கொங்கப்பறையர்கள்
தொல்குடிகளாகிய
பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர்
பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத்தின் பூர்வகுடிகளில் ஒரு
இனமாவர்.
புராண வரலாறு:
முருகப்பெருமான்
சூரனை வென்ற பின்னர் அவரது தளபதியாக இருந்த வீரபாகு சிவபெருமானிடத்தில் இனி நான்
என்ன செய்வது என்று கேட்க, பல உயிர்களை போரினால் கொன்றுவிட்டாய், இனி
பூமிக்குச் சென்று இசையாலும், இழைகள் நெய்வதாலும் மக்களுக்கு
நன்மை செய் என்று கூறி அனுப்பினார். அந்த வீரபாகுவின் வம்சாவழியினரே பறையர்கள்
என்பது புராணச்செய்தி.
உரிமைகள்:
1.ஒரு ஊரின், விவசாய நிலங்களின்
காவல் உரிமைகள் பறையர்களை சார்ந்தது. குற்றங்களை புலன் விசாரணை செய்தலும்,
தீர்ப்புகள் நிறைவேற்றல், கிராம எல்லைகள் தோட்டங்களின்
எல்லைகள், வரி வசூலிப்பு, போர்
சமயங்களில் படைகளில் பங்கெடுப்பு போன்ற பணிகள்.
2. கோயில்களின் காவல், சுவாமி ஊர்வலம் செல்லும்போது பறையடித்து முன் செல்வது போன்றவை. காணியாச்சி கோயிலில் அந்த காநிக்குரிய குடிகள் அவரவர் கடமையை செய்தால்தான் அந்த தெய்வம் மகிழ்ச்சியுறும். உதாரணமாக அந்த காணி முறைகார ஆண்டி தான் பூஜை செய்ய வேண்டும், காணி வண்ணார் தான் பந்தம் பிடிக்க வேண்டும். காணி கவுண்டர் தான் முப்போடு குதிரை பிடிப்பதை செய்ய வேண்டும். அதுபோல, அந்த காணியின் உரிமைக்கற பறையர் வந்து மேளம் வாசித்தால் தான் தெய்வமே மனம் குளிரும். அதுபோலவே, பறையர்களுக்கும் அந்த உரிமை அவர்களின் காணியோடு உள்ள உரிமையை நிலை நிறுத்துகிறது. இன்று கோயில்களில் கேரளத்து செண்டை மேளம், பேன்ட் என்று கண்ட வாத்தியங்களை பாரம்பரியமோ, நம் காணி தெய்வமோ ஏற்றுக்கொள்ளாது.

3.குதிரைகள்
பராமரிப்பில் பறையர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். அண்ணமார் கதையிலும் பொன்னர் சங்கர் குதிரைகள்
சாம்புவனிடத்தில்தான் இருக்கும்.
4.அதேபோன்று
காவல் பணிக்கு பறையர்கள் உரியவர்கள்
ஆதலால் நாய்கள் வளர்ப்பிலும் திறமை
பெற்றவர்கள். நம் கொங்கதேச நாட்டு
நாயான பட்டிநாயை வெள்ளையன் பறை நாய் என்றே
பேர் வைத்தான். மேலும் பார்க்க,
https://en.wikipedia.org/wiki/Pariah_dog
5.ஒவ்வொரு
ஊரிலும் பறையர்களுக்கு நில உரிமைகளும் உண்டு.
தற்போதும் இதன் எச்சங்களாக கொங்க
கிராமங்களில் பறையன்காடு, தோட்டிகாடு, காவக்காடு, காவக்காரன் காடு போன்றவை இன்றும்
உள்ளது.
கலாசார
மரபுகள்: கொங்கதேச கலாசாரத்தின் பொதுவான கூறுகள்
இவர்களுக்கும் பொருந்தும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபும், கணவன்
இறந்தால் வெள்ளை புடவை உடுத்துவது, பெண்வீட்டில் தான்
கல்யாணம், எழுதிங்கள் போன்ற சீர்கள் உண்டு. இவர்களுக்கென்று
தனி வண்ணாரும், நாவிதர்களும் உண்டு. கற்பு நெறியில் உயர்ந்த
மகளிர்களை வீரமாத்தி எடுத்து வழிபடும் மரபு கொங்கப்பறையர்களுக்கும்
உண்டு. மாட்டிறைச்சி உண்பது வழக்கமெனினும், மாட்டை கொன்று உண்ண மாட்டார்கள்; மாறாக
இயற்கையாக இறக்கும் மாடுகளையே புசிப்பது வழக்கமாக இருந்தது.
இவையன்றி பறையர்களுக்கு
உரிய சில ஆதிமரபுகள் ஆங்காங்கே பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக கல்யாணம் ஆனதும்
மாப்பிள்ளைக்கு மச்சினன் மெட்டி அணிவிப்பது, பந்தல் முட்டும் வரை பானைகள் அடுக்கி
வைப்பது (பண்டமுட்டி பறையர்), பெண்ணின் தாய்க்கு பால் பணம்
கொடுப்பது போன்றவையாகும்.
கொங்கதேசத்தில்
பறையர்கள்:
1. அண்ணமார் வரலாற்றில், சோழன்தோட்டியிடம் தான் குன்னுடையா கவுண்டரின் தாய் தனது மகனுக்கு தனது அண்ணன் மகளை மணமுடிக்க வைக்க அறிவுறுத்துகிறார். சோழன்தோட்டியின் முயற்சியின் பலனாகத்தான் குன்னுடையாகவுண்டர் தாமரை நாச்சியாரை மணமுடிக்கிறார். குன்னுடையா கவுண்டருக்கு சோழன்தோட்டி வலதுகரமாக இருந்து வாழ்ந்த நம்பிக்கைக்குரியவர். தாமரை நாச்சியாரும் பிள்ளை வரம் வேண்டி சிதம்பரம் செல்கையில் தனக்கு மட்டுமின்றி, சோழன்தோட்டிக்கும் தனது குடிச்சாதிகள் அனைவருக்காகவும் சேர்த்து பிள்ளைவரம் பெறுகிறார். அதன் பலனாக குன்னுடையா கவுண்டருக்கு அண்ணமாரும், சோழன்தோட்டிக்கு சாம்புவனும் பிறக்கிறார்கள்.
2. குன்னுடையா கவுண்டரின் வாரிசுகளான பொன்னர் சங்கருக்கு, சோழன்தோட்டியின் மகனான சாம்புவன் உற்ற துணைவன். வீரமலை போர்க்களத்தில் சங்கர் மரணமெய்தவே, அதை காண பொறுக்காத வீரமலை சாம்புவன் துடிதுடித்துப்போய் தானும் உயிரை மாய்த்துக் கொள்கிறார். அக்காலத்தின் சமூக ஒற்றுமை அப்படி!. இன்றும் பொன்னர் சங்கரை வணங்கும் அனைத்து கொங்கு சமூக மக்களும் வீரமலை சாம்புவனை தொழுது செல்வார்கள்.

3. கொங்க
வெள்ளாள கவுண்டர்களில் முத்தூர் மணியன் கூட்டத்தார் காணியாச்சியில்
இருக்கும் குப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி
பெற்றவர். இவருக்கு பக்தர்கள் அதிகம். இந்த குப்பண்ண
சாமி என்பவர் கொங்கப் பறையராவார்.
முத்தூர் மணியன் கூட்டத்தில் முருகனின்
அவதாரமாக பிறந்த செல்லக்குமாரரால் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளப்
பட்டவர். இன்று கொங்கர்களால் கடவுளாக
வணங்கப்படுபவர். இவருக்கு முத்தூரைப் போல கொங்கதேசத்தின் பல
பகுதிகளிலும் கோயில் உண்டு. (உதாரணம்:
பூந்துறை சேமூர், துக்காச்சி, சேலம்
வீரபாண்டி காரூரம்மன் கோயில் போன்றவை)
4. கொங்கதேசம் தலைய நாடு கன்னிவாடியில் ஏற்பட்ட போரில் கன்ன கோத்திர காராளவம்ச கவுண்டர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் கொங்கப்பறையர்கள். ஐநூறு கன்னப்பறையர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, கொங்கவெள்ளாள பெண்ணின் சாதி மாறி கல்யாணம் செய்வதில்லை என்ற சபதத்திற்காகப் போராடினர். சத்தியம் தவறாத காராள வம்சத்தாரும் தாங்கள் கொடுத்த வாக்கின்படி அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுத்தனர்.
5. இதே தலைய நாட்டில் பட்டக்காரர் முத்துசாமிக் கவுண்டர் மக்களின் பாசத்தை சம்பாதித்தவர். தனது குடிமக்களை பெற்ற பிள்ளைகள் போல காத்தவர். அவர் மரணமடைந்தபோது அவரின் மூன்று மனைவிமார்களும் உடன்கட்டை ஏறினர். அப்போது எங்கள் பட்டாகாரரே போன பிறகு நாங்கள் மட்டும் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்களும் தீக்குளி இறங்கி உயிரை விட்டனர்! கொங்கப்பண்டாரம் நல்லராண்டி, கொங்கநாவிதர் நல்லான் மற்றும் கொங்கப்பறையர் காளிப்பறையன் போன்றோர் அடங்குவர். காளிப்பறையன் முத்துசாமிகவுண்டரின் முக்கிய தருணங்களில் உடனிருந்தவர். முத்துசாமி கவுண்டரை பாலகனாக தூக்கிவந்து பட்டமேற்க வைத்ததில் இவரின் பங்கும் மகத்தானது.
6. பழையகோட்டை மன்றாடியார், கொங்கதேசத்தில் குறும்பு செய்த வேட்டுவன் கொங்கராயனை வெல்ல விஜயநகர அரசின் ஆதரவோடு அங்கிருந்து ஐநூறு பறையர்களை அழைத்து வந்து குடியமர்த்துகிறார். அவர்களது படையோடு வேட்டுவனை வென்று வேட்டுவன் தலையை சீவுகிறார் மன்றாடியார். கொங்கராயனது மனைவியரையும் கண்ணியம் தவறாமல் அவர்களின் விருப்பம் போல அனுப்பி வைக்கிறார். இந்த போரில் பறையர்களின் வீரமும், பாரதவர்ஷத்தின் யுத்த தர்மத்தின்படி கண்ணியம் தவறாமையும் கவனிக்கத்தக்கது.
7. ஒருமுறை கொங்கதேசத்தில் தேர் ஒன்று ஓடாமல் நின்று போகவே, தெய்வவாக்கின் பிரகாரம் உயிர்ப்பலி கொடுக்க கொங்கப்பறையர் தன்னுயிரை தியாகமாக தர ஒப்புக்கொள்கிறார். அவருடைய குடும்பத்துக்கு நிலங்கள் மற்றும் பல சலுகைகளும் வழங்கப்படுகிறது. தெய்வசித்தியால் தேர் அவரது உயிரை வாங்காமல் இடறிச் சென்றுவிடுகிறது. ஆனாலும் சத்தியம் தவறாமல் தாங்கள் சொன்னவற்றை கொடுத்துவிட்டனர் காராள வம்ச கவுண்டர்கள்.
8. கொங்கதேசத்தில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றும் உரிமை பறையர்களுக்கு உண்டு. உதாரணமாக ஒரு கவுண்டர் தன் மனைவி இருக்க முறை தவறி நடந்தார் என்று நிரூபணமானால் அவரை எருக்கங்குச்சிகள் ஒரு கட்டு முரியும்வரை அடிப்பாராம் ஊர் தலையாரி.
9. பெரும்பாலான கருப்பனார், முனியப்பசாமிகள் என்று வணங்கப்படுவது தன்னலமற்று, கடமைதவறாது வாழ்ந்த பறையர்கள் தான். அதனால்தான் கனவில் போலிஸ் வந்தால் கருப்பனர்-முனியப்பன் வந்தார் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் போலிஸ் வேலை பறையர்களின் பாரம்பரிய தொழில்.

பிராமணர்களுக்கு நிகராக பறையர்களும் தங்கள் ஜாதி தூய்மையைக் கடைபிடித்தார்கள். அது எந்த அளவுக்கு என்பது கீழே உள்ள வரலாற்று ஆவணக் குறிப்பே சொல்லும். ஒரு பிராமணர் குடியிருப்பில் பறையரை நுழைய விடமாட்டார்கள் என்பதுதான் நாம் அனைவருக்கும் கற்பிக்கப்பட்டது; ஆனால் நம்மில் பெரும்பான்மையோர் அறியாதது, ஒரு பிராமணர் பறையர் குடியிருப்பு பகுதியில் நுழைய அனுமதியில்லை என்பதே. அப்படி நுழைந்தால் அவரை பறையர்கள் சாணியால் வரவேற்பார்கள் (அதாவது மாட்டுச்சாணியை வீசுவார்கள்).
பறையர்கள்
கலப்பு கல்யாணத்தை எதிர்த்தமை
பறையர்கள் என்றால் இன்று எல்லாம் ஒரே ஜாதி என்பதுபோல ஒலிக்கிறது. கொங்கதேசத்தில் உள்ள பறையர்களில் மட்டுமே 18 ஜாதி பிரிவுகள் உள்ளன. சங்குப்பரை சாம்பான், கொங்குப்பறை சாம்பான், தவளைதின்னி பறை சாம்பான் என்பன போல. ஒரு ஜாதி இன்னொரு ஜாதியை விட மேல்-கீழ் என்ற படிநிலை அவர்களுக்குள்ளேயே உண்டு. ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு கல்யாண உறவு-குடுத்து கட்ட மாட்டார்கள். அப்படி ஒருமுறை, பல நூற்றாண்டுகளுக்கு முன் இருவேறு பிரிவுக்குள் காதலால் உறவு ஏற்படவே அது தங்கள் ஜாதிக்கு குறை ஏற்பட்டது என்று கொங்கதேச பறையர் எல்லாரும் கூடி பஞ்சாயத்து பேசியது ஒரு வரலாற்று ஆவணமாகவே உள்ளது!

பறையர்கள் சீரழிந்த கதை:
இப்படியாக
கொங்கதேசத்தில் மக்கள் சிறந்த சமூக ஒற்றுமையோடும், அவரவர் மரபுகளை புரிந்து கொண்டு கலாசாரம்
தவறாமல் இணக்கத்தோடு வாழ்ந்து வந்தனர். இதனால் கிராமங்களோடு தேச பொருளாதாரமும் மிக
சிறப்பாக இருந்தது (1,600 ஆண்டுகள் உலகின் நம்பர் ஒன்
பொருளாதாரமாக). இதை கண்டு பொறுக்காத கார்ல் மார்க்ஸ் போன்றோர் “புரட்சி” மலர கிராமங்கள் உடைய வேண்டும் என்று விஷத்தை ஏற்றினார்கள்.
அதோடு கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு கிராமம்
உடைந்தால் ஒழிய மதம் பரப்ப வழி இல்லை என்பது புரிந்தது. மூன்றாவதாக கிறிஸ்தவ
வெள்ளையர்களுக்கு பாரதத்தை சுரண்ட கிராமங்களை ஒழிக்க வேண்டியது கட்டாயமானது.
பாரதத்தில் பிரிட்டிஷ் ஆட்சி என்பது கிழக்கிந்திய கம்பெனி-கிறிஸ்தவ
மிஷனரி-பிரிட்டிஷ் அரசாங்கம் ஆகிய மூன்று அதிகார மையங்களின் கூட்டாட்சி என்பதே
உண்மை. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கிராமிய சமூகம் சிறிது சிறிதாக உடைக்க
முயற்சிக்கப்பட்டது. இதில் பெருத்த அடி வாங்கியது பறையர் சமூகம் தான்.
முதலில்
“தலையாரி” என்ற
அந்தஸ்த்துடன் கிராமத்தில் இருந்த பறையர்கள்
அதிகாரம் பிடுங்கப்பட்டது. இந்திய போலிஸ் சட்டம் என்ற பேரில் சட்டம் கொண்டுவந்து
தலையாரி முறை ஒழிக்கப்பட்டது. முதலில் தலையாரிகளை நாங்களே போலிசாக
எடுத்துக்கொள்கிறோம் என்று ஆசை காட்டிய கிறிஸ்தவ வெள்ளையர்கள், பறையர்கள் அவர்கள் பாரம்பரியத்தை விட்டு அவர்கள் பக்கம் வந்த பத்து
வருடங்களிலேயே தங்கள் சுயரூபத்தை காட்டி துரோகம் செய்தனர்.
தலையாரிகளுக்கு
ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு வக்கீல் பறையர்கள்
அவசியம் பற்றி அரசுக்கு எழுதிய கடிதம் கூட இன்றும் உள்ளது. ஆனால் கிறிஸ்தவ
வெள்ளையர்களோ காலம்காலமாக காவல் தொழிலை செய்த தலையாரிகளை ‘ஆடு-மாடு
திருடர்கள்’என்று
நாகூசாமல் சொன்னார்கள். அதோடு தலையாரி வேலை செய்தால் கடும் தண்டனை என்றும்
அறிவிக்கப்பட்டது. இதனால் பறையர்களது வாழ்வில் பெரும் சரிவு ஏற்ப்பட்டது. பறையர்களின் பாரம்பரிய
காவல்கார்-தலையாரி உரிமை, அவர்களின் திறன் பற்றிய மதராஸ் வக்கீல் கருத்து:
இரண்டாவதாக
தாமஸ் மன்றோ என்ற கிறிஸ்தவ வெள்ளை அதிகாரி நிலச் சீர்திருத்தம் என்ற பேரில்
நிலங்களை ரயத்துவாரி முறைக்கு கொண்டுவந்தான். இதனால் காலம்காலமாக கிராமங்களில்
அனைத்து சமூகத்துக்கும் இருந்து வந்த விவசாய பூமிகள் கொஞ்சம் கொஞ்சமாக கைமாறியது.
பறையர்கள் நிலமற்றவர்களாக மாறினார். இந்த சீர்திருத்தம் வரும் முன்னர் அன்றைய
சேலம் மாவட்டத்தில் மட்டும் 32,474 பறையர்கள் நிலச்சுவாந்தார்களாக
இருந்துள்ளனர். அதன் எச்சங்களை இன்றும் காணலாம்.
கிறித்தவ
வெள்ளையர்கள் தங்கள் பேராசை கொண்ட எல்லையற்ற சுரண்டல் காரணமாக பாரதம் முழுக்க
கடும் பஞ்சம் ஏற்ப்பட்டது. சுமார் ஐம்பது வருடங்களில் பன்னிரண்டு முறை வந்த
பஞ்சத்தில் கோடிக்கணக்கான மக்கள் பசி பட்டினியால் இறந்தனர். ஏற்கனவே கிறிஸ்தவ
வெள்ளையர்களால் தங்கள் நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நொந்து போயிருந்த
பறையர்களுக்கு இந்த பஞ்ச காலங்கள் பேரிடியாக இறங்கியது. பஞ்ச கால சோகங்களை
வார்த்தைகளால் வடித்துவிட முடியாது, ஆயினும் கட்டுரையின் மையப்புள்ளியில் இருந்து
விலகாதிருக்க கனத்த மனதோடு அதை கடந்து செல்வோம். அவர்களின் வறுமையை பயன்படுத்தி
ரொட்டி துண்டுகளை கொடுத்து அவர்களை
கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்தனர். யாரால்
பறையர்கள் சீரழிந்தார்களோ அவர்களிடமே நிரந்தரமாக சிக்கிக்கொண்டனர்.
இந்த பஞ்சகாலத்தில்தான் கொங்கதேசத்தில் மக்களுக்கு உணவுக்கும் நீராதாரத்துக்கும், பஞ்ச நிவாரனத்துக்கும் உதவும் பணியில் ஈடுபடாமல் பல சர்ச்கள் கட்டப்பட்டன.
(கொங்கதேசத்தில்
பல லட்சம் மக்கள் பசியால் செத்துமடிந்த பஞ்ச காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட
சர்ச்களின் படங்கள் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படங்களில் இருப்பவை
கொங்கதேசப்பகுதிகளில் இன்றைய கோவை, சேலம், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களின் சில
பகுதிகள் மட்டுமே. நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி,
கரூர் மாவட்டங்கள் சேர்க்கப்படவில்லை!)
கிறிஸ்தவ பாதிரியார்கள், ஒரு
சேல்ஸ்மேன் மேனேஜரிடம் விற்பனை அதிகரித்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்வதைப் போல,
பஞ்சத்தால் மக்கள் வந்து கிறிஸ்தவத்தில் சேர்கிறார்கள் என்று
பூரித்துப் புலங்காகிதமடைந்தார்கள்.
உதாரணமாக, 1923ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட India and its Missions என்ற நூலில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு Spiritual Advantages of Famine
and Cholera (“பஞ்சம் மற்றும் காலராவின்
ஆன்மிக சாதகங்கள்”). இக்கட்டுரையில், பாண்டிச்சேரியின்
ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு
பகுதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆர்ச் பிஷப் எழுதுகிறார் –
“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும்
மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக
வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை
நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது.
நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை வற்புறுத்தி அழைத்து வர வேண்டிய
அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”
பஞ்ச நிவாரணத்துக்கான
முன்நிபந்தனையாக மதமாற்றத்தை பயன்படுத்தினர் என்பதை காட்டுகிறது: (The Roman Catholics in South India,
The Indian Evangelical Review, No. XXI, October 1878, p.19)
"பஞ்சத்தால் சுதேச மக்கள் எப்படி கத்தோலிக்க மிஷினரிகளின்
செல்வாக்குக்கு உட்பட்டவர்களாகிறார்கள் என்பதை பிஷப் பென்னெல்லியின் அறிக்கை
காட்டுகிறது. இதை குறித்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. இது பெரும்பாலும்
மூடநம்பிக்கையாலும் பண உதவியாலும் பெறப்படுகிறது. பஞ்சத்தாலும் பட்டினியாலும்
கஷ்டப்படும் பெரும்பாலான மக்கள் இயல்பாகவே இதற்கு வசப்படுவார்கள் என்பது
இயல்புதான். … சிலுவைக் குறியை அணிந்து கத்தோலிக்க பிரார்த்தனை வழிமுறைகளை
ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒரு அணா என ஒரு மாதத்துக்கு
அளிக்கப்படும். அதாவது பஞ்ச நிவாரணம் என்பது மதமாற்றம் என்கிற சமாச்சாரத்தை
ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்"
இந்த பஞ்சகாலத்தில்
கொங்கதேசத்தில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எறும்பு
குழியில் இருந்த தானியங்களைக் கூட தோண்டி எடுத்துத் திண்ணும் நிலைக்கு வந்தனர்.
பசிக்கொடுமை தாங்காது கிழங்குகளை தோண்டி தின்று பலர் இறந்தும் போயினர். ஒரு
நாளைக்கு கோவை ஜில்லாவில் மட்டுமே 20,000 பேர் இறந்த
காலமும் உண்டு. (இந்த பஞ்ச காலத்திலும் மாட்டை கொன்று திண்ணும் பழக்கத்திற்கு பெரும்பான்மை மக்கள் மாறவில்லை
என்பது கிறிஸ்தவ வெள்ளையர்களின் வருத்தங்களில் ஒன்று)
இதில்
இன்னும் கொடுமை என்னவென்றால் மக்கள் பசியில் சாகும் போதும் கிறிஸ்தவ
வெள்ளையர்களின் லாபம் குறையாமல் இருக்க சந்தையில் உணவுப்பொருட்களின் விலை
குறையக்கூடாது அல்லவா, அதனால் யாரேனும் பஞ்சநிவாரண பணியில் (தானதர்மங்களில்) ஈடுபட்டால் அது
தண்டனைக்குரிய குற்றம் என்றே அறிவிக்கப்பட்டது. அந்த சட்டத்தின்பேர் Anti-Charitable
Contribution Act, 1877. கிறிஸ்தவ வெள்ளையர்கள்
தங்களின் உணவு ஏற்றுமதியையோ, வெளிநாடுகளில் நடந்த போர்களுக்கோ அனுப்பிய உணவின்
அளவை குறைக்கவில்லை. ஆயினும் இம்மண்ணின் வேளாள மக்கள், தங்களது
குடிச் சாதிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்துகொண்டே இருந்தனர். விதை நெல்
முதற்கொண்டு கஞ்சி காய்ச்சி ஊற்றினர். குழந்தைகளுக்கு பாலை இலவசமாக தந்தனர். பல
கவுண்டர்கள் தங்கள் காடுகளை விற்று பறையர்கள் குடியிருப்பில் கிணறுகள்-குளங்கள்
வெட்டித் தந்தனர். அந்த கிணறுகள் இன்றளவும் இருக்கின்றன (உதாரணம்:திருச்செங்கோடு
தண்டிகவேல் கவுண்டர்). விஷயம் என்னவென்றால் தாங்கள் செய்த உதவிகளை யாரும் எழுதி
வாங்கவில்லை. இன்றளவும் வயதான பறையர் சமூக மக்களிடம் கேட்டால் அவர்களின் பெற்றோர்
சொன்ன பஞ்சக்கதைகளையும் கொங்கதேசத்தில் கவுண்டர்கள் செய்த உதவிகளையும்
சொல்வார்கள். இதற்கு எச்சமாக இன்றும் இருப்பது கோயில் விழாக்களில் பாடப்படும்
பஞ்சக்கும்மி பாடல்கள் தான். ஒரு உதாரணம் ராசிபுரம் விழியன் கூட்ட வேலப்ப கவுண்டரை
போற்றி இயற்றிய பாடல். இந்த பாடல்கள் தங்களுக்கு பஞ்ச காலத்தில் உதவிய கவுண்டர்களை
நினைவுகூறி நன்றி சொல்ல பாடப்பட்டவை.
இன்னும் சொல்லப்போனால் தலையாரி முறை ஒழிப்பு மற்றும் பஞ்ச கால கொடுமைகளுக்கு முன்பிருந்தே கிறிஸ்தவ வெள்ளையர் பறையர் உட்பட பாரம்பரிய கிராமிய சமூகத்துக்கு விரோதமாகவே இருந்துள்ளனர் என்று சொல்லலாம். கிராமங்களில் விவசாயக்கூலி உரிமைகள் பள்ளி,பள்ளர் மற்றும் பறையர்களுக்கு இருந்தன. கூலிக்கார ஜனங்களுக்கு அதிகம் கூலி தருவதால் விவசாயிகளால் சர்க்காருக்கு அதிக வரி செலுத்த முடியவில்லை என்றெண்ணி, அதிகபட்ச கூலி என்பதை அவர்களின் பாரம்பரிய கூலியை விட மிக குறைவாக நிர்ணயித்தனர். இந்த கொடுமைக்கு எதிராக வெள்ளாளர்கள் பள்ளி-பறையர்களை ஒருங்கிணைத்து கிளர்ச்சியில் ஈடுபடச் செய்தனர். ஆனால் இந்த கிளர்ச்சி அச்சுறுத்தல்களாலும் அடக்குமுறைகளாலும் ஒடுக்கப்பட்டது.
தற்போதைய
நிலை:
அவரவர் மரபை உணர்ந்து, மற்றவர் மரபை மதித்து, இணக்கமாக கலாசாரம் போற்றி
வாழ்ந்து வந்த மக்களை தங்களின் சுயநலத்துக்காகவும், வியாபாரத்துக்காகவும், மதம் பரப்பவும் சாதி துவேஷத்தை விதைத்து விட்டனர்.
காந்தியவாதி, சமூக வரலாற்று ஆய்வாளர் திரு.தரம்பால் அவர்கள் இதுகுறித்து சொல்லிய கருத்து,
காந்தியவாதி, சமூக வரலாற்று ஆய்வாளர் திரு.தரம்பால் அவர்கள் இதுகுறித்து சொல்லிய கருத்து,
கேள்வி:ஜாதி அமைப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதுவும் 1800க்குப் பின் வந்தபிரச்சினைஎன்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நம் பாரம்பரியத்தைநாம் நியாயப்படுத்திப் பேசும்போது இந்த ஜாதி விஷயம் நமக்கு நிறையபிரச்சினைகளை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.
நீங்கள்
சொல்வது சரிதான். இந்தியாவின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக ஜாதியே
சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு எப்படி வந்து சேருகிறோம்? கிராமங்களைப் போலவே ஜாதியும்
இந்திய வரலாறு முழுவதும் இந்திய சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத அங்கமாகவே
இருந்துவந்திருக்கிறது. மனுஸ்மிருதி போன்றவை இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாக
வகைப்படுத்தியது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பிருந்தே
பழங்குடிகளும் ஜாதிகளும் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. இன்றும் இருந்து வருகின்றன.
ஆனால், இந்திய வரலாற்றில் இப்போது இருப்பதுபோல் ஜாதியானது என்றைக்குமே பெரிய
பிரச்சினையாக இருந்ததாகத் தெரியவில்லை.
பல்வேறு
ஜாதிகள் அருகருகே வசித்து வந்திருக்கின்றன. தமக்குள் கொடுக்கல் வாங்கல்களில்
ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான, பெருமைக்குரிய
சடங்கு சம்பிரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று சண்டையும் இட்டும்
வந்திருக்கின்றன. பொதுவாக நம்பப்படுவதற்கு முற்றிலும் மாறாக, அதாவது மனு
ஸ்மிருதிக்கு முற்றிலும் எதிராக, பிரிட்டிஷார் இந்தியாவை
வென்றபோது ஆட்சியில் இருந்த பெரும்பான்மையான அரசர்கள் எல்லாம் சூத்ர ஜாதியைச்
சேர்ந்தவர்களே.
இந்தியாவில் தனித்தனியான ஜாதிகள் இருந்தது இந்திய
அதிகாரவர்க்கத்தின் பலவீனமான நிலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அதேநேரத்தில்
அந்த ஜாதி அமைப்பே இந்திய சமூகம் நீடித்து நிலைக்கவும் காரணமாக இருந்திருக்கிறது.
அதன் தாக்குபிடித்தலுக்கும் மீண்டும் எழுந்து நிற்கும் வலிமைக்கும் காரணமாக
இருந்திருக்கிறது. ஜாதி அமைப்பு இந்தியாவைப் பிரித்திருக்கிறதா… ஒத்திசைவுடன்
இயங்க வைத்திருக்கிறதா என்பது விரிவான விவாதத்துக்கு உரியது. இன்றுவரை அதற்கு எந்த
உறுதியான பதிலும் கிடைக்கவில்லை.
பிரிட்டிஷார்
இந்திய ஜாதி அமைப்பைத் தீமையானது என்று சொன்னதற்கு அவர்கள் ஜாதி (குழு)
அற்றதன்மையை நம்பியவர்கள் என்பதோ மேல் கீழ் கட்டுமானத்தை வெறுப்பவர்கள் என்பதோ
காரணமல்ல. இந்திய சமூகத்தை அவர்கள் விரும்பியதுபோல் உடைப்பதற்கு ஜாதி தடையாக
இருந்தது என்பதுதான் காரணம். இந்திய சமூகத்தை பலவீனப்படுத்தி ஒரே குடையின்
கீழ்கொண்டு வந்து நிர்வாகம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருந்திருக்கிறது. இன்றைய
காலகட்டத்தில் ஜாதி என்ன பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது வேறு விஷயம். ஆனால், நேற்றைய
இந்திய சமூகத்துக்கு அது கெடுதலாக இருந்தது என்ற கருத்தாக்கம் பிரிட்டிஷாரால்
ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்றுதான். அது உண்மை அல்ல என்பதற்கான ஆதாரங்கள்
பிரிட்டிஷாரின் ஆவணங்களிலேயே ஏராளம் இருக்கின்றன.
பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையோடு வாழ்ந்த சாதிகள் இன்று அடித்துக் கொள்கின்றன. திராவிட, கம்யூனிச கட்சிகள் இந்த வெறுப்புணர்வு அணையாமல் பார்த்துக் கொள்கின்றன. ஆயினும், இன்றளவும் உண்மை அறிந்த பறையர்கள் தங்கள் மரபை மறக்காமல் இருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் கூட, இன்றளவும் பல கொங்கப்பறையர் வேறு மதத்திற்கு மாறியிருந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்வது மிகவும் மதித்து பாராட்ட வேண்டிய ஒன்றாகும். கொங்கப்பறையரின் மேன்மையை அவர்களின் வரலாறு, சமூகம் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லி அவரவர் மரபுகளை மதித்து ஜாதிகளுக்குள் இணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகும். கொஞ்சம் காசு சேர்ந்துவிட்டால் தங்கள் சீர்முறைகளையும் பாரம்பரியத்தையும் மறப்பதோடு இல்லாமல் அதை பிற்போக்குத்தனம் என்று சொல்லிக்கொண்டு புதிதாக எவன் எவனோ கொண்டு வரும் தமிழ்முறை போன்ற சீர்கேடுகளை திணிக்கும் கவுண்டர்களை விட இருக்கும் சிக்கல்களுக்கு இடையேயும் தங்கள் பாரம்பரியம், கோயில் உரிமை மறக்காமல் இருக்கும் சில கொங்கப்பறையர்கள் உயர்ந்தவர்களேயாவர்.
தற்காலத்தில் கிறிஸ்தவ அமைப்புக்களின் பின்புலத்தில் இயங்கும் சில சாதி வெறி
அமைப்புக்களின் தூண்டலால் கொங்கப்பறையர்களில் சில இளைஞர்கள் தங்கள்
உரிமையையும், பெருமையும் அறியாது பல காலமாக
இணங்கி வாழ்ந்து வந்த தங்களின் கிராம
சமூக மக்களோடு தகராறு செய்கிறார்கள். எல்லா
பறையரும் ஒரே பறையர் என்று
கூறிக்கொள்கிறார்கள். அது தவறு; பண்பாட்டு
வழக்கங்கள் ஜாதியை பொறுத்து மாத்திரமல்ல,
தேசத்தை பொருத்தும் மாறும். சோழிய பறையர்
மரபுகள் வேறு கொங்கப் பறையர்
மரபுகள் வேறு, தெலுங்கு பேசும்
வடுகப் பறையர்கள் மரபுகள் வேறு. சாதி
ஒழுக்கத்தை கடைபிடிப்பதில் வெறி இருக்கலாமே ஒழிய
ஜாதி வெறியை யார் கையிலெடுத்தாலும்
அது தவறுதான்.வருங்கால சமூகம் உண்மைகள் உணர்ந்து
நன்முறையில் திரும்பும் என்று நம்புவோம்.
மேலும் படிக்க,
கொங்குகுடிகள் பலவற்றிற்கும் உள்ளதுபோல கொங்கப்பறையர்களுக்கும் குலகுரு மரபு உண்டு.
கொங்கப்பறையர்களது குலகுரு மடம் மற்றும்
அவர்களது மரபுகள் பற்றிய விவரங்கள் கொங்க பறை
சாம்பான்கள் தளத்தில் காணவும்.
No comments:
Post a Comment