தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Sunday, 11 October 2015

இப்படியும் செய்யலாம் தர்பணம்

தர்ப்பணம் இறைவனுக்கும் பிடித்த வழியில்..

Image result for திதி கொடுப்பது எப்படி
 ஒரு முன்னணி வலைப்பதிவர் தனது அன்னைக்கான தர்பணத்தை இவர் எப்படி செய்தார் என்று பகிர்ந்திருக்கிறார். இப்படி செய்வது இறைவனுக்கும் உகந்தது என்று பட்டது எனவே பகிர்கிறேன். அனுமதியளித்தவலைப்பதிவர்கு நன்றி..

என் அம்மாவுக்கு ஒரு பழக்கம் எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைத்துதான் அவர்களை அனுப்புவார்கள்.

அந்த புண்ணியமோ என்னவோஇன்றுவரை வேலைக்கு சாப்பிட ஏதாவது கிடைத்து விடும்.



அம்மாவின் முதல் திதிக்கு அப்பாவின் விருப்பத்திற்காக ஐயர் வைத்து திதி கொடுத்தோம் ...அதன் பின் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. திதிக்கு காலையில் அவத்திகீரை, மற்றும் எள், வெல்லம் பச்சரிசியோடு கலந்து பசு மாட்டுக்கு கொடுத்து விட்டு, அம்மா போட்டோவை வைத்து புடைவை வைத்து படைத்து விட்டு சுற்றம் மற்றும் நண்பர்களை அழைத்து அவர்கள் வயிறார சாப்பிட வைத்து அனுப்புவது எங்கள் வழக்கம்..

ஐயருக்கு கொடுக்கும் காசுக்கு யாராவது வயிறார சாப்பிட்டு போகட்டும் என்பதுதான் அதற்கு காரணம்.

இந்த வருடம் திதிக்கு நான் பெங்களூரில் இருந்த காரணத்தால் நான் ஊருக்கு செல்ல முடியவில்லை

தங்கைகள் மற்றும் அப்பா மட்டும் திதி கொடுத்தார்கள்... அதனால் இறந்த நினைவு நாளின் போது புடவை வைத்து திதி அன்று செய்வதை ஒரு பிள்ளையாக என் கடமையை இன்று செய்ய முடிவு எடுத்தேன்
மதியம் என் அம்மா விருப்பட்டது போல.....15 சாப்பாடு பார்சல் ஆந்திரா மேஸ்சில் சொல்லி இருந்தேன்... இரண்டு பேர் வயிறு நிறைய சாப்பிடலாம் அந்த அளவுக்கு சாப்பாடு இருக்கும்....

60 ரூபாய் வீதம் 900 ரூபாய்க்கு சாப்பாட்டை பார்சல் செய்து பெரிய மூட்டையாக கட்டி வண்டியின் டேங்கில் வைத்துக்கொண்டேன்... பள்ளம் மேட்டில் பைக் ஏறி இறங்கும் போது, உள்ளே இருக்கு சம்பார் ,ரசம், மோர் மற்றும் பப்பு வகைகள் உடைத்துக்கொண்டால்... பேன்ட முழுக்க அபிஷேகம் ஆகி விடும் என்ற காரணத்தால் பார்த்து பார்த்து வண்டியை ஓட்டினேன்...

மயிலையின் லஸ் முனையில் வெயிலுக்கு கடை ஓரம் 50 வயது மதிக்கதக்க பெண்மணியும், ஒரு ஆயாவும் உட்கார்ந்து இருந்தார்கள்... அவர்களிடம் சாப்பாடு இருக்கின்றது சாப்பிடுகின்றீர்களா என்றேன்... ம் என்றார்கள்...
இரண்டு பார்சல் கொடுத்து விட்டு மயிலை தெப்பக்குளம் பஸ்ஸ்டான்ட அருகே வந்தால்.... இன்று மகாளி அம்மாவாசை என்பதால் தெப்பக்குளத்தை திறந்து வைத்து இருந்தார்கள்..

உயிரோடு இருப்பவர்கள் முன்னோர்களுக்கு வைத்த பின்டம் மயிலை குளக்கரை படியில் வெயிலில் கேட்பாரற்று காய்ந்து கொண்டு இருந்தது...
உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் பிச்சை எடுத்தபடி இருந்தார்கள்.. ஆனால் எல்லோரிடமும் வசந்தபவன், ஆனந்தபவன், சங்கீதா போன்ற உயர்தர சைவ சாப்பாடு பொட்டலங்கள் வைத்து இருந்தார்கள்..

சரி என்று.. சாய்பாபா கோவில் பக்கம் போனால் திம்சுக்கட்டை போல உட்கார்ந்துக்கொண்டு உடம்பு நன்றாக இருந்தும் பிச்சை எடுப்பதையே தொழிலாக செய்தவர்கள் மட்டுமே உட்கார்ந்து இருந்தார்கள்....

திரும்ப ஆர் கே மட் ரோடு அருகே சென்றேன்.. ஒரு பாட்டி வெயிலில் நடந்து போய்க்கொண்டு இருந்தார்... சாப்பாடு சாப்பிடுகின்றீர்களா என்று கேட்டேன் .....அவர் மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுக்கொண்டார்... இதனை அருகில் இருந்து கவனித்த இருந்த கட்டிட தொழிலாளர்கள் இரண்டு பேர்... என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

கண்களில் பசி... கேட்பதில் தயக்கம்... கேட்டு இல்லை என்று சொல்லி விட்டால்..?? தயங்கி நின்றனர்.. .1994 இல் நான் இப்படி இதே சென்னைனயில் நின்று இருக்கின்றேன்..

பசி என்பது சாதாரண விஷயமா..?? அனுபவித்தவன் நான்...

கண்களில் ஏக்கமும் பசியையும் ஒரு சேர பார்த்தேன்...

அழைத்தேன்... வந்தார்கள் இரண்டு பொட்டலம் கொடுத்தேன்... சார் இன்னும் ரெண்டு பொட்டலம் இருந்தா கொடுங்க சார்...

எங்க பசங்க எதிர்க்க சந்துல ஒன்னுக்கு இருக்க போய் இருக்காங்க என்று கெஞ்சினார்கள்...

கெஞ்சாதீர்கள் பசிக்கு சாப்பிடத்தான் பொட்டலம் என்றேன்...

மேலும் இரண்டு பார்சல் பொட்டலங்கள் கொடுத்துவிட்டு திரும்ப விவேகானந்தா கல்லூரி பக்கம் வந்து ஒரு சோட புட்டி தாத்தாவுக்கும், இரண்டு ஆயா அம்மா... மற்றும் தள்ளுவண்டியில் சென்ற முதியவர் , ஒரு குட்டி பையன் என்று பொட்டலங்களை வழங்கி விட்டு அலுவலகத்துக்கு இரண்டு பொட்டலங்களோடு சென்றேன் ஆறு மணி ஷிப்ட்டுக்கு வந்த நண்பர்கள் நான்கு பேர் சாப்பிட்டார்கள்...

சந்தோஷம்...

இதை தான் என் அம்மாவும் விரும்புவார்கள்... என் குடும்பமும் என்னை சார்ந்து இருப்பவர்களும்.... அப்படியே..


No comments: