தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday, 31 July 2016

தொலைபேசி

தொலை பேசியில் பேசும்போது அனுசரிக்கவேண்டிய பண்புகள்

தொலைபேசியில் பேசுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலோருக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வே கிடையாது. போன் என்பது பேசுவதற்குத்தானே, யாரையும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டுப் பேசலாம் என்று பலர் தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

விடியற் காலையில் 5 மணிக்குப் போன் வந்தால் என்னைப்போன்ற உள்ளூரில் வசிப்பவர்கள் என்ன நினைப்போம்? யாரோ இன்றைக்கு மண்டையைப் போட்டு விட்டார்கள், இன்றைய பொழுது அவ்வளவுதான் என்று முடிவு செய்துதான் போனை எடுப்போம். செய்தியும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். “இன்றைக்கு என்ன புரொக்ராம்” என்று ஒரு நண்பன் அந்நேரத்தில் கேட்டானென்றால் என்ன நினைப்போம்? பாவி, உன்னை எளவெடுக்க, காலங்கார்த்தாலே ஏண்டா என் தூக்கத்தை கெடுத்தே? என்றுதான் எண்ணுவோம் அல்லவா?

சிலர் அர்த்த ராத்திரியில் போன் பண்ணி, நாளைக்கு அவனைப் பார்க்கப் போகலாமா என்று விசாரிப்பார்கள். அவர்கள் அன்றைக்கு அன்று, தூங்காத ஜாதியைச் சேர்ந்தவர்கள். இரவு 1 மணிக்கு மேல்தான் படுக்கப்போவார்கள். காலையில் 11 மணிக்குத்தான் அவர்களுக்குப் பள்ளியெழுச்சி. நாம காலைல 7 மணிக்கு எழுந்திருச்சு 8 மணிக்கு ஆபீஸ் போறவங்களா இருந்தா, இந்தப் பீடைங்களுக்கு அர்த்த ராத்திரியில என்ன வாழ்த்துச் சொல்றது?

போன் என்பது அவசர, அத்தியாவசியச் செய்திகளைச் சொல்வதற்காக ஏற்படுத்திய சாதனம் என்று என்னைப் போன்ற கிழடுகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கின்றன. வடச்சட்டியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, தாளிப்பதற்கு என்னென்ன போடவேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிலிருக்கும் அம்மாவிற்குப் போன் போட்டுக் கேட்கும் மகள்கள் ஏராளம். “அடியே, நேற்று அந்த சீரியலில் என்ன நடந்தது, எனக்கு நாத்தனார்ப் பீடைகூட கோவிலுக்குப் போகச் சொல்லி அந்தக் கெழம் உயிரைப் பிடுங்கிச்சு, அதனால அந்த சீரியலப் பாக்க முடியல. அதில அவ புருசன் சாகறாப்பில இருந்தானே, அவன் செத்துட்டானா?” என்று அரை மணி நேரம் போனிலேயே கதை கேட்கும் மாமிகளும் உண்டு. அன்றைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கும். வீட்டில் மங்களகரமாக நாலு ஸ்லோகம் சொல்றத விட்டுட்டு இந்த எளவு விசாரணை. கதை கேக்கற சுவாரஸ்யத்தில நாளாவது, கிழமையாவது?

சிலர் அவர்கள் வழக்கமாகப் போகும் டாக்டருக்கு போன் செய்து “டாக்டர், வயிற்றில் இடது புறமாக வலிக்கிறது, அன்றைக்கு கொடுத்தீர்களே, அந்த மருந்தைச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள். என்ன அட்வைஸ் சொல்ல முடியும்? நேரில் பார்க்காமல் ஒன்றும் சொல்ல முடியாதம்மா, நேர்ல வாங்கன்னு சொன்னா, “பார்மசியில கேட்டாக் குடுக்கறான், இந்த டாக்டருக்கு கொம்பு மொளச்சிடுச்சு”, என்று பேசும் மக்கள்தான் அதிகம். இப்படிப்பட்ட சாவு கிராக்கிகள் வராததே நல்லதுக்குத்தான் என்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் நினைப்பார்கள்.

என்னைப் பொருத்தவரையில் நான் போனில் சொல்லவேண்டியவற்றை சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிடும் வழக்கமுடையவன். சிலர் அவர்களின் வீட்டுப் பிரச்சினைகளால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க இந்தப் போனைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுவது நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையென்றாலும் கடனே என்று கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் போன் பேசுவதில் ஒரு பண்பு, எட்டிக்கெட், என்னவென்றால், யார் கூப்பிடுகிறார்களோ அவர்கள்தான் பேச்சை முடித்து போனைக் கட் செய்யவேண்டும்.

என்னுடைய நண்பர்கள் இருவர் இப்படி போனில் ஒரு நிமிஷம் பேசவேண்டியதை ஒன்பது நிமிஷம் பேசுவார்கள். அவர்கள் பேசும்போது நாம் சும்மாவும் இருக்கமுடியாது. “ஊம்”, “அப்படியா”, “அப்புறம்”, இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லாவிட்டால், என்ன, கேட்டுட்டு இருக்கீங்களா, இல்லே தூங்கிட்டீங்களா, என்று கேள்வி வேறு வரும். இப்படியாக தடவைக்கு ஒரு அரை மணி நேரமாவது அறுப்பார்கள். விஷயம் ஒன்றுமிருக்காது.    

இதில் சமீபத்தில் நடந்த ஒரு சோகத்தைக் கேளுங்கள். “குதிரை கீழே தள்ளியதுவுமில்லாமல் குழியும் பறித்ததாம்” என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இவர்கள் தங்கள் டென்ஷனைக் குறைக்க ஏதோ பேசுகிறார்களே என்று அனுதாபப்பட்டு கேட்கப்போக, என் மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். அதாவது, நான் அவர்களுடன் போனில் பேசினால் சீக்கிரம் கட் பண்ணி விடுகிறேன், அவர்கள் என்னுடன் பேசினால் நீண்ட நேரம் பேச அவர்களைத் தூண்டுகிறேன், என்று கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்போமே என்று பேச்சைக் கேட்கப்போக, குற்றச்சாட்டு என் பேரிலேயே திரும்பி விட்டது. அதாவது அவர்கள் சொல்வது என்னவென்றால் நான் “அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே” என்று அலைகிறேன் என்பதை இவ்வாறு சொல்லி விட்டார்கள். அடுத்தவன் காசில் அனுபவிக்கிற ஜாதி என்பதை இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் “எனக்கு வேண்டும், இவர்கள் பேரில் அனுதாபம் காட்டியதிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று என் தலைவிதியை நொந்து கொண்டு இனி மேலாவது புத்தியாய் பிழைக்கவேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன்.

இந்த நிகழ்ச்சியின் நீதி என்னவென்றால், எந்த வயதிலும் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு என்பதுதான்.

இலவசங்களை குறை கூறாதீர்கள்

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.

சரித்திரம் படித்தவர்கள் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் ரஷ்யப் புரட்சி பற்றியும் படித்திருப்பார்கள். அந்தப் புரட்சிகளின் பின்னணி பற்றியும் நன்கு அறிந்திருப்பார்கள். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி பற்றி எல்லோரும் செய்தித் தாள்களில் படித்துக் கொண்டிருந்தோம்.
சரித்திரம் படிப்பதின் நோக்கமே, நம் முந்தைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் செய்த தவறுகள் என்ன, அந்த தவறுகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு காத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளத்தான். இந்த தத்துவத்தில் யாருக்கும் ஐயப்பாடு இருக்காதென்று நம்புகிறேன்.

எகிப்திய மன்னர் இந்தத் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன். அல்லது தம் மக்கள் ராஜ விசுவாசம் மாற மாட்டார்கள் என்ற மயக்கத்தில் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

ஆனால் நம் நாட்டு அரசியல் வாதிகள் இந்தத் தத்துவத்தை நன்கு புரிந்தவர்கள். அதாவது மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துள்ளார்கள். மக்களுக்கு வயிறு எப்போது காய்ந்து போகிறதோ அப்போதுதான் புரட்சிக்கான விளை நிலம் உருவாகிறது. பல சமயங்களில் வயிறு நிறைந்திருந்தாலும் அவன் சும்மா இருந்தால் அவன் மனதில் வேண்டாத எண்ணங்கள் தோன்றும். இப்படி பலர் சிந்திக்க ஆரம்பிப்பது நல்லதல்ல. அவர்களை எப்போதும் ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும். ஆட்சியாளர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்காது.

அப்படி வைத்திருந்தாலும், இந்தப் படித்த முட்டாள்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அவ்வப்போது குட்டையைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஒரு கட்சிக்கும் பிடிப்பதில்லை. ஆனால் ஒரு நல்ல காலம், அவ்வாறு படித்த சிந்தனையாளர்கள் அதிகமாக உருவாவதில்லை. அப்படி ஒன்று இரண்டு உருவாகும்போது அவர்களை எப்படி கையாளவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

இந்த சூழ்நிலையை நிலை நிறுத்தத்தான் இலவசங்கள். கிராமிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை செய்யாமல் காசு கிடைக்கிறது. சலீசாக அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க டி.வி. யும் டாஸ்மாக்கும் இருக்கின்றன. குடிசைமாற்றுத் திட்டத்தின் மூலம் குடியிருக்க வீடு கிடைக்கிறது. இந்த நிலையில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவது?
ஆகவே இலவசங்களின் நன்மையைப் புரிந்து கொண்டீர்களா? இனியாவது இலவசத்தைக் குறை கூறாமல் அவைகளை வாங்கி அனுபவியுங்கள். வாழ்க இலவசம். வாழ்க குடி மக்கள்!

இடுகையிட்டது .கந்தசாமி நேரம் 7:20 முற்பகல் https://resources.blogblog.com/img/icon18_email.gif
லேபிள்கள்: எலக்ஷன் ஸ்பெஷல்
33 கருத்துகள்:
  1. http://img2.blogblog.com/img/b16-rounded.gif
ஆக தமிழ்நாட்டு மக்களெல்லாரும் சந்தோஷமா இருக்காங்கன்னு சொல்றீங்க!
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
Robin said...
//
ஆக தமிழ்நாட்டு மக்களெல்லாரும் சந்தோஷமா இருக்காங்கன்னு சொல்றீங்க!//

ஆமாங்க, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கறோமுங்க, அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு!!!

இலவசமாக உங்கள் கட்டுரை படித்து பரவசமானேன். ஆனாலும் உங்கள் வலைப்பூவிற்கு வர உழைப்பு தேவைப்பட்டது. அதனால் உழைப்பின் பலத்தினால் கிடைத்த மகிழ்வுதான் உண்மையான மகிழ்வாக எனக்குப் பட்டது.

இலவசம்

வாழ்க இலவசம். வாழ்க டாஸ்மாக் மக்கள்

. நீங்க சொல்றதும் சரியாதான் இருக்கு.

இது வஞ்ச புகழ்ச்சி தானே?

deeps vasan said...

//
இது வஞ்ச புகழ்ச்சி தானே?//

இத பாருங்க, அத நான் சொல்லல, நீங்கதான் சொல்றீங்க.

இனி தேசத்துரோகம் யாரும் செய்ய மாட்டாங்க.

ஒருத்தர் ரயிலில் பிரயாணம் பண்றார், அவருக்குப் பக்கத்தில் இன்னொருத்தர் வந்து உட்காருகிறார். பேச்சுக் கொடுத்து நண்பராவது போல நடிக்கிறார். பின்னர் அவருக்கு பிஸ்கட் "முற்றிலும் இலவசமாகக்" கொடுக்கிறார். அதை வாங்கித் தின்றவர் மயக்கமடைகிறார், பின்னர் மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த தங்கச் செயின், மோதிரம், வாட்ச், செல் போன், பையில் வைத்திருந்த ரொக்கப் பணம் எல்லாம் மாயம், நண்பரும் மாயம். [இந்தக் கதைக்கும், உங்கள் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா?]
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
Jayadev Das said...................

என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க, நான் இனி ரூம் போட்டுல்ல யோசிக்கணும்.கொஞ்சம் டைம் கொடுங்க. நல்ல பதிலா யோசிச்சு குடுக்கிறேன்.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeqz0MBXChghG__fKYMYrWKkJqwXWfNSNToEeWIL5k1REk_BQe_zhbIeYTBdyF3eeM-Y-JzjiIgfrMneBRrBwgMUg1bkBhzs7HRTCB-zIwSlI67kq3Id0Au_PFne5Rclnf0L14mlUJfMw/s35/DSC01485.JPG
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!
ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும்!
வாழ்க இலவசங்கள்!
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmP5_aDuDZghTs3CfDUkpQ-jI5Ex_LKfoMcodTM6iI_KZVactmF4OG1CQ8k0D7gpj7nPKRFzatyqUWmycnLhNTBcKK1afSGijtFdHAClz5mNnJCqckGfIT29WzZZTMOFkBLrbSqF__6fmm/s35/IMGP0075A+.jpg
//இந்தப் படித்த முட்டாள்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அவ்வப்போது குட்டையைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஒரு கட்சிக்கும் பிடிப்பதில்லை.//

வடிவேலு தி.மு.கவுக்கு காவடி தூக்க ஆரம்பிச்சட்டதால இனிமேல் அவ்வ்வ்வ் போடறதில்லைன்னு முடிவு செஞ்சிருக்கேன்.அதனால சாய்ச்சுப்புட்டிங்களே சொல்லிக்கிறேன்:)
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmP5_aDuDZghTs3CfDUkpQ-jI5Ex_LKfoMcodTM6iI_KZVactmF4OG1CQ8k0D7gpj7nPKRFzatyqUWmycnLhNTBcKK1afSGijtFdHAClz5mNnJCqckGfIT29WzZZTMOFkBLrbSqF__6fmm/s35/IMGP0075A+.jpg
ஜெயதேவ தாஸ் என்னமா விடுகதை போடுகிறார்!!
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLvK3LwbsRYqdhSSZCh_7t5RMbMQl-brXUaW4C4eS9HUI9bm8EiEdATYkfoDO7n3iimVZQTABCFv71wydMaNxA5tU6BtPfQZnJqT01vR6cgicqkD9iQZi72qciFztbBmi6qa2nVw6Jiho/s35/DSC005511.JPG
ஒரு மாணவன் தன்னால் படிக்க முடிந்தவரை எந்த இடையூறும் குறிப்பாக பொருளாதார இடையூறு இன்றி படிக்க வைக்க வேண்டிய கடமை யாருடையது?

அதில் துளிகூட செல்வு கூட வராமல் பார்த்துக்க் கொள்ளவேண்டும் என்று அரசு நினைப்ப்து மக்களை சோமேறியாக்கிவிடும் என்று நினைக்கிறீர்களா?

குடும்பத் தலைவிகள் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலும் வெளியிலும் பணி செய்யும் குடும்பத் தலைவிகளின் சுமை குறைய அரசு மிகச் சிறிய பங்களிப்பு செய்வது எவ்வாறு தவறாக இருக்க முடியும் ஐயா?

===========================

பின் குறிப்பு: டாஸ் மாக்கில் எதுவும் இலவசம் கிடையாது
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
வீராங்கன் said...
//
ஒரு மாணவன் தன்னால் படிக்க முடிந்தவரை எந்த இடையூறும் குறிப்பாக பொருளாதார இடையூறு இன்றி படிக்க வைக்க வேண்டிய கடமை யாருடையது?

அதில் துளிகூட செல்வு கூட வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அரசு நினைப்ப்து மக்களை சோம்பேறியாக்கிவிடும் என்று நினைக்கிறீர்களா?

குடும்பத் தலைவிகள் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலும் வெளியிலும் பணி செய்யும் குடும்பத் தலைவிகளின் சுமை குறைய அரசு மிகச் சிறிய பங்களிப்பு செய்வது எவ்வாறு தவறாக இருக்க முடியும் ஐயா?//

திரு. வீராங்கன், இந்தப் பதிவின் நோக்கத்தை புரிந்து பின்னூட்டம் போட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. இந்த சூழ்நிலை மிகவும் விவாதத் திற்குரியது. நான் பிரச்சினையின் ஒரு நுனியைத்தான் தொட்டிருக்கிறேன். என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை எவ்வாறு முன்னேற்றுவது என்பது ஒரு பெரிய சவால். இலவசங்கள் அந்த சவாலுக்கு துணை புரியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

"
ஒருவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு மீன் கொடுத்தால் அவனுடைய ஒரு நாள் பசி போகும். ஆனால் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் ஆயுளுக்கும் அவனுக்கு பசி போகும்"
இந்தக் கருத்துள்ள ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.

உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். சமூக ஆர்வலர்கள் முயல வேண்டும்.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
nidurali said...

//
இலவசமாக உங்கள் கட்டுரை படித்து பரவசமானேன். ஆனாலும் உங்கள் வலைப்பூவிற்கு வர உழைப்பு தேவைப்பட்டது. அதனால் உழைப்பின் பலத்தினால் கிடைத்த மகிழ்வுதான் உண்மையான மகிழ்வாக எனக்குப் பட்டது//

என் பங்கில் ஏதாவது செய்ய வேண்டுமா?
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4jGk29JGoVP-8jEdpTpW98-afDi3GKG5RF0_Gs4jHdleF2NqHuqjP7va7DvP0YVNZzlUJcmF45ymmdTHuMH5mdktp803A_7i6ribMuq3h7-gqETBHlidkDTGfJBpeZClunleSHcKujIOE/s35/worried.jpg
கட்சி ஆளுங்களுக்குதான சார் முக்காவாசி இலவசம் சென்று அடையுது. நமக்கு கிடைக்க மாட்டேங்குதே?
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
சிவகுமார் ! said...

//
கட்சி ஆளுங்களுக்குதான சார் முக்காவாசி இலவசம் சென்று அடையுது. நமக்கு கிடைக்க மாட்டேங்குதே?//

சிவகுமார், இலவசத்திட்டங்களில் பல நுட்பமான விஷயங்கள் உள்ளன. நம்மால் அவற்றை முற்றிலுமாகப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
nidurali said...

//
இலவசமாக உங்கள் கட்டுரை படித்து பரவசமானேன். ஆனாலும் உங்கள் வலைப்பூவிற்கு வர உழைப்பு தேவைப்பட்டது. அதனால் உழைப்பின் பலத்தினால் கிடைத்த மகிழ்வுதான் உண்மையான மகிழ்வாக எனக்குப் பட்டது.//

நீடூரலி, உங்கள் பின்னூட்டத்தின் முழுப்பொருளும் விளங்க இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. உழைப்பில்லாமல் கிடைக்கும் எதுவும் சுவைக்காது. மிகச் சரியாகச் சொன்னீர்கள். உங்கள் தமிழ் வாழ்க.
  1. http://img2.blogblog.com/img/b16-rounded.gif
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். மக்கள் மயக்கத்திலேயே இருந்துவிட்டால் புரட்சி ஏது?
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
bandhu said...

//
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். மக்கள் மயக்கத்திலேயே இருந்துவிட்டால் புரட்சி ஏது?//

ரொம்ப விரிவா எழுதறதுக்கு பயமா இருந்துச்சுங்க. இந்த அளவில புரிஞ்சுக்கிறவங்க புரிஞ்சுக்கிட்டும்னு தானுங்க எழுதினனுங்க.

ஆனா, இதில ஆச்சரியம் என்னன்னா, நம்மாளுங்க இந்த சுளுவ எப்படிக்கண்டு பிடிச்சாங்க அப்படீங்கறதுதானுங்க. அது மட்டுமில்லீங்க, இதுல இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்குங்க. நம்மளுக்கு அதெல்லாம் எதுக்குங்க. பேசாம அரசு டி.வி. எதையாச்சும் பாத்துட்டு இருக்க வேண்டியதுதானுங்க.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD8kCGWlcDGhjxrxOxXY8V66D_x5ORWJ03zZVyMTAyAUUdyEq7-flrG5aEOX5NmfCTta2mnT5eQFICV2x94hD_sJlcydbK7QzwLV_PqTbOiYhhhf7zSClzaVaUMjCkdzoweJRjBeScsUmB/s35/radhashyamsundar%2525257E25.jpg
@ராஜ நடராஜன்

ஹா..ஹா..ஹா.. சும்மா தமாசு சார். [அனாலும் அது நிஜத் தமாசு சார்..!!!]
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD8kCGWlcDGhjxrxOxXY8V66D_x5ORWJ03zZVyMTAyAUUdyEq7-flrG5aEOX5NmfCTta2mnT5eQFICV2x94hD_sJlcydbK7QzwLV_PqTbOiYhhhf7zSClzaVaUMjCkdzoweJRjBeScsUmB/s35/radhashyamsundar%2525257E25.jpg
@ வீராங்கன்
இப்படிப் பின்னி பெடலெடுக்கிறீர்களே நண்பரே!!

\\
ஒரு மாணவன் தன்னால் படிக்க முடிந்தவரை எந்த இடையூறும் குறிப்பாக பொருளாதார இடையூறு இன்றி படிக்க வைக்க வேண்டிய கடமை யாருடையது?
அதில் துளிகூட செல்வு கூட வராமல் பார்த்துக்க் கொள்ளவேண்டும் என்று அரசு நினைப்ப்து மக்களை சோமேறியாக்கிவிடும் என்று நினைக்கிறீர்களா? \\ குடுத்த காசுக்கு அதிகமாவே கூவுரீங்களே சார். இலவச வண்ணத் தொலைக் காட்சி கொடுப்பது இந்த லட்சியத்தை மனதில் வைத்துதானா என்று நீங்கள் யோசிக்க வேண்டும். இலவச கல்வி என்பது எப்போது செயல்படுத்தப் பட்ட ஒன்று, இந்த ஆட்சியில் அதற்க்கு புதிதாக ஒன்றும் செய்யப் படவில்லை. மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு கொடுக்கப் படும் சலுகைகள் பற்றி இங்கு யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் எல்லாமே இலவசம் என்று போனால் இது நம்மை எங்கு கொண்டு போய் விடும் என்பதுதான் கேள்வி. கை கால் இல்லாதவன், குருடு, ஆதரவற்ற முதியோர், அனாதைக் குழைந்தைகள் என்று அவர்களுக்கு இலவசம் கொடுத்தால் அர்த்தம் உண்டு. உழைத்து சாப்பிட வேண்டிய மக்களுக்கு எல்லோருக்கும் இலவசம் என்று வாரிக் கொடுப்பதன் உள்நோக்கமென்ன?
\\
குடும்பத் தலைவிகள் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலும் வெளியிலும் பணி செய்யும் குடும்பத் தலைவிகளின் சுமை குறைய அரசு மிகச் சிறிய பங்களிப்பு செய்வது எவ்வாறு தவறாக இருக்க முடியும்.\\ உலகத்துல தமிழ் நாடு மட்டும்தான் இருக்குதா? மற்ற நாடுகள் எப்படி இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கின்றன? இலவசம் கொடுத்தா? மக்கள் அவர்கள் தேவைகளுக்கு அவர்களே சம்பாதிக்கும் படி செய்யும் அரசு தான் சிறந்த அரசு, அதுதான் உருப்படும், இலவசம் கொடுக்கிறவன், தற்போதைக்குக் கொடுப்பான், என்றென்றைக்கும் கொடுக்க முடியாது, அப்படிக் கொடுத்தால் அதனால் ஏற்ப்படும் மொத்த கடன் இடியும் வாங்கித் தின்றவன் தலை மேல்தான் வட்டியோடு வந்து விழும்.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhghTvIGu6AveRbBmSdvkXnF8pE5UFUEM0M3HVNdHVS4ht2Wlhnefqab97fbx-Af2hvdWosk2QPZcqXHAVAS2F81x9eReCoBUoHFCOhqOKSeH85Hhqk__5G5rr2OquzUJmzdllB-D01wx0-/s35/lenin_photo.jpg
வணக்கம் Dr உங்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvl3LcrFqsLiqM5utm9b5Fnaw5GJnHy5MZFfcEkDyTuJf4A5GClLUMlRBZ8d-Hj4OXJrMvm7JjkKyqp5k4AOfVsFQp-ilP7_XJEW7x5CS5M2JpzEWZzOMF34-nq1J3aZIulgS5tH0I0xI/s35/lady_chef-406x406.jpg
வாழ்க இலவசம்.:)
  1. http://img1.blogblog.com/img/blank.gif
they r treating us like beggars!!
freebies cant make the ppl to sleep for a long period :|
  1. http://img2.blogblog.com/img/b16-rounded.gif
முன்னால, இலவசமா அட்வைஸ் தான் கிடைச்சது! இப்ப எல்லாம் கிடைக்குதே! இது எப்பேர்பட்ட முன்னேற்றம்!
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLvK3LwbsRYqdhSSZCh_7t5RMbMQl-brXUaW4C4eS9HUI9bm8EiEdATYkfoDO7n3iimVZQTABCFv71wydMaNxA5tU6BtPfQZnJqT01vR6cgicqkD9iQZi72qciFztbBmi6qa2nVw6Jiho/s35/DSC005511.JPG
//"ஒருவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு மீன் கொடுத்தால் அவனுடைய ஒரு நாள் பசி போகும். ஆனால் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் ஆயுளுக்கும் அவனுக்கு பசி போகும்"
இந்தக் கருத்துள்ள ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.//

ஒரு தூண்டிலில் ஒரு மீன் பிடிப்பதை கற்றுக் கொண்டவுடன் அவனுக்கு உதவுவதை நிறுத்தாமல், ஒரு சுண்டுதலில் ஓராயிரம் மீன் கிடைக்கும் வரை அவனுக்கு உதவுவதை மிகவும் சரி என்று சொல்கிறேன்
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
வீராங்கன் said...
//
ஒரு தூண்டிலில் ஒரு மீன் பிடிப்பதை கற்றுக் கொண்டவுடன் அவனுக்கு உதவுவதை நிறுத்தாமல், ஒரு சுண்டுதலில் ஓராயிரம் மீன் கிடைக்கும் வரை அவனுக்கு உதவுவதை மிகவும் சரி என்று சொல்கிறேன்//

உங்கள் கருத்தை மதிக்கிறேன். நமக்குள் விவாதம் வேண்டாமே.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLvK3LwbsRYqdhSSZCh_7t5RMbMQl-brXUaW4C4eS9HUI9bm8EiEdATYkfoDO7n3iimVZQTABCFv71wydMaNxA5tU6BtPfQZnJqT01vR6cgicqkD9iQZi72qciFztbBmi6qa2nVw6Jiho/s35/DSC005511.JPG
//குடுத்த காசுக்கு அதிகமாவே கூவுரீங்களே சார்.//

கொடுத்த காசு அல்ல சார். கொடுக்கப் பட்ட வாழ்க்கை. நான் படித்தது, பணியில் சேர்ந்தது எல்லாமே அரசாங்கத்தின் மூலமாகத்தான். அரசு எனக்கு உதவி செய்து கொண்டே இல்லாமல் போயிருந்தால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனக்கு உதவுவது என்னை சோம்பேறியாக்கியிருக்கும் என்று எந்த அறிவுஜீவியாவது முட்டுக் க்ட்டை போட்டிருந்தால் நானும் எங்கோ ஒரு மூளையில்தான் இருந்திருப்பேன்.

எந்த ஒரு இடத்தில் பணம் கட்டித்தான் படிக்கவேண்டும். பணம் கொடுத்தால்தான் வேலை வாங்க முடியும் என்ற சூழல் எனக்கு எப்போது வரவில்லை.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLvK3LwbsRYqdhSSZCh_7t5RMbMQl-brXUaW4C4eS9HUI9bm8EiEdATYkfoDO7n3iimVZQTABCFv71wydMaNxA5tU6BtPfQZnJqT01vR6cgicqkD9iQZi72qciFztbBmi6qa2nVw6Jiho/s35/DSC005511.JPG
//\\ குடும்பத் தலைவிகள் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழே உள்ள குடும்பத் தலைவிகள் வீட்டிலும் வெளியிலும் பணி செய்யும் குடும்பத் தலைவிகளின் சுமை குறைய அரசு மிகச் சிறிய பங்களிப்பு செய்வது எவ்வாறு தவறாக இருக்க முடியும்.\\ உலகத்துல தமிழ் நாடு மட்டும்தான் இருக்குதா? மற்ற நாடுகள் எப்படி இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கின்றன?//

குடும்பத் தலைவிகளின் பிரச்சனைகளை இப்படியும் சமாளிக்கலாம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த கேள்வியைக் கேளுங்கள். பதில் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbd8vVddApfNgJMeRm9vQE7ppmzNfr6j-XA2FJ7Ylr4B_gEFgyE6LF5b2n3mItDqwpBvXtWNMjKdUfP1NAhgowrrMMr6OsmS_58KCu2qixQWJVJLIjRGxs4MiMziujhn_HDeOJQAA3pcoE/s35/Pks0193.jpg
விவாதங்கள் திசை மாறிப்போகின்றன. இத்துடன் இந்தப் பதிவிற்கான பின்னூட்டங்களை நிறுத்திக்கொள்கிறேன்.