரிஞ்சிப்பேட்டை வழியாக சென்று மேட்டூர் வரை 30கி.மீட்டர்
என பாலமலையின் எல்லைப்பகுதியாக அடந்த வனப்பகுதியாகவும்,
மேற்குத்தொடர்ச்சி மலையின் தனித்து விடப்பட்ட7 மலைகள் அமைந்த தனிமலையாகவும்அமைந்துள்ளது.மலையின் சுற்றளவு சுமாராக 80கி.மீட்டர் இருக்கும் .
உயரம் சுமார் 4000அடி முதல் 5000 அடி இருக்கும் ,
பாலமலை சித்தேஸ்வர மலை சேலம்.ஈரோடுமாவட்ட எல்லையில்இருக்கின்ற ஒர் அழகிய மலையாகும்.பாலமலை யின் 7 வது மலையின் உச்சியில்ஸ்ரீ சித்தேஷ்வரர்க்கு அழகான திருக்கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.
திருக்கோவில் உட்பிரகாரத்தில் மூலராக சித்தேஸ்வரரும் உடன் ஸ்ரீவிஷ்ணுவும்,ஸ்ரீமாதேஷ்வரர் அமர்ந்து வரும் பக்தர்கள் துபர் தீர்க்கின்றனர். திருக்கோவில் பிரசாதமாக திருநீரும் அழகிய மலைப்பூக்களையும் தருகிறார்கள் .ஏழாவது மலையின் உச்சியில் சதுர வடிவில் திருக்கோவிலைதரிசனம் செய்ய பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாகபாதுகாப்பாக திருக்கோவில் அமைந்திருக்கிறது.
திருக்கோவில் ஒருநிலைக் கோபுரமாகவும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.ஸ்ரீ சித்தேஷ்வரர் எதிரே நந்தீஸ்வரர் சிலை அழகானது.ஸ்ரீசித்தேஸ்வரர் எதிரே உள்ள ஸ்ரீதிருக்கொடி அம்மன் ,தேள்சாமி, ஸ்ரீஆஞ்சநேயர் சிலை, சிறு நந்திகளின் சிலைகள்பக்தர்களால் வழங்கப்பெற்ற வேல்களும் அழகானதாகும்.
ஆவல்
திருக்கோவில் தோன்றிய வரலாறு :-
பழங்காலத்தில் உணவுக்காக கிழங்கு பறிக்க சென்ற மலைவாழ் மக்கள் தற்போது ஸ்ரீசித்தேஸ்வரர் அமைந்துள்ள இடத்தில் கடப்பாறையால் குத்தும்போதுஅங்கிருந்த சித்தேஷ்வரர் சுயம்பு மூர்த்தியின்சிறிய லிங்க வடிவத்தின் மேல் பட்டு பால் வந்ததாகவும் பதற்றப்பட்டு ,பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கேதற்போதுள்ள ஸ்ரீ சித்தேஷ்வரர் சிலை இருந்ததாகவும் அன்றிலிருந்துபாலமலைவாழ் மக்களால் விரும்பி வணங்கப்படும் தெய்வமாகஸ்ரீசித்தேஸ்வரர் உருவானதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.
பயணம் ...
எளிமையான பாதுகாப்பான வழியாக அடிவாரம் வரை பஸ் வசதி உடைய வழியான பவானி வட்டம் குருவரெட்டியூர்- 638504வழியைப்பற்றி பார்ப்போம் .
பவானியில் இருந்து 30கி.மீட்டர் தூரத்திலுள்ள குருவரெட்டியூர் என்ற ஊரில் இருந்து சுமார் 15 கி.மீட்டர் தூரத்தில் பாலமலை சித்தேஷ்வரமலை அமைந்துள்ளது.அந்தியூரில் இருந்து 25 கி.மீட்டர் பயணித்தாலும் குருவரெட்டியூரை அடையலாம்.
பவானி யில் இருந்து B10,B5,ஜெயகிருஷ்ணா பஸ்களில் வரலாம்.அந்தியூரிலிருந்து A5,மாதேஷ்வரா. பஸ்களில் குருவரெட்டியூரை அடைந்து மலைப்பாதையை அடையலாம். குருவரெட்டியூர் பாலமலை அடிவாரத்தில் இருந்து ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவிலை அடைய சுமார் 15 கி.மீட்டர் கரடு முரடான மலைப்பாதையில் நடந்து பயணிக்கவேண்டும்.
ஏழு மலைகள் அடங்கிய மலை தொகுதியான பாலமலையின் கடைசி முடிவில் ஸ்ரீசித்தேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .
முதல் மலையின் முடிவில் வெற்றிலைப்பாறை எனும் ஒய்வெடுக்கும் இடமும், இரண்டாவது மலை யில் தும்மம்பொதி என்ற மலைவாழ் மக்கள் வாழும் ஊரும் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும்போது டீக்கடைகள் அமைத்து வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் . மலையில் விளைந்த கொய்யா,விளாம்பழம் இங்கு கிடைக்கும்.
அடுத்ததாகாக நாம் வருவது பெரியகுளம் முக்கியமான இடமாகும் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து இங்குள்ள பெரிய குளத்தில் நீரில் குளித்தும் ,சுடுதண்ணீரில் குளிக்கும் இடமாகவும். மலைவாழ் மக்களின் கடைகளும்,கொய்யா, மாதுளை ,நெல்லி விற்பனைக்கடைகள் உள்ளன.
வறடிக்கல் :
பெரிய குளத்தில் உள்ள இந்த கல்லை தூக்கி போட்டால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும் என்கிறாகர்கள்.வீரமாக பல இளைஞர்கள் வறடிக்கல்கல்லை தூக்கிப்போட்டு விளையாடுகிறார்கள்.
தேரோடு வீதி :
அடுத்த மலையில் நாம் காண்பது பூசாரியூர், அடிமலை விநாயகர் கோவில்வீதி என அழைக்கப்படுகிறது. இங்கு விநாயகப்பெருமான் அழகிய உருவில் அமர்ந்துள்ளார் . கடைசி மலையின் துவக்கத்தில் உள்ள விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு அமரலாம்.சுற்றிலும் நீண்ட பெரிய மரங்கள்,நகப்பழ மரங்கள் என அடர்தியாக இருக்க 200மீட்டர் சுற்றளவில் பக்தர்களுக்காக இளைப்பாற நல்ல அமைதியான இடம். இதில் இருந்து ஒரு மலை செங்குத்தாக சென்றால் ஸ்ரீ சித்தேஷ்வரர் திருக்கோவிலை அடையலாம்.
திருக்கோவில் திறப்பது :
சனிக்கிழமை மட்டும் வார பூஜை
வருட பூஜையாக : புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் விஷேசமாக திறக்கப்படும். குருவரெட்டியூர் வழியாக பக்தர்கள் கூட்டம் புரட்டாசி 3,4வது வாரங்களில் அதிகளவில் இருக்கும்.லட்சக்கணக்காண பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்வார்கள்.
அடுத்து சித்திரை மாதத்தில் ஊமாரெட்டியூர் வழியாக பக்தர்கள் ஸ்ரீசித்தேஷ்வரரை தரிசிக்க செல்வபலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியன :
திருக்கோவில் வரும்பக்தர்கள் கம்பளி ,டார்ச்லைட், 3 வேளை உணவு ,தண்ணீர் அவசியம் கொண்டு வரவும். மலைப்பாதைக்கு பஸ்வசதி கிடையாது ஏழு மலைகளும் கரடுமுரடானவை. புரட்டாசி மாதம் தவிர மற்ற நாட்களில் சென்றால் நீங்கள் மட்டும் தான் தனியாக செல்லவேண்டி இருக்கும்.
புரட்டாசி மாதத்தில் ஏதேனும் ஓர் சனிக்கிழமை நாளில்
பாலமலை சித்தேஷ்வரரை வந்து வணங்கி விட்டு நலம் பெறுங்கள்.
பாலமலை பற்றிய விடியோ விற்கு கீழே உள்ள லிங்க் ஐ அழுத்தவும்
http://www.youtube.com/watch?v=xjAhpRZpTak
அடுத்த பதிவில் பாலமலை யின் மற்றொரு பகுதி ....
No comments:
Post a Comment