தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Thursday, 29 December 2011

சேலம் மாவட்டம் -பகுதி-2

சேலம் மாவட்டம் 
பகுதி-2 


சேலம் மாவட்டத்தில் நாயக்க தலைவர்களின்வீழ்ச்சியையடுத்து இந்நகர்ப்பகுதி மைசூர் மன்னரின் ஆட்சியில் வந்தது. மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டிருந்தது. கி.பி. 1768ஆம்
ஆண்டு கர்னல் உட் என்ற ஆங்கிலத் தளபதி ஹைதர்
அலியிடமிருந்து சேலத்தைக் கைப்பற்றினார்.
 திப்பு   சுல்தான் மசூதி


 பின் இதுஹைதரால் மீட்கப்பட்டது. ஹைதரின் மரணத்திற்குப்பின்
அவர் மகன் திப்புவின் ஆட்சியில் இப்பகுதி வந்தது. மூன்றாம்

மைசூர்ப் போரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி (1792)

ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானிடமிருந்து சேலம் மாவட்டத்தைப்
பெற்றனர்.
சேலம் நகரம்

  கந்தப்ப செட்டி என்பவர் சேலம் பகுதியின் முதல்

ஜமீன்தார் ஆவார். இவர் இறந்தபின் இவர் மனைவி

நயினம்மாளிடமிருந்து சேலம் ஜமீன்தாரி உரிமையைக்
கி.பி. 1836இல் பிரடரிக் பிஷர் பெற்றார்.
கி.பி. 1860-லிருந்து சேலம் மாவட்டத்தின் தலைநகராகச்
சேலம் விளங்கிற்று. 1866இல் சேலம் ஒரு நகராட்சி ஆயிற்று.
1966ஆம் வருடம் சேலம் மாவட்டம் சேலம், தர்மபுரி
என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. சேலம்
மாவட்டத்தின் தலைமையிடமாகச் சேலம் நகர் விளங்கிற்று.




சேலம் நகரின் பண்பாட்டுச் சின்னங்கள்

இந்துக் கோவில்கள்:



சேலம் நகரின் மத்தியில் சுகவனேஸ்வரர் கோவில்
உள்ளது. இது ஒரு பழமைமிக்க சிவ வழிபாட்டுத் தலம்
ஆகும். இக்கோவிலின் இறைவி சொர்ணாம்பிகை
எனப்படுகிறார். இக்கோவிலிலுள்ள நிருத்த மண்டபம்
சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது.
கல்யாண மண்டபம் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்த
டேவிஸ் என்பவரின் கொடையாகும். 1981, பிப்ரவரியில்
இக்கோவிலின் குட முழுக்கு விழா நடைபெற்றுள்ளது.

கோட்டை மாரியம்மன் கோவில் செந்திரராஜப் பெருமாள்
கோவில், வரதராஜப்பெருமாள் கோவில், தலைவெட்டி
முனியப்பன் கோவில் ஆகியவை இந்நகரிலுள்ள இதர
முக்கிய இந்துக் கோவில்கள் ஆகும்.

அம்மாபேட்டைக்குத் தெற்கிலுள்ள குமரகிரியில்
பழனியாண்டவர் கோவில் உள்ளது. சேலம் நகரிலிருந்து
8 கி.மீ. தொலைவிலுள்ள அயோத்தியா பட்டணத்தில்
கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இது ஒரு சிறந்த
வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். இலங்கை மன்னன்
இராவணனை வென்றபின், இராமர் அயோத்திக்குச் சென்ற
பொழுது இவ்வூரில் ஒரு நாள் தங்கினார் என்று கூறுவர்.

கோதண்டராமசுவாமி கோவிலின் கருவறையில்
ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, பரதர், சத்ருக்னர், சுக்ரீவர்,
விபீசணர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. 47 மீட்டர்
உயரமுள்ள கோபுரம் இக்கோவிலின் வாயிலில் அழகுடன்
காட்சியளிக்கிறது. மகாமண்டபத்திலுள்ள கற்றூண்கள்
வேலைப்பாடுமிக்கவை. மதுரை நாயக்க மன்னர் திருமலை
(1623-59) காலத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டதாகக்
கருதப்படுகிறது. குதிரை வீரர்களைத் தாங்கியுள்ள இம்
மண்டபத்தின் கற்றூண்கள் உயரம் குறைந்தவையாக இருப்பினும்,
சிறந்த சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.
இம்மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் இசைத் தூண்கள்
உள்ளன.

நாயக்கர் ஆட்சிக் காலத்தின் சிறந்த ஒரு சின்னமாகக் கோதண்டராமசுவாமி கோவில் விளங்குகிறது.

No comments: