தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Tuesday, 30 June 2015

சேலம் அசைவ உணவகங்கள்



சேலத்தின் பிரதான அசைவ உணவகங்கள்


எனதன்பார்ந்த சேலம் வாழ் மக்களே  மற்றும் சேலம் மாநகர்  வாழவைக்கும் மக்களே என்றென்றும்  ஏக்கத்துடன் வாழ்க்கையை அணுவணுவாய் அனுபவிக்கும் மேன்சன்வாழ் பிரம்மச்சாரிகளே வந்து  போகும் வாகன ஓட்டிகளே


சேலத்தில் உள்ள அசைவ ஓட்டல்கள் பற்றியும் சொல்லிவிட வேண்டும்  அப்போதுதான் இந்த பதிவு முழுமை பெரும் ..

 அசைவத்திற்கு பலாண்டு பெயர் பெற்ற சத்திரம் இறக்கம் பாம்பே சுந்தரவிலாஸ் பிரியாணி அந்த காலத்தில் பெயர்பெற்றது
 (தற்போது கொடுமையடா சாமி .. )


தற்போது  போட்டி வறுவல், மூளை வறுவல் அறுமை ..அப்புறம் சைடிஷ்  சில்லி சிக்கன் இருக்கவே  இருக்கிறது




 அதே சத்திரம்சென்டரல்  இறக்கத்தில் மாலையில் தள்ளுவண்டிகளில் சுடசுட
 அசைவ டிபன் வகைகள்


 (தண்ணி பார்டிகளுக்கென்றே பிரத்தேயேகமானது ...ருசி அருமை ஆனால்  வயிற்றை கொஞ்சம் கவனிக்கவும்)





அப்புறம் பழைய பஸ் ஸ்டாண்டு  கிச்சிபாளயம் முகமது புறா தெருவில் பாய் பிரியாணி  கடைகள் , பாசுமதி மற்றும் சீரக சம்பா அரிசியில் அப்பப்பா எப்படித்தான் சமைக்கிறார்களோ



.தின்ன தின்ன ஆசை ....சிக்கன் ,ஆடு, மாடு, மீன் மற்றும் ஸ்பெசலாக ஈரல் வறுவல்... ம் ம் ம்  இட்லிக்கு ஓகே .. அனைத்தும் உள்ளது . வகை வகையாய் உள்ளே தள்ளல்லாம் ..



குகை காளியம்மன் கோவில் எதிரில் உள்ள தோசை கடைகறி குழம்பு  ,




தியாகராஜா பாலிடெக்னிக் எதிரில் உள்ள கலியுகா ஓட்டல் ,ராகிகளியும்
கருவாட்டு / கீரை குழம்பும் ,



 கொண்டலாம்பட்டி குமார்கடை பிரியாணி , ஆட்டுக்கறி ,நாட்டுகோழி  வறுவல்



.ஜாகிரம்மபாளயம் கே .பி .என் பங்க் எதிரில் ச ந்தில் உள்ள தேவுது கடை அசைவ ஓட்டல் ஆட்டுக்கறி ,நாட்டுகோழி,மூளை பிறை ,பேமஸ் போட்டி வறுவல் . சோறுடன் பிசைந்து  ஆகா அறுமை அப்புறம்  ரசம்   என்ன சுவை என்ன சுவை



அப்புறம் செல்விமெஸ் ..புது பஸ்டாண்டு   ராமலிங்கம் ஓட்டல்  .ஸ்ஸ் ஆ ஆ  படுகாரமான அசைவு உணவுகள் .



பழைய பஸ்ஸ்டாண்டு  சாந்தி தியேட்டர் எதிரில் உள்ள பேமஸ் மங்களம் கறி சோறு மற்றும் விவேகானந்தா தோசை ,கறி சோறு , spl குழம்பு ,






நான்கு ரோடு கடல் மீன் கடை மீன்குழம்பு சோறு , மீன் வறுவல் .பெரமனூர் மெய்ன் ரோடு உதயம் டிபன்  கடை  ,


 காரிபட்டி அன்பு மெஸ் . புது பஸ் ஸ்டாண்டு  ராஜகணபதி கறி சோறு கடை ..

ஜங்சன்  ரஹ்மானியா  பிரியாணி கடை .


steel palaant ரோடு கொல்லல்பட்டி சோக்கு கடை பன்னிகறி ,ஆட்டுக்கறி

வறுவல் ,,நாட்டுகோழி வறுவல் , ரத்த பொறியல் மீன் வறுவல் எல்லாம்

வீட்டிலேயே  சமைத்து அங்கேயே பரிமாருவர்கள் ஆனால் என்ன கொஞம் காரம் ஜாஸ்தி.


.

.ஐந்து ரோடு  ம்ற்றும்  4 ரோடு .ட்டி.வி.எஸ் வெள்ளை பன்றிகடையின்.. குஷ்பு   இட்லி பன்னிகறி வறுவல் . காம்பினேசன்  ஆகா  என்னருசி ...  என்னருசி...