தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Thursday, 22 August 2013

சதுரகிரி-பகுதி -6

சதுரகிரி-பகுதி -6

இந்த தாணிப்பாறை கருப்ப சாமி கோவிலில் இருந்து மீண்டும் நமது சதுரகிரி மலை பயணம் தொடர்கிறது ,

நான் ஏற்கனவே சொன்னது போல இந்த கருப்ப சாமி கோவிலின் எதிரில் உள்ள சதுரகிரிக்கு  பாதையை அமைத்த பச்சையம்மாள் என்ற சிவ பக்தையின் சமாதிக்கு பின்புறம்  உள்ள காட்டு பகுதியில் காலைகடன்களை முடித்து அருகில் உள்ள  சிறிய தடாகத்தில் குளித்துவிட்டு...

  பின்னர் கருப்ப சாமியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்து நமது பயணத்தை தொடர எத்தனிக்கையில் ,

 நமது நண்பர் வெங்கடேஷ் என்பவர் இந்த கருப்ப சாமி கோவிலின் தற்போதைய பூசாரியிடம் இந்த தலம்  பற்றியும் அதன் வரலாறு பற்றியும் நமக்கு கூறவேண்டும் என கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க அவரும் உற்சாகமாக தலபுராணம் செய்தருளினார் ,........


(இந்த கோவிலின் பூசாரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அதாவது 6 மாதம் 1 வருடம் எனதங்களுக்குள் முறைவைத்து 
மாறிக்கொண்டே இருப்பர் என்பது ஆச்சரியமான விசேடம் )

........ஆவலுடன் கேட்டு பின்னர் நடையை கட்டினோம் , ஆரம்பமே 
அருமை சுற்றிலும் காட்டு புதர்கள் இடதுபுறம் கௌண்டனிய  காட்டாறு சலசலத்துக்கொண்டு ஓடுகிறது ,...வலதுபுறம் மலைக்குன்று... எதிரே காடு ,... சரி பாதை ?.........













.......அதுதான் நம் முன்னால் நீண்டு கொண்டே போகிறதே ,... சரியான காட்டு பாதை, அதில் சில இடங்களில் கற்கள் கொண்டு சில அடி தூரம் படிக்கட்டு அமைத்துள்ளனர் ,( பாதையை அமைத்த பச்சையம்மாளை நினைக்க தோன்றுகிறது) ,


அப்படியே சிறிது தூரம் போனால் .... பின்னர் இடது புறம் பாதையில்  ஒரு சிறு திருப்பம்  இப்போது நாம் கௌண்டனிய  ஆற்றை இடதுபுறம்  கடக்கிறோம் ..

..இப்போது நாம் குதிரை குத்தி பள்ளம் அல்லது குதிரை ஊற்று என்று அழைக்கப்படும் இடத்திற்க்கு வருகிறோம் ....






பின் மீண்டும் வலதுபுறம் வடக்குநோக்கி நமது பயனம்  தொடர்கிறது ....ஏன்  இந்த பெயர் வந்தது என்றால் அந்த காலத்தில் ஆங்கிலேய துரைமார்கள் அவர்களுக்கு முன்னால் நம் சிறு ,குறு,மன்னர்கள் ..? பின்னர் ஜமின் ..ஆகியோர்களின் குதிரைகள் இந்த இடம் வரை தான் வரும் ..

இந்த இடத்தில் உள்ள படிவெட்டி பாறையில் ஏற முடியாமல் திணருமாம் ...ஆகவே குதிரைகளை இங்கேயே மரத்தில் கட்டிவிட்டு .....அப்புறம் என்ன நாட்டு ராஜாக்கள் எல்லாம் நடைராஜாக்கள் தான் ...அதுதாங்க நடைபயணம் தான் சாத்தியம் என்பதைஇந்த படங்களை பார்த்தபின்  நீங்களே கண்டுகொள்வீர்கள் ...


இதோ இந்த நண்பர் இந்த பதிவேட்டி பாறை மீது ஏறுகிறார் அல்லவா  இடன் வலது புறம் ஒரு அழகிய தடாகம் உள்ளது ...கொஞ்சம் ஆழம் தான் .. மிக தூய்மையான நீர் ... நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி மகிழலாம் ...மற்றவர்கள் தடாகத்தின் அருகில் செல்வதை தவிர்த்திடுங்கள் பலர் இந்த தடாகத்தில் நீச்சல் தெரியாமல்  இறந்திருக்கிறார்கள் .....(பெரும்பாலும் குடித்துவிட்டு தான் ...)





கொஞ்சம் கவனம் இந்த இடத்தில் இவ்வளவு தான் இடம்... சற்று  இடது ஓரமாக பாறையை ஒட்டி செல்வது நலம் ....


இடித்துக்கொண்டு செல்வதை தவிர்க்கவும் ....வயதானவர்கள் , பெண்கள் ,குழந்தைகளுக்கும் மேலே ஏறி வருபவர்களுக்கும் முதலிடல் தரவும் ....

இந்த குதிரை ஊற்று பகுதியில் அம்மாவாசை , பௌர்ணமி நாட்களில் வெள்ளரி பிஞ்சு ,அண்ணாச்சி பழ  தற்காலிக கடைகள் உண்டு , 

வேதனைக்குரிய விடயம் இந்த தடாகம் வரை, அருகில் உள்ள கல்லூரியில் இருந்து  இளம் ஜோடிகள் வந்து அழிச்சாட்டியம் செய்வது தான்....  

பீர், மற்றும் மதுபானங்கள் கொண்டுவந்து குடித்துவிட்டு தடாகத்தில் கும்மாளமிடுவது தற்போது அதிகரித்துவிட்டது ....

இந்த புனித மலையில் இதுபோன்ற விடயங்கள் தேவையா ?.. எல்லாம் அந்த சுந்தர மகாலிங்கத்திற்கே  வெளிச்சம் .....

இங்கிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வருவது அத்திரி மகிரிஷி வனம் அல்லது அத்தி ஊற்று.. சங்கிலி பாறை  என்று பலவாறு  அழைக்கபடும் மிக புனிதமான மற்றும் ரம்மியமான இடம் ....


அடுத்த  பதிவில் காணலாம் ..........


Wednesday, 7 August 2013

பில் செட்டில்டு

 பில் செட்டில்டு 

                                            டாக்டர் . கோபெர்ட் ஜில்லி ,இந்த பெயரை கேள்விபட்டு 
இருக்கிருகிரீர்களா ?  மருத்துவ உலகில் இவர் மிகவும் பிரபலமானவர், அமரிக்காவில் இவர் மிகவும் அறியப்பட்ட புகழ் பெற்ற மருத்துவர் ,வேறும் மருத்துவத்திற்காக மட்டும் அல்ல சிறந்த பண்பிற்காகவும் தான் இவர் புகழப்பட்டார் .

          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

                          டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின்  மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர்,மிகவும் மன  கலக்கத்துடன் வரப்போகும் மெடிக்கல் பில்லுக்காக  காத்திருந்த ஒரு வயதான பெண் நோயாளியிடம் கூறிய இந்த வார்த்தைகளின்  பின்னணி  தான்  டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின் புகழை உச்சத்திற்கு உயர்த்தியது .


அட ! அப்படி என்னதான்  டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின் வாழ்வில் நடந்தது ?


                                 "ஒன்றும் இல்லை " ஆம் நிச்சயமாக  ஒன்றும் இல்லை தான் உண்மையில் சிறுவன் ஒருவனுக்கு சாப்பிடுவதற்கு அப்போது ஒன்றும் இல்லை , வறுமையை தவிர ஒன்றும் இல்லை.ஆனாலும் அவன் சும்மா இருக்கவில்லை 13 வயதில் வயிற்றில் பசியுடன் தினம் தினம் வறுமையுடன் போராடினான் அவன் , தான் வசிக்குக்ம் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் பாகெட் போடுவது,வயதானவர்களுக்கும் ,பிறருக்கும் ஒரு பென்னி காசு அன்பளிப்பிற்கு காய்கறிகள் வாங்கிகொடுப்பது ,போன்ற வேலைகள் செய்து பசியுடன் போராடி போராடி படித்தான் அவன். 

                      சில நேரங்களில் அவனுக்கு நோட்டு புத்தகம் வாங்ககூட காசிருக்காது...,அக்கம் பக்கம் இருக்கும் பிள்ளைகள் பாதி எழுதிவிட்டு தூக்கிபோடும் நோட்டு புத்தகங்களை சேகரித்து அவற்றின் எழுத்தாத பக்கங்களை தானே பைண்டு செய்து பயன்படுத்திகொள்வான் அவன் .


"கொடிது கொடிது வறுமை கொடிது ! அதனினும் கொடிது இளமையில் வறுமை ! "

அனுபவித்து பார்த்தல் தான் அதன் பொருள் எவ்வளவு வேதனை நிரம்பியது என்று தெரியும். 

                  அது அந்த மாதத்தின் கடைசி வார விடுமுறை நாள். வீட்டிலும் உணவில்லை கையிலும் காசில்லை..,  விடுமுறை நாள் ஆதலால் வேலையும் இல்லை,ஆதலால் உணவும் இல்லை.. , சிறுபிள்ளை.. பாவம் பசி தாங்கவில்லை ஆனாலும் தன்மானத்தையும் ,சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனதில்லை , ஆனாலும் பசி.. ! சரி.., தான் அன்றாடம் காய்கறி வாங்கிகொடுக்கும் ஒரு பாட்டியின் வீடு  அதோ அந்த தெருவின் ஓரத்தில் இருப்பது அவனுக்கு தெரியும்.. , அவளிடம் சென்று ஒரு ரொட்டித்துண்டு கடனாக கேட்போம், பின்னர் எதாவது வேலை செய்துகொடுத்து கடனை கழித்துவிடுவோம் என எண்ணிக்கொண்டு அவள் வீட்டின் கதவை தட்டினான் அந்த சிறுவன் .

                                    சிறிது நேரத்திற்கு பிறகு கதவு திறக்கப்பட்டது.. , திறந்தது ஒரு இளம்பெண்.. ! சிறுவனுக்கு சப்பென்று ஆகிவிட்டது ,இதற்குமுன் அவளை அங்கு பார்த்ததில்லை,ஏதோ விருந்தாளி வந்திருக்கிறார்  போல... என அவன்  எண்ணிக்கொண்டு, அவளிடம் தன் வறுமையை காட்டிக்கொள்ள மனதில்லாமல் எதோ வந்துவிட்டேன் என  என்னும் படியாக, ஒன்றுமில்லை ..பாட்டியை பார்க்க வந்தேன் .அவள் இல்லை போலிருக்கிறது.. ,சரி, கொஞ்சம் தண்ணீர்  தாருங்கள் அம்மணி.. என்று பணிவாக கேட்டான் . அவள் அவனை ஓருமுறை நன்றாக உற்றுபார்த்த பின் உள்ளே சென்று ஒரு கோப்பை நிறைய  பால் எடுத்துவந்து அவனிடம் தந்தாள் ,

                       அந்த சிறுவன் விநாடியின் ஒருகணம் மட்டும் தயங்கி பின்னர்  அந்த பாலை வாங்கி குடித்தான்,பின் தன்  கவுரவத்தை சிறிதும் விட்டுகொடுக்காமல் அந்த இளம்பெண்ணை பார்த்து ''நான் பருகிய இந்த பாலுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் அம்மணி "என கேட்டான்.

                        அதற்குக்கு அவள் " நான் பால் வியாபாரம் எதும்  செய்யவில்லை... உன் கண்களில் பசியை பார்த்தேன்.. ,பசிக்குத்தான் பால் கொடுத்தேன்... காசுக்கு அல்ல".. என்றாள்.

                               அந்த சிறுவனின்  கண்கள்  கலங்கியது, கண்ணீர் வரும்முன்னர் முகத்தை திருப்பிக்கொண்டு "நன்றி அம்மணி" என கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டான்.

                                           வருடங்கள் பல ஓடியது , கோபெர்ட் ஜில்லி நன்றாக படித்து பெரிய மருத்துவர் ஆனார் , நகரத்தில் ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவி அதன் தலைமை மருத்துவர் ஆனார் .

                                           சில வருடங்களுக்கு பின் நோயாளிகளின் நிலைமை பற்றிய தனது வழக்கமான   மேற்பார்வை பணியின்போது ஒரு வயதான பெண் நோயாளியின் அருகில் வந்ததும் ஒருகணம் அவளை உற்று பார்த்தார் பின் அவளிடம் நீங்கள் எந்த ஊர் ? உங்கள் பெயர் என்ன ? உங்களின் வீட்டு முகவரி என்ன ? என்று சில கேள்விகள் கேட்டார்.. ,அப்போது அவர் கண்கள் சற்று பணித்தது, அதை வெளியில் காட்டிகொள்ளாமல் அவளின் கேஸ்பைலினை வாங்கிபர்ர்த்து இவருக்கு என்ன என்ன மருத்துவ சிகிச்சைகள் தேவைபடுகிறதோ அனைத்தையும் செய்யுங்கள் என பிரத்தியேக மருத்துவ குழுவிற்கு ஆணைபிறப்பித்துவிட்டு மேற்கொண்டு அவளிடம்  ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

                                   அந்த வயதனா பெண்ணிற்கு அளிக்கப்பட்ட உயரிய ராஜ வைத்தியத்தில் விரைவாக அவள் குணமடைந்துவிட்டாள் , அனால் இப்போது அவளுக்கு ஒரே கவலை,தலைமை டாக்டர்  தன்னை பார்த்து சென்றது முதல் தனக்கு அளிக்கப்பட்ட இவ்வளவு உயர்ந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை பில் வருமோ ? நமிடம் உள்ள பொருளாதாரத்திற்கு இதனை எப்படி அடைப்பது ? என்று பலவாறு சிந்தித்துகொண்டுஇருக்கும் போது , அந்த மருத்துவமனையின் செவிலியர் ஒருவர் அவள் அருகில் வந்து குனிந்து மிகவும் பணிவுடனும் முகத்தில் ஆச்சரியம் கலந்த புன்னகையுடனும்  அந்த  வயதனா பெண் காதில் கூறியதாவது ..... 


          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

      " நீங்கள் டிச்சார்ஜ் செயப்பட்டு விட்டீர்கள்.. வீட்டிற்கு செல்லலாம் , பணம் ஏதும் செலுத்ததேவை இல்லை...  "

                   அந்த வயதனா பெண் வேறு  யாரும் இல்லை, 13 வயதில் வறுமையின் பிடியில் இருந்தபோது அந்த கோபெர்ட் ஜில்லி என்ற சிறுவனின் கண்களில் பசியை கண்ட அதே அந்த இளம்பெண் தான், இந்த வயதான பெண் நோயாளி ...

          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

 நாமும் தான் அன்றாடம் கேட்கிறோம் நம் நண்பனை பார்த்து. டாஸ்மாக் பாரில் 
             " மச்சி பில் செட்டில்டா ?"

" செட்டில் பந்நீர்லாம்   ஆனால் ...? ஹி..  ஹி ...கொஞ்சம் பத்தல உன்  ATM  கார்டை  ஐ எடு ...நௌ  பில் செட்டில்டு...மச்சி ... " 

சிந்தனை செய் மனமே !! மனமே !!சிந்தனை செய்மனமே..
அட ..! அப்படியா ..! 

Saturday, 13 July 2013

பரோட்டா பிரியன்

பரோட்டா  பிரியன் 

Photo: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!!
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .
நன்றி -https://www.facebook.com/pages/உலக-தமிழ்-மக்கள்-இயக்கம்/210804085646629?sk=wall

தமிழகத்தின் இரண்டாவது தேசிய  உணவு எது தெரியுமா அதுத்தான் நமது பரோட்டா  எந்த ஊரிலும் கிடைக்கும் எந்த நேரத்திலும் கிடைக்கும் அதைவிட பரோட்டாக்கு ஊத்தும் குழம்பு அதுதாங்க சில இடங்களில் சால்னா சில இடங்களில் சேர்வா சில இடங்களில் குருமா இப்படி பல பெயர்கள் கொண்ட நமது பச்சை தமிழனின்  அதிசிய கண்டுபிடிப்பான  பரோட்டாவை ஊறவைத்து உண்டு மகிழும் உன்னத ஊற்று !!!
  

  

உலகிலேயே இந்த பரோட்டாவை அதிகம் சாப்பிடுபவர்கள்  நமது தமிழகத்தில்  உள்ளவர்கள தான்  என புள்ளிவிபரம் சொல்கிறது

அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுவிருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .
   
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, 
   
அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி,

 திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

 
நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
  

இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .
  

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .
 

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கல்  ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .

Saturday, 23 February 2013

தேவதாஸ் உண்மை நாவல்


தேவதாசும் நானும் 
தேவதாஸ் உண்மை நாவல் 

தேவதாஸ் இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் தேவதாஸை பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் நாவலை வாசிக்கும் வரை நானும் காதலின் உன்னத நாயகனாகவே தேவதாஸை நினைத்திருந்தேன். நாவலை வாசித்தபிறகு அந்த எண்ணம் முழுமையாக மாறிவிட்டது.

சரத்சந்திர சட்டோபாத்யாயா வங்காளத்தின் பெரும்புகழ்கொண்ட எழுத்தாளர். தாகூரை விடவும் அதிக பேரோடு இருந்தார் என்கிறார்கள். பக்கிம் சந்திரர், தாகூர் போன்றவர்கள் சமூகமாற்றம், சுதந்திர போராட்டம், மெய்தேடல் என்று தீவிரமான தளங்களில் படைப்புகளை எழுதிக் கொண்டிருந்த போது சரத்சந்திர் எளிமையான, சுவாரஸ்யமான காதல்கதைகளை, பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட குடும்ப நாவல்களை எழுதியிருக்கிறார்.

தேவதாஸ் நாவல் அளவில் சிறியது. அதை ஒரு குறுநாவல் என்று சொல்லலாம். 1917ம் ஆண்டு வெளியாகி உள்ளது. சரத்சந்திரர் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பர்மாவில் சில காலம் வேலை செய்திருக்கிறார். முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தவர். இந்த 93 வருசங்களில் நாவல் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கபெற்றிருக்கிறது. இன்று வாசிக்கையில் 90 வருசங்களுக்கு முந்தைய நாவல் என்ற பழமை இதில் துளியுமில்லை. சமகாலத்தில் எழுதப்பட்ட பிரதியை போன்றே உள்ளது. சில அத்யாயங்கள், பத்திகள் மட்டுமே அதிகப்படியானதாக, தேவையற்ற விளக்கமாக தென்படுகிறது. மற்றபடி நாவல் ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய சுவாரஸ்யத்தை இப்போதும் தனக்குள் கொண்டிருக்கிறது.

நாவலை வாசித்து முடிக்கையில் தேவதாஸின் காதலை விடவும் தேவதாஸை காதலித்தவர்களே முக்கியமானவர்களாக மாறுவதை உணர முடிந்தது. நாவல் முழுவதும் குற்றமனப்பாங்கில் உருவான வேதனையை தாங்கி கொள்ளவே தேவதாஸ் குடிக்கிறான். அவன் காதலில் தோற்கவில்லை மாறாக காதலைப் புறக்கணிக்கிறான். அதன் காரணமாக தன்னை அழித்து கொள்கிறான். அவன் பார்வதியையும் காதலிக்கவில்லை. சந்திரமுகியையும் காதலிக்கவில்லை. ஆனால் அந்த இரண்டுபெண்களும் தேவதாஸைக் காதலிக்கிறார்கள். அவனுக்காகவே வாழ்கிறார்கள்.

தேவதாஸை காதலிப்பது என்பதை தங்களது இருப்பின் ஆதாரமாக இரண்டுபெண்களுமே கொண்டிருக்கிறார்கள். தேவதாஸ் அவ்வளவு தீவிரமான காதலன் இல்லை. அவன் சிறுவயதில் இருந்தே தனது குடும்பப் பெருமை. தனிமை, வசதியான வீட்டுபிள்ளைகளின் முரட்டுதனம், அதிகாரம் இவற்றால் உருவாக்கபடுகிறான்.

பாரு என்ற பார்வதி தான் தேவதாஸின் அகத்தை உருவாக்குகிறாள். அவனை புரிந்து கொள்ளவும் அவனது முரட்டுதனத்தின் பின்னால் பகிர்ந்து கொள்ளபடாத அன்பு இருப்பதையும் அடையாளம் கண்டு கொள்கிறாள். அதை தேவதாஸ் தன் வாழ்நாளின் இறுதியில் தான் அடையாளம் காண்கிறான். தேவதாஸின் மிரட்டல்கள், அடி யாவற்றையும் பார்வதி ஏற்றுக் கொள்கிறாள். பார்வதியை பிரிந்து கல்கத்தாவிற்கு படிக்க போன தேவதாஸ் அவளைப்பற்றி கவலைபடவேயில்லை. நினைத்து ஏங்கவேயில்லை. அவளை மறந்து நகரவாசியாகி உல்லாசமும் அலங்காரமுமாக தன்னை உருமாற்றி கொண்டுவிடுகிறான். ஆனால் பார்வதி அவனைக் காதலிக்கிறாள். பிரிவால் வேதனைபடுகிறாள். பார்வதிக்கு தேவதாஸைப் பற்றி நினைத்து கொண்டேயிருப்பது தான் அன்றாட வேலை.

பள்ளியில் அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சை பார்த்து வேதனைபடுகிறாள். தேவதாஸின் வீட்டினை பார்த்து பார்த்து பெருமூச்சிடுகிறாள். தேவதாஸ் நகரத்தில் படித்த யுவனாக திரும்பி வருகையில் பட்டிக்காட்டு பெண்ணாக திறந்த மனதோடு அவனிடம் அன்பைச் செலுத்துகிறாள். தேவதாஸ் பாருவை காதலித்தை விடவும் பாரு தேவதாஸைக் காதலித்து அதிகம். அவள் தேவதாஸ் முன்னால் அடக்கமான பெண்ணில்லை. மாறாக காதலின் உன்மத்தம் பிடித்தவள்.

அவள் 90 வருசங்களுக்கு முந்தைய கிராமத்தில் வசித்த முக்காடு இட்ட அடங்கி ஒடுங்கிப்போகும் வங்காள குடும்ப்ப் பெண்ணை போல உருவாக்கபடவில்லை. மாறாக அவள் காதலுக்காக எதையும் செய்ய தயராக இருக்கிறாள். தன்னை நம்புகிறாள். தனது கனவுகள் நிறைவேற அவள் தைரியமாக தேவதாஸைத் தேடிப் போகிறாள். தேவதாஸிடம் முதன்முறையாக காதலை சொல்பவள் பார்வதியே. உண்மையில் தேவதாஸ் அந்தக் கால குடும்ப பெண்களை போல அதை கண்டு அதிர்ச்சியடைகிறான்.

எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். ஆசை ஒருபக்கமிருந்தாலும் வீட்டின் பராம்பரிய பெருமையை காக்க அவளை விட்டு விலகிப் போகலாம் என்று நினைக்கிறான். பெற்றோரை காரணம் காட்டி சமாதானம் சொல்கிறான். பார்வதி அதை நம்பவில்லை.

இரவில் யாரும் அறியாமல் ரகசியமாக தேவதாஸைத் தேடி வீடு வந்து காதலை சொல்லும் பார்வதியிடம் தனது ஆசையின் காரணமாக பெற்றோர்கள் அவமதிக்கபட வேண்டுமா என்பதற்கு பாரு அவர்களை அவமதிப்பதால் ஒன்றும் ஆகிவிடாது தேவதாஸ். தயங்காதே. காதல் தான் முக்கியமானது என்கிறாள்.

இவ்வளவு துணிச்சலாக தன் காதலை வெளிப்படுத்திய பெண்ணாகவே பாரு நாவலில் சித்தரிக்கபடுகிறாள். உண்மையில் தேவதாஸ் காதலை அறியவும் இல்லை. காதல் சார்ந்து முடிவு எடுக்க முடியவுமில்லை. அவன் பாருவைப் புறக்கணிக்கிறான். அந்த புறக்கணிப்பு பாருவை அவன் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறது. அவள் திருமணத்தின் முன்புவரை தேவதாஸ் தன்னைத் திருமணம் செய்து கொண்டுவிடுவான் என்று நம்புகிறாள். திருமணமான பிறகும் தேவதாஸ் என்றாவது தன்னைப் புரிந்து கொள்வான் என்று ஏங்குகிறாள்.

நாவலில் வரும் பார்வதிக்கு வயது பதிமூன்று. தேவதாஸின் வயது பத்தொன்பது. நிறைய நேரங்களில் இது சிலப்பதிகாரத்தை வாசித்து கொண்டிருப்பதை போன்ற மனமயக்கத்தை தந்தபடியே இருந்தது.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் கல்விக்காக நகரங்களை தேடி செல்வது வசதிபடைத்தவர்களின் இயல்பு. இங்கிலாந்திற்கும், கல்கத்தாவிற்கும் இலங்கைக்கும் கல்விக்காக அனுப்பட்ட ஜமீன்தார்கள்,ராவ்பகதூர் வீட்டுபிள்ளைகளின் கதைகள் நிறையவே இருக்கின்றன. தங்களது குடும்ப கௌரவத்தை காப்பாற்றவும் அதிகாரத்தின் உச்சநிலையை அடையவுமே இவர்கள் கல்வியைத் தேர்வு செய்தார்கள்.

தேவதாஸ் நகரத்திற்குச் சென்றபோதும் கல்வியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. அவனுக்கு வாழ்க்கை சுகமாக கழிய வேண்டும் அவ்வளவே. அதிலும் கட்டுபாடுகள், ஒழுக்கவிதிகள், பயம் இவையில்லாத தினசரி வாழ்க்கைக்காகவே அவன் கல்கத்தாவிற்கு போகிறான். படித்து திரும்பிவந்த தேவதாஸ் முன்பு போல இயல்பாக இல்லை என்பதை பாரு கண்டுபிடிக்கிறாள். ஒருவேளை தேவதாஸின் மனசாட்சியை போலவே அவள் நடந்து கொள்கிறாள் என்பதால் தானோ என்னவோ தேவதாஸ் அவளை அடைவதில் ஆர்வம் காட்டவேயில்லை.

நாவலில் தேவதாஸ் பார்வதி கல்யாணம் பேச்சு நடக்கிறது. ஆனால் தேவதாஸின் அம்மா அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். காரணம் பார்வதியின் வீட்டில் அவர்கள் பெண் கொடுக்கும் போது மாப்பிள்ளையிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பெண்ணை அனுப்பும் வழக்கம் கொண்டவர்கள். அதாவது மாப்பிள்ளை சீதனம் தந்து பெண்ணை கட்டிக் கொள்ள வேண்டும். இது தான் அவர்களின் குலவழக்கம். ஆனால் அதை பார்வதியின் அப்பா ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். தன்னுடைய பெண்ணை விற்பதைப் போல இந்தச் செயல் இருக்கிறது. ஆகவே அவளை கட்டிக் கொள்ள போகிறவனிடம் தான் பணம் பெறப்போவதில்லை என்று கூறுகிறார்.

இதை அறியாமல் தேவதாஸின் அம்மா அவர்கள் பெண்களை விலை கூறி விற்ககூடிய குடும்பம் ஆகவே அவர்களோடு சம்பந்தம் வைக்க கூடாது என்கிறாள். இந்த பிரச்சனையோடு அவர்கள் பக்கத்து வீடாகவும் இருக்கிறார்கள். ஆகவே அடுத்த வீட்டிற்கு பெண் எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது. அது நாளை அவமானமாக கருதப்படும் என்கிறாள். இதை தேவதாஸ் நம்புகிறான். ஏற்றுக் கொள்கிறான். அது தான் பார்வதியை கோபபடுத்துகிறது. பார்வதியின் முன்னால் எப்போதுமே தேவதாஸ் அடங்கியவனாகவே இருக்கிறான். அவனால் தன்னை மறைத்துக் கொள்ள முடிவதில்லை. வெளிச்சத்தை தூக்கி பிடிக்கும் போது இருள் எதிர் நிற்காமல் ஒடிவிடுவதை போல பார்வதி நேரடியாக அவனிடம் கேள்விகேட்கும் போது அவன் தடுமாறுகிறான். உண்மையை மறைக்க முடியாமல் சிரமப்படுகிறான்

நாவலில் வங்காள கிராமத்தில் உள்ள ஜமீன்தார் குடும்பங்களின் அழிவு மறைமுகமாக மிக நுட்பமாக சித்தரிக்கபடுகிறது. குறிப்பாக தேவதாஸின் அண்ணன், வேலையில்லாமல் ஊதாரியாக இருப்பது. படிப்பை முடிக்கும் முன்பே அவனுக்கு திருமணம் செய்து வைத்தது. அவன் மனைவி பிள்ளைகள், ஜமீன்தார் சொத்துகள் அவர்கள் கண்முன்னே அழிவது என்று ஒரு வீழ்ச்சியின் பாடலை அவர்கள் குடும்பம் முணுமுணுத்தபடியே உள்ளது. அதிலிருந்து வெளியேற விரும்புகிறான் தேவதாஸ். அதற்குள் வந்து வாழ விரும்புகிறாள் பார்வதி.

திரைபடங்களில் பார்வதியை திருமணம் செய்து கொள்ள போகின்ற மனைவியை இழந்த ஜமீன்தார் வயதான ஆளாக காட்டப்படுகிறார். நாவலில் அவருக்கு வயது நாற்பது. ஆனால் அவருக்கு இருபது வயதில் மகன் இருக்கிறான். மகள் திருமணமாகி தனியே வாழ்கிறாள். பார்வதி இரண்டாம் மனைவியாக வாழப்போகின்ற திருமணத்தை வெறுக்கவில்லை. அது தான் தனது வாழ்க்கை என்றால் அதை எப்படி எதிர்கொள்வது என்று மட்டுமே யோசிக்கிறாள். செயல்படுத்துகிறாள்.

ஆனால் திருமணம் ஆன உடனே காதலை மறைத்து கொண்டு தன்னை தானே ஏமாற்றிக் கொள்ள அவள் முயற்சிக்கவில்லை. திருமணம் தனக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடி. அதனால் தேவதாûஸ விட்டு தான் பிரிய நேரிடுமே அன்றி அவனை ஒரு போதும் மறக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறாள். பாருவின் காதல் தான் நாவலெங்கும் கொப்பளிக்கிறது. திரைப்படங்களை விடவும் வலிமையாக அவளை எழுத்தில் சரத் சந்திரர் உருவாக்கியிருக்கிறார்.

குறிப்பாக அப்பாவின் மரணத்தின் பிறகு தேவதாஸ் கிராமத்தில் இருக்கிறான். அங்கே தன்னை தேடிவரும் பார்வதியிடம் தனக்காக ஒரு பெண் பார்க்க முடியுமா என்று கேட்கிறான். பெண் எப்படியிருக்க வேண்டும் என்றதும் உன்னை போலதான் என்று சொல்கிறான். அப்படி ஒரு பெண்கிடைப்பது எளிதில்லை என்கிறாள் பார்வதி.

அது உண்மையே. நாவலை இயங்க செய்வது பாருவின் செயல்களே. அதற்கு தேவதாஸ் எதிர்வினை மட்டுமே செய்கிறான்.தேவதாஸிடம் கனவுகள் இல்லை. அவன் எதிர்காலத்தை நினைத்தே பார்ப்பதில்லை. கடந்தகாலமும் அவனை சந்தோஷம் கொள்ள வைக்கவில்லை. அவன் நிகழ்காலத்தில் மயங்கி கிடக்க விரும்புகிறான். அவனது தடுமாற்றங்களே அவனை வெளியே இழுக்கின்றன.

தேவதாஸிற்கு பார்வதி தேவைப்படுகிறாள். அதற்கான காரணம் காதல் இல்லை. மாறாக தன்னை புரிந்து கொண்ட தனது செயல்களை பாராட்டுகின்ற, தன்னை எந்த கட்டுபாடும் இல்லாமல் நேசிக்கின்றன ஒரு ஆள் அவனுக்கு தேவை. அது பார்வதியாக மட்டுமே இருக்கிறாள். அவளை இழந்துவிட்டதை தேவதாஸ் மிக தாதமாகவே உணர்கிறான். எப்படி அவளை மீட்பது என்று தெரியவில்லை. அப்போதும் அவனை சமூக அந்தஸ்து தடுக்கிறது. அவளுக்கு நல்வாழ்த்து சொல்லிவிட்டு தைரியமற்ற தன் இருப்பை தானே அழித்து கொள்வது என்று முடிவு செய்கிறான். குடிக்காமல் போயிருந்தால் தேவதாஸ் மூர்க்கமான குற்றவாளியாகியிருப்பான். அல்லது மனநிலை கலங்கி போயிருப்பான்.

நகரத்திற்கு செல்பவர்கள் கெட்டு சீரழிந்து போவார்கள் என்ற நம்பிககை நீண்டகாலமாகவே இந்தியாவின் கிராமங்கள் அத்தனையிலும் இருந்தது. அதை மையமாக கொண்டு நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நாவலின் வெற்றிக்கும் அதுவே காரணமாக இருந்திருக்க கூடும். ஒருவேளை தேவதாஸ் கல்கத்தாவிற்கு அனுப்பபடாமல் கிராமத்திலே இருந்திருந்தால் அவன் பாருவை திருமணம் செய்து கொண்டிருக்க கூடும். வேறு சம்பவங்களின் வழியே கதை நீண்டிருக்க கூடும்

நாவல் திரைப்படம் இரண்டிலுமே எனக்கு மிகவும் பிடித்தமான ஒரே கதாபாத்திரம் தேவதாஸின் வேலையாள் தர்மதாஸ். மிக உயர்வான மனிதர் அவர். அவர் தான் தேவதாûஸ வளர்க்கிறார். தேவதாஸின் துடுக்கத்தனத்தை. கோபத்தை அவர் ஒருவரே எதிர்கொள்கிறார். தேவதாஸ் கல்கத்தாவிற்கு படிக்க சென்ற போது கூடவே போகிறார். தேவதாஸ் தவறான பாதையில் செல்கிறான் என்று தெரிந்தும் அவனை தடுக்கமுடியாதபடி எஜமான விசுவாசத்தில் அவன் சொல்வதை எல்லாம் செய்கிறார்.

பார்வதி ஒரு முறை தர்மதாஸிடம் தேவதாஸ் எப்படியிருக்கிறான் என்று உண்மையை சொல்லுங்கள் என துயரம் ததும்ப கேட்கிறாள். மனம் உடைந்து தலையில் அடித்தபடியே என் கண்முன்னே அவர் மது. வேசை நோய்கள் எனகொஞ்சம் கொஞ்சமாக தன்னை அழித்துகொண்டிருக்கிறார். அதை காண்பதற்கு பதில் செத்துபோய்விடலாம் என்கிறார்.. நோய் முற்றி உடல் நலமில்லாமல் தேவதாஸ் ஒடுங்கி கிடக்கும் போதும் தர்மதாஸ் கூடவே இருக்கிறார். மித மிஞ்சி குடித்துவிட்டு சாலையில் விழுந்துகிடக்கும் தேவதாûஸ தூக்கி போய் பராமரிக்கிறார். தேவதாஸின் வீழ்ச்சிக்கு காரணம் அவன் பாருவை புறக்கணித்ததே என்று அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் அதை வெளிப்படுத்தவேயில்லை, இறுதியாக ரயிலில் வரும்போது உறங்கி கொண்டிருந்த தர்மதாûஸ எழுப்பாமல் பார்வதியின் ஊரை நோக்கி அவசரமாக ரயில்நிலையத்தில் இறங்கிவிடுகிறான் தேவதாஸ். மழையோடு மாட்டுவண்டியில் சென்று பார்வதியை பார்க்காமலே இறந்தும் விடுகிறான்.

தர்மதாஸ் என்னவாகியிருப்பார். ரயிலில் கண்விழித்த தர்மதாஸ் தனது எஜமானனை காணாமல் உடனே அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி தேடி அலைந்திருப்பார். காசிக்கு போகலாம் என்று சொல்லி ரயில் ஏற்றியதால் காசியில் அலைந்து தேடியிருக்க கூடும். சாகும்போது தர்மதாஸ் கூட தேவதாஸின் அருகாமையில் இல்லை. தன்னை முழுமையாக நேசித்த பார்வதியை, தர்மதாûஸ பிரிந்து வந்ததன் தண்டனை போலவே அவனது மரணம் அமைகிறது. அந்த மரணம் திரைப்படங்களை விட நாவலில் மிக உக்கிரமாக எழுதப்பட்டிருக்கிறது.

அநாதை பிணமாக கிடக்கிறான் தேவதாஸ். அவன் பிராமணன் என்றபோதும் அவன் உடலை தொட்டு இறுதிகாரியம் செய்ய எவரும் முன்வரவில்லை. அவனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை எடுத்து கொண்டு ஒரு சூத்திரன் அவனை எரிக்க முன்வருகிறான்.அவன் தேவதாûஸ முழுமையாக எரிக்கவில்லை. பாதி எரிந்து போன அவன் உடலை காகங்களும் நாய்களும் நரிகளும் இழுத்து கொண்டு தின்கின்றன. சாவிற்கு பிறகும் தேவதாஸ் நிம்மதியடையேவில்லை.

பார்வதியின் எதிர்உருவம் போலவே சந்திரமுகி நாவலில் உருவாக்கபட்டிருக்கிறாள். அவள் தேவதாûஸ விட வயதானவள். பார்வதியை விடவும் அவள் அழகி. வசதியானவள். ஆடல்பாடல்களில் தேர்ந்தவள். அவளுக்கு எண்ணிக்கையற்ற ஆண்களை தெரியும். நகரமே அவள் கைவசம். ஆனால் தேவதாஸ் அவளை முதல்சந்திப்பிலே வெறுக்கிறான். அந்த வெறுப்பின் அடையாளமாக பணம் தந்து அலட்சியமாக வெளியேறி போகிறான்.

தன்னை வெறுக்கின்ற ஒருவனை அப்போது தான் சந்திரமுகி சந்திக்கிறாள். தான் அணிந்துள்ள வேஷத்தை ஒருவன் சுட்டிகாட்டுகிறான் என்ற உண்மை அவளைச் சுடுகிறது. அவள் முதல்சந்திப்பிலே தேவதாஸ் மீது ஈர்ப்பு கொண்டுவிடுகிறாள். அவனை மறுமுறை பாரக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

தேவதாஸ் பார்வதியை புறக்கணித்தை போலவே அவளையும் புறக்கணிக்கிறான். மறுமுறை அவளை சந்திக்க போன போது நாள் கணக்கில் குடிக்கிறான். பொதுவில் குடிப்பவர்களை வெறுக்கும் சந்திரமுகி அவனை குடிக்க அனுமதிக்கிறாள். அவன் போதையில் பார்வதியை பற்றி உளறுகிறான். நினைவு தெளிந்தவுடன் சந்திரமுகியை வெறுக்கிறான். வெறுப்பில் வளர்கிறது அவளது காதல். அவள் தன்னை மாற்றிக் கொள்கிறாள். எல்லா பொருள்களையும் விற்றுவிட்டு ஒரு வேலைக்காரியாக வாழப்போவதாக தேவதாஸிடம் சொல்கிறாள். அதன்படியே கல்கத்தாவை ஒட்டிய கிராமம் ஒன்றிற்கு இடம் பெயர்கிறாள்.

அதே நேரம் பார்வதி வாழ்வில் வசதி அடைகிறாள். பெரிய வீடு. வேலையாட்கள், குடும்ப பொறுப்பு என்று எதிர்திசையில் செல்கிறாள். இருவருமே தேவதாûஸ காதலிப்பதால் நெருக்கடி கொள்கிறார்கள். ஆனால் எல்லா வலியையும் மீறி தேவதாûஸ நம்புகிறார்கள். காதலின் இந்த இரண்டு முனைகளுக்கு நடுவில் வெறுமனே ஊசலாடிக் கொண்டுதானிருக்கிறான் தேவதாஸ்.

அவன் குடிக்க துவங்கியது காதலின் தோல்வியால் அல்ல. தனது குற்றமனப்பாங்கை மறைத்து கொள்வதற்காகவே. அதை சந்திரமுகியே சொல்கிறாள் அவன் தனது கோழைத்தனத்தை. சுயகௌரவத்தை காப்பாற்றி கொள்ள வேஷமிடுகிறான். அது சரியாக பொருந்திவிடுகிறது. ஆகவே அவன் குடியில் தஞ்சமடைகிறான்.

தேவதாஸ் பார்வதியை தேடி செல்ல முடிவு எடுப்பது கூட மிக தாமதமான தற்செயலாகவே உள்ளது. அவன் தன்னை சாவிலிருந்து பார்வதியால் காப்பாற்றிவிட முடியும் என்று உள்ளுற நம்பியிருக்ககூடும். அதனால் தானோ என்னவோ அவசர அவசரமாக அவளை காண போகிறான். மரணம் அவனை துரத்தும் போது காதல் தன்னை காப்பாற்றிவிடும் என்று நம்புகிறான். ஒரு போதும் காதலின் வலியை இத்தனை தீவிரமாக அனுபவித்திராத தேவதாஸ் கடைசி நிமிசங்களில் மட்டுமே அதை உணர்கிறான். அதனால் தானோ என்னவோ நாவலில் இறுதிபத்தியை ஆசிரியரே தன் குரலில் விளக்குகிறார். தேவதாஸ் போன்ற மனிதர்களை கண்டால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். தனக்காக கண்ணீர்விடும் மனிதனின் ஒரு சொட்டு கண்ணீரை கண்டபடியே ஒரு மனிதன் இறந்து போவதே அவனது பாக்கியம் என்று நாவலை நிறைவு செய்கிறார்.

நாவலில் அவனது மரணசெய்தி அறிந்து தனது முக்காட்டை வீசிஎறிந்துவிட்டு குடும்ப கட்டுபாடுகளை மீறி வெளியேறி பார்வதி ஒடிவருகிறாள். அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தடுத்தி நிறுத்திவிடுகிறார்கள். அவள் மூர்ச்சையாகிறாள். தன் உணர்வு வந்து தனக்காக தேவதாஸ் ஒரு இரவு வெளியே காத்திருந்ததை நினைத்து புலம்புகிறாள். அதன்பிறகு அவள் பேசவேயில்லை என்பதோடு நாவல் நிறைவுறுகிறது.

பார்வதியை விட சந்திரமுகி தனது பலவீனங்களை அறிந்து கடந்து போகிறாள். புத்தன் மூன்று காட்சிகளால் விழிப்புற்று துறவியாகி வெளியேறியது போன்றதே சந்திரமுகியின் முடிவும். அவள் தேவதாஸிடம் எதை கண்டாள். அந்த காதல் எங்கிருந்து உருவாகிறது. அழகோ,வசதியோ இல்லை. அதை கண்டு பெண்கள் மயங்குவதுமில்லை. தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆண்கள் எளிதாக இருக்கிறார்கள். பெண்களால் எல்லாவற்றையும் பேசிவிட முடிவதில்லை. மௌனமாகவே அவர்கள் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் ஏற்படும் இழப்புகள் அத்தனையும் பெண்களுக்கு மட்டுமே நடக்கிறது என்கிறாள்

பார்வதியும் சந்திரமுகியும் தேவதாஸிற்கு சேவை செய்யவே விரும்புகிறாள். பார்வதி ஆசைபட்டது சந்திரமுகிக்கு கிடைக்கிறது. நோயாளியை கூட இருந்து சொஸ்தமாக்குகிறாள். தேவதாசிற்கு சேவை செய்துவிட்டால் பிறகு செத்துகூட போய்விடலாம் என்று பார்வதி சொல்வதை கேட்டு தேவதாஸ் ஒரு முறை அழுகிறான். அங்கே தான் அவனது காதல் முதன்முறையாக அவள் முன்னால் வெளிப்படுகிறது. சாவதற்கு முன்பாக அவளை தேடிவருகிறேன் என்று உறுதி சொல்கிறான்.

தேவதாûஸ நேசித்தவர்கள் அத்தனை பேரும் புறக்கணிக்கவேபடுகிறார்கள். அவர்கள் தங்களது ஆறாத துயரத்தோடு தேவதாஸிற்காக காத்திருக்கிறார்கள். இந்திய குடும்பங்களில் நூற்றாண்டாக இருந்து வந்த ஆண்பிம்பமே தேவதாஸôக உருக் கொண்டிருக்கிறது. தேவதாஸ் காதலை ஒரு போதும் கொண்டவில்லை. காதலிக்கபடுகிறான். அதை முழுமையாக அறிந்து கொள்வதுமில்லை. பார்வதி தன் முகத்தில் தேவதாஸôல் ஏற்பட்ட வடுவை காட்டி இது வெறும் காயமில்லை. நம் காதலின் அடையாளம். நம் பால்ய கால கதையை என் நெற்றியில் எழுதிவிட்டிருக்கிறாய் என்கிறாய். பார்வதியின் மனதில் பால்யம் தேவதாஸ் என்ற ஒற்றை உருவமாகவே நிரம்பியிருக்கிறது. தேவதாஸ் அதை புரிந்து கொள்ளவேயில்லை.

உலகெங்கும் புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படமாக்கடும் போது அதிக வாசகர்கள் அதை தேடி படித்து நாவலோடு சினிமாவை ஒப்பிடுகிறார்கள். விவாதிக்கிறார்கள். தேவதாஸ் நாவல் படமாக்கபட்ட விதம் குறித்தும் அப்படி நிறைய வாதங்கள் நடந்திருக்கின்றன. மௌனப்படம் துவங்கி மிக பிரம்மாண்டமான பொருள்செலவில் உருவானது வரை பல்வேறுவடிவங்களில் தேவதாஸ் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

இன்று குடிப்பதோ காதல்தோல்வியோ பெரிய பிரச்சனைகள் இல்லை. ஆனாலும் தேவதாஸ் தேவைப்படுகின்றவனாக இருக்கிறான். காரணம் பெண்களின் காதலைப் புரிந்து கொள்ளாத தடுமாற்றமிக்க ஆண்கள் இருக்கின்ற வரை தேவதாஸ் இருந்து கொண்டேதான் இருப்பான் போலும்.

இன்றும் தேவதாஸ் நாவல் அதன் ஆதார அளவில் உணர்ச்சிதுடிப்போடும் ஈரத்தோடுமேயிருக்கிறது. அதுவே காலத்தை மீறிய அதன்வெற்றி என்பேன்.




Sunday, 27 January 2013

பருவங்கள் -14

பருவங்கள் -14 


நமது வாழ்வின் ஒவ்வொரு நினையிலும் நாம் எப்படி அழைக்கப்படுகிறோம் என தமிழ் கூறும் நல்லுலகம் பெயரிட்டுள்ளது 


முதாவதாக லேடிஸ் பர்ஸ்ட் 




பெண்களின் ஏழு பருவங்கள்:-

'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’

* பேதை (1 முதல் 8 வயது வரை)

* பெதும்பை( 9 முதல் 10 வயது வரை)

* மங்கை (11 முதல் 14 வயது வரை)

* மடந்தை (15 முதல் 18 வயது வரை)

* அரிவை (19 முதல் 24 வயது வரை)

* தெரிவை (25 முதல் 29 வயது வரை)

* பேரிளம் பெண்( 30 வயதுக்கு மேல்)

பெண்கள் தான் ர் புல் 

ஆதாரம்:

'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
- பன். பாட். 220
‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’
-221
‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’
-222
‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’
’’ 223
‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’
-224
‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’
-225
‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
-226
‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’
-227

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’


*பாலன்( 1 முதல் 7 வரை)

*மீளி (8 முதல் 10 வரை)

*மறவோன் (11 முதல் 14 வரை )

*திறவோன் (15 வயது )

*விடலை (16 வயது )

*காளை (17 முதல் 30 வரை)

*முதுமகன், (30 வயதுக்கு மேல்)

ஆண்களுக்கு கருப்புதான் அழகு ...ஹி ..ஹி 

ஆதாரம்:

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
-பன். பாட். 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
-229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
-230
‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
-231
‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
-232
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
-233
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
-234
‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
-235 
என்ன கவிதை எழுத தோன்றுகிறதா .........எழுதுங்கள் உங்கள் எண்ணப்படி ...


கொஞ்சம் ஆன்மிகம்


கொஞ்சம் ஆன்மிகம் 

   தத்தாத்ரேயர் எதையெல்லாம் எவற்றிடமிருந்து எப்படியெல்லாம் கற்றார் என்பதை இங்கே இப்படி திருவாய் மலர்ந்தருளுகிரார் கேளுங்கள் அன்பர்களே ..

முதலில் யார் இந்த தத்தாத்ரேயர் ? 

            தத்தாத்ரேயர் என்பவர் சதுரகிரி மலையில் அத்தியூத்து அருகில் மேற்கே கவுண்டினிய ஆற்று கரையில்  ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த  மாமுனிவர்  அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாக பிறந்த மகா ஞானி ...

          எல்லா சிதர்களை போலவும்  சதுரகிரி மலை காட்டில் மிகவும் மகிழ்வுடன் உலாவிக்கொண்டும் மூலிகை ஆராய்சியில் ஈடுபட்டுக்கொண்டும் சித்த ஞானம் தேடிக்கொண்டும் இருந்தபோது 

     அவ்வழியே காட்டிற்கு முனிவர்களை தரிசிக்க வந்த ''  யது  '' என்ற மன்னன் மிகுந்த உற்ச்சாகத்தொடும் உவகையுடனும் கவலையற்றும்  காணப்பட்ட தத்தாத்ரேயரை கண்டு வியப்புற்று அவரிடம்  நீங்கள் எத்துனை மகிழ்ச்சியாக உள்ளீர்களே அதற்க்கு என்ன காரணம் ..? இப்படி மகிழ்ச்சியாக இருக்க எந்த குருவிடம் பாடம் பயின்ற்ரீகள் என வினாவும் போது  அவர் அருளியது இதுதான் ........

    மன்னா எனக்கு பல குருக்கள் பாடம் கற்பித்தனர் அவர்களில் 24 பேரை உனக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன் கேள் ..என்றார் 


       இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

        அவனிடம்,தத்தாத்ரேயர் .. "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர்.

            மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

       "மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

     பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

    "ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

  "வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

         "எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

       பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

        பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
  எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

          பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

        "பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
 
     புற்களுக்கு ஆசைபட்டு குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...'

 என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

   இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!