சதுரகிரி-பகுதி -5
நீண்ட இடைவேளைக்கு பிறகு நமதுபயணம் தொடர்கிறது ...
நேரம் இன்மையால் பதிவை உரிய காலத்தில் எழுதாமைக்கு மன்னிக்கவும் ..
சரி நான் முன்பே கூறியது போல இந்த தானிபாறை மிகவும் சுவாரிசியமானது .. இங்கு அமைந்துள்ள ஆசிர்வாத பிள்ளையார் கோவிலுக்கு அருகில் ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது ..
இங்குதான் அம்மாவாசை அன்று மதியம் அன்னதானம் நடைபெறுகிறது கூவி கூவி அன்புடன் அழைத்து உணவிடுகிரர்கள் . சுவையான காய்கறி பிரியாணி ,அல்லது தக்காளி சோறு ..சாம்பார் சாதம்.. இப்படி எதாவது ...நிறைய சில்வர் தட்டுகள் வைத்திருப்பார்கள் .. வரிசையில் நின்று அன்னதானம் பெற்றுக்கொள்ளலாம் .. பின்னரர் அந்த தட்டுகளை நாம் கழுவி அடுக்கி வைத்து விடவேண்டும் .. முடிந்தால் அன்னதானத்திற்கு பண உதவி செய்யலாம் அன்புடன் வாங்கிகொள்வார்கள்..
சரி நான் முன்பே கூறியது போல இந்த தானிபாறை மிகவும் சுவாரிசியமானது .. இங்கு அமைந்துள்ள ஆசிர்வாத பிள்ளையார் கோவிலுக்கு அருகில் ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது ..
இப்படத்திற்கு பின்னால் தெரிவது தான் ஆசிர்வாத பிள்ளையார் கோவில்
நாம் மலை பயணம் முடிந்து மதியம் இங்கு இருப்பது போல திட்டம் வகுத்துக்கொண்டல் (அம்மாவாசைஅன்று ) மதிய உணவை இங்கேயே முடித்து கொண்டு ஊருக்கு பஸ் ஏறிகொல்ள்ளலாம் மிகவும் வசதியாக இருக்கும் நேரம் மிச்சம்
ஆசிர்வாத பிள்ளையார் கோவில் எத்ரில் ஒரு தற்காலிக புத்தக கடை மற்றும் படங்கள் விற்கும் சில கடைகள் உண்டு நமக்கு தேவையான வற்றை வந்கிகொல்ள்ளலாம்
ஆசிர்வாத பிள்ளையார் கோவில் எத்ரில் ஒரு தற்காலிக புத்தக கடை மற்றும் படங்கள் விற்கும் சில கடைகள் உண்டு நமக்கு தேவையான வற்றை வந்கிகொல்ள்ளலாம்
இந்தமிகபெரிய பாறையானது தோனி வடிவத்தில் ஏறக்குறைய அரை வட்ட வடிவில் அமைந்திருபதால் தான் தோனி பாறை என்று பெயர் வந்தது என இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள் அது பின்னர் மருவி தானிபாறை என்று தற்போது வழங்கி வருகிறது
இங்கு சதுரகிரி காட்டில் இருந்து வரும் கௌண்டின்ய ஆற்றின் மீது ஒரு செக் டாம் (தடுப்பணை ) கட்டி இருகிறார்கள் ... மிகவும் சுவாரிசியமானது இந்த இடம் .. நீங்கள் இங்கு மழைகாலத்தில் இலவசமாக சறுக்கி வாட்டர் கேம் (water game ) விளையாடலாம் ..இயற்க்கை தரும் பரிசு .. இதற்கான காணொளி பின்ரோ சந்தர்பத்தில் தருகிறேன் ...நானும் கூட சறுக்கி விளையாண்டிருகிறேன்,,சூப்பரோ சுப்பர் ...
அருகில் சுடசுட வடை போண்டா விற்பனை அருமை ..சுக்கு காபியுடன் சுகமாக நடந்து வந்த களைப்பு தீர சிறிது நேரம் அமர்ந்திருக்கலாம் ... (எல்லாம் அம்மாவாசை ..பௌர்ணமி நாட்களில் தான் )
இதோ இந்த பெரியவர் நின்று கொண்டிருக்கும் இடத்தில உள்ள திட்டில் தான் உணவு பரிமாறுவார்கள்
எதிரே மூட்டுவலி கிழங்கில் தயாரித்த சூப்பு 5 ருபாய் ..குடிக்கலாம் .. மூட்டுவலிகிழங்கு விற்பனையும் உண்டு ..சூப்பு தயாரிப்பது எப்படி எனவும் சொல்லி விற்கிறார்கள் ....இதுவும் அம்மாவாசை ..பௌர்ணமி நாளில் மட்டும்தான் ..மற்ற நாட்களில் கடைகள் கிடையாது ..
நமது மலை பயணத்தில் இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் அங்கே தானிபாறை கருப்புசாமி கோவில் உள்ளது ..சித்தர்கள் அமைத்த சதுரகிரி காவல் தெய்வங்களில் ஒன்று ..பேய்ச்சி அம்மன் சிலையும் அக்கோவிலில் உள்ளது ..
கருப்ப சாமி கோயில்
அருள்மிகு கருப்பசாமி
இங்கு இந்த சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கிடாவெட்டி சமைத்து பூசை செய்து காது குத்து போன்ற தங்கள் நேர்ச்சி கடனை செய்து கொள்கிறார்கள் ..
இக்கோவிலுக்கு எதிரே தற்போது சதுரகிரி மலைக்கு செல்வதற்கு ஓரளவிற்காவது ஏற்படுத்தப்பட்ட பாதையை அமைத்த பச்சையம்மாள் என்ற சிவ பக்தையின் சமாதி உள்ளது அதன் மீது ஒரு சிவ லிங்கமும் காணபடுகிறது ...இவரை பற்றி விரிவாக இத்தொடரின் ஊடாக பினொரு சந்தர்பத்தில் விசேட செய்தியாக தருகிறேன் ..
இங்கிருந்து சற்று கீழே கௌண்டின்ய ஆற்றில் ஒரு சிறிய தடாகம் அமைந்துள்ளது ..
இங்கிருந்து சற்று கீழே கௌண்டின்ய ஆற்றில் ஒரு சிறிய தடாகம் அமைந்துள்ளது ..
சமாதி
இங்கிருந்து காட்டு பாதை தொடங்குகிறது நாமும் நமது பயணத்தை இனி வரும் பதிவுகளில் தொடருவோம் ......
No comments:
Post a Comment