வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன... ?
ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து
விட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ பெறுவதற்கு
வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக தாங்கள் தான் அவரின் ரத்தா சம்பந்தமான அல்லது /ஆவணக்களின் படியான வாரிசுகள் என்று சட்டரீதியாக பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ்.
ஒருவர் இறந்த பின் அவரின் சொத்துக்களைப் பிரச்சனை இல்லாமல் வாரிசுகள்
பகிர்ந்துகொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் மிகவும் அவசியம்.
வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது..?
நிதி நிறுவங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்பு தொகையைப் பெற கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்பு பெற எனப் பலவிதங்களில் பயன்படுகிறது.
இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ,அவரின் வாரிசுகள் தங்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ளவோ, அடமானம், வைப்பதற்கோ வாரிசு உரிமையைக்
காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது
அரசு பணியில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும்
பணியின் பலன்கள் பெறுவதற்கும் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெறுவதற்கும் , பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர்
மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.
மேலும்,
இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக்
காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
எப்படித்தான் வாங்குவதோ ?..! சான்றிதழை ?....
சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு
என்ன நடைமுறையோ அதுபோலத்தான் சிறிய மாற்றத்துடன் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்குமான நடைமுறை .
வாரிசுச்சான்றிதலுக்கான விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்ககளில்
கிடைக்கும்.என்றாலும் தற்போது அலுவலத்திற்கு எதிரில் பல்வேறு ஜெராக்ஸ் கடைகள் மற்றும் பத்திர எழுத்தர்களிடம் 5 ரூ அல்லது 10 ரூ கொடுத்து எளிதாக வாங்கிவிடலாம் .
வாரிசு சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி (இதுவும் ஜெராக்ஸ் கடைகள் மற்றும் பத்திர எழுத்தர்களிடம் கிடைக்கும் )
1)
இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்,
2)அவரின் குடும்ப அட்டை நகல் ,/வாக்காளர் அடையாளாஅட்டை நகல் /ஆதார் அட்டை நகல்
3) வாரிசுகளின் குடும்ப அட்டை நகல் ,/வாக்காளர் அடையாளாஅட்டை நகல் /ஆதார் அட்டை நகல்.
4)தற்போது நோட்டரி வக்கீலின் பற்றுறுதி சான்று (அபிடவிட் ) இனைக்கசொல்கிறார்கள் .
வாரிசுகள் யார் யார் அவர்களின் இருப்பிட
சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து. வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணபிக்கவேண்டும் .
வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் மேற்படி விண்ணப்பப் படிவம் அங்குள்ள துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர் ஒருவரால் எண்டார்ஸ்மெண்ட் முத்திரை இடப்பட்டு சம்பத்தப்பட்ட வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பபடும்.
சம்பத்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் அதனை பெற்றுக்கொண்டு ஆட்சேபனை ஏதும் உள்ளதா என கேட்டு 7 நாட்களுக்ட்பட்ட அறிவிப்பு ஒன்றை கையொப்பம் இட்டு சம்பத்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி வசம் மேற்படி விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பார் .
கிராம நிர்வாக அதிகாரி விசாரணை நடத்தியபிறகு அறிக்கையுடன் மீண்டும் வருவாய் ஆய்வாளர் வசம் அப்படிவம் வரும்
விண்ணப்பப் படிவம் மீது வருவாய் ஆய்வாளர் நேரடியாக தல விசாரணையை மேற்கொண்டு விண்ணப்பதாரர் , பொதுமக்கள் ,வாரிசுதாரர்கள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்று தனது அறிக்கையுடன் மீண்டும் வட்டாட்சிர அலுவலகத்திற்கு அனுப்புவார் .
அங்கு சம்பந்ததப்பட்ட எழுத்தர் மூலம் கோப்பு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு துணை வட்டாட்சியர் மூலம் வட்டாட்சியருக்கு அனுப்பபடும் .
வட்டாட்சியர் அவர்கள் , மேற்படி கோப்பினை பரிசீலனை செய்து , விசாரணை நடத்திய பிறகு வட்டாசியரால் சான்று கையொப்பம் இடப்பட்டு, " டபேதாரால்" (பியூன் தான், வேறு யாரும் இல்லை ) அரசாங்க கோபுர முத்திரை இடப்பட்டு
சம்பந்ததப்பட்ட எழுத்தர் மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.
என்ன... தலை சுற்றி மயக்கம் வருகிறதா..? அன்பர்களே ..என்ன செய்வது தற்போது .....இதுதான் அலுவலக நடைமுறை ....
ஆயினும் நாம் தமிழர்கள் அல்லவா ? ..நமக்கு இதெல்லாம் ஒரு சிரமமே இல்லை எளிமையாக பெறமுடியும் ...
தமிழன் என்று சொல்லடா..!... தலை நிமிர்ந்து நில்லடா ...!
3 comments:
அருமையான பதிவு நன்றி
நன்றி
இறந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.அப்படியானால் வாரிசு சான்றிதழ் வாங்க VAO விடம் apply பண்ணினாள் போதுமா? அல்லது நீதி மன்றம் செல்ல வேண்டுமா?
Post a Comment