தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Thursday, 29 December 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்-2012

*தமிழ்நாடு பயணர் சங்கத்தினரின் *


*!*இனிய புத்தாண்டு *!* 


*!*வாழ்த்துக்கள் *!*

*!*!*  2012  *!*!*
அன்புடன் உங்கள்
                                                                                  *!* ராம்கி *!*

சேலம் மாவட்டம் -பகுதி-2

சேலம் மாவட்டம் 
பகுதி-2 


சேலம் மாவட்டத்தில் நாயக்க தலைவர்களின்வீழ்ச்சியையடுத்து இந்நகர்ப்பகுதி மைசூர் மன்னரின் ஆட்சியில் வந்தது. மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டிருந்தது. கி.பி. 1768ஆம்
ஆண்டு கர்னல் உட் என்ற ஆங்கிலத் தளபதி ஹைதர்
அலியிடமிருந்து சேலத்தைக் கைப்பற்றினார்.
 திப்பு   சுல்தான் மசூதி


 பின் இதுஹைதரால் மீட்கப்பட்டது. ஹைதரின் மரணத்திற்குப்பின்
அவர் மகன் திப்புவின் ஆட்சியில் இப்பகுதி வந்தது. மூன்றாம்

மைசூர்ப் போரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி (1792)

ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானிடமிருந்து சேலம் மாவட்டத்தைப்
பெற்றனர்.
சேலம் நகரம்

  கந்தப்ப செட்டி என்பவர் சேலம் பகுதியின் முதல்

ஜமீன்தார் ஆவார். இவர் இறந்தபின் இவர் மனைவி

நயினம்மாளிடமிருந்து சேலம் ஜமீன்தாரி உரிமையைக்
கி.பி. 1836இல் பிரடரிக் பிஷர் பெற்றார்.
கி.பி. 1860-லிருந்து சேலம் மாவட்டத்தின் தலைநகராகச்
சேலம் விளங்கிற்று. 1866இல் சேலம் ஒரு நகராட்சி ஆயிற்று.
1966ஆம் வருடம் சேலம் மாவட்டம் சேலம், தர்மபுரி
என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. சேலம்
மாவட்டத்தின் தலைமையிடமாகச் சேலம் நகர் விளங்கிற்று.




சேலம் நகரின் பண்பாட்டுச் சின்னங்கள்

இந்துக் கோவில்கள்:



சேலம் நகரின் மத்தியில் சுகவனேஸ்வரர் கோவில்
உள்ளது. இது ஒரு பழமைமிக்க சிவ வழிபாட்டுத் தலம்
ஆகும். இக்கோவிலின் இறைவி சொர்ணாம்பிகை
எனப்படுகிறார். இக்கோவிலிலுள்ள நிருத்த மண்டபம்
சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது.
கல்யாண மண்டபம் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்த
டேவிஸ் என்பவரின் கொடையாகும். 1981, பிப்ரவரியில்
இக்கோவிலின் குட முழுக்கு விழா நடைபெற்றுள்ளது.

கோட்டை மாரியம்மன் கோவில் செந்திரராஜப் பெருமாள்
கோவில், வரதராஜப்பெருமாள் கோவில், தலைவெட்டி
முனியப்பன் கோவில் ஆகியவை இந்நகரிலுள்ள இதர
முக்கிய இந்துக் கோவில்கள் ஆகும்.

அம்மாபேட்டைக்குத் தெற்கிலுள்ள குமரகிரியில்
பழனியாண்டவர் கோவில் உள்ளது. சேலம் நகரிலிருந்து
8 கி.மீ. தொலைவிலுள்ள அயோத்தியா பட்டணத்தில்
கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இது ஒரு சிறந்த
வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். இலங்கை மன்னன்
இராவணனை வென்றபின், இராமர் அயோத்திக்குச் சென்ற
பொழுது இவ்வூரில் ஒரு நாள் தங்கினார் என்று கூறுவர்.

கோதண்டராமசுவாமி கோவிலின் கருவறையில்
ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, பரதர், சத்ருக்னர், சுக்ரீவர்,
விபீசணர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. 47 மீட்டர்
உயரமுள்ள கோபுரம் இக்கோவிலின் வாயிலில் அழகுடன்
காட்சியளிக்கிறது. மகாமண்டபத்திலுள்ள கற்றூண்கள்
வேலைப்பாடுமிக்கவை. மதுரை நாயக்க மன்னர் திருமலை
(1623-59) காலத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டதாகக்
கருதப்படுகிறது. குதிரை வீரர்களைத் தாங்கியுள்ள இம்
மண்டபத்தின் கற்றூண்கள் உயரம் குறைந்தவையாக இருப்பினும்,
சிறந்த சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.
இம்மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் இசைத் தூண்கள்
உள்ளன.

நாயக்கர் ஆட்சிக் காலத்தின் சிறந்த ஒரு சின்னமாகக் கோதண்டராமசுவாமி கோவில் விளங்குகிறது.

சேலம் மாவட்டம்-பகுதி -1

சேலம் மாவட்டம் 
பகுதி -1

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்றைய சேலம் நகர் பண்டைய கொங்கு நாட்டின் ஒரு
பகுதியாகும். சேரமன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த இப்பகுதி
 பின்னர் கங்கர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோர் ஆட்சியின்கீழ்
வந்தது. தஞ்சையில் ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்
காலத்தில் கொங்கு நாடு வெல்லப்பட்டு அதிராஜ மண்டலம்
என அழைக்கப்பட்டது. சோழர் காலக் கல்வெட்டுகளில்தான்
இவ்வூர் (சேலம் என்று) முதன்முதலில் சுட்டப்படுகின்றது.
இராஜராஜன் தனது ஆட்சிக்காலத்தில் இவ்வூரில் ஒரு புதிய
குடியிருப்பை ஏற்படுத்தி அதற்குத் தம் பெயரையே சூட்டினார்
என்று அறியப்படுகிறது. கோப்பரகேசரி, கோவிராச கேசரி
போன்ற பட்டப் பெயர்களைத் தாங்கிய சோழமன்னர்கள்
இப்பகுதியை ஆட்சிப் புரிந்துள்ளனர். பிற்காலப் பாண்டிய
மன்னர்களில், சடையவர்மன் சுந்தர பாண்டியன்,

வீரபாண்டியன் போன்ற மன்னர்கள் இப்பகுதியை

ஆண்டுள்ளனர். ஒய்சாளர்களின் ஆட்சியிலும் பின்
விஜயநகரமன்னர்கள்ஆட்சியிலும்இப்பகுதிவந்தது.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் இன்றைய சேலம் நகர்ப்பகுதி
மதுரை நாயக்க அரசின் ஆட்சிக்குட்பட்டது. திருமலை மன்னரின்
(கி.பி. 1623-59) பிரதிநிதியாகச் சலபதி நாயக்கர் என்பவர்
இப்பகுதியில் ஆட்சிபுரிந்தார். சலபதி நாயக்கர் மதுரை நாயக்க
அரசின் 72 பாளையக்காரர்களில் ஒருவர் ஆவார். எனவே,
பாளையக்காரரின் தலைமையிடமாக சேலம் விளங்கிற்று.
சலபதி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கிறித்தவ சமயப் பெரியாரான

இராபர்ட் டி-நொபிலி சேலம் வந்தார் (கி.பி. 1624). சென்னப்ப

நாயக்கர், சீல நாயக்கர் ஆகியோர் இப்பகுதியை ஆட்சிபுரிந்த

இதர நாயக்கத் தலைவர்கள் ஆவர். சேலம் அயோத்தியா
பட்டணத்திலுள்ள பெருமாள் கோவில் நாயக்கர் ஆட்சிக்
காலத்தின் சின்னமாக விளங்குகிறது. 
இதன் தொடர்ச்சி அடுத்த பதிப்பில் 

கஞ்சமலை பாகம் -4

கஞ்சமலை 
பாகம் -4 


இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.

கஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்ல ணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர் கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந் தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

அன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.
சித்திரை மாதப் பௌர்ணமி அன்றும் அதற்கு அடுத்த நாளும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சமையல் செய்து அன்னதானம் வழங்குகிறார்கள். வாழை இலைக்குப் பதில் பாக்கு மட்டை பயன்படுத்தப்படுகிறது.


சித்தேஸ்வர சுவாமி கோவிலுக்கு கிழக்கே ஒரு சிறிய மலை உள்ளது. இதனை தியான மலை என்கிறார்கள். இம்மலையின் மேல் ஏறுவதற்குப் பாதை இல்லை. கரடுமுரடான பகுதியில் சிரமப் பட்டு ஏறினால் சுமார் பதினைந்து நிமிடங்களில் மேலே போய்விடலாம். அங்கே சுமார் பத்தடிக்கு பத்தடி அளவில் சமதளம் உள்ளது. அதன் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதனை தியானப் பாறை என்பர். அந்தத் தியானப் பாறைக்கு எதிரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் சந்தன மகாலிங்க சுவாமி சிறிய திருவுருவில் எழுந்தருளியுள்ளார். அவரைச் சுற்றி சில தெய்வங் களும் உள்ளன. அருகில் தல மரமான சந்தன மரச்செடி உள்ளது.



ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அந்தத் தியானப் பாறையில் யாராவது ஒரு சித்தர் அமர்ந்து விடியும்வரை தியானம் செய்வது வழக்கமாம். புகை வடிவில் உருவில்லாத வெள்ளை நிற நிழல்போல் காட்சி தருவதை அந்த ஊர் மக்களும் பக்தர்களும் அடிவாரத்திலிருந்து தரிசித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. காலை ஆறு மணிக்கு மேல் அங்கு சென்று பார்த்தால், சித்தர் அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி எழும்பு வதையும் அந்தப் பாறை லேசாக அதிர்வது போலவும் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலை காலை ஏழு மணி வரை- அதாவது சூரிய ஒளி அந்தப் பாறைமீது விழும்வரை நீடிக்குமாம். இந்தத் தியானப் பாறை உள்ள மலைமீதிருந்து பார்த்தால் கஞ்சமலையின் முழுத்தோற்றத்தையும் தரிசிக்கலாம். இங்கும் மலைமேல் அன்னதானம் நடைபெறுகிறது.



இன்னொரு அதிசயமான செய்தியும் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள்.


அற்புதமான உயிர்காக்கும் மூலிகைகள்- குறிப்பாக காயகல்ப மூலிகைகள் நிறைந்த வியத்தகு செய்திகளைக் கொண்ட இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல.


இந்த மலைப்பகுதியில் கனிமங்கள் நிறைந்து காணப்படுவதால்தான், இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது

கஞ்சமலை பாகம் -3

கஞ்சமலை 
பாகம் -3 


கஞ்சமலை என்னும் இத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமியாகிய திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள்.

 சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர் எனவும் . சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி இக்கஞ்சமலையில் பொதிந்து , காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் இக்கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று நம்பபடுகிறது .
[Gal1]

சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்டசித்தேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ள
[Gal1]

இந்த மலைப்பகுதியின் சுற்றுபுறத்தில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.அவை பொதுவாக ஊற்றுகளாகவே காணபடுகின்றன.எககாலத்திலும் வற்றாத இவ் ஊற்றுகள் மிகுந்த தாதுவளம் ' கொண்டவை .

இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் நிறைய உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.

இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை 5 ரூபாய்க்கு வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.
[Gal1]

இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.

இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.

அதனை அடுத்த பதிவில் தருகிறேன் காத்திருங்கள் !

கஞ்சமலை -பாகம் -2

கஞ்சமலை 
பாகம் -2 

"

கஞ்சம்' என்றால் "தாமரை' எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் "கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு கஞ்சமலை என பெயர் வந்திருக்கலாம்.

சித்தர் வந்த கதை : காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.

""ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.

காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

""அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?'' என்றார்.
இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.

""குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, ""அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார்.

காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.

இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே "இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார்.

 மக்கள் அவரை "காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து "சித்தேஸ்வரர்" என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

Wednesday, 28 December 2011

கஞ்சமலை பாகம் -1



கஞ்சமலை 
பாகம் -1 

A video on Kanjamalai.ogv


கஞ்சமலை, இதன் அமைவிடம் இந்தியாவின் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சேலம் நகரில் இருந்து சுமார் 15 கி.மீ , தொலைவில் அமைந்துள்ளது .இங்கு அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது , சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 68 ஏ, 68 பி, 29 ஏ ஆகிய தடம் எண் கொண்ட பஸ்கள் கிளம்புகின்றன..


இக் கோவிலின் மூலவர்= அருள்மிகு சித்தேஸ்வரர் ஆவார் . இக் கோவில் தீர்த்தம் = காந்ததீர்த்த குளம் ஆகும் ,

இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் . இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன

.சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது இக் கோவிலின் தல சிறப்பம்சமாகும்..இக் கோவில் காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இக் கஞ்சமலையில் அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது.

இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.

மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர்.
[Gal1]ஞானசற்குரு பால முருகன்' 

நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.வியாதிகள் குணமாகவும், முகத்தில் உள்ள பரு நீங்கவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
நாரதர்

இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.


இக் கோவிலின் தலபெருமை மிகவும் விசேசமாகும் இந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள். சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி நோயாளிகளை பரிந்துரை செய்வதாக சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.

இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்."அமாவாசை கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம்.

 பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ., சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர். மேலும் காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.

அடுத்து வரும் பதிவுகளில் கஞ்சமலை பற்றி இன்னும் மேலதிக தகவல்களை அளிக்கிறேன்

Wednesday, 8 June 2011

Tamilnadu Trekking Club (TTC)

வணக்கம் , களபயணம் மேற்கொள்ளுவது என்பது மிகவும் சுவாரிசியமானது.   அதுவும் தற்போது  இத்தகைய பயணங்கள் அதாவது எகோ -  டுரிசம் என்னும் ஒரு புதிய பெயர் தாங்கி வலம்வந்து கொண்டு
இருக்கின்றன ,எப்படி இருப்பினும்
காடுகளின் ஊடாக நடந்து இயற்கையை ரசித்து கொன்டே அதனனை நிதானமாகவும் ஆற அனுபவித்தும் குறிப்பாக அவற்றினை நாசம் செய்யாமல் பயனம் செய்வது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .

   தமிழகத்தில் அதற்க்கான பாதுகாப்புமிகு ந்த நிறய இடங்கள் உள்ளன, அவற்றில் சிலவற்றின் ஊடாக நான் பயனித்துள்ளேன், அவை இன்பமயமானதும், சாகசம் நிறை ந்ததாகவும் மனதிற்கு மிகவும் அமைதி தருவதாகவும் இரு ந்தன, அவற்றில்தான் எத்துனை சிற்றாறுகள், ஓடைகள்,தடாகங்ககள்,சிற்றருவிகள்,கற்பனைக்கெட்டாத பெரும்பாறைகள்,
பாறைஇடைகுகைகள் உன்மையில் அவைகள் இயற்கையையின் ஏசிகள்,
இரசாயன கலப்படம் இல்லாத அவற்றின் உன்மையான இயல்பான சுவை கொன்ட இயற்கையாக விளை ந்த பல்வேறுவகையான காய்கள் மற்றும் கனிகள், aha aha enna suvai ! அவற்றின் அருகில் மரத்டியில் ஒரு பாறையில் படுத்து அமைதியாக கவனித்தால் நிறைய பறவைகள், அவற்றின் வித்தியசமான மனதிற்கினிய ஓசைகள், மற்றும் சிறு விலங்குகள் நாம் இருக்கும் இடத்தின் அருகில் தயங்கி நின்று பின் மருன்டு விரைவாக பாய் ந்தோடும் அழகை ரசிப்பதில்தான் எதுனை சுகம் மன அமைதி. இப்படியே இருந்து விடலாமா என தோன்றும்.ஆனால் கவணம் பெரிய மற்றும் ஆபத்தான விலங்குகளை பொருத்தமட்டில் நாம் பயணிக்கும் வனத்தில் பொதுவாக காணப்படும் விலங்குகள் விபரம் பற்றி முன்கூட்டியே தெரி ந்து வைத்திருக்கவேண்டும் உதாரணமாக முதுமலை என்றால் யானைகள் சரணாலயம், சதுரகிரி என்றால் சாம்பல் நிற அணில்கள், யானைகல் சரணாலயம் என்பது போன்று.

          விலங்குகலின் நிலைபாட்டினை அவை வழக்கமாக வலசை போகும் காலம் ,அவற்றின் பொதுவான இரை மற்றும் உணவின் இருப்பிடம், காலடித்தடம், அவற்றின் மலம் அதன் தன்மை, வானிலை மற்றும் நீர்னிலைகள், அது அமை ந்துள்ள இடம்,நீர்னிலைகளில் இருது நாம் இருக்கும் தொலைவு, நீர்னிலைக்கருகில் காணப்படும் காலடித்தடங்கள் ,அதன் அமைப்பு, விலங்குகளெழுப்பும் ஓசைகள் மற்றும் சுற்றுப்புற வெளிச்சம்
அருகில் அமை ந்துள்ள புதர்கள், அதன் அடர்த்தி மற்றும் அமைப்பு, மேலும் முறிக்கப்பட்டிருக்கும் மரகிளைகள் அவை விழு ந்திருக்கும் திசை அதன் பசுமைத்தன்மை மற்றும் மரங்களின் பட்டைகளில், காணப்படும் விலங்குகலின் ரோமங்கள், பிராண்டல்கள், மற்றும் சுற்றுபுற வாசனை
ஆகிய தன்மைகளை கொன்டு அவற்றின் இருப்பிடத்தை உத்தேசமாக கணித்து நாம்தான் அவற்றை விட்டு விலகி செல்லவென்டும்.எக்காரணம் கொண்டும் அவற்றின் அருகில் செல்லவோ, துன்புருத்தவோ முயற்சி செய்ய கூடாது. அவைகளை நம்மை விட்டு விலக்கவும் முயற்சிக்ககூடாது.

             தமிழகத்தில் இத்தகய எழில் கொண்ட எழுச்சிமிக்க பயண இடங்கள் பயணத்திற்க்கு தேவையனாவைகள் பற்றிய விபரங்கள் வேண்டுவோர் மற்றும் என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் ஈமெய்ல் செய்யவும், ramkeyindia@gmail.com