சதுரகிரி-பகுதி -6
இந்த தாணிப்பாறை கருப்ப சாமி கோவிலில் இருந்து மீண்டும் நமது சதுரகிரி மலை பயணம் தொடர்கிறது ,
நான் ஏற்கனவே சொன்னது போல இந்த கருப்ப சாமி கோவிலின் எதிரில் உள்ள சதுரகிரிக்கு பாதையை அமைத்த பச்சையம்மாள் என்ற சிவ பக்தையின் சமாதிக்கு பின்புறம் உள்ள காட்டு பகுதியில் காலைகடன்களை முடித்து அருகில் உள்ள சிறிய தடாகத்தில் குளித்துவிட்டு...
பின்னர் கருப்ப சாமியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்து நமது பயணத்தை தொடர எத்தனிக்கையில் ,
நமது நண்பர் வெங்கடேஷ் என்பவர் இந்த கருப்ப சாமி கோவிலின் தற்போதைய பூசாரியிடம் இந்த தலம் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் நமக்கு கூறவேண்டும் என கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க அவரும் உற்சாகமாக தலபுராணம் செய்தருளினார் ,........
(இந்த கோவிலின் பூசாரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அதாவது 6 மாதம் 1 வருடம் எனதங்களுக்குள் முறைவைத்து
மாறிக்கொண்டே இருப்பர் என்பது ஆச்சரியமான விசேடம் )
........ஆவலுடன் கேட்டு பின்னர் நடையை கட்டினோம் , ஆரம்பமே
அருமை சுற்றிலும் காட்டு புதர்கள் இடதுபுறம் கௌண்டனிய காட்டாறு சலசலத்துக்கொண்டு ஓடுகிறது ,...வலதுபுறம் மலைக்குன்று... எதிரே காடு ,... சரி பாதை ?.........
.......அதுதான் நம் முன்னால் நீண்டு கொண்டே போகிறதே ,... சரியான காட்டு பாதை, அதில் சில இடங்களில் கற்கள் கொண்டு சில அடி தூரம் படிக்கட்டு அமைத்துள்ளனர் ,( பாதையை அமைத்த பச்சையம்மாளை நினைக்க தோன்றுகிறது) ,
அப்படியே சிறிது தூரம் போனால் .... பின்னர் இடது புறம் பாதையில் ஒரு சிறு திருப்பம் இப்போது நாம் கௌண்டனிய ஆற்றை இடதுபுறம் கடக்கிறோம் ..
..இப்போது நாம் குதிரை குத்தி பள்ளம் அல்லது குதிரை ஊற்று என்று அழைக்கப்படும் இடத்திற்க்கு வருகிறோம் ....
பின் மீண்டும் வலதுபுறம் வடக்குநோக்கி நமது பயனம் தொடர்கிறது ....ஏன் இந்த பெயர் வந்தது என்றால் அந்த காலத்தில் ஆங்கிலேய துரைமார்கள் அவர்களுக்கு முன்னால் நம் சிறு ,குறு,மன்னர்கள் ..? பின்னர் ஜமின் ..ஆகியோர்களின் குதிரைகள் இந்த இடம் வரை தான் வரும் ..
இந்த இடத்தில் உள்ள படிவெட்டி பாறையில் ஏற முடியாமல் திணருமாம் ...ஆகவே குதிரைகளை இங்கேயே மரத்தில் கட்டிவிட்டு .....அப்புறம் என்ன நாட்டு ராஜாக்கள் எல்லாம் நடைராஜாக்கள் தான் ...அதுதாங்க நடைபயணம் தான் சாத்தியம் என்பதைஇந்த படங்களை பார்த்தபின் நீங்களே கண்டுகொள்வீர்கள் ...
இதோ இந்த நண்பர் இந்த பதிவேட்டி பாறை மீது ஏறுகிறார் அல்லவா இடன் வலது புறம் ஒரு அழகிய தடாகம் உள்ளது ...கொஞ்சம் ஆழம் தான் .. மிக தூய்மையான நீர் ... நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி மகிழலாம் ...மற்றவர்கள் தடாகத்தின் அருகில் செல்வதை தவிர்த்திடுங்கள் பலர் இந்த தடாகத்தில் நீச்சல் தெரியாமல் இறந்திருக்கிறார்கள் .....(பெரும்பாலும் குடித்துவிட்டு தான் ...)
கொஞ்சம் கவனம் இந்த இடத்தில் இவ்வளவு தான் இடம்... சற்று இடது ஓரமாக பாறையை ஒட்டி செல்வது நலம் ....
இடித்துக்கொண்டு செல்வதை தவிர்க்கவும் ....வயதானவர்கள் , பெண்கள் ,குழந்தைகளுக்கும் மேலே ஏறி வருபவர்களுக்கும் முதலிடல் தரவும் ....
இந்த குதிரை ஊற்று பகுதியில் அம்மாவாசை , பௌர்ணமி நாட்களில் வெள்ளரி பிஞ்சு ,அண்ணாச்சி பழ தற்காலிக கடைகள் உண்டு ,
வேதனைக்குரிய விடயம் இந்த தடாகம் வரை, அருகில் உள்ள கல்லூரியில் இருந்து இளம் ஜோடிகள் வந்து அழிச்சாட்டியம் செய்வது தான்....
பீர், மற்றும் மதுபானங்கள் கொண்டுவந்து குடித்துவிட்டு தடாகத்தில் கும்மாளமிடுவது தற்போது அதிகரித்துவிட்டது ....
இந்த புனித மலையில் இதுபோன்ற விடயங்கள் தேவையா ?.. எல்லாம் அந்த சுந்தர மகாலிங்கத்திற்கே வெளிச்சம் .....
இங்கிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வருவது அத்திரி மகிரிஷி வனம் அல்லது அத்தி ஊற்று.. சங்கிலி பாறை என்று பலவாறு அழைக்கபடும் மிக புனிதமான மற்றும் ரம்மியமான இடம் ....
அடுத்த பதிவில் காணலாம் ..........