கொல்லிமலை -பகுதி-3
கொல்லிமலை யில் உள்ள அரப்பளிஸ்வரர் பற்றி இங்குள்ளவர்கள் குறிப்பிடும் ஒரு கர்ண பரம்பரை கதை உண்டு அதாவது.....
அடர்ந்த காடுகளுடன் மூலிகைகள் நிறைந்து விளங்கும் கொல்லிமலையில் கோவில் கொண்டு அருள்புரியும் ஈசன்- அறப்பள்ளீஸ் வரர். இவர் சுயம்புவாகத் தோன்றியவர். அதன் சுருக்கமான வரலாறு...
முன்னொரு சமயம் கொல்லி மலையில் அறப்பள்ளியன் என்பவன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தன். மூலிகைகளைக் கண்டறியும் திறன் பெற்ற அவன், அங்கு மூலிகைகளைத் தேடி வரும் மருத்துவர்களுக்கு வழிகாட்டி யாகவும் இருந்தான். அப்படி வரும் மருத்துவர் கள் அவனுக்கு ஏதேனும் பொருள் கொடுப்பார் கள். அதனைக் கொண்டு அவன் வாழ்ந்து வந்தான்.
ஒரு மழைக் காலத்தின்போது, குடிசையில் அவன் வைத்திருந்த தேனும் தினைமாவும் தீர்ந்து விட்டன. வெளியில் சென்று உணவு தேட முடியாத நிலையில் பசியால் வாடிய அவன் இறைவனை வேண்டினான். அந்த வேளையில் அழுக்கு ஆடை அணிந்த ஒரு முதியவர் அவன் குடிசைக்கு வந்தார். மழையில் நனைந்து கொண்டி ருந்த அவரை உள்ளே அழைத்தான் அறப்பள்ளியன். உள்ளே வந்த முதியவர், ""கவலைப்படாதே! நானிருக்கும்போது உனக்கென்ன கவலை?'' என்றார்.
அவரை அதிசயத்துடன் பார்த்தான் அறப்பள்ளியன்.
""என்ன அப்படிப் பார்க்கிறாய்? இந்த மலைப்பகுதியில் வசிப்பவர் களையெல்லாம் எனக்குத் தெரியும். மழைக்காலத்தில் உனக்கு எதுவும் கிடைக்காது. அதனால் நீ இந்தப் பகுதியை சீர்திருத்து. அப்பொழுது நீ எதிர்பாராத செல்வம் கிடைக்கும். ஆடி மாதம் பிறந்ததும் நான் சொன்னது போல் செய்'' என்றார் அவர்.
""தங்கம் கிடைக்குமா சாமி?'' என்றான் அறப்பள்ளியன்.
""அதைவிட உயர்ந்தது கிடைக்கும்'' என்று கூறிய அந்த முதியவர் தான் கொண்டு வந்திருந்த தினைமாவையும் தேனையும் அவனிடம் கொடுத்து விட்டு, ""வந்த வேலை முடிந்தது'' என்று சொல்லி, அவனை வாழ்த்தி விட்டு வெளியேறினார்.
அவர் சென்ற வழியைப் பார்த்தான் அறப்பள்ளியன். அவர் ஓரிடத்தில் நின்று அவனைத் திரும்பிப் பார்த்து கைகளைத் தூக்கி வாழ்த்தினார். அப்படியே மறைந்து போனார். வந்து போனவர் யாரோ ஒரு சித்தர் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தான் அவன். பின்னர் அவன் குடிசைக்கு முன் இருந்த இடங்களை சீர் செய்யத் தொடங்கி னான். பெரிய கற்களை அகற்றி சமன்படுத்தி னான். ஒருநாள், அவன் கடினமான ஒரு பாறையை அப்புறப்படுத்தும்போது ஓர் ஒளி தோன்றியது. ஒளி தோன்றிய இடத்தில் உள்ள கற்களைக் கைகளால் அப்புறப் படுத்தும்போது ஒரு சிவலிங்கம் தானாக வெளிவந்தது! சிவலிங்கம் தோன்றிய நாள் ஆடி மாதம், பதினேழாம் நாள்! அப்போது மிகக் கடுமையாக மழை பெய்ய ஆரம்பித்தது. இடி மின்னலுடன் காற்றும் வீசியது. அதனால் அவன் குடிசைக்குத் திரும்பி விட்டான்.
மறுநாள் அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அன்று வந்த முதியவர் மீண்டும் அங்கு வந்தார்.
அவர் கால்களில் விழுந்து வணங்கியவன், நடந்ததைச் சொன்னான்.
""நீ மட்டும் மழையில் நனையாமலிருக்க குடிசையில் இருக்கிறாய். உன் தெய்வம் மட்டும் மழையில் நனையலாமா?'' என்று சித்தர் கேட்டதும், அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான். அங்கு சிவலிங்கத்தைச் சூழ்ந் திருந்த நீரில் சில மீன்கள் லிங்கத்தைச் சுற்றி வலமாக வருவதைப் பார்த்தான். உடனே தன் குடிசையின் ஒரு பகுதியைப் பிரித்து அங்கு பந்தல் போட்டான். அந்த சித்தர் பெருமான் மீன்கள் சுற்றி வந்த அந்த இடத்தில் கிழக்கு நோக்கி அந்தச் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த நாள் ஆடி பதினெட்டு. சிவ பூஜை செய்யும் வழிமுறைகளை அவனுக்குச் சொல் லிக் கொடுத்து விட்டுச் சென்றார் அந்தச் சித்தர்.
அறப்பள்ளியன் முதன் முதலில் அந்தச் சிவலிங்கத் தைக் கண்டதால் அந்தச் சிவலிங்கம் "அறப்பள்ளீஸ் வரர்' என்று பெயர் பெற்றது.
இதன் காரணமாகவே இப்பொழுதும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் தேதி களில் சிவன் தோன்றிய நாளாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று இத்திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் தனிப்பட்ட முறையில் யாகங்கள் செய்கிறார்கள். இத்திருக்கோவிலில் தினமும் முதல் மரியாதையாக இக்கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள ஸ்ரீசரப தீர்த்தத்தில் (ஆறு) வாழும் மீன்களுக்கே பூஜை செய்யப் படுகிறது. இதற்கும் ஒரு வரலாறு உண்டு.
பல வருடங்களுக்குமுன் இந்தக் கோவிலில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்க சிலர் வந்தார்களாம். அவர்கள் ஆற்றில் இறங்கி கோவிலை நோக்கி வரும்போது பெரிய பெரிய மீன்கள் துள்ளிக் குதிப்பதைக் கண்டனர். இந்த கொழுத்த மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும் என்று மீன்களைப் பிடித்து அறுத்து, அங்கேயே ஒரு குச்சியில் அந்த மீன்களைச் செருகி, தீ மூட்டி வாட்டியிருக்கிறார்கள். சாப்பிடுவதற்குப் பதமானதும், அப்பகுதியிலிருந்த தாமரை இலைபோல் இருந்த பெரிய இலையைப் பறித்து, அதில் தீயில் வாட்டிய மீன்களை எடுத்து வைத்திருக்கி றார்கள். அப்பொழுது தீயில் சுடப்பட்ட மீன்கள் முழு வடிவம் பெற்றுத் துள்ளிக் குதித்து ஆற்றில் விழுந்து மறைந்தனவாம். இதனைக் கண்ட அந்தத் திருடர்கள் அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்களாம். அதன் காரண மாகவே இங்கு மீன்களுக்குப் பூஜை செய்யப்படுகிறதாம்.
குழந்தைச் செல்வம் இல்லாதவர்களும் திரு மணத் தடை உள்ளவர் களும் மற்றும் பல துன் பங்கள் நீங்கவும் இங்கு வந்து வேண்டிக் கொண் டவர்கள், தங்கள் குறை தீர்ந்ததும் இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு மூக் குக் குத்தி சிறிய அணி கலன் அணிவித்து ஆற் றில் விடும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.
ஆற்றங்கரை அருகி லுள்ள இத்திருக்கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர். கிழக்கு பார்த்த (ராஜகோபுரம் இல்லாத) நுழைவாயில். கோவிலுக்குள் சென்றதும் கொடி மரம், பலி பீடம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் சிவ பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளார். இந்த நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உண்டு. பின்புற வலக்கால் இல்லை. இது பற்றியும் புராணக் கதை உண்டு.
இக்கோவிலிலிருந்து சுமார் பத்து மைல் தூரத்தில் புளியஞ்சோலை என்ற ஊர் உள்ளது. அங்கே விவசாயப் பெருங்குடி மக்கள் நிலக்கடலை பயிரிட்டிருக்கிறார்கள். அவ்வாறு பூக்கள் பூத்ததும், அதன் மணம் சுற்றுப்புறங் களில் மணக்கும். அவ்வாறு பூக்கள் பூத்தால் நிலத்தடியில் கடலை நல்ல முற்றிய நிலையில் உள்ளது என்பர். கடலைப் பூக்களின் மணம் நந்தியின் மனதைக் கவர்ந்தது. அதனால் நந்தி இரவு வேளையில் உயிர்பெற்று எழுந்து புளியஞ்சோலைக்குச் சென்று, கடலை வயலில் தன் கொம்புகளால் குத்திக் கிளறி கடலைக் காய்களை கொத்து கொத்தாகச் சுவைத்துவிட்டு விடிவதற்குள் கோவிலுக்கு வந்துவிடுமாம். இதுபோல் தொடர்ந்து நடக்கவே, விவசாயி கள் அந்தப் பகுதியை ஆட்சி புரிந்த குறு நில மன்னரிடம் கூறினர். அவர் இரண்டு வீரர்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி கண்காணிக் கச் சொன்னார். நள்ளிரவில் அங்கே வந்த நந்தியைக் கண்ட வீரர்கள் அதனை விரட்ட முயல, அது அந்த வீரர்களை முட்டுவதற்கு முயன்றது.
ஒரு வீரன் நீண்ட இரும்பு ஆயுதத்தால் நந்தியின் வலது பின்னங்காலை வெட்டி னான். கால் வெட்டப்பட்ட நந்தி கோவி லுக்கு ஓடிவந்து விட்டது. காலை இழந்த நந்தி இறைவனிடம் முறையிட, ""ஒருவர் வயலில் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்தது தவறு. நீ திருடித் தின்ற கடலைக்குத் தண்டனைதான் இது. இப்படியே இரு'' என்று சொன்னாராம் இறைவன்.
விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக்காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.
நந்தியெம்பெருமானைத் தரிசித்து விட்டு உள்ளே மகா மண்டபத்திற்குள் நுழையும்போது வாசல் பகுதியின் இரு பக்கங்களிலும் துவார பாலகர்கள்போல் சித்தர்கள் இருவர் காட்சி தருகிறார்கள்.
மகா மண்டபத்தையடுத்து அர்த்த மண்டபம். அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய கருவறை. சந்நிதியில் ஸ்ரீஅறப் பள்ளீஸ்வரர் அருள்புரிகிறார்.
ஒரு அடி அகலத்தில் மூன்றடி உயரத்தில் காட்சி தருகிறார். இவரை ஸ்ரீ தர்மகோசீஸ் வரர் என்றும் அழைப்பர். கருவறையின் வலப்புறம் விநாயகர் எழுந்தருளியுள்ளார். மூலவரைத் தரிசித்தபின் மகா மண்டபம் வந்தால் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அம்மன் "தாயம்மை' நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். அம்மனை ஸ்ரீதர்ம கோசீஸ்வரி என்றும் அழைப்பர். இந்த அம்பாள் காமாட்சியின் திருவுருவமாகப் போற்றப்படுகிறாள். லட்சுமி, சரஸ்வதி ஆகியோரும் இவளுக்குள் அடக்கம். எனவே இவளை வணங்கினால் முப்பெருந்தேவியரை ஒருசேர தரிசித்த பலன் கிட்டும்.
அம்பாள் எதிரே வாகனம் எதுவும் இல்லை. அம்பாளை வழிபட்டு சிறிது பின் நோக்கினால் மேலே விதானத்தில் அஷ்ட லட்சுமி சக்கரம் உள்ளது. ஸ்ரீசக்கரத்தைத் தரிசித்தபின் மகா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்மீது அமர்ந்து தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரது பார்வை அம்பாளை நோக்கி உள்ளது தனிச் சிறப் பாகும். கன்னி மூலையில் ஸ்ரீஔஷத கணபதி எனப்படும் வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
மேற்கு கோஷ்டத்தில் மகா விஷ்ணு எழுந்தருளி யுள்ளார். மகா விஷ்ணுவை நோக்கி மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இச்சந் நிதிக்கு அடுத்து வீணை யுடன் சரஸ்வதி எழுந்தருளி யுள்ளாள். இந்த சரஸ் வதிக்கு ஸ்ரீவித்யா சரஸ் வதி என்று பெயர்.
இக்கோவிலின் வடக்குப் பகுதியில் ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தக் கரை உள்ளது. கொல்லிமலை களில் தோன்றும் ஐந்து அருவிகள் ஒன்று சேர்ந்த புனித நீர் இதுவென்று சொல்லப்படுகிறது. ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தம் என்னும் இந்த ஆறு கரடுமுரடான கற்கள் உள்ள பகுதியில் ஓடி வந்து இங்கு சிறிய நீர்வீழ்ச்சிபோல் விழுகிறது.
இத்தீர்த்தக் கரைக்குக் கோவிலிலிருந்து சுமார் நூறு படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். தீர்த்தக்கரையின் வலப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.
இத்தீர்த்தத்தில் பல அரிய மூலிகைகள் கலந்திருப்பதால் இதில் நீராடினால் உடல் நலம் வளம் பெறும், சரும நோய்கள் நீங்கும், அனைத் துத் தோஷங்களும் விலகும் என்பர். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆகாசகங்கை என்னும் தீர்த்தம் (நீர்வீழ்ச்சி) உள்ளது. கரடுமுரடான பாதையில் சென்று 1,200 படிகள் மேல்நோக்கிச் செல்ல வேண்டும்!
இந்தக் கொல்லிமலைப் பகுதியில் சித்தர்கள் பலர் வாசம் செய்வதாலும், அரிய மூலிகைச் செடிகள் இங்கு உள்ளதாலும் அதன் மணம் நம்மை ஒருநிலைப்படுத்தும் உணர்வை நாம் அறியலாம். மேலும், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள் இந்த மலையில் உள்ள அருவிகளில் நீராடுவார்களாம். அப்பொழுது, அவர்கள் மக்கள் உடல்நலம் வளம் பெற சில அரிய மூலிகைகளைப் பறித்து அரைத்து மந்திரங்கள் ஜபித்து, இந்த அருவி நீரில் கலப்ப தாக நம்பப்படுகிறது. அதனால், இந்த ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தத்தில் (ஆற்றில்) பௌர்ணமிக்கு அடுத்த நாள் நீராடுவது சிறப்பிக்கப்படுகிறது. இங்கு அருள்புரியும் ஈஸ்வரன் சக்தி வாய்ந்த ஞான மூர்த்தி. இவர் மூலிகை வாசம் கொண்டவராதலால் இவருக்குக் காட்டப்படும் தீபாராதனைத் தீபத்தில்கூட மூலிகை வாசத்தை உணரலாம்.
இக்கோவிலில் அமாவாசையன்று அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம் விலகும்; அவர் களின் ஆசி கிட்டும். இத்தல ஈசனையும் அன்னையையும் வணங் கினால் சுகமான வாழ் வும் எதிர்பாரா செல்வ மும் கிட்டும்!
ஒரு மழைக் காலத்தின்போது, குடிசையில் அவன் வைத்திருந்த தேனும் தினைமாவும் தீர்ந்து விட்டன. வெளியில் சென்று உணவு தேட முடியாத நிலையில் பசியால் வாடிய அவன் இறைவனை வேண்டினான். அந்த வேளையில் அழுக்கு ஆடை அணிந்த ஒரு முதியவர் அவன் குடிசைக்கு வந்தார். மழையில் நனைந்து கொண்டி ருந்த அவரை உள்ளே அழைத்தான் அறப்பள்ளியன். உள்ளே வந்த முதியவர், ""கவலைப்படாதே! நானிருக்கும்போது உனக்கென்ன கவலை?'' என்றார்.
அவரை அதிசயத்துடன் பார்த்தான் அறப்பள்ளியன்.
""என்ன அப்படிப் பார்க்கிறாய்? இந்த மலைப்பகுதியில் வசிப்பவர் களையெல்லாம் எனக்குத் தெரியும். மழைக்காலத்தில் உனக்கு எதுவும் கிடைக்காது. அதனால் நீ இந்தப் பகுதியை சீர்திருத்து. அப்பொழுது நீ எதிர்பாராத செல்வம் கிடைக்கும். ஆடி மாதம் பிறந்ததும் நான் சொன்னது போல் செய்'' என்றார் அவர்.
""தங்கம் கிடைக்குமா சாமி?'' என்றான் அறப்பள்ளியன்.
""அதைவிட உயர்ந்தது கிடைக்கும்'' என்று கூறிய அந்த முதியவர் தான் கொண்டு வந்திருந்த தினைமாவையும் தேனையும் அவனிடம் கொடுத்து விட்டு, ""வந்த வேலை முடிந்தது'' என்று சொல்லி, அவனை வாழ்த்தி விட்டு வெளியேறினார்.
மறுநாள் அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அன்று வந்த முதியவர் மீண்டும் அங்கு வந்தார்.
அவர் கால்களில் விழுந்து வணங்கியவன், நடந்ததைச் சொன்னான்.
""நீ மட்டும் மழையில் நனையாமலிருக்க குடிசையில் இருக்கிறாய். உன் தெய்வம் மட்டும் மழையில் நனையலாமா?'' என்று சித்தர் கேட்டதும், அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான். அங்கு சிவலிங்கத்தைச் சூழ்ந் திருந்த நீரில் சில மீன்கள் லிங்கத்தைச் சுற்றி வலமாக வருவதைப் பார்த்தான். உடனே தன் குடிசையின் ஒரு பகுதியைப் பிரித்து அங்கு பந்தல் போட்டான். அந்த சித்தர் பெருமான் மீன்கள் சுற்றி வந்த அந்த இடத்தில் கிழக்கு நோக்கி அந்தச் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த நாள் ஆடி பதினெட்டு. சிவ பூஜை செய்யும் வழிமுறைகளை அவனுக்குச் சொல் லிக் கொடுத்து விட்டுச் சென்றார் அந்தச் சித்தர்.
அறப்பள்ளியன் முதன் முதலில் அந்தச் சிவலிங்கத் தைக் கண்டதால் அந்தச் சிவலிங்கம் "அறப்பள்ளீஸ் வரர்' என்று பெயர் பெற்றது.
பல வருடங்களுக்குமுன் இந்தக் கோவிலில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்க சிலர் வந்தார்களாம். அவர்கள் ஆற்றில் இறங்கி கோவிலை நோக்கி வரும்போது பெரிய பெரிய மீன்கள் துள்ளிக் குதிப்பதைக் கண்டனர். இந்த கொழுத்த மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும் என்று மீன்களைப் பிடித்து அறுத்து, அங்கேயே ஒரு குச்சியில் அந்த மீன்களைச் செருகி, தீ மூட்டி வாட்டியிருக்கிறார்கள். சாப்பிடுவதற்குப் பதமானதும், அப்பகுதியிலிருந்த தாமரை இலைபோல் இருந்த பெரிய இலையைப் பறித்து, அதில் தீயில் வாட்டிய மீன்களை எடுத்து வைத்திருக்கி றார்கள். அப்பொழுது தீயில் சுடப்பட்ட மீன்கள் முழு வடிவம் பெற்றுத் துள்ளிக் குதித்து ஆற்றில் விழுந்து மறைந்தனவாம். இதனைக் கண்ட அந்தத் திருடர்கள் அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்களாம். அதன் காரண மாகவே இங்கு மீன்களுக்குப் பூஜை செய்யப்படுகிறதாம்.
குழந்தைச் செல்வம் இல்லாதவர்களும் திரு மணத் தடை உள்ளவர் களும் மற்றும் பல துன் பங்கள் நீங்கவும் இங்கு வந்து வேண்டிக் கொண் டவர்கள், தங்கள் குறை தீர்ந்ததும் இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு மூக் குக் குத்தி சிறிய அணி கலன் அணிவித்து ஆற் றில் விடும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.
ஒரு வீரன் நீண்ட இரும்பு ஆயுதத்தால் நந்தியின் வலது பின்னங்காலை வெட்டி னான். கால் வெட்டப்பட்ட நந்தி கோவி லுக்கு ஓடிவந்து விட்டது. காலை இழந்த நந்தி இறைவனிடம் முறையிட, ""ஒருவர் வயலில் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்தது தவறு. நீ திருடித் தின்ற கடலைக்குத் தண்டனைதான் இது. இப்படியே இரு'' என்று சொன்னாராம் இறைவன்.
விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக்காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.
நந்தியெம்பெருமானைத் தரிசித்து விட்டு உள்ளே மகா மண்டபத்திற்குள் நுழையும்போது வாசல் பகுதியின் இரு பக்கங்களிலும் துவார பாலகர்கள்போல் சித்தர்கள் இருவர் காட்சி தருகிறார்கள்.
மகா மண்டபத்தையடுத்து அர்த்த மண்டபம். அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய கருவறை. சந்நிதியில் ஸ்ரீஅறப் பள்ளீஸ்வரர் அருள்புரிகிறார்.
ஒரு அடி அகலத்தில் மூன்றடி உயரத்தில் காட்சி தருகிறார். இவரை ஸ்ரீ தர்மகோசீஸ் வரர் என்றும் அழைப்பர். கருவறையின் வலப்புறம் விநாயகர் எழுந்தருளியுள்ளார். மூலவரைத் தரிசித்தபின் மகா மண்டபம் வந்தால் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அம்மன் "தாயம்மை' நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். அம்மனை ஸ்ரீதர்ம கோசீஸ்வரி என்றும் அழைப்பர். இந்த அம்பாள் காமாட்சியின் திருவுருவமாகப் போற்றப்படுகிறாள். லட்சுமி, சரஸ்வதி ஆகியோரும் இவளுக்குள் அடக்கம். எனவே இவளை வணங்கினால் முப்பெருந்தேவியரை ஒருசேர தரிசித்த பலன் கிட்டும்.
அம்பாள் எதிரே வாகனம் எதுவும் இல்லை. அம்பாளை வழிபட்டு சிறிது பின் நோக்கினால் மேலே விதானத்தில் அஷ்ட லட்சுமி சக்கரம் உள்ளது. ஸ்ரீசக்கரத்தைத் தரிசித்தபின் மகா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்மீது அமர்ந்து தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரது பார்வை அம்பாளை நோக்கி உள்ளது தனிச் சிறப் பாகும். கன்னி மூலையில் ஸ்ரீஔஷத கணபதி எனப்படும் வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
மேற்கு கோஷ்டத்தில் மகா விஷ்ணு எழுந்தருளி யுள்ளார். மகா விஷ்ணுவை நோக்கி மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இச்சந் நிதிக்கு அடுத்து வீணை யுடன் சரஸ்வதி எழுந்தருளி யுள்ளாள். இந்த சரஸ் வதிக்கு ஸ்ரீவித்யா சரஸ் வதி என்று பெயர்.
இக்கோவிலின் வடக்குப் பகுதியில் ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தக் கரை உள்ளது. கொல்லிமலை களில் தோன்றும் ஐந்து அருவிகள் ஒன்று சேர்ந்த புனித நீர் இதுவென்று சொல்லப்படுகிறது. ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தம் என்னும் இந்த ஆறு கரடுமுரடான கற்கள் உள்ள பகுதியில் ஓடி வந்து இங்கு சிறிய நீர்வீழ்ச்சிபோல் விழுகிறது.
இத்தீர்த்தக் கரைக்குக் கோவிலிலிருந்து சுமார் நூறு படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். தீர்த்தக்கரையின் வலப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.
இத்தீர்த்தத்தில் பல அரிய மூலிகைகள் கலந்திருப்பதால் இதில் நீராடினால் உடல் நலம் வளம் பெறும், சரும நோய்கள் நீங்கும், அனைத் துத் தோஷங்களும் விலகும் என்பர். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆகாசகங்கை என்னும் தீர்த்தம் (நீர்வீழ்ச்சி) உள்ளது. கரடுமுரடான பாதையில் சென்று 1,200 படிகள் மேல்நோக்கிச் செல்ல வேண்டும்!
இந்தக் கொல்லிமலைப் பகுதியில் சித்தர்கள் பலர் வாசம் செய்வதாலும், அரிய மூலிகைச் செடிகள் இங்கு உள்ளதாலும் அதன் மணம் நம்மை ஒருநிலைப்படுத்தும் உணர்வை நாம் அறியலாம். மேலும், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள் இந்த மலையில் உள்ள அருவிகளில் நீராடுவார்களாம். அப்பொழுது, அவர்கள் மக்கள் உடல்நலம் வளம் பெற சில அரிய மூலிகைகளைப் பறித்து அரைத்து மந்திரங்கள் ஜபித்து, இந்த அருவி நீரில் கலப்ப தாக நம்பப்படுகிறது. அதனால், இந்த ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தத்தில் (ஆற்றில்) பௌர்ணமிக்கு அடுத்த நாள் நீராடுவது சிறப்பிக்கப்படுகிறது. இங்கு அருள்புரியும் ஈஸ்வரன் சக்தி வாய்ந்த ஞான மூர்த்தி. இவர் மூலிகை வாசம் கொண்டவராதலால் இவருக்குக் காட்டப்படும் தீபாராதனைத் தீபத்தில்கூட மூலிகை வாசத்தை உணரலாம்.
இக்கோவிலில் அமாவாசையன்று அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம் விலகும்; அவர் களின் ஆசி கிட்டும். இத்தல ஈசனையும் அன்னையையும் வணங் கினால் சுகமான வாழ் வும் எதிர்பாரா செல்வ மும் கிட்டும்!
என்று நீண்ட கதை சொல்லுகிறார்கள்
நமது பயணம் தொடரும் ...........