தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Saturday, 5 April 2014

உலகம் பிறந்தது முதல் இப்படிதான்

உலகம் பிறந்தது முதல் இப்படிதான் 

நான் ஒரு கதை சொல்ல போகிறேன் .....என்னடா இது மூன்றாம் பிறை  கமல் மாதிரி ஏதோ தத்துபித்து  ஆரம்பித்துவிட்டானா..? ..என்று நினைத்து விடாதீர்கள்.. இது  உண்மை சம்பவம் ஒன்றும் இல்லை ஒரு ஹாசியமான அதே சமயத்தில் சிந்திக்க வைக்கிற கதை தான் 

இந்தோ -ரஷ்யா கூட்டு  கலாச்சார சபை (நியு செஞ்சுரி புக் ஹவுஸ் ) நடத்திய ஒரு புத்தக கண்காட்சியில்..இடம் பெற்ற ஒரு பழைய புத்தகத்தில் படித்த ஒரு  ரஷிய கதை....  அன்றய ரஷியாவில் ஒரு அறிவாளியான.. !!
ஜார் மன்னனுக்கு ஒரு விபரீத ஆசை.. ..?

அதாவது.... இந்த உலகத்தில் மனிதன்  தோன்றியது முதல் இன்று வரை நடைபெற்ற அனைத்து வரலாற்று சம்பவங்களையும் ஒன்று விடாமல் படித்து விடவேண்டும். என்பது தான் அந்த விபரீத ஆசை...

மன்னன்னாயிற்றே சிரமேற்கொண்டு மாமன்னரின்...ஆசை நிறைவேற்றியாக வேண்டுமே !! ?

 ...உடனே அந்த நாட்டில் உள்ள அனைத்து அறிஞ்ர்களையும் அழைத்து தனது ஆசையை தெரிவித்து நிறைவேற்றும்படி  ஆணையிட்டான்.அந்த அறிவாளி மன்னன் .

 அறிஞ்ர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை...!!  மன்னன் தெரிந்துதான் கேட்கிறாரா ?.. அல்லது சும்மா எதோ இன்று தோன்றியதற்காக கேட்கிறாரா ? .. அப்படி இருப்பின் விரைவில் இந்த சம்பவத்தை மறந்துவிடுவார்...  இந்த விடயத்தை  மன்னர் மறக்கும் வரை நாமும்  கொஞ்சம் காத்திருக்கலாம் என ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

ஆனால் அறிந்துகொள்ளும் ஆவல் ..??..மன்னருக்கு அதிகமானதே ஒழிய ..குறையவில்லை . மன்னருக்கு தூக்கமும்  வரவில்லை ...இந்த இனிய மனித உலகில் அப்படி என்னதான் நடந்திருக்கும் ..? என்ற ஆவல் அவனை   பாடாய் படுத்தியது ..

விடிந்ததும் விடியாததுமாய் எழுந்து அரசவையை அவசரமாக அவசரமாக  கூட்டி அறிஞர்கள் எங்கே.....?.. அழத்துவாருங்கள் அவர்களை..... ..உலகின் வரலாற்றை எழுத ஆரம்பித்து விட்டார்களா ..?    என்று கேட்கவும் . மந்திரிமார்களுக்கு மயக்கம் வராத குறைதான்....

பிறகு ஒருவழியாக சமாதானம் அடைந்து  "சரி மன்னா... அதற்கு ஒருவருடம்  ஆகும் கால அவகாசம் வேண்டும்"  என மன்னருக்கு  தெரிவிக்கப்பட்டு, ஒருவருடம் கழித்து "மன்னா இதோ நீங்கள் கேட்ட உலகின் வரலாறு. அரண்மனையின் மேல்மாடிக்கு  வந்து பாருங்கள்" என அழைத்தனர்... ,

 வந்து பார்த்ததில்,.... அரண்மனை வாயிலில் இருந்து கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஆயிரக்கணக்கான ஒட்டகங்கங்கள். ஒவ்வொரு  ஒட்டகதின்  மீதும்  பொதிபொதியாக புத்தகங்கள்......

....மலைத்துபோனார்,. மாமன்னர்..!. ..".அட..! இவற்றை ஒருமுறை மட்டும் படித்தாலே  எனது ஆயுள் போதாது.....ஆகவே வரலாற்றில் மிகமுக்கியமானதை மட்டும்  எடிட் செய்து எழுதி கொண்டுவாருங்கள்..."  என அறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது  ..

அவர்களும் " மன்னரே  அதற்கு ஆறு மாதம் ஆகும்...கால அவகாசம் வேண்டும்".. என தெரிவித்து வரலாற்றில் மிகமுக்கியமானதை மட்டும் எழுதி ஆறு மாதம் கழித்து,.. "மன்னா இதோ நீங்கள் கேட்ட உலகின் மிகமுக்கியமான வரலாறு. அரண்மனையின் மேல்மாடிக்கு  வந்து பாருங்கள்".. என அழைத்தனர் ,

 வந்து பார்த்ததில் அரண்மனை வாயிலில் இருந்து நகரின் எல்லை வரை  நூற்றுக்கணக்கான ஒட்டகங்கங்களின் மீது பொதிபொதியாக புத்தகங்கள்..

மன்னர் கடும் கோபம் அடைந்து ..".இவற்றை மட்டும்  படித்து கொண்டிருந்தால் போதுமா ? நாட்டை யார் நிர்வகிப்பது ? வரலாற்றில் மிகமுக்கியமானதில் அதிமுக்கியமானதை மட்டும்  எழுதி கொண்டுவாருங்கள்.." என அறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது .

 என்ன செய்து தொலைப்பது ?.. இனி வேறுவழி இல்லை .. மன்னருக்கு இதன் மூலம் கண்டிப்பாக பாடம் புகட்ட வேண்டும்  எண்ணிக்கொண்டு ...சீனியர் அமைச்சர் ஒருவரை இதற்காக வேண்டிக்கொண்டதன் பேரில்  அவரும்  ஒப்புக்கொண்டு  மன்னரை போய் பார்த்தார் .

அவர் மன்னரிடம் "மன்னா உங்கள் விருப்பம் நாளையே நிறைவேற்றப்படும் " என்றார் . மன்னருக்கு ஒரே ஆச்சர்யம் என்னடா இது இவர் உலகின் வரலாற்றை ஒரே இரவில் எழுதிவிடுவதாக சொல்கிறாரே இது என்ன சாத்தியமா ? என்று எண்ணிக்கொண்டு அவரை பார்த்து என்ன அமைச்சரே நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என தெரியுமா ? ஒரே இரவில் எழுதி விடுவீர்களா ? என பலவாறு கேட்டார் ..

பதிலுக்கு அமைச்சர் மிகவும் அமைதியாக பணிவுடன் "ஆம் மன்னா நாளை  காலை சூரியன் உதிக்கும் போது உலகின் வரலாறு உங்கள் கைகளில் தவழும்" என கூறியதை கேட்டு மன்னர் கடும்  ஆச்சர்யம் அடைந்து,

 புன்சிரிப்புடன் , "அமைச்சரே நீங்கள் இந்த சபையில், மன்னர் முன்னிலையில் வாக்களித்துளீர்கள் .. ஒருவேளை,.. நாளை நீங்கள் கூறியபடி உலகின் வரலாற்றை  அளிக்க தவறினால்...   உங்கள் தலை சீவப்படும் .... என உங்களை ஒருமுறை எச்சரித்து இந்த அவை கலைக்கபடுகிறது.".... என மிகவும் கண்டிப்புடன் கூறி மன்னர்  சென்றுவிட்டார் ...

அன்று இரவு... மன்னர் மட்டும் அல்ல, நாட்டு மக்கள் உட்பட யாருக்கும்.. நாளை  பொழுது விடிந்தவுடன் நடக்கவிருக்கும் நிகழ்வை நினைத்து தூக்கம் வரவில்லை ... காலை பொழுது புலர்ந்ததோ   இல்லையோ குறித்த நேரத்தில்  அவசர அவசரமாக ராஜ சபை கூட்டப்பட்டது ...

மன்னர்  ஒரே தவியாய் தவித்து  இதர வேலைகளை எல்லாம் விட்டு விட்டு ..முதல் சபை நிகழ்ச்சியாக நடத்த  உத்திரவிட்ட தலைப்பு  "உலகின் வரலாறு"


பின்னர்,.. குறித்த   அந்த அமைச்சர்  அமைதியாக, தனது கைகளில் ஒரு தங்க தாம்பாளத்தை ஏந்தி அதில்  சிகப்பு நிற வெல்வெட்  துணியால் மூடப்பட்ட அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிறிய சந்தன பேழையை மன்னர் முன் பவ்யமாக நீட்டி.....

 "மேதகு மன்னா.! நீங்கள் கேட்டுக்கொண்டபடி உலகம் தோன்றியது முதல் இன்றுவரை நடந்தேறிய அனைத்தும்  கிழக்கத்திய சீன பட்டுத்துணியில்  நேர்த்தியாக  எழுதப்பட்டு இதனுள்    வைக்கபட்டுள்ளது. படித்து பயனுறுக .!" என்று கூறி மன்னரின் கைகளில் அந்த சிறிய சந்தன பேழையை அளித்தார் ..

மன்னரும்,.. உலகின்  வரலாறு.. இந்த சிறு கைக்குட்டை அளவுள்ள  துணியில் எழுதப்பட்டுள்ளதா..?!  என  அளவு கடந்த ஆச்சர்யத்துடன்,.. அவசர அவசரமாக சந்தன பேழையை திறந்து அதில் எழுதப்பட்டதை அதீத ஆர்வத்துடன் புன்னகை  தழும்ப  படித்தான் ...!!!

பின்னர் ஒரு சில வினாடிகள்.. உலகின் வரலாற்றை  எழுதிய அந்த மேதையை ஒருமுறை  உற்றுபார்த்துவிட்டு அமைதியாக அந்த பட்டு துணியை சுற்றி மீண்டும்  பேழையில் வைத்துவிட்டு..

 ..முன்பைவிட மிகவும் உறுதியான குரலில்..... அரச சபையின்  ஏனைய மிக முக்கிய ராஜிய தலைப்புகளின்  மீது  கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான்...

அட அப்படி என்னதான் எழுதி இருந்தது அதில்... அதில் எழுதப்பட்டது இதுதான்...

"மன்னா, இந்த உலகம் தோன்றியது முதல் இன்றுவரை, 

மனிதர்கள்,  பிறந்தார்கள்..!.. வாழ்ந்தார்கள்..!... இறந்தார்கள்..!..

 இதை தவிர ஒன்றும்  நிகழவில்லை.... .!..

 இதுவே உலகின்  மனித  வரலாறு."  

ஆம்,. அப்படிதான் உலகின் வரலாறு  அதில் எழுதப்பட்டிருந்தது  ,.

அனால் அந்த மாமேதையான அமைச்சருக்கு என்ன தீர்ப்பு வழங்கபட்டது விபரம் அந்த ரஷ்ய கதையில் குறிப்பிடப்படவில்லை..அது உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் ....
.
அட அப்படியா..!! ? ? சிந்தனை செய் மனமே ...!!!






No comments: