வாங்க சார் வத்தல் மலைக்கு போகலாம்
பயப்படதீங்க நாம ஒன்னும் மிளகாய் வத்தல் வானக போகல சார்
உன்மையிலேயே ஓரு மலைக்கு தான் இந்த பெயர்
ஆமா தர்மபுரி அருகில் உள்ளது இந்த மலை சரி எப்படி போவது
ர்மபுரியிலிருந்து 15 கிலோ மீட்டல் தொலைவில் உள்ளது வத்தல்மலை. தர்மபுரி ஆட்சியர் அலுவலக பகுதியிலிருந்து செல்ல எட்டியனூர் வழி, நல்லாம்பள்ளி வழி என இரண்டு வழிகள் உள்ளன. பொம்மிடி வழியாகவும் செல்ல முடியும். மலையில் ஏறுவதற்கு டூவீலர் மற்றும் காரை விட ஜீப் மட்டுமே சிறந்தது. தர்மபுரி பெண்கள் உயர்நிலைப் பள்ளி அருகிலிருந்து வத்தல் மலைக்கு வாடகை ஜீப்கள் செல்கின்றன. ரூ.10 மட்டுமே கட்டணம். அங்கிருந்து வத்தல் மலையை அரை மணி நேரத்தில் எட்டிப் பிடித்து விடலாம். வழியெங்கும் ஜில் ஜில் கொண்டாட்டம்தான்.
மலையேறும் வழியில் இரண்டு, மூன்று அருவிகள் உங்களைக் கொண்டாட அழைக்கும். மழைக்காலங்களில் அதிகத் தண்ணீரும், கோடையில் மிதமான நீர் வரத்தும் இருக்கும். இவற்றை ரசித்த பின்னர் காபி, மிளகு, சௌசௌ பயிரிடப்பட்டிருக்கும் தோட்டங்களின் அழகை மனதெங்கும் நிறைத்துக் கொள்ளலாம். அங்கேயே இயற்கைச் சூழலில் சமைத்துச் சாப்பிடுவதிலும் ஒரு தனி ருசி உண்டு. அங்கேயே சுள்ளி சேகரித்து கல்லால் அடுப்புக் கூட்டி சமைப்பதற்கான மளிகைப் பொருட்கள் மற்றும் கோழி ஆகியவையும் கிடைக்கிறது. அல்லது தர்மபுரியிலிருந்து செல்லும்போதே மதிய உணவையும் பேக் செய்து செல்லலாம்.
வத்தல்மலை கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு மாலையில் தர்மபுரி திரும்பினால் அருகிலேயே காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. அஷ்டமி நாளில் இந்த காலபைரவரை வணங்குவது சிறந்தது. இங்கு நடக்கும் அஷ்டமி பூஜையில் தேங்காய், எலுமிச்சை ஆகியவற்றில் விளக்கு வைத்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு வேண்டிக் கொண்டால், நினைத்தது நடக்கும் என மக்கள் நம்புகின்றனர். இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதியமான் கோட்டம். இங்கு தமிழக வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் பல சுவாரஸ்யங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு அதியமான் கட்டிய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளும், மூலிகை சாற்றினைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தக்கால சமூக, பொருளாதார மற்றும் கலாசார அரசியல் நிலை, நிர்வாக முறை உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று இடங்களையும் சுற்றிப் பார்த்தால் ஒரு நாள் முடிந்து விடும். இரண்டு நாள் டூரைத் திட்டமிடுபவர்கள் தர்மபுரியை சுற்றிப் பார்த்த பின்னர் அடுத்ததாக ஒகேனக்கல்லையும் ஒரு பார்வை பார்த்து விட்டுச் செல்லலாம்.
No comments:
Post a Comment