தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Wednesday, 7 August 2013

பில் செட்டில்டு

 பில் செட்டில்டு 

                                            டாக்டர் . கோபெர்ட் ஜில்லி ,இந்த பெயரை கேள்விபட்டு 
இருக்கிருகிரீர்களா ?  மருத்துவ உலகில் இவர் மிகவும் பிரபலமானவர், அமரிக்காவில் இவர் மிகவும் அறியப்பட்ட புகழ் பெற்ற மருத்துவர் ,வேறும் மருத்துவத்திற்காக மட்டும் அல்ல சிறந்த பண்பிற்காகவும் தான் இவர் புகழப்பட்டார் .

          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

                          டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின்  மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர்,மிகவும் மன  கலக்கத்துடன் வரப்போகும் மெடிக்கல் பில்லுக்காக  காத்திருந்த ஒரு வயதான பெண் நோயாளியிடம் கூறிய இந்த வார்த்தைகளின்  பின்னணி  தான்  டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின் புகழை உச்சத்திற்கு உயர்த்தியது .


அட ! அப்படி என்னதான்  டாக்டர் . கோபெர்ட் ஜில்லி யின் வாழ்வில் நடந்தது ?


                                 "ஒன்றும் இல்லை " ஆம் நிச்சயமாக  ஒன்றும் இல்லை தான் உண்மையில் சிறுவன் ஒருவனுக்கு சாப்பிடுவதற்கு அப்போது ஒன்றும் இல்லை , வறுமையை தவிர ஒன்றும் இல்லை.ஆனாலும் அவன் சும்மா இருக்கவில்லை 13 வயதில் வயிற்றில் பசியுடன் தினம் தினம் வறுமையுடன் போராடினான் அவன் , தான் வசிக்குக்ம் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் பாகெட் போடுவது,வயதானவர்களுக்கும் ,பிறருக்கும் ஒரு பென்னி காசு அன்பளிப்பிற்கு காய்கறிகள் வாங்கிகொடுப்பது ,போன்ற வேலைகள் செய்து பசியுடன் போராடி போராடி படித்தான் அவன். 

                      சில நேரங்களில் அவனுக்கு நோட்டு புத்தகம் வாங்ககூட காசிருக்காது...,அக்கம் பக்கம் இருக்கும் பிள்ளைகள் பாதி எழுதிவிட்டு தூக்கிபோடும் நோட்டு புத்தகங்களை சேகரித்து அவற்றின் எழுத்தாத பக்கங்களை தானே பைண்டு செய்து பயன்படுத்திகொள்வான் அவன் .


"கொடிது கொடிது வறுமை கொடிது ! அதனினும் கொடிது இளமையில் வறுமை ! "

அனுபவித்து பார்த்தல் தான் அதன் பொருள் எவ்வளவு வேதனை நிரம்பியது என்று தெரியும். 

                  அது அந்த மாதத்தின் கடைசி வார விடுமுறை நாள். வீட்டிலும் உணவில்லை கையிலும் காசில்லை..,  விடுமுறை நாள் ஆதலால் வேலையும் இல்லை,ஆதலால் உணவும் இல்லை.. , சிறுபிள்ளை.. பாவம் பசி தாங்கவில்லை ஆனாலும் தன்மானத்தையும் ,சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனதில்லை , ஆனாலும் பசி.. ! சரி.., தான் அன்றாடம் காய்கறி வாங்கிகொடுக்கும் ஒரு பாட்டியின் வீடு  அதோ அந்த தெருவின் ஓரத்தில் இருப்பது அவனுக்கு தெரியும்.. , அவளிடம் சென்று ஒரு ரொட்டித்துண்டு கடனாக கேட்போம், பின்னர் எதாவது வேலை செய்துகொடுத்து கடனை கழித்துவிடுவோம் என எண்ணிக்கொண்டு அவள் வீட்டின் கதவை தட்டினான் அந்த சிறுவன் .

                                    சிறிது நேரத்திற்கு பிறகு கதவு திறக்கப்பட்டது.. , திறந்தது ஒரு இளம்பெண்.. ! சிறுவனுக்கு சப்பென்று ஆகிவிட்டது ,இதற்குமுன் அவளை அங்கு பார்த்ததில்லை,ஏதோ விருந்தாளி வந்திருக்கிறார்  போல... என அவன்  எண்ணிக்கொண்டு, அவளிடம் தன் வறுமையை காட்டிக்கொள்ள மனதில்லாமல் எதோ வந்துவிட்டேன் என  என்னும் படியாக, ஒன்றுமில்லை ..பாட்டியை பார்க்க வந்தேன் .அவள் இல்லை போலிருக்கிறது.. ,சரி, கொஞ்சம் தண்ணீர்  தாருங்கள் அம்மணி.. என்று பணிவாக கேட்டான் . அவள் அவனை ஓருமுறை நன்றாக உற்றுபார்த்த பின் உள்ளே சென்று ஒரு கோப்பை நிறைய  பால் எடுத்துவந்து அவனிடம் தந்தாள் ,

                       அந்த சிறுவன் விநாடியின் ஒருகணம் மட்டும் தயங்கி பின்னர்  அந்த பாலை வாங்கி குடித்தான்,பின் தன்  கவுரவத்தை சிறிதும் விட்டுகொடுக்காமல் அந்த இளம்பெண்ணை பார்த்து ''நான் பருகிய இந்த பாலுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் அம்மணி "என கேட்டான்.

                        அதற்குக்கு அவள் " நான் பால் வியாபாரம் எதும்  செய்யவில்லை... உன் கண்களில் பசியை பார்த்தேன்.. ,பசிக்குத்தான் பால் கொடுத்தேன்... காசுக்கு அல்ல".. என்றாள்.

                               அந்த சிறுவனின்  கண்கள்  கலங்கியது, கண்ணீர் வரும்முன்னர் முகத்தை திருப்பிக்கொண்டு "நன்றி அம்மணி" என கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டான்.

                                           வருடங்கள் பல ஓடியது , கோபெர்ட் ஜில்லி நன்றாக படித்து பெரிய மருத்துவர் ஆனார் , நகரத்தில் ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவி அதன் தலைமை மருத்துவர் ஆனார் .

                                           சில வருடங்களுக்கு பின் நோயாளிகளின் நிலைமை பற்றிய தனது வழக்கமான   மேற்பார்வை பணியின்போது ஒரு வயதான பெண் நோயாளியின் அருகில் வந்ததும் ஒருகணம் அவளை உற்று பார்த்தார் பின் அவளிடம் நீங்கள் எந்த ஊர் ? உங்கள் பெயர் என்ன ? உங்களின் வீட்டு முகவரி என்ன ? என்று சில கேள்விகள் கேட்டார்.. ,அப்போது அவர் கண்கள் சற்று பணித்தது, அதை வெளியில் காட்டிகொள்ளாமல் அவளின் கேஸ்பைலினை வாங்கிபர்ர்த்து இவருக்கு என்ன என்ன மருத்துவ சிகிச்சைகள் தேவைபடுகிறதோ அனைத்தையும் செய்யுங்கள் என பிரத்தியேக மருத்துவ குழுவிற்கு ஆணைபிறப்பித்துவிட்டு மேற்கொண்டு அவளிடம்  ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

                                   அந்த வயதனா பெண்ணிற்கு அளிக்கப்பட்ட உயரிய ராஜ வைத்தியத்தில் விரைவாக அவள் குணமடைந்துவிட்டாள் , அனால் இப்போது அவளுக்கு ஒரே கவலை,தலைமை டாக்டர்  தன்னை பார்த்து சென்றது முதல் தனக்கு அளிக்கப்பட்ட இவ்வளவு உயர்ந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை பில் வருமோ ? நமிடம் உள்ள பொருளாதாரத்திற்கு இதனை எப்படி அடைப்பது ? என்று பலவாறு சிந்தித்துகொண்டுஇருக்கும் போது , அந்த மருத்துவமனையின் செவிலியர் ஒருவர் அவள் அருகில் வந்து குனிந்து மிகவும் பணிவுடனும் முகத்தில் ஆச்சரியம் கலந்த புன்னகையுடனும்  அந்த  வயதனா பெண் காதில் கூறியதாவது ..... 


          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

      " நீங்கள் டிச்சார்ஜ் செயப்பட்டு விட்டீர்கள்.. வீட்டிற்கு செல்லலாம் , பணம் ஏதும் செலுத்ததேவை இல்லை...  "

                   அந்த வயதனா பெண் வேறு  யாரும் இல்லை, 13 வயதில் வறுமையின் பிடியில் இருந்தபோது அந்த கோபெர்ட் ஜில்லி என்ற சிறுவனின் கண்களில் பசியை கண்ட அதே அந்த இளம்பெண் தான், இந்த வயதான பெண் நோயாளி ...

          "மேடம் !  யுவர்  பில் ஹாஸ்பீன் செட்டில்டு, போர்ட்டி யீர்ஸ் எகோ ! "

 நாமும் தான் அன்றாடம் கேட்கிறோம் நம் நண்பனை பார்த்து. டாஸ்மாக் பாரில் 
             " மச்சி பில் செட்டில்டா ?"

" செட்டில் பந்நீர்லாம்   ஆனால் ...? ஹி..  ஹி ...கொஞ்சம் பத்தல உன்  ATM  கார்டை  ஐ எடு ...நௌ  பில் செட்டில்டு...மச்சி ... " 

சிந்தனை செய் மனமே !! மனமே !!சிந்தனை செய்மனமே..
அட ..! அப்படியா ..! 

No comments: