தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday, 20 May 2012

கோடை கால பயணம்- பகுதி 1

கோடை கால பயணம் -பகுதி 1

ஆலம்பறை கோட்டை 


 


கோடை  விடுமுறையின் போது குடும்பமாய் சின்ன ட்ரிப் அடித்தால் நன்றாக இருக்குமென உங்களுக்கு  தோன்றினால் உடனே கிளம்புங்கள் அலப்பறைக்கு !!!??....மன்னிக்கவும்   ஆலம்பறை கோட்டை க்கு .... என்னவோ அப்படித்தானே அழைக்க தோன்றியது.

 வழக்கம்போல் நண்பர்கள் மூவரும் மட்டும் கிளம்பினோம்...எங்கபோனாலும் ஒத்தைல போககூடதுன்னு சொலுவாங்க இல்ல அதனாலத்தான் ...உண்மையும் அது தான் ..இங்க எல்லாம் ஒத்தைல வரகூடாதுனு லோக்கல் மக்கள் சொல்லுறாங்க .....

 மகாபலிபுரம் பார்த்தாச்சு. எத்தனை தடவை தான் தூங்கிட்டிருக்கிற முதலையையே பார்க்கிறது. அப்பா கடப்பாக்கம் போய்ட்டு வாங்களேன்னு சொல்ல விடு ஜூட்.

இடம் ..பொருள் .. இருப்பிடம்  .....

இடம் 


கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரி செல்லும் வழியில் கடப்பாக்கம் என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலம்பறை கோட்டை.
 கோட்டைன்னவுடனே ரொம்ப பெருசா எதிர்பார்த்தீங்கன்னா என்னை மாதிரி ஏமாந்து தான் போவீங்க. நுழையும்போதே தென்படும் தமிழ்நாடு தொல்பொருள் துறையின் அறிவிப்பு பலகையை பார்க்கும்போதே கோட்டையின் பராமரிப்பு லட்சணம் தெரிந்துவிடுகிறது.

மேல படத்துல இருக்கிற மாதிரி அங்கங்க நீளமான சுவர்களே எஞ்சியிருக்கின்றன. என்ன கொடும சார் இது ...

பொருள் 


 அந்த இத்துப்போன பலகையில கோட்டையின் (ஆக்சுவலா அப்படி 
சொல்றதே ரொம்ப தப்பு. குட்டி சுவர்ன்னு வேணா சொல்லலாம்) வரலாறு போட்டிருந்தாங்க. கி.பி 1735 ஆம் ஆண்டு, நவாப் தோஸ்த் அலிகான் இந்த கோட்டையை ஆண்டு கொண்டிருந்தார்! கி.பி 1750 இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய ஃபிரெஞ்சு தளபதி ட்யூப்ளக்ஸுக்கு இந்த கோட்டையை அப்போதைய நவாப் சுபேதார் முசாஃபர்ஜங் பரிசளித்தார்! பின்னர் கி.பி. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் அதை சேதப்படுத்தினர். வெள்ளைக்காரன் விட்டுட்டுப் போன கொஞ்ச நஞ்ச சுவத்தையும் 2004 வருடம் வந்த சுனாமி வழிச்சிட்டு போயிடுச்சு.


தொல்பொருள் துறையின் கல்வெட்டு ...இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல ...

இருப்பிடம்  ..

மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் கடப்பாக்கம் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ.
போக்குவரத்து வசதி - சென்னையிலிருந்து ECR வழியாக பாண்டிச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் கடப்பாக்கத்தில் நிற்கும். அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக ஆலம்பறை செல்லலாம்.

குறைந்த செலவில் (போக்குவரத்து மற்றும் கொரிக்க தான் செலவு) நல்ல ஆட்டம் போடலாம். அதுவும் குழுவாக சென்றால் நல்ல ஜாலியாக இருக்கும். தனிமையில் செல்வதை தவிர்ப்பது நலம் (மீனவர்கள் சொன்னதுங்கோ.)

கோட்டை வளாகத்தில் நுழைய நேர்ந்த போது இருந்த எதிர்பார்ப்பு சற்றென வடிந்து விட்டது. நான்கைந்து குட்டி சுவர்கள் மட்டுமே காண கிடைத்தது. அதுவும் எந்தவித பராமரிப்பின்றி கிடந்தது.

அந்த கொடுமைய நீங்களும் பாருங்க சாமியோவ் 








இந்த இடிபாடிகளின் மேலேறி பார்க்கும்போது தெரியும் கடல். வாவ். சிம்ப்ளி சூப்பர். மொட்டை வெயிலையும் மீறி கடலின் அழகு கண்களுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.



இவ்ளோ இருந்தாலும் சுவாரிசியம் னு  ஒன்னு இருக்குங்க அது தான் கடல் பயணம் ...நீங்க சிட்டி ல போக முடியாத ஒன்னு ..

கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் கடலின் அழகை ரசித்து முடித்துவிட்டு உள்ளூர் மீனவர்கள் உடன்வர மோட்டார் படகில் பயணம் ஆரம்பம். ஆர்பரிக்கும் அலையை எதிர்த்து படகு போகும்போது வரும் ஃபீலிங் ரொம்பவே த்ரில்லிங்காய் இருந்தது. எங்கள் மூவரையும் சேர்த்து 7 பேர் இருந்தோம் படகில். ரொம்ப நன்றாகப் பேசினார்கள். எல்லாத்துக்குமே நகைச்சுவை தான். சோகத்தைக் கூட சிரிப்போடு தான் பகிர்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை முறை, தொழில் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

சுனாமி பற்றிய பேச்செடுத்தவுடன் அனைவருமே அமைதியாகிவிட்டார்கள். யாருக்கும் அந்நிகழ்வினைப் பற்றி பேசக்கூட விருப்பமில்லை. ஒரு ஐந்து நிமிட பயணத்திற்க்குப் பின் கரைக்கு திரும்ப யத்தனித்தவர்களை "இன்னும் கொஞ்சம் தூரம் போலாம்ணா" என்றேன். சிரித்துக்கொண்டே "கரை தெரியுற வரைக்கும் தான்மா உங்களுக்கெல்லாம் சேஃப்டி. கரை மறைஞ்சுதுன்னா தலை சுத்தலும் வாந்தியும் வரும்" என்றார். 




"பரவால்லணே. கஷ்டமா இருந்ததுன்னா உடனே திரும்பிடலாம்" என்றேன். அரை மனதோடு மிக மெதுவாகத் தான் படகை செலுத்தினார். கொஞ்சம் தூரம் தான் போயிருப்போம். பெரிய அலையை எதிர்த்து படகு போனபோது மேட்ரிக்ஸ் படத்துல அப்படியே அந்தரத்துல ஃபீரிஸாகி நிப்பாங்களே அந்த மாதிரி படகு ஏர்லயே இருந்த மாதிரி ஒரு உணர்வு. அலையைப் பார்த்தவுடனே குலதெய்வம் பேரு கூட மறந்துபோச்சு. இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல்.

 
.

இயல்பு நிலைக்குத் திரும்ப கொஞ்ச நேரம் பிடித்தது. பேஸ்தடித்திருந்த எங்கள் மூஞ்சிகளைப் பார்த்து "என்ன இன்னும் கொஞ்சம் தூரம் போலாமா?" என நக்கலாக கேட்டவரிடம் காலில் விழாத குறையாக கரைக்கு திருப்ப சொன்னேன். ரெண்டு நிமிஷத்துல செத்துப் போன தாத்தா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் வந்து வா வான்னு கூப்பிட்ட மாதிரியே இருந்தது. அங்கிருந்து கரையில் தெரிந்த கோட்டையை??!! கொஞ்சம் போட்டோ எடுத்துகிட்டு கரைக்கு வந்ததும் அவர்கள் குடுத்த இளநீர், நுங்கு எல்லாத்தையும் முழுங்கிட்டு தக்ஷின்சித்ரா நோக்கி பயணப்பட்டோம். தக்ஷின்சித்ராவில் அதிகம் நேரம் இருக்கமுடியவில்லை. அரை மணி நேரத்திலேயே கிளம்பியாச்சு

கொசுறு தகவல் 

கெளம்பிடங்கயா ......கெளம்பிடாங்கயா ...


ஒன்னுசே ந்துடங்கயா ....ஒன்னுசே ந்துடங்கயா ....


அபட்டி எங்கதான் போறாங்க இவங்க ...


வேற எங்க சோகத்த மறக்கத்தான் ....என்ன பண்ணுறது இந்த கோட்டய நினச்சா .வேற என்ன பண்ண முடியும் ... 


ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க .. சோகத்த மறக்க  சரியான இடம் தான் போங்க ..





No comments: